Search This Blog

20.4.09

"மலையாளச் சம்பிரதாயம்" பற்றி பெரியார்





(தந்தை பெரியார் தம் வழமையான நகைச்சுவை உணர்வோடு 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை கேரளத்தில் நிலவி வந்த ஒரு சம்பிரதாயம் பற்றி சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதியது.)

நம்பூதிரிகள் செய்த பாக்கியமே

கேரளத்தில் கல்யாணத்திலும் இரண்டு வகையுண்டு. ஒன்று முறைப்படி செய்யப்படும் விவாகம். மற்றொன்று முறையில்லாச் சம்பந்தம். நாயர் பெண்கள், நம்பூதிரியென்னும் பிராமணர்களைச் சம்பந்தம் செய்து கொள்-வதிலே பெருமை கொள்கின்றார்கள். இப்பிராமண வகுப்பாரின் ஜனசங்கை மிகவும் சொற்பம். சம்பந்தம் செய்து கொள்ளும் நாயர்ப் பெண்டிர்களின் சங்கையோ அதிகம். இக்காரணத்தால் ஒவ்வொரு நம்பூதிரிக்கு நாலைந்து பெண்கள் சம்பந்தப்பட வேண்டியதாகிறது.

நம்பூதிரிகள் செய்த பாக்கியம். பிறந்தால் கேரளத்தில் நம்பூதிரியாய்ப் பிறக்கவேண்டும். இல்லையேல் இம்மானிடப் பிறவி எடுப்பதில் சிறப்பில்லை. நம்பூதிரி சாட்சாத் சச்சிதானந்த சொரூபியாய் விளங்குகிறார். அவருக்கு இருக்கும் மதிப்பும், வந்தனை, வழிபாடுகளும் வேறெந்த மானிடப் பிறவிக்கும் கிடையாது.



முறைப்படி ஒரு கணவனைப் பெற்ற நாயர்ப் பெண்ணும், நம்பூதிரியைக் கலப்பதற்குப் பேராவலுடையவளாயிருக்கிறாள். மகாபாரதத்திலும், புராணங்களிலும் வருணிக்கப்பட்டுள்ள கிருஷ்ணனைக் காணுவதற்காக கோபிகள் தவஞ்செய்தது போல், நாயர்ப் பெண்களிற் பெரும்பாலர் நம்பூ-திரிகளின் சம்பந்தத்-துக்-காகத் தவஞ்செய்து வருகிறார்கள்.

இம்மோகத்துக்கு நாயர் வகுப்பில் பெண்கள் மட்டுமல்ல பாத்திரமானவர்கள். ஒரு நம்பூதிரி ஒரு நாயரைப் பார்த்து உன் பெண்சாதி நல்ல அழகுடையவளாயிருக்-கிறாள்; நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டால் நாயருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். தேவனே பிரசன்னமாகி இத்திருவாக்கைப் பகர்ந்தது போல் எண்ணுவான். ஓடோடியும் வீடு செல்வான். தன் பெண்சாதியிடம் நம்பூதிரித் தம்பிரானுடைய திருமனதைத் தெரிவிப்பான். அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கோ அளவிராது. உடனே வீட்டை அலங்கரிப்-பாள்; விளக்குவாள்; பெருக்குவாள்; தன் ஆபரணாதி-களைப் பூட்டிச் சிங்காரித்துக் கொள்வாள். நம்பூதிரித் திருமேனியுடைய வரவை எதிர் நோக்கியிருப்பாள்.


------------"குடிஅரசு" 2.8.1925 பக்கம் 8

0 comments: