Search This Blog

4.7.09

இசுலாத்திலும் ஜாதியா?

கேரளாவின் கடற்கரையோரத்தில் வாழும் இசுலாமியர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பர். தமிழ்நாட்டின் கீழக்கரைப் பகுதியில் இருப்பவர்களும் அதே மரபு வழியைக் கொண்டவர்கள்தாம். காலப் போக்கில் இம்மக்களும் நம் மக்களைப் போன்றே தோற்றத்தில் மாறிவிட்டனர்.

கேரள மாப்ளா முசுலிம்கள் பற்றிய ஒரு சேதி. அவர்களில் 5 பிரிவுகள் உண்டாம். சன்னி, ஷியா, வஹாபி, ஜைத், ஹனபி, ஷாபி, அஹமதியா, இசுமெய்லி போன்ற பிரிவுகள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இவை வேறு வகைப் பிரிவுகள்.

தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸலார் மற்றும் ஒஸ்ஸான் என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?

தங்ஙள் என்றால் முகமது நபியின் மகளான பாத்திமாவின் வழிவந்தவர்கள். இந்துமத நம்பூதிரிகளைப் போல இவர்கள் உயர்ந்தவர்களாம்.

அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அரபிகள்.

அரபிகளுக்கும் கீழே அன்சாரிகள். இவர்கள் மூவருக்கும் கீழே கடைத்தட்டில் வைக்கப்பட்டிருப்பவர்கள் புஸ்ஸலார்களும் ஒஸ்ஸான்களும்.

புஸ்ஸலார் என்பவர்கள் கேரள மீனவர்களாகிய இந்துமத முக்குவர் ஜாதியில் இருந்து இசுலாமாகியவர்கள். புதிய இஸ்லாம் என்பது புஸ்ஸலாம் என்றாகி விட்டது.

இசுலாமியர்களின் பஞ்சமர்கள் ஒஸ்ஸான்கள். நாவிதர்கள். இந்து மதத்தில் எந்தத் தொழிலோ அந்தத் தொழிலையே இஸ்லாத்திலும் செய்பவர்கள்.


முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.

பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன் எனக்கூறி முதன்மை இடத்தை எடுத்துக் கொண்டான் பார்ப்பனன், இந்து மதத்தில் என்றால்... இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் குடும்பக் கொடி வழி என்ற கதை கூறப்படுவதா?

மதங்கள் என வந்தாலே, இதுதான் போலிருக்கிறது. அதனால்தான் புரட்சிக்கவிஞர், பெரு மதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் என்று பாடினார்.

----------------4-7-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

27 comments:

safik said...

As a practicing Muslim i never head of these things.please don't take anyone's book.If you have any doubt please read Quran.You can find tamil translated Quran.I am also from palani if you need Quran i am very happy to give you.

தமிழ் ஓவியா said...

தமிழில் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
என்னிடம் தமிழில் குரான் நூல் உள்ளது. மிக்க நன்றி.

தங்களைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நன்றி

ELIYAVAN said...

As a Tamil Muslim, I know there are castes in Tamil Nadu Muslims also. Besides Shaafi, Hanabi etc. old muslim women quote 'irumboothiyaar' etc. as a caste of Muslims when they consider the brides or bride-grooms for marriage. In the south, if a Muslim family's mother tongue is Urdu, they are treated differently by Tamil Muslims.

suvanappiriyan said...

தமிழ் ஓவியா!

முகமது நபியின் சொல் செயலையும் குறித்து வைத்தனர் ஒரு சில மத குருமார்கள். முகமது நபியின் வார்த்தைகளை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட கோளாரால் அவர்கள் எழுதிய வரலாறுகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களே காலப் போக்கில் ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று அந்த அந்த அறிஞர்களின் பெயரால் பிரிவுகள் உண்டாகி விட்டது. முகமது நபி இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகே இந்த பிரிவுகள் எல்லாம் தோன்றுகின்றன.

இப்படி பிரிவுகள் இருந்தாலும் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதிலோ, மசூதியில் தொழுகையிலோ எத்தகைய பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவில் இது போன்ற பிரிவுகளை சொன்னால் அங்குள்ள அரபிகளுக்கு எதுவும் தெரியாது. இதை வைத்து 'நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்' என்ற தீண்டாமை இங்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

'நான் முகமது நபியின் வாரிசு', 'நான் பாத்திமாவின் வாரிசு' என்றெல்லாம் ஒரு சில புரட்டர்கள் உழைக்காமல் வயிறு வளர்க்க பொய் கூறி திரிகின்றனர். அவர்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி தற்போது அவர்களுக்கு அற வழியில் பதிலையும் கொடுத்து வருகிறார்கள்.

அபூ அப்திர்ரஹ்மான் said...

தமிழ் ஓவியா! இஸ்லாத்தைப் பற்றி நுனிப் புல் மேய்ந்து விட்டு எதைஎதையோ எழுதித் தள்ளிவிட்டீர்கள். மதத்தை நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் ஒரு மதத்தில் உள்ள கருத்துக்களை விமர்சிக்கும்போது உறுதியான பின்துணைச் சான்றுகளுடன் விமர்சிப்பதே அறிவுடைமை. இந்து மதத்திலுள்ள சாதிகளையும் இசுலாத்தில் ஜாதிகள் என்ற உங்கள் கற்பனையையும் சேர்த்து ஒப்பீடு செய்தது இது குறித்த உங்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரமக் கொள்கைக்கு அந்த மத வேதங்களின் வரிகளே அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இஸ்லாத்தில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டிய ஐந்து வகை ஜாதிகள் என்பதற்கு என்ன ஆதாரங்கள்? கொஞ்சம் எடுத்து விளக்குங்களேன்.

அரபியை விட அரபியல்லாதவனுக்கு எந்த சிறப்பும் இல்லை, கருத்தவனை விட வெளுத்தவனுக்கு எந்த சிறப்புமில்லை, நீங்கள் அனைவரும் ஆதம் என்ற முதல் மனிதரிலிருந்து வந்தவர்களே, அவரோ மண்ணிலிருந்து வந்தவர். உங்களில் சிறந்தவர் இறையச்சம் மிக்கவர்களே என்ற இஸ்லாத்தின் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த கொள்கைப்பிரகடனம் உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?

மனிதர்கள் அனைவரும் ஓர் ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உருவானவர்கள், கிளைகளும் கோத்திரங்களும் பரஸ்பரம் அறிந்து கொள்வதற்காக மட்டுமே, பயபக்தியுடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்களாக ஆக முடியும் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறைகூவல் விடுத்த திருக்குர்ஆன் (49: 13) பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்?

கருப்பு இன அடிமையாக இருந்த பிலால் என்ற மனிதரை இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தங்கள் தலைவராகப் போற்றுவதன் காரணம் என்ன என்பதையும் அவரது பெயரைக் கேட்டவுடன் மதிப்புடன் மரியாதையுடன் அவர் மீது இறை திருப்தி உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வதன் காரணம் என்ன என்பதையும் அறிவீர்களா? கருப்பு நிற அடிமையாக இருந்த உசாமா என்பவரை முஸ்லிம்களின் படைத்தளபதியாக நியமித்து அழகு பார்த்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தைக் குறித்து அறிவீர்களா? தடித்த உதட்டை உடைய கருப்பு நிறத்தவர் உங்களின் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் உபதேசத்தை அடியொற்றிப் பின்பற்றும் முஸ்லிம் சமுதாயத்தைக் குறித்து அறிவீர்களா?

மனிதனுக்குள் ஜாதிகளை வேரறுத்த இஸ்லாமின் உன்னதக் கொள்கைகளை இதுபோல ஏராளமாகப் பட்டியலிட என்னால் முடியும். பின்னூட்டம் நீண்டு விடக்கூடாது என்பதற்காக நிறுத்துகிறேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் முன் அதன் அடிப்படை ஆதாரங்களை சற்று ஆராய்ந்து விட்டு விமர்சியுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு அறியாமையை ஒப்பி வைப்பது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நன்றன்று.

என்றும் அன்புடன்

அபூ அப்திர்ரஹ்மான்

itzyasar said...

இன குல வேறுபாடுகளை அறுத்து எடுப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து விளங்குகிறது. நீங்கள் தவறாக விளங்கியதின் விளைவாகவே இவ்வாறு எழுதி உள்ளீர்கள், இதற்க்கு உங்களின் அறியாமை அல்லது இஸ்லாத்தை பற்றி முழு தெளிவு இல்லாததையே குறிக்கிறது.
தெளிவு இல்லாத மக்கள் ஏற்படுத்தி அதனை பின்பற்றுவது எல்லாம் இஸ்லாத்தில் கூறப்பட்டவை என்று நீங்கள் அர்த்தம் செய்தால் அது உங்கள் அறியாமையே பறைசாற்றுகிறது.
தெளிவு கிடைத்த ஒரு விஷயத்தை பற்றி விமர்சனம் அல்லது கருத்து தெரிவிப்பது சிறந்ததாகவும் ஆரோக்கியம் நிறைந்ததகவும் இருக்கும்.
சகோதரதுவம் என்பதை நடை முறை படுத்துவதில் இஸ்லாம் வலியுருத்தி கூறி இருக்கு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள குரானை படித்து தெளிவு பெற வேன்டுகிறேன்.

YaSham said...

தமிழ் ஓவியா அவர்களே உங்கள் பெயருக்கு ஏற்றார்ப் போல் (கர்ப்பனை ஓவியங்கல் தீட்டுவது போல்-கற்ப்பனைக் கதைகலை தீட்டுவதிலும் வல்லவராக திகல்கிறீர்கல் ம் .....ம் ......... மேலும் இதில் எழியவன் என்பவர் தமிழ் ஓவியாவின் இந்த கற்ப்பனைக் கதையை அவருடைய பெயருக்கு ஏற்றார்ப் போல் இல்லாமல் தவரான முரையில் படித்துவிட்டார்போலும் இருந்தாலும் எழிமையான முறையிலேயே பின்னூட்டம் அளித்திருக்கிறார்,சஹோதரர்களே இஸ்லாம் என்பது நீங்கள் சொல்வதோ நான் சொல்வதோ இல்லை,இறை வேதம் என்ன சொல்கிறது,இறைதூதர் என்ன சொன்னார் என்பதே !! இந்த இரண்டிலுமே ஹூம் ஹூம் நீங்கள் சொல்வது இல்லையே ஹி ஹி ஹீ ஹி!!!!உங்க மண்டைலயும் ஏதோ இருக்குதுன்னு காட்ட் வந்தீங்க ஆனா புட்டுக்கிட்டீங்களே,இனிமேலாவது அலசி ஆராய்ந்து எழுத முயற்ச்சிப் பன்னுங்க ம் ம் ? என்ன முழி பிதுங்குதா வெளிய விட்டுடாதீங்க !!!! -----------------
யாசிர் துபை :arafath.yasir@gmail.com

N. Abdul Hadi Baquavi said...

எங்காவது ஓரிடத்தில் உள்ள நடைமுறைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு இஸ்லாத்தில் சாதிகள் உண்டென்று கூறுவது அறிவுடைமையாகாது. இஸ்லாம் ஒரு பரந்து விரிந்த ஓர் உலகளாவிய மார்க்கமாகும். அதனை ஒரு குறிப்பிட்ட ஊரில் உள்ள பழக்கவழக்கத்தோடு ஒப்பிட்டால் சரியாகாது.

நீங்கள் கூறுகின்ற சாதியினர் தங்கள் மத்தியில் இன வேறுபாடு கொள்வதையோ இனவெறி காட்டுவதையோ தாங்கள் காட்ட முடியுமா? நபிகள் நாயகத்தின் குடும்பப் பாரம்பரியத்தின் மூலம் வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள்தாம் உயர் குலத்தினர் என்று கூறுவதில்லை. இறுதியாக, சாதியை வைத்து ஒருவர் இஸ்லாத்தில் உயர் மதிப்பைப் பெற்றிட முடியாது என்பதை அனைவரும் அறிந்துகொள்க.
நூ. அப்துல் ஹாதி பாகவி சென்னை. 81.

தமிழ் ஓவியா said...

இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பதற்கான சான்றுகளை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் அளிக்க வேண்டுகிறேன்.

//முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.//

நூலைத் தொகுத்தவர் ஒரு இஸ்லாமியர்.

எனவே அருள்கூர்ந்து இது பற்றிய ஆய்வை இஸ்லாமியர்கள் செய்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.

TNTJPNO said...

உங்கள் மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும்,சமாதனமும் உன்டாவதாக..

தமிழ் ஒவியா அவர்களே!

சாதி ஒழிய "இஸ்லாமே" நன் மருந்து என்று தந்தை பெரியார் அவர்களே கூறியிருகின்றார்.

அருளாளனின் அடிமை said...

தமிழ் ஓவியா அவர்களே பெரியார் கூறிய இஸ்லாம் பற்றிய கருத்துக்களை முதலில் படியுங்கள்.ஒரு சந்தேகம் RSS,VHP,BJP இவர்களோடு கூட்டனி சேர்ந்து விட்டீர்களோ.சிலை கூடாதென்ற பெரியாறுக்கே சிலை வைத்தவர்கள் அல்லவா நீங்கள்.

கீழை ஜமீல் முஹம்மது said...

சகோதரர் தமிழ் ஓவியா அவர்களே! உங்கள் மீது ஓர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

சகோதரரே! ஹிந்து சகோதரர்கள் பின்பற்றும் ஜாதி வேறுபாட்டிற்கும், இஸ்லாத்தை சரியாக அறியாமல் கேரளா, கீழக்கரை உள்ளிட்ட சில முஸ்லிம் ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் பின்பற்றும் பிரிவு முறைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

ஹிந்து சகோதரர்கள், அவர்களின் வேதங்களான மனுஸ்மிருதி உட்பட வேத உபநியாசங்கள் படி ஜாதியினை கடுமையாக பின்பற்றுகின்றனர்.

திருவேதம் குர்ஆனில் 49வது அத்தியாயம் 13வது வசனத்தில் “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்”.

இஸ்லாம் அனைவரையும் ஒரு தாய், ஒரு தந்தைக்கு பிறந்த மக்கள் என கூறுகிறது. அங்கு குலம், கோத்திரம், ஜாதி வேறுபாடுகள் இல்லை. அடையாளம் தெரிவதற்குதான் கோத்திரமே தவிர அதை கொண்டு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பேதம் பிரிப்பதற்கு அல்ல.

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சில ஊர்களில் ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றி வந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் வழி வழியாக பின்பற்றி வந்த சில சடங்குங்களை அவர்களே அறியாமல் தொடர்ந்து பின்பற்றி வந்தனர். அதன் விளைவாகதான் தங்களை தாங்களே உயர்ந்தவர்கள் என நினைப்பதும் அதன்படி நடந்து வருகின்றனர். இவர்கள் அறியாமல் செய்வதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

இறையருளால் கடந்த 25 வருடமாக குர்ஆன்-நபிவழியில் மக்களை அழைக்கும் இஸ்லாமிய அமைப்புகளால் இன்று கீழக்கரை போன்ற உள்ளிட்ட நிறைய ஊர்களில் மாற்றஙகள் ஏற்பட்டுள்ளன. இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்கள் பின்பற்றி வந்த அறியாமைகால பழக்கங்களை விட்டுவிட்டு இஸ்லாம் கூறும் நடைமுறைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

தாங்கள் திருக்குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பு வைத்துள்ளீர்கள். அதை ஆழமாக படியுங்கள். இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துச் சொல்லும் நிறைய நூற்கள் சென்னை மண்ணடியிலுள்ள நிறைய இஸ்லாமிய புத்தக நிலையங்களில் இருக்கின்றன. அதிகப்படியான தகவல்களை தரும் இணையதளங்கள் உள்ளன.படியுங்கள்.

இறைவன் உங்களுக்கு நல்லருள் செய்வானாக!

-அன்புடன் தாங்களின் சகோதரன்,
கீழை ஜமீல் முஹம்மது
துபை - யு.ஏ.ஈ

Anonymous said...

பெரியார் வழங்கிய எழுச்சிதான் தமிழகத்தில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபாண்மையான மக்கள் நிம்மதியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களாகிய நாங்கள் பெரியாரின் மீது இன்றும் நன் மதிப்பு கொண்டிருக்கிறோம் ஆனால் அவருடைய "கடவுள் இல்லை" என்ற கொள்கையைத்தவிர.

nagoreismail said...

இஸ்லாத்தில் சாதியா? என்ற கேள்விக்கும் முஸ்லிம்களிடத்தில் சாதியா? என்ற கேள்விக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஆனால் இரண்டு கேள்விகளுக்குமே விடை "இல்லை" என்பது தான்.

இஸ்லாமிய வரலாறு -
அரேபியர்கள் அரபு மொழி பேசாதவர்களை வாயே இல்லாதவர்கள் என்று கூறி வந்தார்கள், அரேபியர் அல்லாதவர்களை அடிமைகளாக நடத்தி வந்தார்கள்.

அடிமையான கருப்பர் இனத்தை சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை பெருமானாரின் தோழர்கள் வரிசையில் முதன்மையானவர்களாக இஸ்லாம் அங்கீகரித்துள்ளது. பிலால் (ரலி) அவர்களை அடிமையாக பார்த்த சமூகத்தில் பெருமானாரின் உற்ற தோழரும், இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது ஆட்சிதலைவருமான ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் "ஸய்யிதினா" (தலைவரே - நண்பரே என்று கூட அல்ல) என்று தான் அழைப்பார்கள். இது மிகப் பெரிய சமூக மாற்றம்.

இன்றைய நிலை -
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்து இன்றைக்கு பள்ளிவாசலில் காரியதரிசியாகவும், தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பாளர் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

"பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன்..." -

நீங்கள் சொல்வது போல் பாத்திமா (ரலி)அவர்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்தது, அவர்கள் மட்டும் தான் பள்ளிவாசலில் தலைவராக இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையவே கிடையாது.

ஒருவன் ஜாதியை விட்டால் தான் இஸ்லாத்தில் இணையவே முடியும், அது முடியாது என்றால் இஸ்லாத்தில் இணைந்து விட்டால் அவனுடைய தலையில் பாரமாக கட்டி வைக்கப்பட்ட ஜாதி எனும் இழிவை இஸ்லாமே இறக்கி வைக்கும் பொறுப்பை எடுத்து கொள்ளும். இது உறுதி.
ஸலாமலைக்கும்!

hayyram said...

//இஸ்லாத்தை விமர்சிக்கும் முன் அதன் அடிப்படை ஆதாரங்களை சற்று ஆராய்ந்து விட்டு விமர்சியுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு அறியாமையை ஒப்பி வைப்பது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நன்றன்று.// இவர்கள் இதை தனியாக சிந்தித்தார்கள். யாரோ சிந்திய எச்சிலை நக்கி விட்டு இது இனிப்பு இது கசப்பு என்று வலைப்பூவில் அங்கலாய்ப்பதை ஒரு தொழிலாக செய்து வருகிறார்கள் அவ்வளவே. இவன் பெரிய ஓவியன் என்று நினைத்துக்கொண்டு கோடான கோடி மக்கள் காலம் காலமாக வழி மேற்க்கொள்ளும் மார்க்கங்களை விமர்சிக்கின்றான். அல்லா சொல்படி வாழும் மக்களை அப்படி வாழாதீர்கள் என்று சொல்ல இவன் அல்லாவை விட உயர்ந்தவனா? அல்லது கீதையின் படி தர்மங்களை கடைபிடித்து வாழும் மக்களை அப்படி வாழாதீர்கள் என்று சொல்ல இவன் இந்து கடவுளரை விட உயர்ந்தவனா? நாத்திகப் பேய்களே, நீங்கள் தர்மங்களின் எதிரி. இன்று ஹோமோ செக்ஸ்க்கு அனுமதி கொடுத்தீர்கள், நாளை நடு ரோட்டில் புணர்வதும் அவரவர் விருப்பமே என்றும் சட்டம் கொண்டு வருவீர்கள். உங்களுக்கென்று தர்மமும் கிடையாது கொள்கையும் கிடையாது. முஸ்லீமோ இந்துவோ அவரவர்களுக்கு வகுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகட்டும். தவறுள் இருந்தால் தாங்களே திருத்துக் கொள்வார்கள். ஆனால் எதையும் ஆழப் படித்தோ வாழ்ந்தோ உணராமல் அவற்றை விமர்சனம் செய்து நான் தான் உலகத்து மக்களை விட அதி புத்திசாலி என்று காட்டிக்கொள்வதை பகுத்தறிவு மயக்கத்தில் இருப்பவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் உலகம் நிறுத்தி வைக்கும்.

hayyram said...

//இவர்கள் இதை தனியாக சிந்தித்தார்கள்//.


"இவர்கள் எதை தனியாக சிந்தித்தார்கள்" என்று திருத்திப் படிக்கவும்

hayyram said...

பகுத்தறிவாளர்களாகக் கருதப்படும் விஞ்ஞானிகள், மானுடவியலாளர்கள், வரலாற்றாளர்கள் ஆரிய இனம் என்ற ஒன்று, அல்லது திராவிட இனம் என்ற ஒன்று கிடையாது. ஆரிய, திராவிட என்பன மொழி சார்ந்த பெயர்களே தவிர இனங்களல்ல. எல்லோரும் ஒரு மனிதக் குரங்கிலிருந்து தோன்றியவர்கள், அதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக வெவ்வேறு இனங்களாக, அதாவது அழிந்தொழிந்த நியாண்டர்தாலியன், மற்றும் இன்றைக்கு இருக்கின்ற மனிதர்கள் போன்ற இரு வெவ்வேறு இனங்களாக இருந்தால் பிறப்பிலேயே இவ்விரு சாரருக்கும் வேறுபாடு இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தற்கால மனிதர்கள் அனைவரும் ஒரே வழித்தோன்றல்கள் என்பதால் பிறப்பினால் தகுதி வேறுபாடுகள் இல்லை என்றாகிறது. பொதுப் பகுத்தறிவு இப்படி இருக்கையில், ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு,' பார்ப்பனர்கள் பிறப்பிலேயே நயவஞ்சகர்கள், ஏமாற்றுக்காரர்கள் போன்ற சில ‘தகுதிகளைக்' கொண்டிருப்பதாகச் சொல்லி வருகிறது.

மனு தர்மம், பார்ப்பானை உயர்ந்தவன், மேலானவன் என்று கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக் கீழானவன், இழிந்தவன், மோசடிக்காரன் என்று கற்பிக்கிறது. அதாவது பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்ற பணியை மனு செய்ததாகச் சொல்லிக்கொண்டு அதே பணியை திராவிட இயக்கமும் செய்கிறது;

இவர்களுக்கு அறிவும் கிடையாது , பகுத்தறிவும் கிடையாது. ஏதாவது பிதற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தொழில் அவ்வளவுதான்.

Anonymous said...

hayyram said...
"""""எல்லோரும் ஒரு மனிதக் குரங்கிலிருந்து தோன்றியவர்கள், அதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் """"""""""""""""""
பதில்:
"மனித குரங்கிலிருந்து" மனிதன் தோன்றவில்லை மனித இனம் ஒரு ஜோடி(ஆண்+பெண்)யிலிருந்துதான் உருவாகியது.

Anonymous said...

""இந்த கட்டுரைக்கு இந்த மறுமொழி தேவையற்றதுதான் ஆனால் இது பொதுவான ஒன்றுதான்"

மனித இனம் ஒரு ஜோடி(ஆண்+பெண்)யிலிருந்துதான் உருவாகியது.அந்த ஒரு ஜோடியை இறைவன் தான் படைத்தான் ஆனால் இறைவனை யாரும் படைக்கவில்லை.இறைவன் என்பவன் படைக்கப்பட்ட பொருள் கிடையாது,நம்மையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் "பரம்பொருள்".அந்த இரட்சகன் ஒரு சூப்பர் பவர்.அந்த சூப்பர் பவருக்கு அழிவே கிடையாது.நம்மையெல்லாம் படைத்து இந்த பூமியில் சிறிதுகாலம் வாழ அவகாசம் கொடுத்து நம்மை கைப்பற்றுவான்.நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கேற்றவாறு சொர்கத்தி(நன்மையி)லும்,நரகத்தி(தீமையி)லும் நம்மை நுழைய செய்வான்.எத்தணை பேர் நம்மில் நிராகரிப்போர் உள்ளனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

செந்திலான் said...

இஸ்லாத்தில் ஜாதி நிச்சயமாக இருக்கிறது.அவர்கள் இதை வன்மையாக மறுக்கலாம். கீழ் வரும் ஒரு இஸ்லாமியரின் ஆய்வையும் அவரது ஒப்புதலையும் படியுங்கள் 


இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)
கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?


பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான்.
1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ""குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.


ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.


அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, ""இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?'' என்று கேட்டார்.


அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.


இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.


இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.


இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன.

மேலும் வாசிக்க

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3636:2008-09-05-20-03-45&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59

தமிழ் ஓவியா said...

தோழர் இன்குலாப் எழுதி 1986 களில் வெளிவந்த யுகாக்கினி என்ற நூலில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் சமத்துவத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பார்.
]
கீழை ஜமீல் முகமது அவர்களின் கருத்து உற்று நோக்கத்தக்கது.
இஸ்லாமில் அப்படியில்லை இஸ்லாமியர்கள் அறியாமல் சில சடங்குகளை செய்து வருகிறார்கள் என்கிறார். யதர்த்தமான உண்மையை எடுத்துரைத்த ஜமால் அவர்களுக்கு நன்றி

இன்னும் இது குறித்த ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

பிறவி said...

இசுலாத்திலும் ஜாதி

எச்.முஜீப் ரஃமான்

இந்திய சூழலில் முஸ்லிம்கள் குறித்த ஒற்றை அடையாள நிலை மாதிரியை அதிகம் முன்னிறுத்தபடுவதால் முஸ்லிம்கள் குறித்த முறையான ஆய்வுகள் அதிகம் இல்லை என்றே சொல்லலாம்.இஸ்லாமிய சமூகxகளுக்குள்ளும் இந்து சமூகஞ்களை போன்ற படித்தர சமூக கட்டமைப்பு காணப்படுகிறது.அஷ்ரப் என்கிற உயர்ஜாதிமுஸ்லிம்களும்,அஜ்லப் என்கிற இடைநிலை ஜாதி முஸ்லிம்களும்,அர்சால்கள் என்கிற இஸ்லாமிய தலித்துகளும் படித்தரமான சமூக அமைப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய இஸ்லாத்தின் தோற்றமும்,வளர்ச்சியையும் மறுவாசிப்பு செய்து பார்கிற போது இந்தியாவில் இஸ்லாம் பரவிய காலத்தில் இருந்தே மரபுசார்ந்து இந்திய சமூக,பண்பாட்டு மாதிரிகளை உள்வாஞ்கிக்கொண்டு தான் இஸ்லாம் பரிணமித்தது.இதனால் சமூக நிலை பெரும்பாலும் மாறாமலும்,அடையாள உருவாக்கம் புதிதாய் முஸ்லிகள் என்ற பெயரில் உருவாகியது.முஸ்லிம்களாக மதம் மாறிய பலரும் சமூக தளத்தில் ஜாதியத்தை மறைமுகமாகவோ,நேரடியாகவோ கடைப்பிடித்து வந்தனர் என்பதை பல ஆய்வுகளும் தெளிவுபடுத்தியுள்ளது.பிறப்பின் அடிப்படையிலும்,செய்யும் தொழில் அடிப்படையிலும் ஜாதி அந்தஸ்துகள் தொடர்ந்து நீடித்தன.அகமணமுரையும்,கலப்பின மண எச்சரிகை உணர்வுகளும் உயர்ஜாதினருக்கு சேவகம் செய்யும் தாழ்த்தப்பட்ட அர்சால்களும்,அர்சால்களை ,அஜ்லபுகளை ஆதிக்கம் செய்யும் போக்கும் என வரலாற்றில் நீண்டு நெடுகே முஸ்லிம் சமூக வரலாறு இருந்து வருகிறது.அடிப்படையில் இஸ்லாமிய சட்டஞ்கள் கூட ஜாதிமயமாக்கப்பட்டது எப்படி என்பதையெல்லாம் விரிவாக அலசுவோம்.
தலித்திய முன்னோடியான டாக்டர் அம்பேத்கார் தமது ஆய்வுகளில் இஸ்லாமிய ஜாதிகள் குறித்து அதிகமாக ஆய்வு செய்துள்ளார்.அடிமைத்தத்தை இஸ்லாம் ஒழிக்க பாடுபட்டபோதிலும் இஸ்லாமும் தன்னளவில் அடிமைத்தனத்தை ஆதரித்தது.பல இஸ்லாமிய நாடுகளின் வரலாறுகளில் அடிமைதனம் நீஞ்கா இடம் பெற்றிருந்தது.அதன் வேறோரு மாதிரியாக இந்தியாவில் இஸ்லாம் ஜாதியத்தை ஏற்றுக்கொண்டது.1901 ஆம் ஆண்டின் வஞ்காள பிராந்தியத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் படி அதிகபடியான ஜாதிகள் முஸ்லிம்களிடையே நிலவி வந்துள்ளது.குறிப்பாக சேக்,செய்யது,பதான்,மொகல் என்கிற உயர்ஜாதி பிரிவுகளும் இருந்துள்ளது.பிரதானமாக அஷ்ரப்,அஜ்லப் என்கிற சமூக படிநிலை முக்கியமானதாகும்.அஷ்ரப் அல்லது ஷரப் என்பது மேன்மையான உயர்வான மனிதர்களை குறிப்பதாகும்,அவர்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து இந்தியா வந்தோரும்,மதம் மாறிய உயர்ஜாதியினரும் ஆவார்கள்.அதற்கடுத்தாற்போல் அஜ்லபுகள் என்கிற சாதாரண,அல்லது தாழ்ந்த மனிதர்களை குறிக்கும் அந்த சொல் தரம்தாழ்ந்தரவரை குறிப்பதாக அமைகிறது.அதற்கடுத்தாற்போல அர்சால்கள் என்கிற இழிவான,விலக்கப்பட்ட மக்களை கடைசிபடிதரமாக கொண்டுள்ளது முஸ்லிம் சமூகம்.அவர்கள் பள்ளிகளில் நுழையவோ,பொது மையவாடியில் அடக்கப்படவோ தகுதியற்றவர்கள் ஆவார்கள்.சுருxக சொன்னால் இந்து சமூக அமைப்புக்கு கிஞ்சித்தும் குறைவானதல்ல என்ற ரீதியில் முஸ்லிகள் உள்ளனர்.
1 அஷ்ரப் அல்லது மேன்மக்கள்
அ) செய்ய்துகள்
ஆ) சேக்குகள்
இ) பதான்கள்
ஈ) மொகல்
உ) மாலிக்
ஊ) மிர்சா
2 அஜ்லப் அல்லது தாழ்ந்த மக்கள்
அ) பிராலி,தாக்ரே
ஆ) தர்சி,ஜோலகா,பக்கீர்,ரxரீஷ்
இ) பர்கி,பல்கியரா,சிக்,சுரிகர்,டாய்,தாவா,டுனியா,காடி,கலால்,கசாய்,குலா,
குஞ்சிரா,லகேரி,மகிபரோஸ்,மலா,நலியா,நிகாரி
ஈ) ஹஜாம்,மூசோ,நகர்சி,நால்,பன்வாரியா,மடாரியா,டுன்லியா,
அப்தல்,பாகோ,பேடியா,பால்,சாம்பா,டபாலி,டோபி,
3 அர்சால் அல்லது இழிந்த மக்கள்
பனார்,ஹலால்கர்,கிஜரா,கச்பி,லால் பெக்கி,மவுக்தா,மெக்தார் இவ்வாறு இஸ்லாமிய சமூகஞ்களில் ஜாதிகளும்,படித்தரஞ்களும் இயஞ்குகிறது (http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar_partition/410.html) . அம்பேத்கார் இஸ்லாம் குறித்த நல்லவிப்பிராயத்தை கொண்டிருந்தார் என்றாலும் முஸ்லிகள் குறித்த அதிருப்தியையும் கொண்டிருந்தார்.அவர் மதம் மாற உத்தேசித்துக்கொண்டு இஸ்லாம் குறித்த பல ஆய்வுகளையும் செய்து கடைசியில் இஸ்லாமும் ஜாதியதில் திளைத்திருக்கிறது என்று கூறி புத்தமதத்தை தேர்வு செய்தார் என்ற வரலாறு நமக்கு இப்போது தெரியவருகிறது.

விரிவான தகவலுக்கு பார்க்க எனது தளத்தை
www.mujeebu.blogspot.com
www.aathirah.blogspot.com

நம்பி said...

இறையடியான் said...

hayyram said...
"""""எல்லோரும் ஒரு மனிதக் குரங்கிலிருந்து தோன்றியவர்கள், அதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் """"""""""""""""""

எது? ஊத்தை குரங்கா...? அப்புறம் ஏன் குரங்கு! வர்ணாசிரமம்?....மேல் குரங்கு ஊத்தை...நடு குரங்கு ஷத்திரிய குரங்கு...கடைசிக்குரங்கு வைசியக் குரங்கு...அதற்கும் கடைசி சூத்திரக் குரங்கு..அதற்கும் கடைசியில ஒட்டு மொத்த பெண்குரங்கு...என்று ஏன் பிரிச்சே ஊத்தை குரங்கு?...

பிரிச்சுபுட்டு ஏன் ஓட்டற?

...மறைக்கிறதுக்காகவா?

இல்லை மறக்குறதுக்காகவா...?

எப்படி பம்முனாலும் நீ காட்டுமிராண்டி என்பது ஊரறிந்த விஷயம்?




//Blogger இறையடியான் said...
பதில்:
"மனித குரங்கிலிருந்து" மனிதன் தோன்றவில்லை மனித இனம் ஒரு ஜோடி(ஆண்+பெண்)யிலிருந்துதான் உருவாகியது.
July 5, 2009 5:07 PM //

பரிணாமம்...
மனிதன் எப்படி தோன்றினான்...?

மனிதன் ஒரு ஜோடியிலிருந்து தோன்றினான்...சரி எந்த ஜோடியிலிருந்து தோன்றினான்...?

ஹி ஹி...உள்ளான் மாதிரியான நீண்டவால்..குரங்கு..
.சிம்பன்சி...மனிதக்குரங்கு...என்று வரும்...அப்படி என்றால் உயிர் ஆரம்பம் செல்லாக இருக்கலாம், அணுவாக இருக்கலாம் அப்படியே பல உயிர்கள் அதன் பரிணாமம்...இப்படி போகும்...

இதை எழுதி தான் நாங்க பாஸ் ஆனோம்...அதையெல்லாம் மதத்துக்கிட்ட காட்ட முடியுமா? அப்பறம் நாங்க எப்படி மக்களை ஏமாத்துறது. எங்க பொழைப்பு என்னவாது..?

நேத்து நடந்த விஷயத்தைக் கூட மறுத்து பேசுவாம். ஆனா மதவிஷயத்தில் மட்டும் நாங்க எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்படியே தான் ஏற்றுக்கொள்ளுவோம்

மத்தவங்களையும் சர்வாதிகாரமா ஏத்துக்கொள்ள வைப்போம். மீறிக்கேட்டா ஒரு உளுத்துப்போன தத்துவம் வைத்திருப்போம்...அதுக்கு பதில் கேட்டா எங்களுக்கு தெரியாது. அந்தளவுக்கு பகுத்தறிவு இருந்தா நாங்க ஏன் இப்படி இருக்கிறோம்.

நாங்களா!, வேணும்னா அப்பப்ப சீர்திருத்தம் பண்ணுவோம். அதுக்கும் ஒரு காரணம் கற்பிச்சுவோம்...வேற யாரையும் காரணம் கற்பிக்க விடமாட்டோம். அப்படி நாங்க எவ்வளவோ பண்ணியிருக்கோமே!...என்ன பண்ணியிருக்கோமே...? மக்கள் பழமைவாதத்தை, மூடநம்பிக்கையை தூக்கி எறிஞ்சிட்டாங்க...உன்னால ஒன்னும் பண்ண முடியல...?

இஸ்லாம் எல்லா நாட்டிலேயும் ஒரே மாதிரியாகவா? பின் பற்றுகிறார்கள்?

இல்லையே!

அதிலேயும் அதிக பழமைவாதம் பின்பற்றுகிறவர்கள்...நவீனமாக பின்பற்றுகிறவர்கள் என மாறிடுச்சு இல்லே..அப்புறம் என்ன?

இதெல்லாம் எப்படி வந்தது...?

முரண்டு பிடிச்சேன்னா பிரிவு தான்...? நீ என்ன மொத்த குத்தகைதாராரா? அப்படின்னு மக்கள் கேக்குறாங்க இல்ல? நாம ஒன்னும் பண்ண முடியாது. மூடிக்கிட்டு போக வேண்டியது தான். மக்கள் சக்திக்கு முன்னால் எல்லாம் தூசு.

நம்பி said...

Blogger இறையடியான் sai


//மனித இனம் ஒரு ஜோடி(ஆண்+பெண்)யிலிருந்துதான் உருவாகியது.அந்த ஒரு ஜோடியை இறைவன் தான் படைத்தான் ஆனால் இறைவனை யாரும் படைக்கவில்லை.இறைவன் என்பவன் படைக்கப்பட்ட பொருள் கிடையாது,//

எந்த ஆண் பெண்? குரங்கா, ஒரு செல் உயிர் அமீபாவா? பாக்டீரியாவா...புழுவா...பறவையா...? இல்லை டயனோசரா? இவைகள் எல்லாம் மனிதன் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவைகள்.

அப்போது இறைவன் எப்படி இருந்தான்?

இறைவனின் படைப்புகளாக கூறப்பட்டவைகளான மூதாதையர்கள் ஏன்? (விலங்கும் மூதாதையார் தான்) அதை பற்றிக் கவலைப்படாமல் ஏன் வாழ்ந்தன? எப்படி வாழ்ந்தன..?

எப்பொழுது மனிதன் இறைவன் பற்றி கவலைப்பட்டான். ஏன்? அப்பொழுது இறைவன் இதையெல்லாம் உயிர் தோன்றியபொழுதே சொல்லவில்லை...?

ஒரு 1400 வருடங்களுக்கு முன்னால் மட்டுமே இதை சொல்லியிருக்கிறானே எப்படி?

கோடான கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றிய உயிர்களுக்கு இப்பொழுது வந்து இதையெல்லாம் சொல்லுவானேன்?


ஆனால் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் பிறந்தவனான மனிதன் மட்டும் இதை பற்றி அதிகம் கவலைப்படுவது ஏன்? அதுவும் ஒற்றுமையில்லாமல் ஒரே மனித இனத்திற்காக வெவ்வேறு கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு கவலைப்படுவது ஏன்?

ஆமாம்! இறைவனை யாரும் படைக்கவில்லை! அப்படியொன்று இருப்பதாக மனிதன் தான் உருவாக்கினான் கற்பனையாக. இது தான் உண்மை. இதைத் தான் இந்தபக்கமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். முடவாதம் பிடித்தால் எப்படி?

நம்பி said...

தொடர்ச்சி....

1400...இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிப்பதற்கு முன் இருந்த இறைவன்களை ஏன் மறந்தீர்கள்...அந்த இறைவன் எந்த வகையில் இந்த இறைவனை விட தாழ்ந்தவனாகிறான்?..அல்லது உயர்ந்தவனாகிறான்?....

இந்த இறைவன்களையும் அன்றுவாழ்ந்த மக்களின் மூதாதையர்கள் (தந்தை தாய்...உறவினர்கள் என்று) பின்பற்றி வந்த இறைவன் தானே....?

அப்பவே முன்னோர்கள் பின்பற்றிய இறைவனையே அடிக்கடி அன்று வாழ்ந்த சந்ததியினர் மாற்றிக்கொண்டார்கள் உண்மைதானே!...

இந்த இறைவன் கோட்பாடு வளர்வதற்கு முன்பு பின்பற்றிய மூதாதையர்களின் இறை கோட்பாடு என்ன? ஆயிற்று?

அப்ப ஒருவர் சொன்னால் மாற்றிக்கொள்கின்ற மனப்பான்மை அன்றைய கரடுமுரடாண மக்களிடத்திலேயே இருந்திருக்கிறது...

இப்போது மட்டும் இது தான் உண்மையான இறைவன். இதைதான் சொன்னான், இதுதான் சரியானது என்று முரண்டு பிடிப்பதென்ன? பிறரோடு முட்டிக்கொள்வதின் மர்மம் என்ன?

அப்படியே நேரில் இருந்து பார்த்தது மாதிரி, ஒவ்வொன்றையும் கூறுவது எப்படி..?

தன் பாக்கெட்டில் இருக்கும் காசை கூட எடுத்து பார்த்து தான் எவ்வளவு இருக்கிறது என்று சொல்லுகின்ற மனப்பான்மை கொண்ட மனிதன்,
எப்படி? இவ்வளவு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவைகளையெல்லாம் ஒன்றொடு ஒன்று ஒப்பிடாமல் ஒட்டுமொத்தமாக இப்படித்தான் என்று சண்டைபோடுவது ஏன்...?

இறைவன் விஷயத்தில் எப்படி இத்தனை பிரிவுகள்...? எல்லோருக்கும் ஒரே மாதிரி எண்ணம் தானே தோன்றியிருக்கவேண்டும். ஒரே மாதிரி இறைவன் தானே தோன்றியிருக்கவேண்டும்.

அப்ப அவரவர் கற்பனை, அந்தந்த பகுதி மக்களின் கற்பனைகள் வைத்து இப்பொழுது இங்கு காலத்தை ஓட்டுகிறது. அதை வைத்து சண்டையும் போடுகிறது.

நம்பி said...

Blogger hayyram said...

மனு தர்மம், பார்ப்பானை உயர்ந்தவன், மேலானவன் என்று கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக் கீழானவன், இழிந்தவன், மோசடிக்காரன் என்று கற்பிக்கிறது. அதாவது பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்ற பணியை மனு செய்ததாகச் சொல்லிக்கொண்டு அதே பணியை திராவிட இயக்கமும் செய்கிறது;//


அப்ப பார்ப்பான் கற்பிக்கிறான் என்பது உண்மை...ஆனால் அது அவசியமானது எனபது இந்த ஆரிய ஊத்தைகளின் மனிதநேயமற்ற வாதம். இதை இதற்காகத்தான் உருவாக்கினான் என்பதையும், இந்த கீழ்த்தரமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதையும், இந்த ஊத்தை பின்னூட்டம் உறுதியாக கூறுகிறது.

ஒருவன் எதிரே இருப்பவனை அடித்தால் பதிலுக்கு எதிரே இருப்பவன் அடிப்பதை தவறு என்று எந்த சட்டமும் தடுக்கவில்லை.

தற்காப்புக்காக அவன் எதை வேண்டுமானாலும் கையாளலாம்.

இந்த குற்றத்தை இன்று வரை விடாமல், குற்றம் என்று தெரிந்தும் செய்பவன் பார்ப்பனன் தான்.

திராவிடம் எனபது ஒரு நிலப்பரப்பு சொல்..அந்த நிலப்பரப்பு மக்கள் பேசுகின்ற மொழிகள் திராவிட மொழிகள், இதெல்லாம் நிருபித்தாகிவிட்டது....பார்ப்பனன் ஒட்டுவதற்காக அவ்வப்பொழுது..இதை மாற்றிக்கொண்டிருப்பான்...ஆரியம் என்பது மரியாதை சொல்...என்று சோ பார்ப்பனன் சொல்லியது போல்....

திராவிடம் என்ற சொல் ஊத்தைகளுக்கு எரிய ஆரம்பித்து விட்டது. என்ன பண்ணுவது வெளியிலிருந்து வந்து, சோம்பேறித்தனத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் நீ பண்ணுகின்ற அட்டகாசம் அப்படி...?


கொடுமைகள் அப்படி? இன்னும் அந்த கொடுமைகளை ஞாயப்படுத்திக்கொண்டிருப்பவனும் நீ தான். உன்னால் இந்த நாட்டுக்கு எத்தனை பெரிய சீரழிவுகள், எத்தனை படுகொலைகள். இணையத்தில் கூட உன் ஜாதியை மறைக்கவில்லையே? ஜாதிய வெறி அப்படி? ஆரிய இனவெறி அப்படி..?

நீ திருந்தணும்கிறது முக்கிய நோக்கமல்ல...ஏனென்றால் தெரிந்தே செய்பவன் பார்ப்பனன்..தெரியாமல் மாட்டிக்கொள்பவன், நம்பிக்கொண்டிருப்பவன் திராவிடன் அவனுக்கு தெளிவுபடுத்துவது தான் முதல் வேலை.


உனக்கு எல்லா நயவஞ்சகமும் தெரியும். அவைகள் ரத்தத்திலேயே ஊறிப்பொன சமாச்சாரம். ஆனால் கடைசியில் திராவிடன் ரத்தம் தான் உன்னை காப்பாற்றுகிறது...உணவு, உயிர், உறுப்புகள்...என அனைத்தையும் கொடுக்கிறது.

கிட்னி கொடுக்கிறது, இதயம் கொடுக்கிறது..கண் கொடுக்கிறது....எல்லாத்தையும் வாங்கி கொண்டு அவனையே இன்னும் இழிவுபடுத்துபவன் பார்ப்பனன்.

நம்பி said...

Blogger nagoreismail said...


//இஸ்லாத்தில் சாதியா? என்ற கேள்விக்கும் முஸ்லிம்களிடத்தில் சாதியா? என்ற கேள்விக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஆனால் இரண்டு கேள்விகளுக்குமே விடை "இல்லை" என்பது தான்.
//

இல்லை என்று கூறிவிட்டு கீழே ஜாதி வகுப்பை காட்டப்பட்டு பின்னூட்டம் வைக்கப்பட்டுள்ளதே!....அப்போதே ஜாதி வந்துவிட்டதே...!

Blogger nagoreismail said...
//இன்றைய நிலை -
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்து இன்றைக்கு பள்ளிவாசலில் காரியதரிசியாகவும், தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பாளர் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். //

பார்க்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் ஞாபகம் வரும்...தாழ்த்தப்பட்டவராக இருந்தவர்!, தாழ்த்தப்பட்டவராக இருந்தவர்!...எவன்? அவரை தாழ்த்தப்பட்டவராக பார்ப்பது?...

முதலில் அவனை தாழ்த்து! அந்த வலியை உணரச்செய்!. நீ யார்? அவரை தாழ்த்துவது? உன்னை விட எந்த விதத்தில் குறைந்தவர்?

இப்பொழுது நிருபணம் ஆகிவிட்டதே ஜாதி இருக்கிறது...பார்வையிலும் இருக்கிறது. என்ன செய்வது....என்று மனிதனை பார்க்கத் தவிறவிட்டோமோ? அன்றே எல்லாமும் தவறிவிட்டது.