Search This Blog

13.4.09

ஈழப் பிரச்சினை:அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்!





தி.மு.க. நடத்திய பேரணிக்கு கைமேல் பலன் இந்திய அரசின்
அழைப்பை ஏற்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.
நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்படட்டும்!

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை


சென்னையில் தி.மு.க. அறிவித்து நடத்திய பேரணியின் காரணமாக, 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது குறித்தும், இந்திய அரசு இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேச்சு வார்த்தைக்கு விடுத்துள்ள அழைப்பைக் குறித்தும், இதனையும் அரசியல் ஆதாய நோக்கத்தோடு அணுகவேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அப்பாவித் தமிழ் மக்கள் பல லட்சக்கணக்கில் உள்ளவர்கள் - சிங்கள ராணுவத் தின் குண்டு மழையிலிருந்து (நச்சுப்புகைக் குண்டுகள்) காப்பாற்றப் படவேண்டும் என்ற உலக நாடுகள் - அய்.நா. பொதுச்செயலாளர் பான். கி.மூன் - அமெரிக்கா, நார்வே, பிரிட்டன் போன்ற பற்பல நாடு களின் வற்புறுத்தல்கள் - ஆகியவை காரணமாக, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் கலைஞர் தரும் இடையறாத அழுத்தமும் இதன் அடிப் படைக் காரணங்களில் முக்கியமானதாகும். இந்திய அரசும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வில்லை என்பதும் தெளிவாகிறது.

மத்திய உள்துறை அமைச்சரின் தெளிவான விளக்கம் - சான்று:

....that they all agreed to urge the Lankan government to end the war. This message had been conveyed not as a request, but as a demand upon it, he said.


- ‘The Times of India’, 13.4.2009, Chennai

இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும்- அதன் தலைவராக உள்ள திருமதி சோனியா உட்பட- அதற்குரிய நடவடிக்கை எடுத்ததன் விளைவே அய்.நா. பொதுச் செயலாளரின் வற்புறுத்தும் நிலை.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

அதுமட்டுமல்ல; இலங்கையின் தமிழ்த்தேசிய கூட்டணி என்ற தமிழர்களின் நல உரிமை காப்பு அமைப்பினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் உள்ள 22 பேர்களில் 5 பேர்கள் அதன் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களது தலைமையில் மத்திய அரசின் அழைப்பினை ஏற்று, 16 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குச் செல்லவிருக்கின்றனர் என்ற செய்தியும் ஒரு அரசி யல் ரீதியான தீர்வும், நிரந்தரப் போர் நிறுத்தம் வர வேண்டும் வரக்கூடும் என்ற நம்பிக்கையையும் நம்முள் விதைத்துள்ளது.

சில எதிர்கட்சி அரசியல் வாதிகள் - அதிலும் திடீர் என அணி மாறும் பச்சோந்திகள் - தி.மு.க, காங்கிரசுக்கு எதிராக இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன் படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கின்றனர். இதற்குத் துணையாகவே இங்குள்ள பத்திரிகைகள், ஊடகங்கள், திட்டமிட்ட பிரச்சாரத்திலும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக ஈடுபட்டுள்ளன.

மத்தியில் பதவியை அனுபவித்த பா.ம.க.

பா.ம.க. மத்தியில் ஆட்சி யில் இருந்து அதை நன்கு அனுபவித்து விட்டு, சிறிதும் அரசியல் நாணய மின்றி அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு, அம்மா புராணம் பாடி, ஓட்டு அறு வடை தேடிட முயற்சிக்கின் றது. முழுக்க நனைந்ததற்குப் பிறகு முக்காடு எதற்கு? என்ற அளவில், அதிமுக வின் அன்புச் சகோதரி யிடம் அபயம் என்று ஆகி விட்டு, இலங்கைப் பிரச்சி யில் அதி தீவிரவாதி போல் காட்டியுள்ளது!

இவரது கட்சி பிறக்காததற்கு முன்பே அப்பிரச்சினையைப் புரிந்து கொண்டு ஆதரவு தந்த இயக்கம் திராவிடர் இயக்கம்!

அரசியல் பதவி மீன் களைப் பிடிக்கத் தூண்டிலாக அதைத் தூக்கித் திரியாத இயக்கம் திராவிடர் இயக்கம்!


மத்திய அரசினை - அதில் உள்ள காங்கிரஸ் நிலை பற்றி இன்று விமர்சிப்பவர் சில மாதங்களுக்கு முன் என்ன சொன்னார்? காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணிஅமையும். அதில் பா.ம.க. இடம் பெறும் என்பது போல் பேட்டிகள் கொடுக்கவில்லையா?

பொது எதிரியான சிங்கள ஹிட்லர் ராஜபக் சேவை விட்டுவிட்டு, இங் குள்ளவர்களின் மீது பாய்வதா தேவை இப்போது?

மத்திய மாநில அரசுகளால்தான் முடியும்

ஏதாவது உருப்படியாக, ஆக்க ரீதியாக இலங்கைப் பிரச்சினையில் ஆகும் என்றால், அது மத்திய அரசு - மாநில அரசுகள் மூலம் தான் ஆகும் என்று படி தாண்டும் முன்பு வரை கூறியவர்தானே இந்தத் தலைவர்? கூறியது மட்டுமா? மனு கொடுத்தவரும் கூட. (கல்கி, 19.10.2008).

முதல் அமைச்சர் கலைஞர் எந்த நல்லெண்ணத்தோடு பேசினாலும் குறை காணுவது, குற்றங் கூறுவது தான் இவர்களின் அன் றாடப் பணியாகிவிட்டது!

கண்ணாடி வியாபாரியின் கனவு போல் இவர்கள் காணும் கனவு ஒரு போதும் பலிக்கப்போவதில்லை.

இலங்கையில 48 மணி நேரப் போர் நிறுத்தம் - நிரந்தரப் போர் நிறுத்த மாகிட நல்ல தீர்ப்பு காண ஒத்த கருத்துள்ளோர் கலைஞர் தலைமையில் ஒன்று பட்டு நின்று தீர்வு காணுவோம்!

பேரணிக்குக்
கைமேல் பலன்


முதல்வர் மானமிகு கலைஞர் அவர்கள் நடத்திய 9 ஆம் தேதி தமிழர் பேரணிக்குக் கைமேல் கிடைத்த பலன் இராஜபக்சேவின் அறிவிப்பு! இங்குள்ள ராஜ பக்சேகளின் அரிப்போ கலைஞரைப் பிராண்டு வதில்தான் என்றால் அது தமிழர்களை வெட்கப்பட வைக்கும்! வேதனையில் தலைகுனிய வைக்கும்!

வெளிநாட்டுத் தமிழீழச் சகோதர சகோதரிகளே, உள்ளத்துணர்வுடன் இதில் உள்ளவர்களைப் புரிந்து கொள்ளத் தவறாதீர்கள்!

ஒரு நாள் கூத்துக்கு ஏமாந்து, இன எதிரிகளை வளர்த்துவிடாதீர்கள்! உரிமையுடன் உறவுடன் இதைக் கூறுகிறோம்.

--------------- " விடுதலை" 13.4.2009

1 comments:

sundarmeenakshi said...

srilankan problem should be discussed in election.reason
1.when the problem shoul be discussed then only it reaches common man.when problem reaches common man i t lead towards domacracy. otherwise it lead towards terrissom.
2. tamil nadu politician should realise it thay are not solving the problem .tamil people throw them in a dust bin.(in future it holds for everybody any political leader).
we have given oppertunity to Mr.M.K he is not utilised .better we can try for alternative. in that what is the problem.
in india everybody eligible for PM.
why always negrhu family comes. 117 crror people oruthanuugum tauguthi illaya?
this is the time for change this the for young pepople.
srilangan announced cesefire because of londan tamilan.not because of indian tamilan.
if u r arguing P. sidhaparam stopped the war why thay have not done previously?
last three month indian politician where thay went?
thay banned tiger flag. now the flag is everwhere london, ausralia, netharland , canda, france. here after how thay block how thay will tell LTTE is terroist roup. .
how 1.5 lakh people from londan itself supporting for them if thay are terrist?
indian politician should think and change their mind set otherwise thay are the looser.
soon srilankan tamilans get word class recognisation at that time histry tells slfishness of tamil nadu tamilan position .