மதம் மாறினால் கடவுள் என்ன செய்வார்
ஒரு கிறித்துவன் இந்துவாகிவிட்டால், உடனே அவனது பெற்றோர்களுக்குத் திதி, திவசம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று இந்துப் புரோகிதர்கள் கூறுகிறார்கள். அப்படியானால், அந்த மதம் மாறியவனுடைய பெற்றோர்கள் உடனே அந்தப் பிதிர்லோகத்திற்கு வந்துவிடுவார்களா? அல்லது கிறித்துவப் பிதிர்லோகத்திலேயே இருப்பார்களா?
இந்துக் கடவுள்கள் அவனை இந்துப் பட்டியலில் தாக்கல் செய்து கொண்டு அந்தப்படியான பாவ புண்ணியத்துக்கு ஏற்ற நரக, மோட்சங்களில் இடம் ஒதுக்கி விடுவார்களா?
ஒரு பிறவி இந்து, முஸ்லிம் ஆகி, இந்து விக்ரகங்களை உடைத்தெறிந்தால், இந்துக் கடவுள் அவனைத் தண்டிப்பாரா அல்லது இந்துப் பட்டியலிலிருந்து அவன் பெயரை நீக்கிவிடுவாரா?
----------------தந்தைபெரியார்- நூல்:-"சுயநலம் பிறநலம்"-பக்கம்:14
2 comments:
//ஒரு பிறவி இந்து, முஸ்லிம் ஆகி, இந்து விக்ரகங்களை உடைத்தெறிந்தால், இந்துக் கடவுள் அவனைத் தண்டிப்பாரா அல்லது இந்துப் பட்டியலிலிருந்து அவன் பெயரை நீக்கிவிடுவாரா?//
இந்து மதவாதிகள் என்ன பதில் சொல்லுகிறார்கள்?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment