
ஆதிசங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்
ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர்
சுவா: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது. அவர் வாதம் புரிவதில் வல்லவர் மஹா பண்டிதர், அதில் அய்யமில்லை, என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை, அவருடைய இதயமும்அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார். அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கிடமாகின்றன. விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான். அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தால் என்கின்றார். நல்லது, இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகையை ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராமாணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில்தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாததொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது. வாதத்திலே தோல்வியுற்றோம் என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன! புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக. சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர். பஹூஜன ஹிதாய பஹூஜன ஸூகாய பலருடைய சுகத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!
உண்மையே உருவெடுத்தவர் புத்தர்
சிஷ்: அய்ய, புத்ததேவர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப்பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்து விட நினைத்தாரே!
சுவா: ஆனால் இந்த மூடப் பிடிவாதத்தினால் உலககுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்திய சாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப்பார்! சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார். இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மைவேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார்.
-------------- நூல்:- சுவாமி விவோகானந்தர் சம்பாஷணைகள் பக்கம் 81-21
3 comments:
விவகாநந்தர் மீது மதிப்பு கூடுகிறது. நன்றாகச் சொல்லி இருக்கிறார்.
பிறப்பு வழி பார்பனர் பிராமணராக அறிவித்துக் கொள்ளுதல் ஆதிசங்கரால் தான் ஏற்பட்டது அதற்கு முன்பு பிராணமனர் என்பது பார்பனர்களை மட்டுமே அடக்கியது அல்ல.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இப்பத்தான் நம்ம ரூட்டை பிடிச்சிங்க போல. வைரத்தை வைரத்தாலதான் அறுக்கனும். "அவாள்" தலைல தூக்கி ஆடற பார்ட்டிகளே அவிகளை கிழிச்சதை தொடர்ந்து எழுதுங்க. உங்களூக்கு ராம கிருஷ்ண பரமஹம்சர்,ஓஷோ எல்லாம் கூட பயன் படுவாங்க. மூட நம்பிக்கையாளர்களையும் இறை நம்பிக்கையாளர்களையும் டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட டாக்கிள் பண்ணுங்க வாழ்த்துக்கள்
Post a Comment