Search This Blog

Showing posts with label பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts

24.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம்-21


(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)

அயோத்தியா காண்டம்
அய்ந்தாம் அத்தியாயம் தொடர்ச்சி 

அதைச் செவியுற்ற தசரதன், நான் பயந்தபடி இவளுக்கு உடம்பில் அசவுக்கியமில்லாமற் போனது என் பாக்கியமே என்று புன்சிரிப் புடன் அவளுடைய முகத்தை நன்றாய் ஆசை தீரப் பார்க்கவேண்டுமென்று அவளைத் தூக்கி எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு அவளிடத்தில் வைத்திருக்கிற எல்லையற்ற காமவிகாரத்தால் என்ன சொல்லுகிறோ மென்று யோசிக்காமல். அழகில் ஈடற்ற வளே! என் உயிருக்குயிரான இராமன்மேல் ஆணை யிட்டுச் சொல்லுகிறேன். நீ வேண்டுவதைச் சொல்லி என்னைக் காப்பாற்று. பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவரும் உன் அழகின் மகிமையையும் என் திறமையையும் நீ முழுதும் தெரிந்தும் இப்படி அய்யுற லாமா? என்கிறான்.

கைகேயிக்கு அவ்வாக்குறுதியால் சந்தேகம் தீர்ந்தது. ஆனால், தான் கேட்டபின் அவன் மறுத்தலும் கூடும் ஆகையால் அவன் வாக்கை உறுதி செய்து அவனைக் கட்டுப்படுத்த எண்ணிக் கைகேயி, நீர் கூறிய வாக்குறுதி உண்மையானால் அதை முப்பத்து முக்கோடி தேவர் களும் மற்றெல்லோரும் கேட்கட்டும். தேவதைகளே, நீங்களே இவர் வாக்குறுதியை நன்றாகக் கேட்டு இதற்குச் சான்றாவீர்கள் என்று உரக்கக்கூவினாள். இவ்வாறு அவனைக் கட்டுப்படுத்தினாள். அவன் காமத்தால் மோகித்து எதைக்கேட்டாலும் கொடுப்பானென்ற நிச்சயத்தால், நான் சம்பாரசுரப் போரில் உமது உயிரைக் காப்பாற்றியதற்காக இரண்டு வரங்கள் தந்தீர்; இப்போதும் நான் எதைக்கேட்டாலும் கொடுப்பதாக மறுபடியும் வாக்குறுதி செய்தீர். இப்போது அவற்றைக் கேட்கப் போகிறேன். நீர் தராது மறுத்தால், நான் உம்மால் அவமானம் செய்யப்பட்டு உயிரை மாய்ப்பேன் என்றாள்.

தசரதன் அவளுக்கு வசப்பட்டு, அவற்றைக் கொடுத்தேன் கேள் என்றான். இப்படிக் காமத்தால் மோகித்துக் கேட்ட வரங்களைக் கொடுக்கத் தயாரா யிருக்கும் தன் கணவனைப் பார்த்துக் கைகேயி, முதல் வரம், இராமன் முடிசூட்டிற்குச் சேகரித்த பொருள்களைக் கொண்டே என் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும். இரண்டாவது வரமாவது, இராமன் மரவுரி முதலியன அணிந்து பதினான்கு ஆண்டுகள் காடேகவேண்டும். தாமதம் கூடாது; உமது வாக்குறுதியை நினைவு கொள்ளும். கடன் வாங்கினவனைக் கடன் கொடுத்தவன் கேட்கும்போது அவனுக்கு வருத்தமுண்டாகும். ஆனால் அது குற்றமா? இராமன் இன்றைக்கே காட்டுக்குப் போவதை நான் பார்க்க வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்றுவதே நற்கதிக்கு வழி! என்று கூறினாள். இடியொலி கேட்ட நாகம் போலத் தசரதன் அறிவிழந்து விழுந்தான். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

இதனால் தசரதன் மிகவும் காமவிகாரத்தில் ஈடுபட்ட வனென்பது தெளிவாகிறது. அதனாலேயே பட்டத்து மனைவியர் மூவரோடு அறுபதினாயிரம் காமக்கிழத்தி யரையும் வைத்திருந்தவனாவான். தசரதன் கிழவ னென்றும், கைகேயி பாலியமானவளென்றும் இவ்வர லாற்றில் கூறப்படுகிறது.

முன் வரலாறுகளால் தசரதனைப்போலவே அவன் மனைவியரும் வயதானவரென்றே தெரியவருகிறது. இங்கே கைகேயி பாலியமானவளென்று சொல்லப்படு கிறாள். இது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. கைகேயி பாலியமானவளென்று கொண்டால் அவளை அவள் தந்தையாகிய கேகய மன்னன், அறுபதினா யிரத்தின் மேலும் வயதான தசரதனுக்கு எவ்வாறு மணஞ்செய்து கொடுத்தானோ? இவ்வளவு வயதான கிழவனாகிய தசரதனிடம் அவள் என்ன இன்பந்தான் பெற்றாளோ? மகனுக்கு விடிந்தால் முடிசூட்டு. தந்தையாகிய தசரதன் கைகேயியைப் புணர்வதற்கு மிகவும் காம விகாரத்தோடு இவ்வாறு தட்டழிகிறான். என்ன ஆச்சரியம்? கோப அறைக்கு ஓடிப்போய் அவளுக்கு நோயோவென அய்யுற்றுக் கவலைப்படு கிறான். உடம்புக்கு ஒன்றுமில்லையென்று அவள் கூறவே, தன் தீய காரியத்திற்கு இடைஞ்சலில்லையென்று மகிழ்கிறான். இவனுடைய காம வெறியைப் பற்றி வால்மீகி முனிவர் மேலே குறித்த கதையாலேயே பல இடங்களில் கூறுகிறார். தசரதன் காம விகாரத்தால் சத்தியம் செய்கிறவன். பின்னால் தன் சொல்லை மாற்றினாலும் மாற்றுவானென்றே அவனைக் கட்டுப்படுத் துவதற்கு அவன் வாக்குறுதியைப் பலரும் அறியும்படி கைகேயி சத்தமிட்டுக் கூறுகிறாள்.
தசரதனோ தன் இழிந்த தன்மைக்கேற்பக் குற்றமில் லாதவரைக் கொலை செய்தல், கொலை செய்தோரை விட்டுவிடுதல் முதலான செயல்களைக்கூடச் செய்வ தாகக் கைகேயியிடம் கூறுகிறாள். இவ்வளவு தூரம் கேவலமான புத்தியையும் ஒழுக்கத்தையும் உடைய வனாகிய தசரதனை நல்லவனைப்போலக் காட்டி உலகத்தாரை ஏமாற்றினார் கம்பர். தசரதனைப் பற்றிய மேலே கண்ட கேவலமான வரலாறு முழுவதையும் கம்பர் கூறாமல் மறைத்தார்.

சபையாரிடத்திலே விடை பெற்றுக்கொண்டு தனியாகக் கைகேயியை நாடிவந்த தசரதனை அவளு டைய அரண்மனைக்கு மன்னர் பலர் சூழ வந்தானென்று கம்பர் கூறுகிறார். ஆதலின் உண்மைக் கதையை மறைப்பதே அவருடைய நோக்கம் போலும்! அவன் தனியே போப அறைக்குச் சென்று கைகேயியைக் கண்டான் என வால்மீகி கூறக்கம்பரோ, வேலைக்காரி களோடும் சென்று அவளைக் காண்பதாகக் கூறுகிறார். இவையெல்லாம் தசரதனுடைய கேவலமான காமவெறித் தன்மையை மறைத்து, அவனை நல்லவனைப்போல உலகுக்குக் காட்டி மயக்கப் போலும்!
தசரதன் கைகேயியனுடைய அழகிய முகத்தைப் பார்த்து மகிழ்வதற்காக அவளை எடுத்து மடிமீது வைத்துக் கொள்கிறான் என்று வால்மீகி கூறியிருக்கக் கம்பரோ அவளை வாரியெடுத்ததாகவும், அவள் அவன் கையைத் தள்ளிக் கீறே மறுபடியும் விழுந்தாளென்றும் கூறுகிறார். தசரதன் தன்னிடம் கைகேயி பேசிய பின்னரே அவளைத் தூக்கி மடிமீது வைத்தக் கொண்டானென்றும் வால்மீகி கூறுகிறார்; கம்பரோ போனவுடனே அவன் அவளைத் தூக்கியதாகக் கூறுகிறார்.

தசரதன் முதலில் தன் புண்ணியத்தின் மேல் ஆணையிடுகிறன்; பின்னரே இராமன்மேல் ஆணை யிடுகிறான். அவன் தன் புண்ணியத்தின் மேல் ஆணை யிட்டதைக் கம்பர் கூறாது விடுத்தார்.


மேலே கண்ட வரலாற்றை வால்மீகி பத்து, பதினொன்று என்ற இரண்டு சருக்கங்களிலே மிகவும் விவரமாகக் கூறியிருக்கக் கம்பர், அதையே கைகேயி சூழ்வினைப் படலத்தில் முதல் பத்துப் பாடல்களால் மிகச்சுருங்கக் கூறுகிறார். இது தசரதனுடைய இழி குணத்தை மறைக்கவே.

ஆறாம் அத்தியாயம்
இராமன் காடேகவும் பரதன் நாடாளவும் கூறிய கைகேயியின் பேச்சு காதில் விழுந்தமாத்திரத்தில் தசரதன் மிகவும் கலங்கினான். அது கனவோ நனவோ என அய்யுற்றான். தனக்குப் பித்தேறியதோ என எண்ணிக் கொஞ்சம் தெளிந்து கொடுங்கோபத்துடனே கைகேயியை எரிக்கிறவன் போலப் பார்த்து. அடி, கெட்டவளே! நானாவது, இராமனாவது உனக்குச் செய்த தீமை உளதோ? எல்லாரும் இராமனைப் புகழ்கின் றார்களே! என்னிடம் அளவற்ற அன்பை வைத்திருக்கும் அவனை எவ்வாறு பிரிவேன்.

அவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆசை வளர்கிறது. அவனை ஒரு கணம் பார்க்காமலிருந்தாலும் என்னுயிர் போய்விடும். அவனில்லாமல் என்னுடலில் உயிர் நிற்காது. தீயவளே! பிடிவாதத்தை விடு. என் தலையால் உன் அடிகளைத் தொட்டு வேண்டுகிறேன். இதுவரை அவனை நல்லவ னென்றாயே. இது என்னை மகிழச்செய்வதற்கா அல்லது அவன் உனக்கு பணிவிடை செய்வதற்கா? உனக்கு யார் இக்கெட்ட புத்தியைச் சொன்னது? இராமன் மிக்க செல்லமாக வளர்ந்தான். அவனைக் காட்டுக்கு அனுப்ப உன் மனம் எப்படித்துணிந்தது? அவன் எல்லோருக்கும் பிரியமானவனாயிற்றே? உலகம் சம்மதிக்குமோ? அவன் உனக்குப் பணிவிடை செய்வதில் கொஞ்சமாவது தவறுவ தில்லையே. பரதனைக் காட்டிலும் அவன் உனக்குச் சிறந்த பணிவிடை செய்கிறானன்றோ? அப்படியிருக்கப் பரதனிடத்தில் என்ன சிறப்பைக் கண்டாய்! மனிதரிற் சிறந்தவனான இராமனைக் காட்டிலும் அதிகமாக உனக்கு ஊழியம் செய்கிறவர் யார்? உன்னிடத்தில் அதிக மரியாதையையும் வணக்கத்தையும் வைத்து, உன் சொற்படி நடக்கிறவர் இராமனைத் தவிர யார்? அப்படி யிருக்க அவனைக் காட்டிற்குத் துரத்த எப்படி உன் மனம் துணிந்தது? அவன் தன் பணியிலும் கொடையிலும் எல்லோரையும் வசப்படுத்துகிறான். அவன் எல்லோ ருடைய மனம்போலவும் நடப்பவனாயிற்றே. கைகேயி! எனக்கோ வயதாகிவிட்டது. நெடுநாள் பிழைத்திருக்க மாட்டேன். கிழவனான நான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பவன். ஆகையால் என்னிடத்தில் இரக்கம் வை. நீ எனக்கு வயதிற் சிறியவளாக இருந்தாலும் உன் கால்களைத் தொடடுக் கைகூப்பி வேண்டுகிறேன். நான் இராமனுக்குச் சொன்ன சொல்லைத் தவறும்படி செய்யாதே என்று வேண்டிக் கொண்டான்.

பின் கொஞ்சநேரம் மூர்ச்சையடைந்து எழுந்து தள்ளாடிப் புலம்பிய தசரதனை நோக்கிக் கைகேயி, உம்மையொத்த மன்னர் உம்முடைய உயிரைக்காத்த கைகேயிக்கு என்ன உதவி செய்தீரென்று கேட்டால் யாது கூறுவீர்? தன்னுயிரைக் கொடுத்து யா என்னைக் காப்பாற்றினாரோ, யாருடைய தயவால் நான் பிழைத் திருக்கிறேனோ, அவளுக்கு அப்போது இரண்டு வரங்கள் கொடுத்துவிட்டு இப்போது அவற்றை மறந்து விட்டேனென்று சொல்வீரோ? சிபி முதலியவர் குலத்திற் பிறந்தவரா நீர்? கெட்ட எண்ணமுள்ளவனே! நீ அதர் மமாக நடந்து இராமனுக்கு முடிசூட்டிக் கவுசலையோடு சுகமாக வாழ எண்ணங்கொண்டிருக்கிறாயல்லவா? இராமனுக்கு முடி சூட்டினால், உன்னெதிரிலே நஞ்சைக் குடித்து இப்போதே இறப்பேன். கவுசலையைக் காட்டிலும் உனக்கு நானே அதிக சுகத்தைக் கொடுக் கிறவளல்லவா? ஆதலின் கோசலையை எல்லோரும் வணங்குவதை நான் பார்ப்பதைவிட உயிரையே விடுவேன் என்று கூறினாள். தசரதன் எவ்வளவு கெஞ் சியும் மறு மொழி கூறவில்லை. அவன் கொஞ்சநேரம் அவளை இமை கொட்டாமற் பார்த்திருந்து, இராமா என்று கூவிக் கீழே விழுந்தான்.
பின் அவன் வணக்கமாய், பெண்ணே! உன்னைச்சிறு பெண்ணாக மணந்தேன். அப்போது உன் கெட்ட குணத்தை அறிய முடியவில்லை. இப்போது வயதான பிறகு உன் தீய குணம் வெளியாகிறது. குடிகளுடைய கோபத்தைத் தேடாதே. பரதன் மிகவும் நல்லவனல்லவா? ஆதலில் அவன் இராமனிருந்தாலே நாட்டிலிருப்பான். என்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் இந்த நாட்டைச் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறேன். அல்லது பரதனுக்கு முடிசூட்டுகிறேன். இராமன் மாத்திரம் வயதான என்னருகிலிருக்கும்படி செய்; பலநாளாகச் சிந்தித்துச் செய்த இத்தீர்மானத்தை இப்படிக் கெடுக்கலாமா? பலருக்கு முன்பாக இராமனுக்கு முடிசூட்டு நாளை என்ற என்வாக்குப் பொய்யாகுமே! கோசலை மிகவும் உத்தமி. அவள் முன் என்ன சொல்வேன்? உனக்காக அவளைச் சரியாக நான் நடத்தலானாலும் சரி, எனக்கு நன்மை தராத இந்தக் காரியத்தை உன் பேச்சைக்கேட்டு நான் செய்யவே மாட்டேன். உனக்குச்சாவு வரக்காணோமே. அய்யோ! உன் கால்களைப் பிடித்து வணங்குகிறேன் தயவு செய்!

                                ---------------------------"விடுதலை” 19-8-2014

Read more: http://viduthalai.in/page1/86140.html#ixzz3BE9IvIPB

17.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து -III






விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்த மாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தரு கிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண் டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது

15.8.2009_இன் தொடர்ச்சி வருமாறு:_

இங்ஙனமாக இக்கதை பிரம்மவைவர்த்த புராணத்தின்கண் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடுகளையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்கள்! அன்பர்களே! எல்லாம் வல்ல சிவ பிரானுக்கும், அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால் அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும், எவ்வளவு பேராற்றலும் உள்ளதாக இருக்கவேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற்று என்றால், அப்-பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமா? கூர்ந்து பாருங்கள்! மேலும் அத்தெய்வப் பிள்ளையைவிடச் சனியன் அன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான். அதுவுமேயன்றி முழுமுதற் கடவுளான அம்மையப்பர் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்யமாட்டாமற் போயினரென்றால் அச்சனியனன்றோ அவர்களிலும் மேலான தெய்வமாய் விடுகிறான்.

அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பனுக்கு இல்லாமற் போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க அவை தம்மையெல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினாரென்பது கடவுளின் இறைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும், இழிவுகளும் பொல்லாங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவனும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்லுமின்கள்!

ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களினும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துவதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்ப்பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவுபடுத்தி விட்டான் என்பது உங்கட்குப் புலப்படவில்லையா? இவ்வாறு சைவத்திற்கும், சிவபிரான் தன் முழு முதல் தன்மைக்கும் முழு மாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்றும் எமது அறிவுரையினைக் கண்டு குறை கூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்பதைத் தெரிந்து கொள்மின்கள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகா புராணத்தின்கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனையும், மாறு கோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக்காட்டுதும்.

ஒருகால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கை எல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தம் கையாற் பிடித்து தமது குளியலறையின் முன் வாயிலில் வைத்து, சிவபெருமான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம்.

அங்ஙனம் பிடித்துவைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரளை, உடனே உயிருள்ள பிள்ளையாராக்கி அக்குளியலறையின் வாயிற் காவலாய் இருந்ததாம். சிவபிரான் அம்மையைத் தேடிக் கொண்டு அங்கு வந்தாராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போக வேண்டாமெனத் தடை செய்ய இருவருக்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடி கடைசியாகச் சிவபிரான் அப்பிள்-ளையாரின் தலையை வெட்டினாராம்.

அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையின் தலையை வெட்டி விட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதாராம். அது கண்ட சிவபிரான் நாமும் ஆற்றாதவராகி, ``நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே! இப்போது இவனை உயிர்ப் பெற்றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து, அதனை அப்பிள்ளையின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தாராம். அங்ஙனம் எழுந்த பிள்ளையாரே விநாயகக் கடவுளாம்.

அன்பர்களே! எவ்வளவு அருவருக்கத்தக்கதான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினைவயத்தாற் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருளொளி வீசித் துலங்குவது என்று தேனோபநிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும், கடவுளிலக்கணத்திற்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்தது என்றும், அவ்வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையார் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகா புராணம் எனப் பெயர் பெறுவதற்குத் தகுதி உடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்.

ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிகமும், தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினுமினு என்று மிளிர்ந்து நிற்க, தூய அருட்பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாய் இருக்குமோ? சொன்மின்கள்! மேலும் நம் மனைவியாரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான், தமது பிள்ளை என்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டார் என்பது கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் எல்லா அறிவுக்கும் அறிவாய் _ எல்லாக் காலங்களிலும் எல்லா உலகங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான், தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால், அஃது அறிவுடையோரால் ஒப்பத் தக்கதாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும், உடலையும் பொருத்தி உயிரோடு எழுப்பி விடலாகாதா?

வெட்டுண்ட தலையை எடுத்து, வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தினரென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது. இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுள் இலக்கணத்திற்கு அடுக்குமா? உண்மையாய் நோகுங்கால் சிவபெருமானையும், அருள்வடிவான பிராட்டியையும் ஓங்கார ஒலி வடிவில் விளங்கும். இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பான் இக்கதையைச் சிவமகா புராணம் என்னும் பெயரால் கட்டிவிட்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குரட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தை சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதா-யிருக்கின்றது.

-----------நிறைவு

----------------சைவ சித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய "கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா" என்னும் நூல்

16.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - II




விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.

யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.


---------------மறைமலைஅடிகள் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில், பக்கம் 190



6. விநாயகரின் மனைவியர் பட்டியல்


விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர்க்கு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)


7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

----------------மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் -ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி



8. பார்ப்பனர்களின் பொய்மூட்டையே பிள்ளையார் பிறப்பு



விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவில் கட்டி விட்டார்கள். யாங்கனமெனிற் கூறுதும்.

திருக்கையிலாயத்தின்கண் சிவபிரானும், அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் _ பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப் பெற்றிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்யானை உருவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம்.

அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை உருவெடுக்க இறைவனும் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தாராம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தாராம். இவ்வாறு கந்தபுராணத்தின் கண் சொல்லப்பட்டது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும், மானக் குறைவினையும் விளையாது ஒழியுமோ! மக்களுள்ளும் இழிந்தவர் செய்ய விரும்பாத இக்காமச் செயலினை இறைவன் செய்தான் என்பது எவ்வளவு அடாததாய் இருக்கிறது. தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும் பேரின்ப உருவாயே நிற்கும் கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத் தக்கதாய் இருக்கின்றது. உணர்ந்து பார்மின். இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்புடைந்து காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்துவிட்டது.

பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய் கடவுளிலக்கணத்திற்குப் பெரிதும் மாறுபாடு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தாராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியன் எனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகுமென்று நினைத்துத் தலை குனிந்து அதனைப் பாராது இருக்க, அவன் கருத்தறியாது அம்மை அவன் தன் மகனைப் பாராது இகழ்ந்தனனென்று சினங்கொள்ள, அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தானாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச்சனியன் மேல் சினங்கொள்ளல் ஆயினராம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும், அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன் மேல் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப்படுத்திருக்கும் யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்கட்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளை முண்டத்திற்குப் பொருத்தி அதனை உயிர்பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளையாருக்கு யானை முகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

--------------தொடரும்......

(சைவ சித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய ``கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்)


-------------------நன்றி:-"விடுதலை"14-8-2009

தமிழர்களின் ஒட்டுமொத்தமான பகைவர்கள்தாம் இந்தப் பார்ப்பனர்கள்!


தமிழினத்தின் பகைவர்கள்

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழிமூலம் பிழைத்து வந் தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியாகக் கருதுவதில்லை. அவர் களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ் கிருதத்தின்மீதுதான் என்றார் அறிஞர் அண்ணா.

------------------------------திராவிட நாடு, 2.11.1947.

இது தமிழுக்கு மட்டுமல்ல; தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழருக்கும் சேர்த்துதான்.

18 ஆண்டு காலம் கோணிப் பைக்குள் முடக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை பெங்களூருவில் கடந்த வாரம் (9.8.2009) மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை சென்னை அயனாவரத்தில் கருநாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவால் நேற்று (13.8.2009) திறந்து வைக்கப்பட்டது.

கருநாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி; தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி; கொள்கையில் இரு துருவங்களில் உள்ள கட்சிகள் என்றாலும், அதனை எல்லாம் கடந்து இரு மாநில மக்களின் நல்லுறவை வளர்க்கும் என்ற பொதுக் கருத்து உருவாகியுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சரும் கூறியுள்ளார்; கருநாடக முதலமைச்சரும் கூறியுள்ளார்.

இந்த நல்லுறவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் மட்டும் குறியாகவே இருக்கிறார்கள். இதன் பொருள்_ தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு எதுவும் நன்மையாக அமைந்துவிடக்கூடாது என்பதுதான். தமிழர்களுக்கு எதிரான பகைமை சக்திகள் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான்.

நேற்று சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில்கூட தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை உணர்வை நீக்கி, நட்புணர்வை உருவாக்கும் இந்த விழாவிற்குக் களங்கம் கற்பிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வார துக்ளக் இதழைப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்காமற்போகாது.

அட்டைப் படத்திலேயே ஆரியக் கொடுக்கின் நஞ்சு வழிந்து ஓடுகிறது. காவேரி நீர் தர்றதுக்குப் பதிலா திருவள்ளுவர் சிலை திறந்துட்டோம். காவேரிப் பிரச்சினை தீர்ந்தது என்று கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா சொல்லுகிறாராம்; இன்னொரு கருநாடக அமைச்சரோ பெரியார் சிலையையும் ஒண்ணு திறந்துட்டோம்னா ஒகேனக்கல் பிரச்சினையும் நிம்மதியாப் போயிடும் என்று சொல்லுகிறாராம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் திறந்ததுபற்றி ஒரே ஒரு வரிகூட பாராட்டி எழுதும் விசால மனம் இல்லை. 18 ஆண்டுகாலமாக அது முடக்கப்பட்டுக் கிடந்ததுபற்றியும் ஒரு வரியில்லை.

இப்பொழுது திறக்கப்பட்டது என்றவுடன், இதனால் காவேரி நீர் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்துப்பட ஒரு கார்ட்டூன் போடுகிறது துக்ளக்.

சதா 24 மணிநேரமும் தந்தை பெரியார்பற்றிதானே அக்கிரகாரக் கும்பலுக்கு நினைப்பு. அவரை இழுத்துக் குளிர்காயவில்லையென்றால் தூக்கம் வராதே!

பெரியார் சிலையும் திறந்துவிட்டால் ஒகேனக்கல் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்று ஓர் எதிர்மறை உணர்வை ஊட்டுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

திருவள்ளுவர் சிலையையோ, தந்தை பெரியார் சிலையையோ திறப்பதுபற்றியும் கேலி செய்யவேண்டும்; இத்தகு தமிழினத் தலைவர்களின் சிலைகளைத் திறப்பதால் மகிழ்ச்சி அடையும் தமிழர்கள் மத்தியிலே திசை திருப்பும் நரித்தனத்தையும் நாசூக்கவும் செய்யவும்வேண்டும்.

இதனால் எல்லாம் என்ன ஆகப் போகிறது?

காவேரியில் நீர் வரப் போகிறதா? ஒகேனக்கல் திட்டம் நிறைவேறப் போகிறதா? என்று நையாண்டி செய்வதன்மூலம் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டியது பார்ப்பனர்கள்பற்றி அறிஞர் அண்ணா சொன்னதைத்தான்.

உண்மையிலே காவேரியில் நீர் வந்துவிடக் கூடாது; ஒகேனக்கல் திட்டமும் நிறைவேறிவிடக் கூடாது என்பதுதான் தமிழினப் பகைவர்களான பார்ப்பனர்களின் எண்ணவோட்டம்.

தமிழ் செம்மொழியானால், கத்தரிக்காய் விலை குறையுமா என்று தினமலர் எழுதவில்லையா? அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் இதுவும்.

துக்ளக், தினமலர் வாங்கும் தமிழர்கள் தான் சிந்திக்கவேண்டும்.

தமிழர்களின் ஒட்டுமொத்தமான பகைவர்கள்தாம் இந்தப் பார்ப்பனர்கள் என்பதற்குக் கூடுதல் சாட்சியங்கள் இவை.

------------------"விடுதலை" தலையங்கம் 14-8-2009

15.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - I




விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

---------------ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய, பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42



2. விநாயகர் இடைக்கால வரவே!


அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

---------------டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20


3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை


நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

---------------தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில் பக்கம் 17

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8.9.1978)



4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

------------------சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில் பக்கம் 62

--------------------தொடரும்...........
(சைவ சித்தாந்த தென்னிந்தியநூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய ``கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும்நூல்)

----------------நன்றி:-"விடுதலை" 13-8-2009

18.7.09

தமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண்ணணும்!





"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 9


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும்(காஞ்சி சங்கராச்சாரியார்) ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம் உபன்யாஸம் பண்றோம் ஹோமம் பண்றோம் ஆனா.. பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே.. அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணணுமே" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.

தமிழ்தானே!

ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள் இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?”

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

"இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம் இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும் ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?”

என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும் சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

"ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.

"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்... என்றேன.; அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.


உங்களுக்கு...?




"நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்.. ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?”


மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள்
சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன் அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்.. மகாபெரியவர் திருப்பாவை .திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும் அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள் (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!

தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும் அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.

தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.

இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு 'பாவை" தெய்வம் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.

இப்பண்பாடு நீட்சியாகி.. தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.

இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து 'நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம் நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும் என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.

கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது பிற்பாடு.. கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக நாயகி பாவம்" வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு.

தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர் பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் 'பாவை" நோன்பு ஆயிற்று.

இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை 'பாவைமாநாடு" என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.

இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான" பதில் அவர்களுக்கு புரியவில்லை.

அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக.. மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன் அது...

கும்பகோண மடம். சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி" அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால் அருணாசலத்திடம் சொன்னேன 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது நாளை வாயேன" என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்" என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர் விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.

போனேன் கேட்டார் சொன்னேன். 'இதோ பாரும் தாத்தாச்சாரி அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே? தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். ப+ஜைக்கு நேரமாயிடுத்துல்யோ, அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ" என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன் "நான் சொன்னதுதானப்பா சுவாமிகள் மௌனத்தில் இருக்கார் நாளைக்கு வாயேன்" என்றேன்.

'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன் சரி.. நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்"; என தாய்மொழியாம் தமிழில் மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.


------------- நன்றி:- 'நக்கீரன்’இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் எழுதிய "இந்துமதம் எங்கே போகிறது?" என்ற நூலிலிருந்து

29.4.09

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 8


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------




அரைத்தார்கள்! கரைத்தார்கள்!! குழத்தார்கள்!!!

யார்? எதை? எங்கே? என்று ஆவலோடு கேட்பது காதில் விழுகிறது. ஒரு சிறிய முன்னுரை விளக்கம் நடந்த நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும்.

திருவிசலூர் (திருவிசைநல்லூர்) கும்பகோணம் வட்டத்தில் திருவிடைமருதூரிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ளது ஒரு சிற்றூர்.

அந்த ஊரில் 2.8.1930 அன்று தந்தைபெரியார் தலைமையில் - இரண்டாவது பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடைபெற்றது. திருவிசலூரிலும், அருகே உள்ள வேப்பத்தூரிலும் வசதிமிக்க அக்கிரகாரங்கள் உண்டு. நடப்பதோ பார்ப்பனர் அல்லாதார் மாநாடு! மாநாட்டுத் தலைவரோ தந்தை பெரியார்! சும்மாயிருக்குமோ சுரர் கூட்டம்?

கல்லைக் கடவுளாக்கி, சாணத்தைச் சாமியாக்கி குரங்கையும், நாயையும், எலியையும் நம்மவர்களைக் கும்பிட வைத்த கூட்டமாயிற்றே!


பல்வேறு புரளிகளைப் பரப்பியது பூசுரர் கூட்டம்!

கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்து வந்து விடுவார்கள்? கோயிலில் நுழைந்து கொள்ளை அடிப்பார்கள்! அக்கிரகாரத்தில் நுழைந்து விடுவார்கள்!
விளைவு என்ன? மாநாட்டுத் தலைவர்கள் வரும் வழியிலுள்ள திருவாவடுதுறை சைவ ஆதினத்தாருக்குட்பட்ட திருவிடைமருதூர் கோவிலின் நான்கு கதவுகளும் அடைக்கப்பட்டன.

சுமார் 500 ஆட்கள் தடிக்கழிகளோடு காவல் புரிந்தனர். மாநாடு நடக்கும் நாளின் காலையிலேயே திருவிசலூர், வேப்பத்தூர் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் அக்கிரகாரசந்துகளில் நூற்றுக்கணக்கான, உலகமறியா படிப்பில்லாத, நம்மினப் பாமரர்களைக் காவல் போட்டதுடன் தாங்களும் தடிகளோடு வரிந்து கட்டிக் கொண்டு காவல் காத்தனர்.

திருவிடைமருதூர் பார்ப்பன நீதிபதியும், பார்ப்பன காவல்துறை உதவி ஆய்வாளரும் தம்முடன் பல காவலர்களை வைத்துக் கொண்டு காவல் புரிந்தனர்.

இக்காட்சியைக் கண்ணுற்ற தந்தை பெரியாரின் கூற்றைக் கேளுங்கள்!

என்னுடைய இந்தப் பத்து பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பயணத்தில் ஓர் இடத்திலாவது இந்த (திருவிசலூர் பார்ப்பனர்) மாதிரி பார்ப்பனர் வரிந்து கட்டிக் கொண்டு தடியுங்கையுமாய் நின்று கொண்டிருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை (குடிஅரசு, 10.8.1930 பக்கம் 8)

என அய்யாவுக்கே திருவிசலூர் பார்ப்பனர்களின் ஆணவம் வியப்பை அளித்திருக்கிறது. இவ்வூர் பார்ப்பனர்கள் இவ்வளவு அகம்பாவம் கொண்டது ஏன்? அவர்கள் நூறு வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்! அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தார்களா?

பார்ப்பனர் பார்வையில் உழைப்பது பாபம். பயிரிடும் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது (மனுதர்மம், அத். 10, சுலோ. 84) என்பது மனு செய்த சட்டம். ஏர் பிடித்து ஓட்டியே மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இரு பார்ப்பனர்களுக்கு - நடமாடிய தெய்வம் - காஞ்சி முனி - சந்திர சேகரேந்திரர் - ஆசி வழங்க மறுத்த செய்தி அனைவரும் அறிந்ததே! அரசன், தான் கண்டெடுத்த புதையலில் சரிபாதியை அவாளுக்கு அழவேண்டும் என்பது மனுதர்மம் (அத். 8, சுலோ. 38) அப்படி ஏதேனும் திருவிசலூர் பார்ப்பனருக்கு லட்சுமி கடாட்சம் கிடைத்ததோ? அப்படி வரலாறு ஏதுமில்லை.

அவ்வூர் பார்ப்பனர்கள் எப்படி நிலச்சுவான்தார் ஆனார்கள் என்ற வரலாற்றைத் தந்தை பெரியார் அவர்கள் தமக்கே உரிய முறையில் கூறுவதைக் கேளுங்கள்:

இந்தக் கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கையில் கொண்டு போய்ப் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றில் போய்ச் சேரும்படி அரைத்துக் குடிக்கச் செய்துவிட்டால் அதிகப் புண்யமென்பதாகக் கருதி, பிராமணர்களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங்களையும் (வீடுகள்) கட்டிக் கொடுத்து 100 வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலமும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது (குடிஅரசு, 10.8.1930, பக்கம் 12).

நரமேதயாகம் செய்யும் பார்ப்பனர்கள் ஒரு நரனின் எலும்பை அரைத்து கரைத்து குடிக்கவா தயங்குவார்கள்?

இப்போது தெளிவாக அறிந்து கொண்டீர்களா - திருவிசைநல்லூர் வாழ் அந்தணர்களின் முன்னோர்கள் ஆற்றிய அருந்தொண்டு பற்றி!

விரைவில் வெளிவர இருக்கும் அருந்தொண்டு ஆற்றிய அந்தணர்கள் நான்காம் தொகுதியில் இப்பார்ப்பனர்களின் வரலாற்றை எதிர்பாருங்கள்!

------------------------மு.நீ. சிவராசன்- "உண்மை" –ஜனவர் 16-31 2008

16.4.09

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?"--7


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------
பிராமணாள்-இதராள் என்ற வேறுபாட்டுக் கொடுமை பாரீர்

நான் கரூர் போஸ்ட் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்த 3ஆம் நாள் ஒரு சம்பவம் நடந்தது. நான் கவுண்டரில் வேலை செய்து கொண்டிருந்தேன். மதியம் 3 மணி இருக்கும். தண்ணீர்த் தாகம். ஆபிஸ் ஹால் நடுவில் போஸ்ட் மாஸ்டரின் இருக்கை. அவரைத் தாண்டித் தான் மண்பானைகளில் குடிநீர். தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். போஸ்ட் மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு, நீ இந்தப் பானையில் தண்ணீர் எடுக்க வேண்டாம். அடுத்த பானையிலிருந்து தான் குடிக்க வேண்டும் என்று சொன்னார். நான் தலையை ஆட்டிவிட்டு எனது வேலையை கவனித்தேன்.

மறுநாளும் அதே நேரத்தில் தாகம். நேற்று போஸ்ட் மாஸ்டர் சொன்னது நினைவில் இல்லாததால் அதே பானையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினேன். போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்து என் மீது சீறி-விட்டார். (அன்று, எல்லாமே ஆங்கிலம்தான்) “Did I not tell you yesterday that you should not drink water from that Pot? What do you think of yourself? I will show you who I am if you repeat it again” என்று பொரிந்து தள்ளினார். நான் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். உடனே ஒரு Flash வந்தது. மதுரையில் பிராமணாள்கள் சாப்பிடும் இடம் என்று பல ஓட்டல்களில் பலகை தொங்குவதை பார்த்திருக்கின்றேன். நாங்கள் பலகையை பிராமணாள்கள் சாப்பிடும் இடம் என்று படித்துச் சிரிப்பதுண்டு. அதுதான் இது என்று எனக்கு க்ளிக் ஆனது.

எனக்கும் கோபக்கனல் சுடர்விட்டது. ஒன்றும் பேசமுடியவில்லை. உடல் நடுங்கியது. வெறிபிடித்தது போல் வேகமாகப் போய் அங்கிருந்த கனமான வெண்கலத் தம்ளரை எடுத்து ஒரே அடியில் பானையை உடைத்தேன். பானை உடைந்து தண்ணீர் சிதறிப்பரவியது. டார்ஜான் சினிமா பார்த்திருக்கிறேன். டார்ஜானாக என்னை உருவகப்படுத்திக் கொண்டு போஸ்ட் மாஸ்ட்டரையும், மற்றவர்களையும் முறைத்துப் பார்த்தேன். யாரும் என் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டனர். நேரே எனது கவுன்டருக்கு வந்து அமர்ந்து வேலையை பார்த்தேன். ஒரே மயான நிசப்தம். யாரும் குச்சுக் குச்சுவாகக் கூட பேசிக் கொள்ளவில்லை.

அன்று அந்த போஸ்ட் ஆபிசில் போஸ்ட் மாஸ்டர் ஒரு அய்யங்கார். நாமம் போட்டு, தார்பாச்சி வேட்டி கட்டி, கோட் அணிந்து டை கழுத்தில் கட்டியிருப்பார். தலைப்பாகை அணிந்திருப்பார். அன்று இது ஒரு ஸ்டாண்ட்ர்ட் டிரஸ். கிளார்க்குகளில் 6 பேர் பிராமணர்கள். ஒரே ஒருவர் பிராமணரல்லாதவர். இவர் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தங்கவேலு பிள்ளை, ஐந்து தபால்காரர்களும், மூன்று ப்யூன்களும் சூத்திரர்கள். அதில் இருவர் முஸ்லீம்கள்.



--------------------- டி. ஞானையா அவர்கள் எழுதிய "நானும் ஓடினேன்" நூலிலிருந்து

14.4.09

தமிழன் தன்மான உணர்ச்சியைப் பலி கொடுக்கலாமா?


விரோதி ஆண்டா?

தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு - யாரும் செய்ய எண்ணிடாத, துணியாத பல அரிய சாதனைகளை வரலாற்றுக் கல்வெட்டாகப் பொறித்திருக்கிறது.

இடைக்காலத்தில் தமிழர்கள் மத்தியிலே நுழைந்த ஆரியச் சகதிகளின் படையெடுப்பினால் தமிழ்மொழி கூட ஆரியக் கலப்புச் சிதைவுக்கு ஆளாக நேரிட்டது.

ஆரியத்தால் எப்படி நால்வகை வருணாசிரமம் நுழைந்து பன்னூறு துகள்களாக ஜாதியால் பிளவு பட்டார்களோ, அதுபோல, தமிழ் மொழியும்கூட தெலுங்கு என்றும், கன்னடம் என்றும், மலையாளம் என்றும், துளு என்றும் மருவி தன் உண்மை வடிவத்தைத் தொலைக்கும் அவலம் ஏற்பட்டது! இது வரலாற்றில் மாபெரும் கொடுமை - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழைத் தவிர மற்றவை சமஸ்கிருத இலக்கணத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் சீர்கெட்டுப் போய்விட்டன. ஆரியத்தின் அந்தத் தாக்கத்தால் அம்மொழி பேசும் மக்களின் சிந்தனையில்கூட ஆரியத் தன்மை ஏற்பட்டு விட்டது என்றால் அது மிகையாகாது; இன்றுகூட காவேரிப் பிரச்சினையில் கருநாடகமும், முல்லை பெரியாறு விவகாரத்தில் மலையாளமும், பாலாறு சர்ச்சையில் ஆந்திரமும் தமிழ்நாட்டோடு முட்டி மோதிடத் தோள் தூக்கி நிற கின்றன என்றால், நாம் அனைவரும் திராவிடர்கள் என்ற இனவுணர்வை ஆரியம் அடித்து நொறுக்கிப் பகையாள யாக மாற்றியதுதான் அதற்குக் காரணம்.

தமிழர் வாழ்வில் ஆரியத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது - தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் பிள்ளைகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் ஆரிய மயமாகி இருப்பதை என்ன சொல்ல!

ஆரியப் பண்டிகைகளை பக்தியின் பெயரால் தமிழர்கள் கொண்டாடும் கேவலம் அரங்கேறி விட்டதே - எங்கு சென்று முட்டிக்கொள்ள! தமிழனை வீழ்த்திய நிகழ்ச்சிகளையெல்லாம் கருப்பொருளாகக் கொண்ட கதைகள் எல்லாம் விழாக்களின் பட்டியலில் இடம்பெற்று, தமிழனையே கொண்டாடும்படி தமிழனின் மூளையை விலங்கிட்ட விபரீதத்தை எண்ணினால் ரத்தக் கண்ணீர் தான் வடிக்க வேண்டியுள்ளது.

தமிழ் ஆண்டுகள் 60 என்று கூறி அத்தனைப் பெயர்களையும் சமஸ்கிருதமாக்கி தமிழன் தலையில் கட்டி விட்டனர். இதனை எதிர்த்து நீண்ட காலம் தமிழகம் போர்க்குரல் கொடுத்தது. தமிழறிஞர்கள் முரசொலித்தனர். மக்கள் மத்தியில் இந்த ஆபாசத்தை தோலுரித்துக் காட்டினார் மாபெரும் சமூகப் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள்.

திராவிடர் கழகம் மாநாடுகளில் எல்லாம் தீர்மானம் போட்டுள்ளது. புரட்சிக்கவிஞர் விழாவைத் தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா என்ற பெயரில் நடத்தி, முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களின் முன் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் கோரிக்கை வைத்ததுண்டு.

இயல்பிலேயே தமிழ் உணர்வும், தன்மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் கொண்ட மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 5 ஆம் முறையாக முதலமைச்சரான நிலையில், இதற்கொரு தீர்வினை சட்ட ரீதியாகக் கண்டார்கள். பிரபவ என்று தொடங்கும் ஆரியப் பெயர்களைத் தூக்கி எறிந்து தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என அறுதியிட்டு உறுதி செய்தார். இதன்மூலம் தமிழின வரலாற்றில் - சிகரத்தில் தகதகவென ஞாயிற்றொளியாக வீசுகிறார்.

வழக்கம்போல் ஆரியம் எள்ளி நகையாடியது - எதிர்ப்புக் கனலில் வாட்டி எரியீட்டிகளை வீசிப் பார்த்தது. பெரியாரின் சீடரா பணிவார்?


இதில் வெட்கக்கேடு என்னவென்றால், தமிழில் ஏடு நடத்தி தமிழர்களிடம் விற்றுக் காசு சேர்க்கும் தமிழர்கள் நடத்தும் ஏடுகள்கூட கொஞ்சம்கூட வெட்கமின்றி, தன்மானமின்றி, குப்பையில் தூக்கி எறியப்பட்ட அந்தக் கசுமால ஆரிய ஆண்டைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சுவதுபோல அந்தப் பழைய ஆண்டை புத்தாண்டாகக் கருதி சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன. இதனை தமிழ் வருடப் பிறப்பு என்று கூசாமலும் எழுதுகின்றனர். நாள்காட்டிகளிலும் பழைய பத்தாம்பசலி ஆண்டின் பெயர் களைக் குறிக்கின்றன. (ஆண்டின் பெயர் விரோதியாம்). இது சட்டப்படி தவறான ஒன்றாகும். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் சட்டப்படி கொண்டுவந்த பிறகு பழைய முறையிலே தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்குமா? அதுபோன்றதே இதுவும் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

பக்தியின் பெயரால் தமிழன் தன்மான உணர்ச்சியைப் பலி கொடுக்கலாமா?

நமக்கொரு தமிழன் ஆட்சி கிடைத்து தமிழன உணர் வோடு செயல்படும்போது, அதனைப் புரிந்துகொள்ள வேண்டாமா? சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டாமா? தமிழர்களே, பார்ப்பனர்களைப் பார்த்தாவது திருந்திடுவீர்


--------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 14-4-2009

11.4.09

காங்கிரசிற்குள்ளேயே ஒரு திராவிடர் கழகம் தோன்றிவிடும்!




(அதிகம் அறியப்படாத ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) பற்றிய நூல் இது. அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை என செயல்பட்ட, உயர்ந்த மனிதரான ஓமந்தூராரின் அரசியல் வாழ்க்கையை ஆரியம் எப்படி வீழ்த்தியது என்பதை இந்த நூல் விவரிக்கிறது. ஓமந்-தூராரின் ஆட்சிக் காலத்தையும் அக்காலத்தில் அண்ணா, திராவிட நாடு இதழில் எழுதிய தலையங்கம் குறித்தும் வரலாற்றுச் சுவடுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறது.)

இனி நூலிலிருந்து...

ஒழுங்கீனத்தையும், முறையற்ற பரிந்துரையையும் அனுமதிக்கவே கூடாது என்பதில் ராமசாமி முடிவாக இருந்தார். அதுவே அவருக்கு பிரச்னை ஆனது.
இது பற்றி முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார், முத்துலிங்க ரெட்டியார் ஆகியோர் தன்னிடம் சொன்னதாக சோமலே ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் 1948இல் ஒரு நீதிபதி பதவி, காலியாக இருந்தது. அந்த இடத்திற்குப் புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் என்.சோமசுந்தரம் பெயரைத் தலைமை நீதிபதி (ராஜமன்னார்) சிபாரிசு செய்தார். முதலமைச்சர் ஓ.பி.ஆர். அதை ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் நேருவின் இனிய நண்பருமான என்.கோபாலசாமி அய்யங்கார் தம் மருமகன் வி.கே.திருவேங்கடாச்சாரிக்கு நீதிபதி பதவி கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டார் நேருவிடம் குறை கூறினார். நேரு, ஓமந்தூராரை சந்தித்த போது, பட்டேல் முன்னிலையில், நீங்கள் பிராமணரல்லாதார் அரசாங்கத்தை சாதி அடிப்படையில் நடத்தப் பார்க்கிறீர்கள் என்றார். சொன்னதை வாபஸ் வாங்குங்கள் அல்லது என்னுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஓ.பி.ஆர். ஓ.பி.ஆர். ராஜினாமா செய்தால் பல புதிய அரசியல் விளைவுகள் இருக்கும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி, சர்தார் படேல் அந்த அளவில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது குறித்து பி.வி.ராசமன்னார் பின்வருமாறு கூறுகிறார்:

சோமசுந்தரத்தை நியமித்ததில் பிராமணர்களுக்குக் கோபம். யாராவது ஒரு பிராமணரைப் போட்டிருக்கலாமே என்று. அதற்கு ஓ.பி.ஆர். பொறுப்பு இல்லை. அவர் தலையிட-வில்லை. சிபார்சு செய்தவன் நான் தான். ஓ.பி.ஆர். பிராமணர் விரோதி இல்லை. ஆனால் சட்ட விரோதமாக நீதிக்குப் புறம்பாகப் பிராமணர்களுக்குச் சலுகை காட்டமாட்டார்.

இதேபோல் பீ.ஏ.வர்கீஸ் அய்.சி.எஸ். தன்னிடம் சொன்னதாக சோமலே இன்னொரு செய்தி தருகிறார்.

ஹிந்து நாளிதழ் ஓமந்தூரார் சாதி உணர்ச்சியுடையவர் என்று எழுதியிருந்தது. உடனே அந்த இதழின் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார்.
உங்கள் பத்திரிகையில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள்? எத்தனை பேர் என்ன என்ன சாதியினர்? பிராமணர்கள் எத்தனை பேர்? என்று நேருக்கு நேராக கேட்டார்.

உலகப்புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர் கே.சீனிவாசன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அப்படியிருக்க நான் சாதி உணர்ச்சியுடையவன் என்று எழுதியிருக்கிறீர்களே? என்றும் ஓ.பி.ஆர். கேட்டார்.

********************************************************

அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்து சென்னை ஐலன்ட் மைதானத்தில் கூட்டம் (13.2.1949) நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். நான் இந்தக் கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் என்னைக் கண்டு விசித்திரமான ஒரு கேள்வி கேட்டார். நீ ஏதோ இந்த மட மசோதாவை ஆதரிக்கிறாய். அது சரியோ தப்போ அது உன் விருப்பம். ஆனால் இந்த மசோதாவை ஆதரித்துப் பேச உனக்கு காங்கிரஸ் மேடை எதுவும் இல்லையா? கேவலம் கருப்புச் சட்டைக்காரர்கள் மேடைதானா அகப்பட்டது? இதுதான் அவர் கேட்ட கேள்வி.

இந்தக் கேள்விக்கு நான் ஒரு பதில் கேள்வி போட்டேன். நண்பரே, கன்னங்கரேல் என்று இருக்கிற நாவல் பழத்திற்குள்ளே எவ்வளவு ருசி இருக்கிறது தெரியுமா? இந்தப் பதிலை நான் தந்தவுடனே அந்த நண்பர் திகைத்தே போய்விட்டார்.

என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.எஸ்.-வேலுச்சாமி பேசினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கோகலே மன்றத்தில் நடந்த கூட்டத்தில், வைத்தியநாதய்யர் தும்மினால் கூட உடனே பத்திரிகையில் வருகிறது. அவர் மூச்சுவிட்டால் கூட அவர் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு பத்திரிகை நிருபர்கள் வருகிறார்கள். அவர் பேசியதைவிட அதிகம் கூறுகிறார் பேசியதாக. அந்த அதிகப் பிரசங்கத்துக்கும் கண் காது மூக்கு வைத்து, பேசியது 75 பகுதி-யானால் செய்தி வெளியாவது 100 பகுதி என்றாக்கி விடுகிறார்கள். இந்தப் பத்திரிகைக்-காரர்கள். ஆனால் நாங்கள் பேசினாலோ ஒத்தைவரி கூட வருவதில்லை. இது ஏன்? இதற்கெல்லாம் காரணம், தினசரிகள் எல்லாம் ஒரு சிறு கூட்டத்தார் கையில் சிக்கிக் கொண்டி-ருப்பது தானா அல்லவா, இந்தப் பத்திரிகைகள் ஒழிந்தால் ஒழிய நாம் நல்வாழ்வு பெறுவது என்பது ஆகிற காரியமா?

தேங்காய் பழம் வாங்கிக் கொண்டு கோயில் கட்டிய நாம் தமிழர்கள், கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே நிற்க, பிராமணர்கள், உள்ளே இருந்து கொண்டு, நம்மை உள்ளே நுழையாதே என்கிறார்களே இது ஆணவமா அல்லவா? உண்மையிலேயே இந்த இந்து மதம் காண்பவர் கைகொட்டி நகைக்கும் அளவுக்கு இன்று கேவல நிலை அடைந்திருப்பதற்குக் காரணம் இந்த வைத்தியநாதய்யர் பரம்பரைதானே - என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜராமும்,
இந்த மசோதாவால் இந்து மதத்தின் அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன என்று கற்றறிந்த பார்ப்பனர்களும் கதறுகின்றனரே? இந்த அடிப்படை உரிமைகள் யாவை? ஐந்து சதவிகிதமுள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 சதவிகிதமுள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவது தானே இந்த அடிப்படை உரிமைகளின் அடிப்படை? இது நியாயமா? இந்த 95 சதவிகித மக்கள் கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் 5 சதவிகித மக்களில் சுரண்டப்பட்டும் வருகின்றனர். அதே நேரத்தில் எழுத்து வாசனை அற்றவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இன்று நடப்பில் இருந்துவரும் இந்துமதம் இதுதானே? இந்த இந்துமதத்தைக் காப்பாற்றுவதற்குத் தானா வைத்தியநாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்.
என்று எம்.எல்.ஏ.ஈஸ்வரனும்.
இந்து மதக் கோயில்களும் மடங்களும் இன்று இருக்கும் கேவல நிலைமை நம்மை இந்து மதத்தை விட்டு விரட்டுவதாகவும், அல்லாவிட்டால் எந்த மதமும் தேவையில்லை என்ற முடிவுக்குத் துரத்துவதாகவும் இருக்கிறதே என்பதைக் காணக்கான சிறந்த சமயப் பற்றுதல் படைத்த என் உள்ளம் துடிக்கிறதே - என்று எம்.எல்.ஏ. லட்சுமி அம்மையாரும் பேசினார்கள்.


திராவிட இன எழுச்சி வெள்ளம் காங்கிரஸ் பாலத்தின் கீழ் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது - என்றும், திராவிடர் கழகமே இனி அழிந்தாலும் கவலையில்லை, பெரியாரும் அண்ணாவும் பாரதிதாசனும் புவியிலிருந்து மறைந்தாலும் கவலையில்லை, நெடுஞ்செழியன்களையும் அன்பழகன்களையும் ஜனார்த்தனங்களையும் நாம் இனி இழந்து விட்டாலும் கவலையில்லை, காங்கிரசிற்குள்ளேயே ஒரு திராவிடர் கழகம் தோன்றிவிடும். இனி ஜெயமுண்டு பயமில்லை மனமே - என்றும் போர்வாள் (19.2.1949) எழுதுமளவுக்கு காங்கிரசுக்குள் திராவிடர் கழக கருத்துக்கள் தலைதூக்க ஓமந்தூரார் காரணமானார்.

---------------ப.திருமாவேலன்- நூல்:-"காந்திராமசாமியும் பெரியார் ராமசாமியும்"

8.4.09

தர்மத்திற்கு விரோதமா?


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------


16. தர்மம்

நமக்கு எறும்பை மிதித்துவிட்டாலும் பாவம்; அவனுக்கோ (மேல் நாட்டானுக்கோ) இதைப்பற்றிக் கவலையில்லை. இங்கும் பசுவை அடித்தாலும் பாவம் என்கிறோம். அங்கு அவனோ - அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை.

ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலாமென்கிறான்; மற்றவன் அதைப் பாவமென்கிறான். இப்படிச் சௌகரியத்திற்குப் பழக்கத்திற்கும் ஏற்றவாறுதான் கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கக்கூடும். ஆதலால், அனைத்தும் காலதேச வர்த்தமானத்திற்கேற்றவாறு இருக்க வேண்டும் என்பது நன்கு விளங்கும். அன்றியும், அந்தக் காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏதேதோ எழுதிவைத்திருக்கலாம். அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை. ஆனால், நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, இன்றைய நிலைமையில் எப்படி இருக்கவேண்டும் என்பதேயாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டா, என்றும் பார்க்கவேண்டும். நாம் நமது செல்வம் - அறிவு - ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்பட வேண்டு மென்பதனால் அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது.

------------------------------------------ தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-38

7.4.09

மூட நம்பிக்கைகள் ஒழிய


குறைந்துபோகும்!

"மக்களின் அறிவைக்கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச்செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தேபோகும்."

------------- தந்தைபெரியார் -"விடுதலை", 16.10.1960

“நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” நீதிபதி வெண்டுகோள்


6 மாந்தருள் தலைசிறந்த மாணிக்கம்!




இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு என்மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றால், நான் யாரைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் எனக்கருதியிருக்கிறேனோ, யாரை மாந்தருள்தலைசிறந்த மாணிக்கம் என்று எண்ணியிருக்கிறேனோ, அவருடைய நாற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதனால் அவருக்கு ஒரு சிறுதுளி நன்றிக் கடனைச்செலுத்த முடிகிறது இந்த வாய்ப்பால், நாம் யாருக்கு நன்றி கூறுகிறோம்!

விவரமறிந்த நாளிலிருந்து சாதி ஒழிய வேண்டும் என்று பறைசாற்றி-சாகும் தருணம் வரை அதற்காகப்போராடிய தலைவருக்கு நன்றி செலுத்துகிறோம்.

நம்மிடையே வாழ்ந்த தலைவர்களின் அய்யா அவர்கள் தலையாயவர் என்பதில் யாருக்கும் எந்தவிதமான அயப்பாடும் இருக்க நியாயமில்லை.

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்!

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் அவர் கண்ட களங்கள் எத்தனை, வெற்றி வாகைகள் எத்தனை என்பதைக் கணக்கிட முடியாது, “தனக்கென வாழாப்பிறர்க்குரியாளன்” என்றால் அது அய்யாவையே சாரும்.

எங்கெல்லாம் மக்கள் மத்தின் பேரால் - சாதியின் பேரால் சுரண்டப்பட்டார்களோ, அங்கே பெரியார்தலைமையேற்று அந்தச் சுரண்டலை ஒழிக்க முதலில் நின்றார்கள். அப்படி நடந்த ஒன்று வைகத்தில் நடந்த போராட்டம். யாருடைய நிழல்பட்டால் “தீட்டு” என்று, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுகப்பட்டார்களோ, அரவ்களை வீதியில் அழைத்துச் சென்று “வைக்கம் வீரர்” என்ற அழியாப் புகழை அடைந்தவர்கள் அய்யா ஆவார்.


மக்களிடையே சமத்துவம் நிலவ வேண்டும்; சாதி முதலில் ஒழிய வேண்டும் என்பதைத் திண்ணமாக்க்கொண்டிருந்தவர் அய்யா.

இவர் இவ்வாறு பள்ளு, பறைகளை எல்லாம் கோயிலில் நுழைய வைத்ததைப் பார்த்த வைதீகர்கள், “என்ன அய்யா, இம்மாதிரி ஒரு தகாத செயலைச் செய்துவிட்டீர்களே” என்று கேட்டதற்கு மிக வேடிக்கையாக அவர் பதில் சொன்னார்.

அய்யாவின் அணித்தரமான பதில்!

“மூடி வைத்திருக்கிற சாமியை அவன் பார்த்தா என்ன? சாமிக்குக்கோபம் வந்தால் அது மறைந்து கொள்ளட்டுமே! நீயேன் அவஸ்தைப் படறே” என்று அழுத்தந்திருத்தமாக்க் கூறினார். இதையும் ஏதோ நான் கேட்டமாதிரி கூறவில்லை. தலைவர் காமராஜ் அவர்கள், அய்யா இப்படிச் சொன்னார் என்று குறிப்பிட்டிருகிறார்கள். யாருக்காவது சந்தேகம் இருக்குமானால், சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலரில் 101-ஆம் பக்கத்தைப் பாருங்கள். நான் வகிக்கிற பதிவியின் காரணமாக நான் ஆதாரத்துடன் தானே பேச வேண்டும்!

அந்த ‘வைக்கம் வீரர்’ இன்று இல்லாததினால் நான் விழுப்புரங்களும் பேராணாம்பட்டும் தோன்றியுள்ளன. பெரியார் இல்லாத குறையை நாம் நன்றாக உணர முடிகின்றது. இந்தக் கலவரங்கள் நோயாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு தீராத நோயின் ஆரம்பக்கட்டமாக இவை இருந்தால் மனித உள்ளம் படைத்தவர்கள் அனைவரும் தீவிரமாக இது பற்றிச் சிந்திக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஓர் இருவராவது வைக்கம் வீர்ராக மாறவேண்டும். வெறும் வைக்கோல் வீரர்களா இருக்க கூடாது.

அன்று தெய்வங்கள் ‘இருப்பிடம்’ எனப்படும் கோவில் மீது படை எடுத்தார். பின்னர் ‘நீதித்தெய்வங்கள்’ இருக்கும் நீதி மன்றத்தின்மீது கணை விடுத்தார். அந்தக் கணைகளால் விழுந்த பழங்கள்தான் நானும் எனது அருமை நண்பர் மாண்புமிகு வரதராஜனும். சிறிது வெளிப்படையாகவே கூறுகிறேன்; என்னைப் பொறுத்தமட்டிலாவது இந்தப் பதவி அய்யா அவர்களுக்கு உரித்ததாகும். என்னுடைய மனக்குறை எல்லாம் அவர் வாழ்நாளிலே இது கிடைக்கவில்லையே என்பதுதான்.

அடுத்து, மூட நம்பிக்கை; நேற்று ஒரு இளைஞர் குழாத்திற்குத்தலைமை வகித்து உரையாற்றினேன். அங்கே குறிப்பிட்டார்கள். 13 அதிர்ஷ்டமற்ற எண் என்று நான் கேள்விப்பட்டேன். எந்த இளைஞர் சமுதாயம் பார்த்து இந்த நாட்டை வளர்க்க வேண்டுமோ அந்நச் சமுதாயம் இந்த எண்ணம் கொண்டிருந்தால் நாடு எப்படி உருப்படும்? 13-ஆம் தேதி பிறந்தவர்களே அப்படியானால் என்ன செய்வது? ஆற்றிலே குளத்திலேதான் தள்ள வேண்டும்? அப்படியானால் என் மனைவியையல்லவா நான் இழக்க நேரிடும்? இது போன்றே நாளினைப் பல கூறுகளாகப்பிரித்து ராகுகாலம், எமகண்டம் என்று கூறி நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

இது வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக உள்ளதே, என்று கூறினால், ‘நாத்திகம்’ என்று கூசாது சொல்கிறார்கள், ராகு காலத்தில் ரயில் கிளம்பினால் போகாமல் இருப்பதுதானே! அவ்வளவு தூரம் போவானேன். நாங்கள் இருக்கும் நீதி மன்றத்தில், என்னுடைய வழக்கு ராகுகாலத்தில் ஆரம்பிக்க நான் விரும்பவில்லை; ஆகவே, வாய்தா கொடுங்கள் என்றால் அது குறும்புத் தனமா, இல்லை கோமாளித்தனமா? என்பதை நீங்களே தீர்மானிக்க விடுகிறேன்.

எதிலும் எதிர் நீச்சல் போட்டவர்!


இப்படிப் பலப்பல போராட்டங்களை நடத்தி வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக் கொண்டவர் பெரியார். எதிலும் எதிர் நீச்சல் போட்டே வெற்றி கண்டவர். புரையோடிப்போன, புல்லரித்துப்போன நம் சமுதாயத்திகுப் புது வாழ்வளித்த அந்த உத்தமர் நம்மிடையே இல்லை ஆனால், இன்னம் பல தலைமுறைகளுக்கு அந்தப் புகழ் அழியாது நிற்கும்.

நம்முடைய நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் அந்த அஞ்சா நெஞ்சனை, அஞ்சல் தலையாகப் பார்கின்றபொழுது கண்கள் குளமாவது இயற்கை; அஞ்சல் தலை வாயிலாக அவருக்கு மரியாதை காட்டிய இந்திய அரசிற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நடைபாதைக்கோயிலை இடித்துத் தள்ளுக!

இந்த மாபெரும் விழாவில் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி அமையவிரும்புகிறேன். பெரியாருக்குக தியாகி மான்யம் கொடுப்பது பற்றி யோசிக்கப்படுமா என்று சட்டசபையில் கேட்கப்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்தத்தமிழக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று கூறினார்கள். அவ்வளவு தூரம் வேண்டாம்-இந்த அரசை நான் உங்கள் சார்பாக கேட்டுக்கொள்வதெல்லாம், “நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” என்று; இதை இடிப்பதால் பக்தர்கள் மனம் புன்படாதா என்று உடனே கொதித்து எழுவார்கள். அவர்களுக்கெல்லாம் நான்கூறுவேன். இப்படிக் கொதித்து எழுபவர்கள் போலிப் பகத்ர்கள்; மத்த்தைப் பற்றி, ஆகமத்தைப்பற்றி அறியாத அறிவிலிகள். ஆகமத்தில் என்ன கூறியிருக்கிறது என்றால், 31 கலச நீராட்டி, மதச் சடங்குகளோடு நிறுவப்பட்டவுடன்தான் அந்தச் சிலை வடிவாக இருக்கின்ற சாமிக்குத் தெய்வீக சக்தி வருகிறது. இவ்வாறு நான் கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கின்போது ஜஸ்டிஸ் பாலேகர் அவர்கள் கூறினார். ஆகவே, ஆகமத்தின்படி இவை ஆலயங்கள் இல்லை- நமக்கோ அதைப்பற்றிக் கவலையே இல்லை-போக்குவரத்திற்கோ இடைஞ்சல்-இந்த நிலையில் இடித்தால் யாருக்கு நஷ்டம்? இந்த அரசு தயங்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

எந்தெந்தக் கொள்களைகளுக்காக வாழ்ந்து மடிந்தாரோ அந்தக் கொள்களைகளைப் பின்பற்றி நட்டப்பதுதான் அய்யாவுக்குச் சிறந்த அஞ்சலியாகும். அஞ்சல் தலையோடு நின்றுவிடக்கூடாது என்று கூறி அமைகிறேன்.

----------------17-9-78 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தந்தைப் பெரியார் நூற்றாண்டு விழா’வில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை -நூல்:-"நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்" பக்கம்:-38-42

பெரியார் சிலைப் பீடங்களில் கடவுள் மறுப்பு வாசகம் எதற்காக?


காந்தி கோயில்

ஒரிசா மாநிலம் சம்பல்பூர் பகுதி - பாத்தா என்னும் கிராமம் அங்கு ஒரு கோயில்? யாருக்கு காந்தியாருக்கு. கட்டியது யார்? சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர். காரணம். அவரால்தான் கோயிலுக்குள் செல்லும் உரிமை கிடைத்தது.

பக்கத்து மாநிலங்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்கிறார்களாம்.

கோயில்கள் எப்படி தோன்றியிருக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு காந்தீஸ்வரமூர்த்தி என்று பெயர் சூட்டப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

காந்தி தீண்டாமையை எதிர்த்துப் போராடினார் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்படுவதற்கு இந்த ஏற்பாடு பயன்படுமா? நிச்சயம் பயன்படாது. இன்னும் சொல்லப்போனால் எதற்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது என்கிற அடிப்படைக் காரணம் மறந்துபோய்- இந்தக் காந்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்தால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும், தோஷங்கள் நீங்கும் என்பன போன்ற கட்டுக்கதைகள்தான் கிளம்பும்.

புத்தரைக் கடவுளாக்கி ஜாதகக் கட்டுக் கதைகளைப் பரப்பவில்லையா?

தந்தை பெரியார் சிலைப் பீடங்களில் கடவுள் மறுப்பு செதுக்கப்பட்டிருப்பதன் இரகசியம் இதுதான்!