
ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.
--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்
இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)
தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்
------------------------------------------------------------------------------
பிராமணாள்-இதராள் என்ற வேறுபாட்டுக் கொடுமை பாரீர்
நான் கரூர் போஸ்ட் ஆபிஸில் வேலைக்கு சேர்ந்த 3ஆம் நாள் ஒரு சம்பவம் நடந்தது. நான் கவுண்டரில் வேலை செய்து கொண்டிருந்தேன். மதியம் 3 மணி இருக்கும். தண்ணீர்த் தாகம். ஆபிஸ் ஹால் நடுவில் போஸ்ட் மாஸ்டரின் இருக்கை. அவரைத் தாண்டித் தான் மண்பானைகளில் குடிநீர். தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். போஸ்ட் மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு, நீ இந்தப் பானையில் தண்ணீர் எடுக்க வேண்டாம். அடுத்த பானையிலிருந்து தான் குடிக்க வேண்டும் என்று சொன்னார். நான் தலையை ஆட்டிவிட்டு எனது வேலையை கவனித்தேன்.
மறுநாளும் அதே நேரத்தில் தாகம். நேற்று போஸ்ட் மாஸ்டர் சொன்னது நினைவில் இல்லாததால் அதே பானையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினேன். போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்து என் மீது சீறி-விட்டார். (அன்று, எல்லாமே ஆங்கிலம்தான்) “Did I not tell you yesterday that you should not drink water from that Pot? What do you think of yourself? I will show you who I am if you repeat it again” என்று பொரிந்து தள்ளினார். நான் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். உடனே ஒரு Flash வந்தது. மதுரையில் பிராமணாள்கள் சாப்பிடும் இடம் என்று பல ஓட்டல்களில் பலகை தொங்குவதை பார்த்திருக்கின்றேன். நாங்கள் பலகையை பிராமணாள்கள் சாப்பிடும் இடம் என்று படித்துச் சிரிப்பதுண்டு. அதுதான் இது என்று எனக்கு க்ளிக் ஆனது.
எனக்கும் கோபக்கனல் சுடர்விட்டது. ஒன்றும் பேசமுடியவில்லை. உடல் நடுங்கியது. வெறிபிடித்தது போல் வேகமாகப் போய் அங்கிருந்த கனமான வெண்கலத் தம்ளரை எடுத்து ஒரே அடியில் பானையை உடைத்தேன். பானை உடைந்து தண்ணீர் சிதறிப்பரவியது. டார்ஜான் சினிமா பார்த்திருக்கிறேன். டார்ஜானாக என்னை உருவகப்படுத்திக் கொண்டு போஸ்ட் மாஸ்ட்டரையும், மற்றவர்களையும் முறைத்துப் பார்த்தேன். யாரும் என் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டனர். நேரே எனது கவுன்டருக்கு வந்து அமர்ந்து வேலையை பார்த்தேன். ஒரே மயான நிசப்தம். யாரும் குச்சுக் குச்சுவாகக் கூட பேசிக் கொள்ளவில்லை.
அன்று அந்த போஸ்ட் ஆபிசில் போஸ்ட் மாஸ்டர் ஒரு அய்யங்கார். நாமம் போட்டு, தார்பாச்சி வேட்டி கட்டி, கோட் அணிந்து டை கழுத்தில் கட்டியிருப்பார். தலைப்பாகை அணிந்திருப்பார். அன்று இது ஒரு ஸ்டாண்ட்ர்ட் டிரஸ். கிளார்க்குகளில் 6 பேர் பிராமணர்கள். ஒரே ஒருவர் பிராமணரல்லாதவர். இவர் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தங்கவேலு பிள்ளை, ஐந்து தபால்காரர்களும், மூன்று ப்யூன்களும் சூத்திரர்கள். அதில் இருவர் முஸ்லீம்கள்.
--------------------- டி. ஞானையா அவர்கள் எழுதிய "நானும் ஓடினேன்" நூலிலிருந்து
7 comments:
ஞானையா எழுதிய நூலிலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டது சிறப்பாக இருந்தது.
இப்போதும் இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் பார்ப்பன மேலதிகாரிகள் அவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் உயர்த்த முயலுவது அப்பட்டமாக தெரிகிறது.
சகோதரி,தங்களது வளைகாப்பு பற்றிய பதிவு படித்தேன்.பின்னூட்டமும் இட்டுள்ளேன்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா
காலம் மாறியிருக்கிறது சகோதரி.போஸ்டாபீஸ் , ரயில்வே,போன்ற அமைப்புகளில் தற்போது பிராம்மணர்களின் ஆதிக்கம் சுத்தமாக குறைந்துவிட்டது. மாறாக தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரால் உதாசீனப் படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.தொழிற்சங்கங்களிலும் இது அதிகம்.அதன் காரணமாகவே சாதிய அடிப்படையில் தொழிற்சங்கம் துவங்க வேண்டிய நிலை வந்துள்ளது.மாநில அரசுப்பணியிலும் குத்தலான பேச்சும்,சகஊழியர் என்கிற தோழமையின்றி பேச்சாலும் செயலாலும் ஒதுக்கப்படுவதும் ஏனைய சாதி ஊழியர்களால் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக திருச்சிக்கு வடக்கே வன்னியர்களும்,தெற்கே,மறவர்களும்,கிழக்கே கள்ளர்களும் இந்த ஆதிக்க சக்தியாய் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் கண்டிக்கத்தக்கவர்களே.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பிராம்மணர்களால் வலிந்து உறுவாக்கப்பட்ட வர்ணாசிரம தர்மம் என்றாலும் அதை வன்மத்துடன் கடைபிடித்துவரும் ஆதிக்க சாதியினரின் செயல்கள் இன்றைக்கு வலிமையாக கண்டிக்கப்பட வேண்டியது.அதை விடுத்து இன்னும் பார்ப்பன எதிர்ப்பு என்பது காலம் கடந்த விஷயமாகவே தெறிகிறது.
1.இன்றைக்கு சாதிச் சண்டை நிகழும் இடங்களில் பார்ப்பனர்கலின் பங்கு என்ன?
2.வேலைபார்க்கும் அரசு நிறுவனங்களிள் உங்களுக்கு தெரிந்து எந்த சாதி வெறி பிடித்தலைபவர்கள் பார்ப்பனர்களா?மற்றைய சாதியினரா? சகோதரி இது விதண்டா வாதமில்லை.ஒரு கலந்துரையாடல் தான்.எனது கருத்து தவறென்றால் விளக்குங்கள்.புரிந்து கொள்கிறேன்.நான் பணிபுரிந்த இடங்களில் பிராம்மணர்களுடனும், ஏனைய சாதியினருடனும் மிக நெருக்கமாகப் பழகியுள்ளேன்.அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இக்கருத்தை வைக்கிறேன்.
//இப்போதும் இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் பார்ப்பன மேலதிகாரிகள் அவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் உயர்த்த முயலுவது அப்பட்டமாக தெரிகிறது.//
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளமாட்டான் என்று டி.எம்.நாயர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை.
டி.ஞானையா தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனத்தின் (NFPTE) மாபொதுச்செயலராக இருந்தவர்.வயது 86. கோவையில் வசித்து வருகிறார்.மிகச் சிறந்த அறிவுஜீவி.அவர் பல நூல்களை எழுதி உள்ளார். அவர் 2008ல் வெளியிட்ட " இஸ்லாமும் இந்தியாவும்" ஒரு வரலாற்று ஆவணம்.மதசார்பற்ற சிந்தனை உடைய அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் .அதை அங்கிலத்திலும் அவர் எழுதியுள்ளார்.மிகப் பெரிய படிப்பாளி. இந்த வயதிலும் "பயங்கரவாதம்- அதன் தோற்றுவாய்" என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதி வருகிறார்.
ஆயுள் காப்பீட்டு கழகத்தில், இன்னும் இதர மத்திய அலுவலகங்களிலும் பார்ப்பனர்களின் ராஜ்ஜியம் தான் நடைபெறுகிறது...இது ஆதாரப்பூர்வமானது...குடுமியுடனும்..அவர்களே எல்லா இடங்களிலும் வலம் வருகின்றனர்...வளர்ச்சி அதிகாரிகளாக இருப்பவர்களிடம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதவர்கள் முகவர்களாக இருந்தாலும்...பார்ப்பன முகவர்களுக்குத்தான் முன்னுரிமை எல்லாம்...அதே போன்று சமூகத்தில் பார்ப்பனர்கள் ஒழுக்கமானவர்களாகவும்,,,மற்றவர்கள் ஒழுக்கமற்றவர்களாகவும் காட்டிக்கொள்வதை விட பெரிய இழிவு வேறொன்றுமில்லை...அவர்கள் பொது இடங்களிலேயே ''தன் ஜாதி தன் ஜாதி'' இது தான் என்று பார்ப்பன பாஷையை வெளிப்படுத்திக்கொள்வது ஒன்றே போதுமானது...தமிழகத்தில் 6000 ஜாதிகள் உள்ளது...இத்தனை ஜாதிகளையும் ஒன்றாக நிறுத்தினாலும் பார்ப்பனனை மட்டும் தனியாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும்...அவனே அதை வெளிக்காட்டிக்கொள்வான்...மற்றவர்களின் ஜாதிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை...கண்டுபிடிக்கவும் முடியாது..இதை கமல் கூட ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்...அது என்ன பாஷை ''இந்த ஜாதி'' என்று அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடிய பாஷை...இதை மாற்றிப்பேச முடியும்...இது எல்லாம் வேண்டுமென்றே பின்பற்றபடுகிறது...இதையெல்லாம் சற்று உற்று நோக்கவேண்டும்.
பெது இடத்தில் கூட உன்னுடையஜாதி அடையாளத்தை மறைக்கமுடியவில்லையே...இதே தாழ்த்தப்பட்ட வகுப்பினாராக உன்னுடைய ஜாதி இருந்தாலும் காட்டிக் கொள்வாயா...?அது தான் கேள்வி...மாட்டாய்...அப்படி என்றால் என்ன காரணம்...ஊடகங்களில் கூட பார்க்கலாம்...அதில் வரும் எவருடைய ஜாதியும் தெரியாது...பார்ப்பன பெண்...அவா சொன்னா...போறச்சே...வறச்சே..என்று லொடுக்கென்று அது பொது இடம் என்று கூட பார்க்காமல் அடையாளப்படுத்திகொள்வது எல்லாம்...தன்னை உயர்வாக நினைக்கும் மனப்பன்மை தான்...இவர்கள் தங்களை சகமனிதனாக மாற்றிக்கொள்ள கொஞ்சம் கூட முயிற்சிப்பதில்லை...அப்புறம் மற்றவர்கள் எதிர்ப்பை இப்படித்தான் காட்டுவார்கள். நீங்கள் பார்க்கலாம் நாங்க பிராமின்...என்றைக்காவது...நான் ஆதி திராவிடன் என்று எவராவது சொல்லியிருக்கிறார்களா...? இதை திரு.வேங்கடசுப்பிரமணியம் யோசிக்கவேண்டும்...இன்னும் எவ்வளவோ இழிவுகள் இன்னுவரை நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது..தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றநோக்கில் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது...முதலில் எதிர்ப்பது பார்ப்பனீயத்தை தான்...குறைந்த பட்சம் அதை வெளியில் காட்டாமல் இருந்தாலே போதுமானது...எங்கே இணையத்திலேயே காட்டிக்கொள்கின்றனர்.
Post a Comment