Search This Blog

Showing posts with label அய்யத்தெளிவு. Show all posts
Showing posts with label அய்யத்தெளிவு. Show all posts

23.1.10

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் - ஒரு விளக்கம்

புடம் போட்டுப் பார்க்கிறார்கள்!


1960 ஆண்டுகளிலே நான் தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவன். எங்கள் என். சி. சி மாணவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஒரு பொட்டல் இடத்திற்குச் செல்லுவோம். ஆழ்ந்த பள்ளங்கள், மேடுகள் நிறைந்த அந்தப் பகுதிக்கு யாருமே வரமாட்டார்கள்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா அவர் போற்றிய பெண் கல்விக்குப் பயன்படும் மாதிரிக் கொண்டாடப்படவேண்டும் என்று மானமிகு ஆசிரியர் அவர்கள் விரும்பினார்கள். கல்வி நிறுவனங்களில் திறமைசாலியான அய்யா மணிசுந்தரம் ஆலோசனையின் பேரில் பின் தங்கிய தஞ்சையில் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. அந்தக் காட்டிலே தகரக் கொட்டகையிலே பல பெரியார் பெருந்தொண்டர்கள் இரவுக் காவலர்களாகத் தொண்டாற்றினார்கள். முட்புதர்கள் மொய்த்த தரை எங்கும்" என்றிருந்த இடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து சோலைவனமாகி விட்டது.

பலருடைய அயராத தொண்டினாலும் ஆசிரியர் அவர்களின் செல்லக் குழந்தையாக வளர்க்கப்பட்டதாலும், அந்த நிறுவனம் இன்று ஆல்போல் தழைத்துள்ளது. ஆசிரியப் பெருமக்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றும், செயின்ட் ஜான் பல்கலைக் கழக அரவணைப்போடும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பல பாராட்டுக்கள், பரிசுகள் பெற்று முதல் தரமாக விளங்கி வருகிறது.

அங்கே உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அல்லும் பகலும் அரும்பாடுபட்டு மானமிகு ஆசிரியர் அவர்களும்,அங்குள்ள ஆசிரியப் பெருமக்களும், தஞ்சைத் தரணியிலே ஊன்றி வளர்க்கப்பட்ட நல்.இராமச்சந்திரனின் அயரா உழைப்பாலும் அது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் ஆனது. மற்றவர்கள் எல்லாம் வெளிநாடுகள் சென்றால் அவர்கள் குடும்பத்திற்கு என்ன வாங்கலாம் என்றுதான் ஆலோசிப்பார்கள். தமிழர் தலைவர் அய்யா அவர்களும், இராமச்சந்திரன் அவர்களும் பல்கலைக் கழகத்திற்கு என்ன செய்யலாம், என்ன வாங்கலாம் என்றுதான் ஓய்வில்லாமல் பல துறை வல்லுநர்களைச் சந்திப்பதும், கலந்துரையாடலில் நேரத்தை செலவழிப்பதையும் நேரிலேயே பார்த்து அறிந்து கொண்டவன் என்பதனால் உறுதியாகச் சொல்கின்றேன். என்னைப் போன்ற பல தமிழர்கள், பல துறை வல்லுநர்கள் அமெரிக்காவிலே கலந்து கொண்டவர்கள் உண்டு. அவர்களுக்குப் பலமுறை ஆசிரியர் அவர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்கள்.

வல்லம் வந்து பார்த்து சென்ற பலர் ஆச்சரியப்பட்டு நெஞ்சாரப் பாராட்டி தாங்களே மனமுவந்து நன்கொடையும், உதவிகளும் செய்துள்ளார்கள். அது ஒரு பெரிய பட்டியலே என்றாலும், தலைவர்கள் வி.பி.சிங், ஜெயில்சிங், அப்துல் கலாம், கருப்பையா மூப்பனார், தமிழக முதல்வர்கள், பல வெளிநாட்டுப் பேராசிரியர்கள், உலகெங்கும் வாழ் தமிழ் அறிவியல் வல்லுநர்கள் பலர் என்று பட்டியல் நீளும்.

காஞ்சி சங்கராச்சாரியைப் போல ஒரே நாளில் உண்டான இந்தியாவின் சுவிஸ் வங்கி போன்று பணத்துடன் தொடங்கப்பட்டதல்ல. மக்களால், மக்களுக்காக, மக்கள் உதவியுடன் தொடங்கப்பட்ட மக்கள் பல்கலைக் கழகம்.

ஒவ்வொரு கல்லும், மரமும் அங்கே கதை சொல்லும். மக்களின் வியர்வையும், கருஞ்சட்டைப் படையின் குருதியும் அங்கே உயிருடன் வாழ்கின்றது. எவ்வளவு மக்கள் தொண்டு, எவ்வளவு சிறப்புகள், பெருமைகள் பெற்று நடந்து வருகிறது. நேரிலே வந்து ஆராய்ச்சி செய்த குழுவின் அறிக்கை ஆதரித்துள்ளதே. பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பங்களே அந்த வெள்ளை யானைக்குத் தீனி போட வேண்டும் என்று கட்டணம் கட்டித் தானே படிக்கின்றார்கள். எத்தனைச் செல்வந்தர்கள் ஆதரிக்கிறார்கள். ஒரு சிலர் தானே! கருஞ்சட்டைப் படையின் நன்கொடைகள் தானே பெரும்பாலும்.

நன்றி கெட்ட நாய்கள் சில குரைத்துள்ளன. நாய்களுடன்கூட ஒப்பிடக் கூடாது. நாயாவது மோப்பம் பிடித்து ஆராய்ந்து பார்க்கும். எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டோ, இல்லை வேண்டாதவர்களின் வம்புப் பேச்சின் உண்மையை அறியாமலோ, இல்லை பதவி மமதையிலோ எந்த நோக்கத்துடனோ செயல்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது. தாங்கள் அமர்ந்துள்ள நாற்காலிகளை அசிங்கப்படுத்தும் இந்த அதிகார வர்க்கங்கள் தங்கள் வக்கிரப் புத்தியை ஒதுக்குவது அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. நேர்மையாக ஆராய்ந்து செயல்பட வேண்டியவர்கள் தவறிழைப்பது பல்லாயிரம் மக்களையும்,தமிழினத்தின் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது என்ற மலை போன்ற உண்மையை உணர முடியாதவர்கள் பட்டங்களையும் பதவிகளையும் தூக்கியெறிய வேண்டும். அல்லது தூக்கியெறியப்படுவார்கள்.

ஆசிரியர் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது அருகிலிருந்த அம்மையார் கடுகடுவென்று இருந்தாராம். அப்புறம் ஆசிரியர் அவர்கள், பணிப்பெண், மற்ற வணக்கம் செய்பவர்களுடன் எப்போதும் போல அன்புடனும், அடக்கத்துடனும், கலகலப்பாகவும் பேசியதையெல்லாம் பார்த்து விட்டு அந்த அம்மையார் சொல்லியுள்ளார். உங்களைப் பார்த்தால் ரொம்ப நல்லவர் போலத் தோன்றது. இருந்தாலும் உங்க மேலே நேக்கு ரொம்ப கோபம் என்று கூறியுள்ளார். நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாதே, தெரியாமல் கால் பட்டுவிட்டதா, என்ன நடந்தது? ஏன் கோபப்படுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீங்க அடக்கமா நேக்கு வழி விட்டேள், மரியாதை ரொம்ப தர்ரேள் மத்தவாளுக்கு. ஆச்சரியப்பட்டேன். நேக்கு கோபம் என் கடைசிப் பெண்ணுக்கு இடம் கிடைக்காமல் செஞ்சுட்டேள், அதான் கோபம், என்றாராம். மற்றக் குழந்தைகள் எல்லாம் நன்னா படிச்சுப் பெரியாளா இருக்கா. இவளுக்கு மட்டும் அட்மிஷன் கிடைக்காமல் இட ஒதுக்கீட்டால் ஆயிடுத்து என்றாராம். ஆசிரியர் பொறுமையாகக் கேட்டுள்ளார்.

ஒரே ஒரு மகளுக்குக் கிடைக்கவில்லை என்று இவ்வளவு கோபப்படுகின்றீர்களே, எங்கள் குழந்தைகள் எத்தனை கோடிப் பேர், எவ்வளவு வேதனையும், வருத்தமும், ஏமாற்றமும், எத்தனை ஆண்டுகள் அடைந்திருப்பார்கள், ஒரே நிமிடம் எண்ணிப் பாருங்கள் என்றாராம்.

நீங்க சொல்றது சரிதான், ஆனா நேக்குக் கோபம் கோபம்தான் என்று விடை பெற்றாராம்.

தந்தை பெரியாரும், பெரியார் நிறுவனங்களும், ஆசிரியர் அவர்களும், அவரது தொண்டர்களும் எத்தனையோ முறை, புடம் போட்டுப் பார்க்கப்பட்டுள்ளார்கள்.

நெருப்பை ஊதியவர்கள்தான் சூடுபட்டிருக்கிறார்களே தவிர, தங்கம், புடம் போடப்பட்ட தங்கமாகத்தான் ஒளிர்கிறது. நெருப்பை ஊதுபவர்களே, ஆசை தீர ஊதுங்கள்.

அவமானம் உங்களுக்கு; இனமானம் எங்களுக்கு. அது தான் பெரியார் கண்ட பாதை.

வாழ்க பெரியார்!


-------------------சோம. இளங்கோவன் சிகாகோ, (அமெரிக்கா) அவர்கள் எழுதிய கட்டுரை --நன்றி:- “விடுதலை” 23-1-2010

15.7.09

கடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா?


மற்றவர்களைப் புண்படுத்துவது ஒரு கொள்கையா? என்ற தலைப்பில் நண்பர் கபிலன் அவர்கள் எழுதிய பதிவை இன்றுதான் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. (http://localtamilan.blogspot.com/2009/07/blog-post_06.html). ஆரோக்கியமான எந்த விவாதத்தையும் கருத்து மோதல்களையும் எப்போதும் எதிர் கொள்ள பெரியாரின் தொண்டர்கள் தயாராகவே இருப்பார்கள். அந்த வகையில் நண்பர் கபிலன் கருத்துக்களில் அப்படி என்னதான் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

நம்மைப் பார்த்து கபிலன் சொல்கிறார்:-

“நண்பரே, நிரூபிக்க கூடிய விஷயங்களைக் கொண்டவையை, அறிவியல்(Science) என்போம். உதாரணமாக, Nuclear Science,Computer Science இப்படி. ஆனால் சமயங்களை நம்பிக்கைகள்( Religious Belief) என்று சொல்கிறோம் அதாவது hindu belief, Islam and christian faith என்று சொல்லுவோம். நிரூபிக்கப் படாத விஷயங்கள், மனிதனின் அறிவுக் கண்களுக்கு எட்டாத விஷயங்கள் அனைத்தும் பொய்யாகாது !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ! ஒவ்வொரு மாதிரியான வழிபாடுகள் ! நம்ம இங்க இட்லி சாப்பிடுறோம், அமெரிக்காவுல பர்கர், பீட்சா சாப்பிடுறாங்க, கொரியாவில் மாமிசத்தை அரை வேக்காட்டில் சாப்பிடுவாங்க...ஏன் நாய்களைக் கூட உணவாக உண்ணும் இடங்கள் உண்டு. வெவ்வேறு உணவாக இருந்தாலும், கடைசியில், அனைத்தும் நம் பசியைத் தீர்க்கத் தான் பயன்படுகிறது. அதே போல தான் சமயங்களும். வெவ்வேறு சமங்களின் வழிபாடுகள், முறைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அனைவரும் அன்பு செலுத்தி, நல்வழியில் நடந்து, இன்புற வேண்டும் என்பதைத் தான் எல்லா சமயங்களும் வற்புறுத்துகின்றன.”


நிரூபிக்கப்பட்ட விசயங்கள் அறிவியல் என்றும் அதாவது உண்மை என்றும் நிரூபிக்கப்படாத விசயங்கள் அனைத்தும் பொய்யாகாது என்றும் சொல்கிறார் கபிலன்.

நாமும் அதைத்தான் சொல்கிறோம். நிரூபிக்கப்படாத விசயங்கள் அனைத்தும் உண்மையானதாக இல்லாமலும் இருக்கலாம். உலகம் தட்டை என்று சொல்லிய காலத்தில் உலகம் உருண்டை என்று உண்மையைச் சொல்லிய கலிலியோவை என்ன பாடு படுத்தியது இந்த உலகம் என்பதை வரலாறு மறக்காது. சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் நாங்கள் தப்புச் செய்து விட்டோம் என்று போப் ஒத்துக் கோண்டிருக்கிறார்.

அறிவியல் பூர்வமாகச் சொன்னாலும் உங்கள் மதங்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறதோடல்லாமல் ,சொன்னவர்களை கொல்லவும் செய்கிறது. இதில் எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது என்ற புருடா வேறு?

அன்பைப் போதிக்கும் மதங்கள் ஒன்றையொன்று ஒத்துக் கொள்ளாமல் சண்டையிட்டுக் கொள்வது ஏன் கபிலன்?

அன்பே தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்து மதக் கடவுள்கள் ஆயுதம் இல்லாமல் ஒரு கடவுளையாவது உண்டாக்கியிருக்கிறீர்களா?

இயேசு தான் ஈராக் மீது படையெடுக்கச் சொன்னார் என்று புஸ் கூறினாரே. அப்போது எங்கே போனது அன்பு மதம்?

அல்லா சொன்னால் என் அம்மா இருக்கும் இடத்தில் கூட குண்டு வைப்பேன் என்று சொன்னானே ஒரு இஸ்லாமியன் . இது தான் அன்பைப் போதிக்கும் லட்சணமா?

அன்பைப் போதித்த அம்மாவையே கொல்லத்துடிப்பதுதான் மதம் என்றால் அந்த மதங்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்பது தான் பெரியார் தொண்டர்களின் நிலை.


அடுத்து கபிலன் நம்மைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்கிறார் :-

“கடவுள் இருக்கிறார். இவ்வாறாக இருக்கிறார். அனைவரையும் நல்வழிப் படுத்துகிறார் என்பது நம்பிக்கை ! நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவரை பாதிக்காதவரை, அடுத்தவரை புன்படுத்தாதவரை, நம் நம்பிக்கைளின்படி நடப்பதில் என்ன தவறு இருக்கிறது ?”

கடவுள் இருக்கிறார் என்ற நம்பி செயல் பட்டால் அனைவரையும் கடவுள் நல்வழிப் புடுத்துகிறாராம். சொல்கிறார் கபிலன். அய்யா அனைவரும் நல்வழியில் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆவல் ஆசை எல்லாம். ஆனால் நல் வழியில் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே கடவுள் என்ற கற்பிதம் தானய்யா கபிலன். எப்படி என்று யோசிக்கிறீகளா? அந்த யோசனையெல்லாம் வேண்டாம். நடைமுறையில் நடக்கும் செயல்பாடுகளை பகுத்தறிவுக் கண்ணோடும் பாருங்கள் .உண்மை புரியும்.

இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் தருகிறேன். நல்வழிப்படுத்தும் கடவுள்களின் யோக்கியதை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த செய்தியைப் படிக்கும் போது உங்களுக்கு மதத்தை புண்படுத்து கிறார்களே என்ற கோபம் வேண்டுமானல் வரலாம் .ஆனால் எமக்கு எமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது . இதயம் விம்முகிறது கபிலன்.. இதோ அந்தச் செய்தி…

“மதம் எங்கே செல்கிறது?

ஆஸ்திரேலியாவில் போப் பங்கேற்ற நிகழ்ச்சியில் 3 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாவ மன்னிப்பு பெற்றனர்.
ஆஸ்திரேலியாவில் உலக இளைஞர்கள் தின விழா 15.7.2008 அன்று தொடங்கியது. போப் 16_ஆம் பெனடிக் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிகளில் 170 நாடுகளைச் சேர்ந்த 3 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிட்னி நகரில் உள்ள புனித மேரி ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் போப் பங்கேற்றார்.சிறுமிகளை கத்தோலிக்கப் பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, அவர்கள் சார்பில் அப்போது போப் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

சிட்னி நகரில் தேவாலயங்கள், பள்ளிகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இடங்களில் பாவ மன்னிப்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. போப் பெனடிக் மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டு பாவ மன்னிப்பு அளித்தனர்.

சிறிய மறைவிடம் அமைத்து, பல்வேறு மொழி பேசுபவர்களுக்கு அந்தந்த மொழிகளில் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அதில் 3 லட்சம் பேர் பாவ மன்னிப்பு பெற்றனர்.
(ஆதாரம்: தினகரன் 21.7.2008 பக்.9)


குறிப்பு: சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக லட்சக்கணக்கான கிறித்துவர்களுக்குப் பாவமன்னிப்பாம்! மதம் ஒழுக்கத்தை வளர்க்கிறதா? “

இந்த மதத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மதங்களுமே இந்த நிலையில் தான் இருக்கிறது.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள்கள் உண்டா? இரண்டு பெண்டாட்டி கட்டாத கடவுள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்? சாமியார்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை கொடுமைகள் செய்து வருகின்றனர் என்பதை செய்திதாள்கள் அம்பலப்படுத்தத்தான் செய்கின்றன. ஏன்? நடமாடும் கடவுள் லோககுரு? காஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதைகள் பற்றி எல்லாம் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் எல்லாம் அம்பலப் படுத்தினார்களே.

கல்லுக்கடவுள்களும் சரி, ‘உயிருள்ள’நடமாடும் கடவுள்களும் சரி எந்தக் கடவுள் நல் வழிப்படுத்தியது கபிலன்? .

--------------------தொடரும்

25.2.09

பகுத்தறிவாளர்கள் டாட்டா அல்லது பை, பை (Bye, Bye) என்று சொல்லுவது சரியா?



கேள்வி : குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும்போதும் அல்லது வேறு எங் காவது வீட்டை விட்டு வெளியே செல் லும்போதும், குழந்தைகள் பெரியவர் களுக்கு டாட்டா அல்லது பை, பை (Bye, Bye) என்று சொல்லுகிறார்களே; அதற்கு மாற்றாக தமிழ்ப் பண்பாட்டு வழக்கம் ஏதேனும் உள்ளதா? கூறினால் தமிழர்களுடைய (நம்முடைய) குழந்தைகள் பின்பற்ற வாய்ப்பாக அமையும்.



பதில் : அம்மா, அப்பா! போய்வருகிறேன் என்று சொல்லலாம்; அது போதுமே!


---------------பிப்ரவரி 15-28 2009 "உண்மை" இதழில் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில்

1.12.08

ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும்


பெரியாரும் -ஜாதி ஒழிப்பும்

இணையங்களிலும் ஊடகங்களிலும் உள்ளவர்கள் பெரியார் கொள்கைகள் என்ன வென்றே தெரியாமல் தமது மனம் போன போக்கில் இதுதான் பெரியார் கொள்கை என்று எழுதி வருகிறாகள்.
அதுவும் குறிப்பாக இரட்டை நாக்குப் பேர்கவழிகளாம் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெரியார் கொள்கைகளைக் கொச்சைப் படுத்து எழுதி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதி -இட ஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் வைக்கும் வாதங்கள் கொஞ்சம் கூட நேர்மையும் நாணயமும் இல்லாதவை. அதுவும் நம்மைப் பார்த்து ஜாதியைக் கட்டிக் கண்டு அலைபவர்கள் என்றெல்லாம் பேசுவது அவர்கள் எந்தத் தரத்தில் உள்ளார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஜாது பற்ரி பெரியாரின் கொள்கை என்ன? என்பதைப் பார்ப்போம்.

"தந்தை பெரியார் அவர்களின் கொள்கை - அதாவது திராவிடர் கழகத்தின் கொள்கை என்பது ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதாகும்

இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் பல காலக் கட்டங்களிலும் பல வடிவங்களில் போராடி வந்திருக்கிறது.

உணவு விடுதிகளில் "பிராமணாள் போர்டு" அழிப்பு - இராமாயண எதிர்ப்பு, மனுதர்மம் எரிப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்புப் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்தி வந்துள்ளது. ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும், இடைவிடாத பிரச்சாரங்களையும் செய்து வருகிறது

ஜாதி ஒழிப்பில் மிக முக்கிய கரு - கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் கோயிலில் அர்ச்சகர் உரிமை ஈட்டுவதற்கான போராட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிக் கொடுத்தார்கள். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும் சரி, அதனைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதற்காகப் பல வடிவங்களிலும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட, திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்த நேரத்தில், தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தின் நிபந்தனையை ஏற்று, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், அதனை ஏற்றுக்கொண்டதோடு, ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானத்தை ஒருமன தாக நிறைவேற்றி அதன்பின் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. (G.O. (MS) No.118 Tamil Development Culture and Religious Endownments (RE 4-2) 23rd May 2006).
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல முக்கிய கோயில்களில் 69 விழுக்காடு அடிப்படையில் அர்ச்சகர்ப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் முக்கிய கோயில்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் புரட்சிகரமான மாறுதல் உருவாக இருக்கிறது.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், சமுதாய அமைப்பில் இது ஒரு மாபெரும் திருப்புமுனை; அழிக்க முடியாத வரலாற்றுக் கல்வெட்டாகும்.

ஜாதி ஒழிப்புத் திசையில் அடுத்தகட்டமாக பல முக்கிய தீர்வுகள் காணப்பட வேண்டியுள்ளன.

(அ) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறதே தவிர, ஜாதி ஒழிப்புக்கு இடம் இல்லாத வகையில் இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி" (Caste) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்" கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்படவேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்; சாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும்; இதனை வெறும் மன மாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும் அது சட்ட விரோதம்" என்று அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள "தீண்டாமை" (“Untouchability”) என்பதற்குப் பதிலாக, "சாதி" (“Caste”) என்ற சொல்லை மாற்றி, சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண் டும் என்று 1973 இல் டிசம்பரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது

(ஆ) கிராமப்புறங்களில் குறிப்பாக தேநீர்க் கடைகளில் இன்னும் இரட்டை தம்ளர் முறை இருப்பது மனிதத் தன்மைக்கும், அரசின் சட்டத் திற்கும் பெரும் சவாலும் அவமானகரமானதுமாகும். மிகக் கடுமையான முறையில் இரும்புக்கரம் கொண்டு இந்த முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

(இ) ஜாதி ஒழிப்பு இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதிப் பட்டம் கொடுக்காமல், அவர்களுக்குப் பல்வேறு தனிச் சலுகைகளும், குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பிலும் அளிக்க ஆவன செய்யுமாறுமாநில, மத்திய அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இட ஒதுக்கீடு பெறும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிடும்பொழுது அவர்களின் தனிப்பட்ட ஜாதியைக் குறிப்பிடாமல், S.C., S.T., B.C., M.B.C.என்கிற முறையில் குறிப்பிடலாம் என்று இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது

(ஈ) திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபால் இளைஞர்களும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதையே முதன்மை நோக்கமாகவும், செயலாகவும் கொள்ளுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(உ) இட ஒதுக்கீட்டினால் ஜாதி உணர்வு வளரும் என்ற பிரச்சாரம் இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர் தொடக்க முதலே சொல்லி வரும் புரட்டுப் பிரச்சாரமாகும்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்று வளர்ந்து வருவோரிடையே ஜாதி மறுப்புத் திருமணங்கள்தான் பெருகி வருகின்றன என்பதை திராவிடர் கழகப் பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

(ஊ) ஜாதியின் மிச்ச சொச்சங்களை ஆணி வேர், சல்லி வேர், பக்க வேர் உள்பட அழித்திடும் பணியில் போர்க்கால அடிப்படையில் திராவிடர் கழகம் ஈடுபடுவதை முதன்மையாகக் கருதி, அதற்காகப் பிரச்சாரம், போராட்டம், நிபந்தனை என்கிற முறையில் - எந்த விலையும் கொடுத்து, அர்ப்பணிப்புத் தன்மையுடன் முழு மூச்சில் வீச்சில் பாடுபடுவது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு கட்டளைத் தீர்மானமாக நிறைவேற்றிப் பிரகடனப்படுத்துகிறது.

(எ) ஜாதியை மய்யமாகக் கொண்டு அரசியல் கட்சிகளைத் தொடங்கும் - நடத்தும் அமைப்புகளை அடையாளம் கண்டு நிராகரிக்கு மாறு தமிழினப் பெருமக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. ஜாதி உணர்வு - தமிழின உணர்வை அழித்துவிடும் என்பதால், ஜாதி உணர்வுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தமிழர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

(ஏ) முதற்கட்டமாக நாடு தழுவிய அளவில் ஜாதி ஒழிப்பு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இதற்காகப் போராட இளைஞர் களைத் தயார்படுத்தும் தன்மையிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங் களையும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும் திட்டமிட்ட வகையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


-----------3-5-2008 இல் நடந்த திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து.


ஜாதி ஒழிய பெரியார் கூறும் கருத்து உற்று நோக்கக்கூடியது. தன் வாழ்நாளெல்லாம் ஜாதி ஒழியப் போரடிய அந்தப் போராளியின் வாக்குமூலம் இது; படியுங்கள்.

"உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள்."


-------93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971.


பெரியாரைப் போல் ஜாதி ஒழிவதற்காக உழைத்தவர்கள் வரலாற்றில் வேறு எவருமில்லை. எனவே அருள் கூர்ந்து பெரியாரின் உண்மை உழைப்பை உணருமாறு வெண்டி முடிக்கிறேன்.
நன்றி

1.11.08

உயிர்களை உருவாக்கியது கடவுளா?



உலகமும் - உயிர்களும்

உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன அல்ல; எரிமலைகள் வெடித்தமையால்தான் உயிர்கள் உற்பத்தி ஆயின. இதோ ஆதாரம்:

எரிமலைகள் வெடித்துச் சிதறியதுதான் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நீரில், வாயுக்களைக் கலந்து மின்சாரத்தைச் செலுத்தி அந்த நீரில் அமினோ அமிலம் உண் டானதைச் சோதனைச் சாலைகளில் செய்துபார்த்து இந்த முடிவுகளைக் கூறியுள்ளனர்.

எரிமலைகள் வெடித்துச் சிதறியயமைதான் தொடக்க காலத்தில் இருந்த தூசுக் குழம்பைச் சூடாக்கி வாயுக்களை உற்பத்தி செய்துள்ளன என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

1953-இல் ஸ்டான்லி மில்லர் எனும் ஆய்வாளர் இரண்டு பிளாஸ்குகளில், ஒன்றில் தொடக்க காலக் குழம்பு (Cosmic Soup) எனவும், மற்றொன்றில் வாயுக்கள் எனவும் எடுத்துக் கொண்டு ஊழி யின் தொடக்க கால நிலையை உருவாக்கிக் கொண்டார். பிறகு இவை இரண்டையும் ரப்பர் குழாய் மூலம் இணைத்தார். பின்னர் இவற்றில் மின்சா ரத்தைப் பாய்ச்சி மின்னலின் தாக்குதலை நடத்தச் செய்தார்.

சில நாள்களுக்குள் நீரில் அமினோ அமிலங்கள் உற்பத்தியாகி மேலும் சில உயிர்க் கூட்டுகளும் உருவாகி, உயிர்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைத் தோற்றுவித்தன.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரினப் பேராசிரியர் ஜெஃப் பாடா என்பவர் ஸ்டான்லி மில்லரிடம் உதவியாளராக இருந்தவர்; மில்லர் பயன்படுத்திய சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்தார். அண்மைக்காலக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து ஏதும் புதிய பொருள்களைக் காண முடியுமா என ஆய்ந்தார்.

11 சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்ததில் 22 வகை அமினோ அமிலங்கள் உள்ளதைக் கண்டு பிடித்தார். இவற்றில் 10 வகைகளை ஏற்கெனவே மில்லரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மின்னல்களும் எரிமலை வெடிப்புகளும் சேர்ந்துதான் உலகில் உயிர்களை உருவாக்குவதற்கு உதவி செய்துள்ள என்பதுதான் ஜெஃப் கண்டுபிடித்த ஆய்வின் முடிவாகும்.

இன்னும்கூட பலவற்றை மில்லரின் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியம் என பாடா கூறுகிறார். எரிமலைக் குழம்புகள் பற்றி அறிந்திடக் கண்டுபிடிக்கப்பட் டுள்ள நவீன கருவிகள் பலவேறு கூட்டுப்பொருள்களைக் கண்ட றிய உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மின்னலின் மின் சக்தியும் வாயுக்களோடு சேர்ந்து எரிமலைக் குழம்புகளுடன் இணைந்த போது, உயிர்கள் உருவாவதற்கானச் சூழலைத் தோற்றுவித்தன என்பதுதான் இந்த ஆய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

உயிர்களின் உற்பத்தியில் கடவுளுக்கு தொடர்பே கிடையாது. அப்படிக் கூறுவது மூடத்தனம் என்பதுதான் முடிவு..

----------- "தி டெய்லி டெலிகிராம்" இதழில் வெளிவந்த ஆய்வு முடிவு.

24.10.08

ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. - அரசு பதில்கள்

கேள்வி:

"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?



அரசு பதில்கள் :

சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.


கேள்வி:


அண்ணா பிறந்த நாளையொட்டி சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை ஜெயலலிதா கடுமையாக எதிர்க்கிறாரே?



அரசு பதில்கள்:

ஆட்சியில் இருந்த போது தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பல நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்தவர்தான் அவர். தன்னுடைய பிறந்த நாளில் அல்லாமல் அண்ணா பிறந்த நாளின் போது விடுதலை செய்வதா என்கிற கடுப்பாக இருக்கும்.

------------------நன்றி: "குமுதம்" 29-10-2008

7.10.08

தோழர் தமிழச்சி அவர்களுக்கும் ,அதிஅசுரன் அவர்களுக்கும் ஒரு திறந்த மடல் - 2

//பெரியார் கூறியிருந்தும் எங்களைப்போன்ற பெரியார் தி.க தோழர்களுடன் உங்களுக்கு ஏன் உறவு? எதற்காக? உங்கள் கருத்துப்படியே நீங்கள் பெரியார் பேச்சையும் கேட்கவில்லை, ஆசிரியர் அவர்களின் அணுகுமுறையையும் நம்பவில்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.//

என்னைப் பொறுத்தவரை கொள்கையில் சரியாக யாராக இருந்தாலும் மதிப்பேன். அதில் எந்த மாறுதலும் இல்லை.உங்களுடன் உறவு என்பது பெரியார் கொள்கைக்காரர்கள் என்பதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

படிக்கும்போது பார்த்தோம்,பெரியார் பற்றி விவாதித்தோம். அமைப்பு ரீதியாக தி.க. வில் ஒன்றாக இயங்கினோம்.
அதன் பின் திருமணம் என்று வரும்போது ஜாதி மறுப்புத்திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் {நாங்களெல்லாம் படிக்கும் போது உடன் படித்த தோழர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தோழர்கள்} செய்தோம் அப்படி ஒவ்வொரு செய்கையிலும் கொள்கையிருந்ததால்தான் இன்றும் உங்களை மதிக்கிறேனே தவிர மற்றபடி உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட உறவும் இல்லை.

உங்களையும், என்னையும் இணைப்பது பெரியார் என்ற கொள்கை உறவுதானே தவிர வேறு எதுவுமில்லை. அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்தலாம். எனக்கு என்று எந்த ரகசியமும் கிடையாது.

என்னுடன் பழகிய ஒரு சில பெ.தி.க. நண்பர்களைத் தெரியும். அவ்வளவுதானே தவிர பெரிதாக வேறு யாருடனும் எனக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. கொளத்தூர் மணி அண்னன் அவர்களைக்கூட எனக்கு சிறையிலேதான் தெரியும்.

இல்லை நான் எந்த பெ.தி.க .தோழர்களிடம் எதாவது சுயநலத்துடன் எதிர்பார்த்து பழகியிருந்தால் அதையும் நீங்கள் அம்பலப் படுத்தலாம்.

பெரியார் கொளகையை என்னால் முடிந்த அளவு கடைபிடித்து பெரியார் தொண்டனாக வாழ்ந்து வருகிறேன். அதில் எனக்கு ஒரு வழிகாட்டும் ஆசானாய் ஆசிரியர் இருக்கிறார் அவ்வளவே. இறுதி முடிவு என்பது பெரியாரின் வழிகாட்டும் தத்துவம்தான்.

தந்தைபெரியார் சொன்னது போல் " என்னைப்பொறுத்தவரையில் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்."


////கொள்கைரீதியாக சரியாக இருப்பவர்கள் தான் என் சொந்தக்காரர்கள். அது அதி அசுரனாக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி.//

என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பதில் போட்டீர்களே. அதற்குள் என்ன ஆனது? உங்களைப்போலத் தானே தமிழச்சியும் பேசியுள்ளார். அதில் என்ன தவறு? கழகமும் துரோகமும் புத்தகத்தை இன்றுதான் படித்தீர்களா?//

மேலே சொன்னது போல் நீங்கள் படிக்கும் போது இருந்து உங்களை கவனித்து வருகிறேன். அந்த அடிப்படையில் "கொள்கைரீதியாக சரியாக இருப்பவர்கள் தான் என் சொந்தக்காரர்கள். அது அதி அசுரனாக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி." என்று எழுதினேன். ஆனால் தமிழச்சி தனது பதிவில் வீரமணி அவர்கள் தொலைபேசி பேச்சை பதிவு செய்து விட்டு எழுதிய பதிவில் "(அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை)
வீரமணி மீது இப்பவும் இல்லை அப்பவும் இல்லை என்று பொருள்பட எழுதியுள்ளார். நாம் அப்படியல்ல வீரமணி அவர்களின் தலைமையில் பணி செய்திருக்கிறோம். பெரியாரின் குறியீடாக திகழும் வீரமணியை இப்படி இகழ்வது எந்தவகையில் நியாயம்.
நான் உங்களை மதித்து அப்படி எழுதியதற்கும் , தமிழச்சி எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக தமிழச்சி அவர்களின் செயல்பாடுகளை நான் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.அப்போதும்சரி இப்போதும்சரி அவரின் துணிச்சலையும், பெரியார் பரப்பும் பணியையும் எப்போதும் பராட்டத் தயாராக இருக்கிறேன்.



//பழனி மாரிமுத்து அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவில் உள்ளவைகளைக்கூட இன நலன் கருதி வெளியே பேசுவதில்லை. இப்போது வரை.//

நான் ஏற்கனவே சொன்னது போல் உங்களுக்கும் எனக்கும் பெரியார் என்ற கொள்கை உறவைத்தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ரவிக்குமார் அவர்கள் பெரியாரைப் பற்றி மறுபரிசீலனை செய்து கட்டுரை எழுதிய போது அதற்கு மறுப்புத்தெரிவித்து நான் எழுதிய கட்டுரைகளை பெரியார் முழக்கம் இதழுக்கு அனுப்பி வைத்தேன் அதை நூலாக வெளியிடலாம் என்று நீங்கள் கேட்டீர்கள். தலித்முரசு ஆசிரியர் புனிதபாண்டியன் எழுதிய கட்டுரைகளையும், எனது கட்டுரைகளையும் இனைத்து நூலாக வெளியிட்டீர்கள். அதைத்தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும்.

//மாரிமுத்து அவர்களே தேவையில்லாமல் ஆசிரியருக்கு எதிராக எங்களைத் துாண்டிவிட வேண்டாம். இரு இயக்கங்களுக்குள் மோதலை உருவாக்க நினைக்கா தீர்கள்.//
நானா மோதலை உருவாக்குகிறேன் சகோதர யுத்தத்தை தவிருங்கள் என்று முத்ல் பின்னூட்டத்திலேயே தெரிவித்தேன். அதற்கு நீங்கள் அளித்த பின்னூட்டமும் உங்கள் பார்வைக்கு:
‘
//உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
சகோதர யுத்தத்தை தவிருங்கள்//

எங்கள் அமைப்பு ரீதியாக கொள்கை பரப்பும் பணியில் தான் குடி அரசு தொகுப்பை வெளியிட முயற்சித்தோம். அதற்கு தொல்லை கொடுப்பதால்தானே நாங்கள் பதில் பேசுகிறோம். அடிப்பவரை விட்டுவிட்டு அடி வாங்குபவனிடம் கத்தாதே, அமைதியாக அடிவாங்கு எனச் சொல்கிறீர்களே? என்ன நியாயம்?


திண்டுக்கல்லில் தி.க நகரச் செயலாளர் இராசேந்திரன் வெட்டப்பட்டபோது முதலில் களமிறங்கியது பெ.தி.க தோழர்கள் தான். அதற்காக பெ.தி.க சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கண்டனக் கூட்டத்தைக் கூட யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து பார்த்தவர்கள் அல்ல.


சகோதர யுத்தத்தை நாங்கள் என்றும் விரும்பியது இல்லை. தி.க தோழர்கள் அனைவரிடமும் குடும்பரீதியான உறவில்தான் இன்னும் உள்ளோம். பழனி மாரிமுத்து குடும்பம் உட்பட.//


ஏங்க என்னங்க நியாயம் இது? என்னைப் போய் தூண்டி விடுகிறீர்கள் என்று சொல்லுகிறீர்களே இது நியாயமா? அவரவர் அமைப்பு ரீதியில் யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யாமல் “மானமிகு சுயமரியாதைக் காரர்களாக வேண்டும்” என்பதற்காகத்தானே இதுவரை இப்பிரச்சனையில் பொறுமையா இருந்த நான் விமர்சனம் எல்லை மீறுதேங்கிற கவலையில் தான் எழுதவே ஆரம்பிச்சேன். இப்ப என்னையே தூண்டிவிடுவதாக நீங்கள் நினைப்பது எள்ளளவும் சரியில்லை. நிதானமாக யோசிக்கவும். திண்டுக்கல் பழ.ராஜேந்திரன் இந்துத்துவா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். ஆனால் பத்ரியும் ,வீராவும் யாரால் கொல்லப்பட்டார் தோழர்.

//மேலும் தமிழச்சி அவர்களின் பதிவில் நீங்கள் படிக்காமல் விட்ட சில வரிகளை இப்போது படிக்கவும்.

//சகதோழர்களுக்கு உங்களிடம் இருக்கும் "வயிற்றெரிச்சல்" கொஞ்சம் நாகரிகமாக சொல்லப்போனால் "காழ்ப்புணர்வு"க்கு ஒரு அளவில்லையா?//

இந்த வரிகள் எப்படி உங்கள் கண்களுக்கு கிடைக்கவில்லை? தமிழச்சியும் மிக நாகரீகமாகத் தான் மேற்கண்ட வரிகளைக் கூறியுள்ளார். வெளிப்படையாக எந்த சம்பவத்தையும் குறிப்பிடவில்லை.?//

வீரமணியைப் பற்றிய தமிழச்சியின் அபிப்பிராயத்தைதான் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிவிட்டேனே. அது நாகரிகமானதா?இல்லையா? என்பதை படிக்கும் வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு இயக்கதின் தலைவர் மீது தமிழச்சி அவர்கள் அதாவது இருவரையும் ஒன்றுபோல் கருதுபவர் வீரமணிமீது வைத்துள்ளஅபிபிராயாத்தைத்தான் ஏற்கனவே பார்த்துவிட்டோமே. அப்புறம் சக தோழர்கள் மீது எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும் என்பதை படிக்கும் தோழர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

//கலைஞரையும், அண்ணாவையும் பற்றி பெரியார் பேசிய கடுமையான சொற்களைப் போல யாரும் யாரையும் விமர்சித்திருக்க முடியாது.//
உண்மைதான். அதேபோல் அவர்கள் இருவரையும் பெரியார் புகழ்ந்த அளவுக்கு யாரும் புகழ்ந்திருக்க மாட்டார்கள்.
அது இதோ:

“பெரியார் விருதை இன்றைக்குத் தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார். கலைஞர் அவர்கள் குறித்து நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, பெரியார் என்ன கூறுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பழைய வரலாறு கள் இன்றைய இளைஞர்களுக் குத் தெரிந்திருக்க வாய்ப் பில்லை.

நம் சமூகத்தில் ஒரு தவறான மூடநம்பிக்கை இருக்கிறது. அதாவது ஒருவர் உயிருடன் இருக்கும்போது பாராட்டக் கூடாது என்று நினைக்கின்றனர். வாழும் போதும் பாராட்ட தவறுபவர்கள் இச்சமூகத்தில் நிறையவுள்ளனர்.

ஆனால் இன்றைக்கு அதற்கு மாறாகப் பெரியார் விருது பெறும் கலைஞர் அவர்கள், பலராலும் சரியான நேரத்தில் பாராட்டப்படுகிறார். சென்னையில் எப்படி அண்ணா அறிவாலயம் இருக்கிறதோ, அதைப்போல தந்தை பெரியார் தலைமையிடமாகக் கொண்ட திருச்சியில் கலைஞர் அறிவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் வாழும்போது கலைஞர் அவர்கள் சிறப்பாகப் பாராட்டுப் பெறுகிறார்கள்.

அதேநேரம் எந்தப் பெரியார் விருதை கலைஞர் அவர்கள் பெறுகிறார்களோ, அதே பெரியார் 1967ஆம் ஆண்டு கலைஞர் குறித்து என்ன பேசினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா ஆட்சியில், கலைஞர் அவர்கள் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, திட்டக்குடி ஊராட்சி மன்றத்தில் கலைஞர் படத் தினை 12.06.1967இல் பெரியார் திறந்து வைக்கிறார்.

“நாங்களெல்லாம் பெரியார் குருகுலத்து மாணவர்கள். அப்படிப்பட்ட மாணவரான கலை ஞரின் படத்தைத் தலைவர் பெரியார் திறந்து வைக்கிறார் என்றால், இதிலிருந்தே கலை ஞரின் சிறப்புகளை அறிய முடியும்.

இதோ பெரியார் பேசுகிறார், கேளுங்கள்.

ஒருவருடைய படத்தினைத் திறப்பதென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டியது அவசியமும், சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம் இந்த அளவு பரவுவதற்கு அவரது முயற்சியும், அறிவும்தான் காரணமாகும். அண்ணாதுரை கழகத்தின் தலைவராக இருந்தார்; அவரும் கழகத்தைப் பரப்பினார் என்றாலும், கருணாநிதியின் உழைப்பும், முயற்சியும் இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதைச் சொல்வதால் அண்ணா துரையை நான் குறைத்துச் சொல்வதாகாது. அண்ணா துரைக்குப் பல வேலை, பல கருத்து! அவர் ஒருவராலேயே கழகத்தை இந்த அளவு பரப்பி இருக்க முடியாது. கருணாநிதி அவர்கள் அண்ணாதுரைக்கு வலது கையாக இருந்து உதவி வந்திருக்கிறார்.
அண்ணாதுரை மிகவும் கெட்டிக்காரர்தான், ஆனால் கருணாநிதிக்கு இருக்கிற முன் யோசனை அவருக்குக் கிடை யாது. நண்பர் இளம்வழுதி சொன்னது போல, பள்ளிக் கூடத்தை விட்டதும் என்னி டம் நேராக வந்தார். எனக்கு பொதுத்தொண்டு செய்ய ஆவலாக இருக்கிறது என்று கூறினார். நானும், என்னிடம் எத்தனையோ பேர் இருக்கி றார்கள் நீங்களும் இருங்கள் என்று சொன்னேன். எனது வீட்டிலேயே இருந்தார் குடிஅரசு அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார். பிறகு எழுதவும், மேடையில் பேசவும் ஆரம்பித்தார். நல்ல கருத்தாளர் ஆனார். எழுச்சியுள்ளவரானார். வர வர நல்ல கருத்து பிடிபட்டது. பிரசாரக் கலையும் பிடிபட்டது.

பின்னர் எங்களை விட்டு விலகினாலும் அண்ணாதுரைக் கூறாமல், அவர்தான் எங்கள் தலைவர், அவரது கொள்கைதான் எங்களுக்கும் என்று சொல்லி நல்ல அளவு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்டனர்.

அண்ணாதுரையாவது, கருணாநிதியாவது என்னைக் குறிப்பிட்டு என் காரியத்தைக் குறிப்பிட்டு இதுவரை ஒரு சிறு குறைகூட கூறியது கிடையாது. இன்றைக்கும் அண்ணாதுரை என் தலைவர் பெரியார்தான் என்று கூறுகிறார்.

அதேபோல் கருணாநிதியும், என்னை எங்கு கண்டாலும் செல்லப்பிள்ளை மாதிரி நெருங்கி, மிக உரிமையோடு உரையாடுவார். இன்னமும் தி.மு.கவுக்கு கருணாநிதியின் தொண்டு பயன்படத் தக்கதாகும். அவரது தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும் என அவரது படத்தைத் திறந்து வைத்துப் பாராட்டினார்.

அதேபோல் 03.06.1972 இல் இன்றைய முதல்வர் கலைஞர், அன்றைக்கும் முதல்வராக இருக்கிறார். அப்போது கலைஞரின் வயது 43. அவரைத் தந்தை பெரியார் எப்படி வாழ்த்தினார் தெரியுமா?

பெரியார் விருதுக்கு உரியார் இவரை விட்டால் பிறர் யார்? என்பதை இக் கடிதம் பறைசாற்றும்.

இதோ படிக்கிறேன், கேளுங்கள்!

மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்த கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு அவைகளை வெகு எளிதிலே செய்தி முடித்துவிடுகிறார்.

இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம் டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும் டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

என அற்புதமாக பெரியார் குறிப்பிடுகிறார்.”


----------------திருச்சியில் (21.9.2008) மாலை தி.மு.க. சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யின் ஒரு பகுதி “விடுதலை” 22-9-2008

இதுமட்டுமல்ல கலைஞருக்கு பெரியார் சிலை வைக்க வேண்டும் என்று சொல்லி சிலையும் வைத்தார்கள். எம்.ஜி.ஆரின் மறைவின் போது அச்சிலை சேதப்படுத்தப் பட்டது.
இப்போது சொல்லுங்கள் பெரியார் பேசியது சரியா?. எத்தனையோ வேலை யிருக்க கலைஞருக்கு எதற்காக சிலை ? பெரியார் என்ன நோக்கத்திற்காக செய்தாரோ அந்த நோக்கத்திற்காகத்தான் வீரமணியும் செய்திருப்பார் என நான் நினைக்கிறேன். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது.


தி.க. பல பேருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடாடியுள்ளார்கள். அவர்களில் பெரியாரையும், இயக்கத்தையும் கேவலப்படுத்தி பேசியவர்களுக்கும் விழா எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அவர்களின் இறுதிக்காலத்தில் பெரியாரையும், பெரியாரின் இயக்கத்தின் அருமையயும் புரிந்து திருந்தியவர்களுக்கு விழா எடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்து ஜீவா வைவிட பெரியாரை கொச்சைப் படுத்தி பேசியிருக்க முடியாது? அதே ஜீவா தனது கடைசிக் காலத்தில் பெரியார் இமயத்தை விட உயர்ந்து நிற்கிறார் என்று உண்மையை உணர்ந்து பேசினார். அது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

தி.மு.க.வுக்கும், தி.க.வுக்கும் உரசல் மோதல் உச்சக்கட்டத்தில் இருந்த போது வீரமனியும் கலைஞரும் எப்படியெல்லாம் பேசினார்கள். இப்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் விளக்கபுகுந்தால் அது நம் நேரத்தைக் கொன்று விடும். சுருக்கம் கருதி ஒன்றைமட்டும் சொல்கிறேன்.

இதோ கலைஞர் பேசுகிறார்:

“நாங்கள் பெரியார் கட்சிக்கு காரண கர்த்தாக்கள் என்றால், பெரியார் மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.
நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். தி.க.விற்கும், தி.மு.க விற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு ,ஏன் பேச்சுவார்த்தை இல்லத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம் கூட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால் ,அப்படி எட்டிப் பார்த்தது ,சதிக்குணத்தால் அல்ல,துர்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல. எட்டிப்பார்த்து நாம் அந்த வீட்டை தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே, அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களையொட்டித்தானே நம்முடைய வீட்டிலும் செயல் பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக சுருக்கமாகச் சொன்னால் ,புரியும்படி சொன்னால் அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்த்ததுண்டு. அது ஒன்றும் குற்ற மல்ல.
----------------29-9-2007 அன்று கலைஞர் பேசியது.


இன்னும் பச்சையாக சொல்கிறேன், என் சாவுக்குக் காரணம் தி.மு.க.தலைவர்தான் என்று கூட வீரமணி அவர்கள் பேசிய காலமெல்லாம் உண்டு. அது “மரணசாசனம்” என்ற பெயரில் நூலாகவும் வந்தது. அப்படிப்பட்ட சூழலைக்கடந்து வந்தவர்கள் இன்று ஒற்றுமையாய் இருப்பதற்கு காரணம் பெரியார்.
கலைஞர்கூட தாய்வீட்டை எட்டிப்பார்த்து செயல் படுகிறார், ஆனால் நீங்கள் தாய்வீட்டையும், தாய்கழகத்தின் தலைவர் வீரமணியையும் கொச்சைப்படுத்தி எழுதுகிறீர்கள். இப்படி எழுதாதீர்கள் என்றால் தூண்டிவிடுகிறேன் என்று சொல்கிறீர்கள். நிதானமாக யோசியுங்கள். உண்மை புரியும்.

// உண்மைதான். விடுதலையின் பணியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடியல் கிடைத்தது. ஆனால் அதற்கு காரணம் பெரியார். வீரமணி அல்ல. பெரியாரின் கருத்துக்கள், பேச்சுக்கள், போராட்டங்கள் விடுதலையில் அச்சிடப்பட்டு வந்தன. ஆசிரியர் வீரமணி அவர்கள் அதில் ஒரு நிர்வாகி. நல்லபடியாக நிர்வாகம் செய்ததை பெரியாரே பாராட்டியிருக்கிறார். ஒருவேளை தவறு செய்திருந்தால் வீரமணி அவர்களைத் துாக்கிவிட்டு வேறு யாரோ ஒருவரை ஆசிரியராக்கி இருப்பார் பெரியார்ர். அதுதான் பெரியாரின் நிர்வாகத் திறன்./
உண்மையை எழுதியிருப்பதற்கு நன்றி தோழர். பெரியாரே நல்ல நிர்வாகி என்று பாராட்டிவிட்ட பிறகு நான் கருத்து சொல்ல என்ன இருக்கிறது?

வீரமனிக்கும் பெரியார்க்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அதில் உள்ள உண்மைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
இதோ கலைஞர் பேசுகிறார்:

“என்னுடைய வயதைவிட ஓரிரு வயது 3,4 வயது வீரமணி இளையவராக இருக்கலாம்.ஆனாலும் அவர் எங்களைவிட அதிகமாக பெரியாரிடத்திலே பக்கத்திலே இருந்து பழகியவர்.அதனால் நாங்கள் பெரியாரிடத்திலே கற்பதற்காகப் பெற்றிருந்த வாய்ப்பைவிட அதிக வாய்ப்பைப் பெற்றவர் அவர்.எந்தப் பிரச்ச்சினையையும் அது கடுகளவு பிரச்சினையாக இருந்தாலும் மலை போன்ற பிரச்சினையாக இருந்தாலும், கடல் அளவு பிரச்சனையாக இருந்தாலும் ,உமி அளவான பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றி அங்கிருந்து விவாதிக்கின்ற அந்த அருமையான வாய்ப்பை எங்களைவிட அதிக காலம் இன்னும் சொல்லப்போனால் அறிஞர் அண்னாவைவிட அதிக காலம் அந்த வாய்ப்பை அவர் பெற்றிருந்த காரணத்தால்தான் ,பெரியாருடைய எண்ணங்களையெல்லாம் நாட்டில் ,சமுதாயத்தில் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார். அவர் எண்ணுவதை வெற்றியாக்கிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த எண்ணங்கள் வெற்றி பெற்றால்தான் இந்தச் சமுதாயம் மானமுள்ள சமுதாயமாக வாழமுடியும்.
----------29-9-2007 அன்று கலைஞர் பேசியது.


வீரமணிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். கலைஞர் சொன்னது போல் பெரியாரிடம் கற்ற அந்த அனுபவப் பாடம் தான் இன்று வரைக்கும் வீரமணிக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி பெரியாரின் குறியீடாகத் திகழ்கிறார்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் உலத்தில் யாருமே இல்லை. பெரியார் மேல் வைக்கப்படாத விமர்சனமா? பெரியார் என்னன்ன விமர்சனங்களை கண்டாரோ அதெ போல் வீரமணியும் கண்டுள்ளார். வீரமணி பொண்டாட்டியை பொதுவுடமை ஆக்கு என்ற கோசங்கள் எல்லாம் இங்கே எழுந்ததுண்ட்டு. பகுத்தறிவுப்பிரசாரம் செய்யாதே பெரியாரைப் பரப்பாதே என்பதற்காக வீரமணி மீது பல இடங்களில் தாக்குதல் நடந்ததுண்டு.
பெரியார் மறைவுக்குபின் மணியம்மையார் மறைவுக்குப் பின் இந்த இயக்கத்தை பார்ப்பனியம் அழித்தொழிக்க எப்படியெல்லாம் முயன்றது என்பதை என்னைவிட நீங்கள் அதிகம் உணர்ந்திருக்கலாம். செய்திகளை அறிந்திருக்கலாம்.

இன்றைக்கு குடிஅரசு வெளியிட தடையாயிருக்கிறார் என்பதற்க்காக அவரை எப்படி வேண்டுமானலும் இழிவுபடுத்தலாம் என்றால் அது சரியாக இருக்காது தோழர்.
இரண்டு மாதமாக நானும் இந்தப் பிரச்சனையை கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் வந்தேன். இந்த விவாதத்தில் கலந்து கொள்ளகூடது என்ற உறுதியுடன் இருந்தேன். ஒரு கட்டத்தில் உங்களின் விமர்சனம் எல்லைதாண்டும் போது தவிர்க்க முடியாமல் நானும் இவ்விவாதத்தில் பங்கு கொள்ளும்படி ஆகிவிட்டது. அதோடு தாங்கள் தமிழச்சியை துணைக்கு அழைத்ததால் அவரின் எழுத்தையும் விமர்சிக்கும்படி ஆனதே தவிர தூண்டி விடுவதற்காக அல்ல.

பெரியாரியலைப் பரப்பும் பணியை இன்னும் வேகமாக பரப்ப வேண்டிய சூழலில் எப்போதையும் விட இப்போது அதிகமாக கொண்டு செல்ல வேண்டிய நேரமிது.
இந்தநேரத்தில் உங்களுக்கும் அல்லது எனக்கும் பதில் சொல்லி நேரத்தை கொன்று கொண்டு இருக்கிறோம்.

வீரமணிக்கு மட்டும் பேரியார் கொள்கை பரவக்கூடாது என்ற எண்ணமா? குடிஅரசு உரிமை பெ.சு.பி. நிறுவனத்துக்கு சொந்தமானது என்கிறார். நிங்கள் மறுக்கிறீர்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

என்னைபொறுத்தவரை பெரியாரைப் பற்றி எந்த நூல் வந்தாலும் வரவேற்பேன்.நன்னன் எழுதிய பெரியார்கணினி மற்றும் பெரியார் நூல்களை அவரின் வீட்டிலேயே தேடிப் போய் வாங்கி வந்தேன்.
அதே போல் "தந்தைபெரியார் இறுதி நாள்களும் இதழ்களும்" என்ற நூலை காவிரி நாடான் இல்லத்திற்கு சென்று வாங்கி வந்தேன். முன் வெளியீட்டுத்திட்டத்தின் கீழ் வெளியுடும் பெரும்பலான நூல்களை வாங்கிவிடுவேன் ஆனைமுத்து வெளியிட்ட பெரியாரியல் ,நீங்கள் வெளியிட்ட நூல்கள் உடபட . விலை குறைவாய் இருப்பது என்பதற்காக மட்டுமல்ல, வெளியீட்டாளர்களின் சுமையையும் குறைக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.

இன்றுவரை பெரியார் தொடர்பான அனைத்து இதழ்களையும், நூல்களையும் வாங்கிப் படித்து வருகிறேன். இனியும் படிப்பேன்.அதுபோல்தான் “குடிஅரசு” தொகுப்பு வரவேண்டும்
இப்போது பிரச்சினை “குடிஅரசு” உரிமை யாருக்குள்ளது என்பதுதான்.பெரியார் களஞ்சியம் முதல் தொகுப்பிலிருந்து “பதிப்புரிமை” பெற்றது என்ற அறிவிப்புடன் தான் வெளிவந்திருக்கிறது. அது போல் பெ.சு.பி. நிறுவன வெளியீடுகள் அனைத்திலும் அப்படித்தான் வெளிவந்துள்ளது.

பெரியாரின் நூல்களை வெளியிட முறைப்படி அனுமதி கேட்டவர்களுக்கு அனுமதி வழங்கி அதுவும் நூலாக வெளிவந்துள்ளது என்று சென்னை ப.க. மாநாட்டில் அறிவித்துள்ளார் வீரமணி.நீங்களும்முறைப்படி அனுமதி வாங்கி “குடிஅரசு” தொகுப்பை வெளியிடலாமே.

எந்த ஒரு அமைப்பிலும் குறைகளும் இருக்கும் நிறைகளும் இருக்கும். குறைகளை சுட்டிக்(காட்டலாம் நேர்மையான விமர்சனத்தின் மூலம்) கும்மி அடிக்காமல் நிறைகளை பாராட்டவும் செய்யவேண்டும்.

இனிமேலும் இது குறித்து விவாதிப்பது நமது நேரத்துக்கு கேடு.

நன்றி தோழர் .

6.10.08

தோழர் தமிழச்சி அவர்களுக்கும் ,அதிஅசுரன் அவர்களுக்கும் ஒரு திறந்த மடல்

http://thozharperiyar.blogspot.com/ வலைப்பதிவில் தோழர் அதி அசுரன் அவர்கள் பெரியார் 1962 இல் விடுதலை ஆண்டு மலருக்காக “எல்லாப் பொதுத்தொண்டனும் கன்னக்கோல், கத்தரிக்கோல் பொதுத்தொண்டர்களை விடக் கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்!” என்றற தலைப்பில் எழுதிய கட்டுரையை பதிவு செய்திருந்தார். அதில் முன் குறிப்பு என்ற பெயரில் கீழ்வருமாறு எழுதியிருந்தார்.

அது இதோ;

முன் குறிப்பு : -

இக் கருத்துக்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளபெரியார் தொண்டர்களும், பொதுத் தொண்டர்களும் அவரவர்கள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தத்தம் பொதுவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் வெளியிடப்படுகிறது. எந்தத் தனிநபரைப் பற்றியும் குறிப்பிடுவதற்காக அல்ல. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பெரியார் அவர்கள் எழுதியதாகும். இதைப் படித்து முடித்தபின் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், டாக்டர், வேந்தர், மானமிகு மீ.கி.வீரமணி அய்யா அவர்கள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழர் தலைவர் அய்யா அவர்களும் தன்னைத்தான் விமர்சிக்கிறான் எனக் கோபப்பட்டு எந்த இளவரசனையாவது அழைத்து மொட்டைப்பதிவு போட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். )

அதோடு இடையிடையே கி.வீரமணி அவர்களையும், கலி.பூங்குன்றன் அவர்களையும் நையாண்டி செய்து எழுதியிருந்தார்.

அதற்கு நான் கீழ் கண்டவாறு பின்னூட்டம் அளித்திருந்தேன். அது வருமாறு:

தமிழ் ஓவியா said...

//இக் கருத்துக்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளபெரியார் தொண்டர்களும், பொதுத் தொண்டர்களும் அவரவர்கள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தத்தம் பொதுவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் வெளியிடப்படுகிறது. எந்தத் தனிநபரைப் பற்றியும் குறிப்பிடுவதற்காக அல்ல. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பெரியார் அவர்கள் எழுதியதாகும்.//

இதுதான் சரியானது, இனிவரும் பெரியாரிய தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும்.

// இதைப் படித்து முடித்தபின் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், டாக்டர், வேந்தர், மானமிகு மீ.கி.வீரமணி அய்யா அவர்கள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.//

மேற்கண்ட கட்டுரை குத்தூசி குருசாமிக்காவே பெரியாரால் எழுதப்பட்டதாகும். கண்டிப்பாக வரலாறு தெரிந்தவர்களுக்கு, உண்மை புரிந்தவர்களுக்கு குத்தூசி குருசாமிதான் ஞாபகத்துக்கு வருவார்.

ஆமாம் வீரமணி அவர்கள் மீது ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு.

அவர் அவருக்கு தோன்றிய அணுகு முறையில் இயக்கத்தை நடத்திவருகிறார்.
வெற்றியும் பெற்று வருகிறார். தேவையில்லாமல் அவரை வம்புக்கிழுப்பதை விட்டு விட்டு உங்கள் அணுகு முறையில் உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
சகோதர யுத்தத்தை தவிருங்கள்.

குத்தூசி குருசாமிக்காக எழுதப்பட்ட கட்டுரையை வேறு யாருடனும் சம்பந்தப்படுத்துவதை தவிர்க்கவும். வரலாற்றை திரிக்காதீர்கள்.
வேதனையாக இருக்கிறது.

இதற்கு எதிர்வினையாக தோழர் அதிஅசுரன் கீழ்கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
“அதி அசுரன் said...


//மேற்கண்ட கட்டுரை குத்தூசி குருசாமிக்காவே பெரியாரால் எழுதப்பட்டதாகும். கண்டிப்பாக வரலாறு தெரிந்தவர்களுக்கு, உண்மை புரிந்தவர்களுக்கு குத்தூசி குருசாமிதான் ஞாபகத்துக்கு வருவார்.//

கண்டிப்பாக எனக்கு வரலாறும் தெரியாது. உண்மையும் புரியாது. அதனால்தான் குடி அரசு இதழ்களை காலவரிசைப்படி தொகுத்து வெளியிட பெரியார் தி.க முயற்சி செய்கிறது. அறிஞர் அண்ணா, பொன்னம்பலனார் போன்ற பலரது பெயர்களையும் பெரியார் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். உண்மையில்இக்கட்டுரையை மட்டும் தனியாகப் படிப்பவர்களுக்கு இது குருசாமி அவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் நிச்சயம் புரிந்து கொள்ள இயலாது.காலவரிசைப்படி பெரியாரின் கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தால் அதை நாங்கள் படித்திருப்போம். இக்கட்டுரைக்கு முன் குருசாமி அவர்களைப் பற்றி பெரியாரின் கருத்து என்ன என்பவைகளையும் புரிந்திருப்போம். அவ்வாறு காலவரிசைப்படி வெளியிடுவதைத் தடுத்தது யார்? திராவிடர் கழகம் தானே? எனவே இதற்காக நீங்கள் வேதனைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் தலைவருக்கு உரிய அறிவுரையைச் சொல்லுங்கள். அது தான் உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டிய பணி.

//ஆமாம் வீரமணி அவர்கள் மீது ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு//

அவரைப் பற்றி நாங்கள் எங்கேயும் எப்போதும் இதுவரை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. எமது கலந்துரையாடல் கூட்டங்களில்கூட தி.க. தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி எந்த விமர்சனத்தையும் பேசக்கூடாது. நமது செயல்பாடுகளைப் பற்றித்தான் பேச வேண்டும் என்று எமது தலைவர் கொளத்துார் மணி கண்டிப்பாகக் கூறியுள்ளார். ஆனால் தோழர் வீரமணி அவர்கள் தான் நாடுகளைக் கடந்து தொலைபேசியில் பலரிடம் கொளத்துார் மணி அவர்களைப் பற்றியும் பெ.தி.கவைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். பெ.தி.க வோடு தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார். இதுபற்றி தோழர் தமிழச்சி அவர்கள் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார். நாங்கள் அவரை விமர்சிக்க வேண்டிய நிலைக்கு அவரே எங்களைத் தள்ளிவிட்டுள்ளார். அதற்காக நிச்சயம் வருத்தப்படுகிறோம். இந்த அறிவுரைகளை உங்கள் தலைவருக்குச் சொல்லுஙகள். அது தன் சிக்கலைத் தீர்க்கும்.


//உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
சகோதர யுத்தத்தை தவிருங்கள்//

எங்கள் அமைப்பு ரீதியாக கொள்கை பரப்பும் பணியில் தான் குடி அரசு தொகுப்பை வெளியிட முயற்சித்தோம். அதற்கு தொல்லை கொடுப்பதால்தானே நாங்கள் பதில் பேசுகிறோம். அடிப்பவரை விட்டுவிட்டு அடி வாங்குபவனிடம் கத்தாதே, அமைதியாக அடிவாங்கு எனச் சொல்கிறீர்களே? என்ன நியாயம்?


திண்டுக்கல்லில் தி.க நகரச் செயலாளர் இராசேந்திரன் வெட்டப்பட்டபோது முதலில் களமிறங்கியது பெ.தி.க தோழர்கள் தான். அதற்காக பெ.தி.க சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கண்டனக் கூட்டத்தைக் கூட யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து பார்த்தவர்கள் அல்ல.


சகோதர யுத்தத்தை நாங்கள் என்றும் விரும்பியது இல்லை. தி.க தோழர்கள் அனைவரிடமும் குடும்பரீதியான உறவில்தான் இன்னும் உள்ளோம். பழனி மாரிமுத்து குடும்பம் உட்பட.

அதற்காக தி.க தலைவரின் இனத் துரோகத்தை வேடிக்கை பார்க்க வேண்டுமா? குறிப்பிட்ட ஒரு தலைவருக்காக தோழர்களை எதிரியாகப் பார்க்கும் முட்டாள்கள் அல்ல நாங்கள்.

நன்றி தோழர்.

என்று முடித்திருந்தார்.


குடிஅரசு வெளியீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான விவாதத்தைத் தவிர்த்து மற்றவைகளில் ஏதும் உண்மை உண்டா என்பது பற்றி ஆராய்வோம்.

தோழர் அதிஅசுரன் அவர்கள் எதிர்வினையில் சொன்னது போல் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவிலிருந்து பார்ப்போம்.


/வீரமணி அவர்கள் தான் நாடுகளைக் கடந்து தொலைபேசியில் பலரிடம் கொளத்துார் மணி அவர்களைப் பற்றியும் பெ.தி.கவைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். பெ.தி.க வோடு தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார். இதுபற்றி தோழர் தமிழச்சி அவர்கள் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.//

அதன்படி தமிழச்சி அவர்களின் பதிவை மீண்டும் படித்தேன்.

அதில் தமிழச்சி அவர்கள் சொன்னது:


"தந்தை பெரியாரின் எழுத்துக்களை நான் இணையத்தில் பதிவு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்த்துக்களுடன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்திருந்தீர்கள். அதன் பின் இணையத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் உரிமையையும் எனக்கு தந்தீர்கள். "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா" என்ற அமைப்பை பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஏற்படுத்திய போது உலக மயமாகும் பெரியார் என்று பூரித்து போய் விடுதலையில் செய்தி போட்டீர்கள்".

வீரமணி அவர்கள் சரியாகத்தான் செய்துள்ளார்.பெரியார் கொள்கையை பரப்புவர்களை பாராட்டி விடுதலையில் முதல் பக்கம் செய்தியும் போட்டுள்ளார் என்றால் மிக மிக வரவேற்கபட வேண்டிய செய்திதான்.

அடுத்து நீங்கள் சொன்ன கடல்கடந்து
குறைசொன்னதாக சொன்ன பகுதி என்பது திட்டமிட்டு செய்ததாகத் தெரியவில்லை இதோ தமிழச்சி பதிவு செய்தது வருமாறு:


“மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்த போது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்று தான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர்களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றீர்கள்.”
தமிழச்சி அவர்களுக்கு வேண்டுமானால் இருவரும் ஒன்று போல் தெரியலாம்.
ஒரு அமைப்பின் தலைவர் இதுவும் இயக்கத்தை வழிநடத்துபவர் அப்படிக் கூறிக்கொள்ள முடியுமா?

இது குறித்து பெரியாரின் கருத்து வழிகாட்டும்

இதோ பெரியார் பேசுகிறார்:


“என் தகுதிக்கு இதுகளை எல்லாம் பற்றிக்கூறக்கூடாது என்று கருதினேன்.கழக சம்பந்தமாகத்தான் நமக்கு ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே ஒழிய வேறு என்ன உறவு உள்ளது?....

கழகத்தவர்கள் என்பவர்கள் கழக சம்பந்தமாக பற்று வைத்துக் கொண்டு கழகத்துக்கு கேடு செய்பவர்களுடன் உறவு கொண்டு இருந்தால் அவர்கள் எப்படி கழகத்தவர்கள் ஆவார்கள்? நீங்கள்சிந்திக்க வேண்டும்.நாம் பதவிக்கோ வாழ்க்கையைப் பெருக்கிக் கொள்ளவோ கழகத்தில் இல்லை.அவரவர் வீட்டூச் சோற்றைத் தின்றுகொண்டு உழைப்பவர்கள்தான்.
எதிரிகளுக்கு உங்களிடம் பற்று என்றால் எதற்கு? உங்களைக் கொண்டு ஏதாவது முன்னேறத்தானே?
நீங்கள் அவர்களிடம் பற்று வைக்கின்றீர்கள் என்றால் நீங்களும் அவர்களிடம் ஏதோ எதிர்பார்க்கின்றீர்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரியம் இருக்குக முடியும்? எதிரிகளிடம் இருந்து கழகத்தில் இல்லாத என்ன அதிசியமான கொள்கையினைக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?

என் பொது வாழ்க்கை காலத்தில் துரோகிகள் முளைப்பது என்பது புதிதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை , 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை முளைத்துக் கொண்டேதான் வருகின்றார்கள். நானும் வெட்டிக் கொண்டேதான் வருகின்றேன்.
என்ன கேடுவந்து விலகுகின்றார்கள்? நான் சம்பாதிக்க விடமாட்டேன் என்கின்றேன். தங்கள் எண்ணப்படி நடக்க விடமாட்டேன் என்கிறேன் என்பதுதானே? .”

----- தந்தைபெரியார் - நூல் : “கழகமும் துரோகமும் “

இயக்கத்தைவிட்டு வெளியேறியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியார் வழிகாட்டும் கருத்துப்படி வீரமணி ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் சரியாகவே நடந்து வருகிறார் என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.

இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்டவேண்டும். குத்தூசி நூற்றாண்டு விழாவை வீரமணி நடத்தவில்லை என்று அனைவரும் கூப்பாடு போட்டனர். ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் பெரியார் கொள்கை வழி நடந்து கொண்டார். காரணம் பெரியாரின் வழிகாட்டும் தத்துவத்தை சரியாக கடைபிடித்ததனால்தான். பெரியாரைப் பற்றி இப்போது நீங்கள் வீரமணி அவர்கள் மீது வைக்கும் விமர்சனத்தில் பலமடங்கு அதிகமாகவே குத்தூசி குருசாமி வைத்துள்ளார்.
இயக்கத்தைவிட்டு வெளியேறி கடைசி வரை தனி அமைப்பாக செயல்பட்டு பெரியாரை கண்டபடி விமர்சித்த குத்தூசி குருசாமிக்கு இயக்கத்தலைவர் என்ற முறையில் வீரமணி அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினால் அது பெரியாருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

தனிப்பட்ட முறையில் குருசாமி மீது மரியாதை காட்டுவது என்பது வேறு; இயக்கத்தின் மரியாதை என்பது வேறு. கடைசி வரை பெரியாரை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தமுடியுமோ அப்படி கொச்சைப்படுத்தியவர் குத்தூசி குருசாமி.
ஒரு கட்டத்தில் குத்தூசி குருசாமியைக் காண்டால் காரித்துப்புங்கள் என்று கூடச் சொன்னார் பெரியார். அப்படிப்பட்டவருக்கு தி. க. எப்படி நூற்றாண்டு விழா கொண்டாடும்.
இப்பிரச்சினையில் வீரமணி அவர்கள் மிகச் சரியாக நடந்து கொண்டார் என்பதுதான் எனது கருத்து.
நியாயமானவர்களின் கருத்தும் இதுதான்.


தேவையில்லாமல் உங்களைப் பற்றி வீரமணி எதற்காக குறை கூற வேண்டும், தமிழச்சி அவர்களுடன் சில பேச்சுக்கள் வந்த போது உங்களை பற்றி தெரிவித்த கருத்துக்களை
அவருடைய பதிவில் பதிந்திருக்கிறார்.

இப்போது என்னுடைய நினைவு பெரியார் –மணியம்மையார் திருமணத்திற்கு செல்கிறது.
திருமணத்தைக் காரணம் காட்டி அண்ணா அவர்களும் அவருடைய பரிவாரங்களும் பெரியாரையும், மணியம்மையாரையும் எப்படிக் கொச்சைப் படுத்தினார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்ல. ராஜாஜியின் பேச்சைக் கொண்டுதான் பெரியார் மணியம்மையாரைத் திருமனம் செய்கிறார் என்று அடிப்படையான குற்றச்சாட்டை சுமத்தியபோது பெரியார் நினைத்திருந்தால் அடுத்த நிமிடமே அந்தக்குற்றச்சாட்டை தவிடு பொடியாக்கும் ஆதாரம் அவரிடமிருந்தும் அதைச் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தினார். காரணம் “அந்தரங்கம்” என்ற ஒரு சொல்லுக்காக
மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் ராஜாஜி மடல் எழுதியிருந்தார் அந்த மடலின் மீது “அந்தரங்கம்” என்று போட்டு எழுதியிருந்ததால் தன் உயிர் போகும்வரை மட்டுமல்ல மணியம்மையார் உயிர் போனபின்னும் கூட அந்த மடலை வெளியிடவில்லை. உண்மை வரலாறு உலகுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் வீரமணி அவர்கள்தன் அந்த மடலை வெளியிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.
பெரியாரின் பெருந்தன்மையும் நட்பை மதிக்கும் பாங்கும் எங்கே? தொலைபேசியில் இருவருக்கும் நடந்த உரையாடலை இன்னொருவரின் அனுமதியின்றி ஒரு பதிவில் வெளியிடும் தமிழச்சியின் செயல் எப்படிப்பட்டது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்
.

அடுத்து தமிழச்சி அவர்கள் எழுதியிருக்கும் பகுதியைப் பார்ப்போம்”

“வீரமணியார் புகழ் பாட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கலாம். நம்ப குறிக்கோள் தந்தை பெரியாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்பது தான். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒலி நாடாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்றேன்.

எங்கே, எப்போது சந்தடி சாக்கில் உங்கள் புகழை பரப்ப முடியுமோ அங்கேயெல்லாம் புகுந்து வீரமணி புகழ் பாட வைத்து விடுகிறீர்களே! அப்போதே உங்களை பற்றிய மதிப்பு குறைந்து போய்விட்டது. (அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை) என் அனுபவத்தில் உங்களுடன் பேசியதில் உங்களிடம் செயல் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்கிறார் தமிழச்சி

புதிதாக வீரமணி அவர்களுக்கு இனி எந்த புகழும் வந்து பெருமை சேர்த்துவிடப்போவதில்லை. 10 வயது முதல் 75 வயது வரை அவருக்கு கிடைக்காத புகழா? அப்படி இனிமேல் கிடைத்தாலும் அண்ணாவால், பெரியாரால் கிடைக்கப் பெற்ற பாராட்டுகளை விடவா இனிமேல் வேறு ஒருவர் பாராட்டினால் புகழ் கிடைத்து விடப் போகிறது?.
இன்னும் கேட்டால் உங்களைப் (தமிழச்சி) பற்றிய செய்தியை “விடுதலை” வெளியிடாமல் இருந்திருந்தால் பெரும்பாலான பெரியார் தொண்டர்களுக்கு தெரியாமலே போயிருந்திருக்கும். உங்களுக்கு வேண்டுமானல் வீரமணி புகழ் சேர்த்திருக்கலாம். உங்களால் வீரமணிக்கு எந்த புகழும் சேரவேண்டாம் என்பதுதான் எங்களைப் ஓன்ற பெரியார் தொண்டர்களின் கவலையாகும்.
எப்போதும் நீங்கள் பெரியார் டைபிஸ்ட்தான்; எனக்கும் பெருமைதான். இணையவழியாக பெரியாரின் கருத்துக்களை பரப்பிவரும் உங்கள் செயலுக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். அதற்காக மற்றவர்கள் எதுவுமே செய்ய வில்லை என்ற உங்களின் குற்றச் சாட்டை மறுக்கிறேன்.

பெரியார் “விடுதலை” இதழை நிறுத்திவிடலாமா என்று இருந்த நேரத்தில் விடுதலையைப் பார்த்துக் கொள்ள நான் வருகிறேன் என்று விடுதலை பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று கூறி 1962 முதல் இன்று வரை விடுதலையை உலகமெல்லாம் கொண்டு செல்வதற்கு காரண கர்த்தா வீரமணிதான் என்பது பெரியார் டைபிஸ்ட்டுக்கு தெரியாமல் இருந்திருக்கும். அருமைத் தோழர் அதி அசுரனாவது சொல்லியிருக்கலாமே. விடுதலை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட ,பிறபடுத்தப்பட்ட வர்களின் நிலை எண்ன ஆகியிருக்கும் என்று நினைத்தால் போதுமே வீரமணி மீது மரியாதை தானாக வந்திருக்கும். உங்களின் மரியாதையை யார் எதிர்பார்த்தது? எண்ணற்ற குடும்பங்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி தங்களின் குடும்பத்தலைவராக ஏற்றிருப்பது வீரமணி யைத்தான். அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து செயல் திட்டம் இல்லாதவர் வீரமணி என்று வசை பாடியிருக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கும் பிரச்சினையில் இருந்து மண்டல் கமிசன் அமுல்படுத்தியதில் தொடர்ந்து, இன்று அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகப்போவது வரை வீரமணியின் உழைப்பு எல்லாமே செயல்மலர்கள் வெற்றியாக அவரின் தோளைத் தழுவிக்கிடக்கிறது.

இன்றும் மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பெரியார் கொள்கைபரப்பும் ஒரே தலைவர் வீரமணிதான் என்பதை பெரியார் டைபிஸ்டுகள் உணர்ந்து கொள்ளட்டும். அவரின் செயல்திட்டங்கள் எல்லாமே கருத்துப்பரப்பல் பணி மட்டுமல்லாமல் களப்பணியையும் சேர்த்துத்தான். ,குறிப்பாக தொண்டர்களுக்குமுன்னால் சிறைக்குச் செல்வதும், கழுத்தில் தண்டோராவைப் போட்டுக்கொண்டு அண்னா சாலையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்வதிலும் அவர்தாம் முன்னோடி. நகரும் புத்தகச்சந்தை, கிராமப்புறப்பிரச்சாரத்திட்டம், கல்லூரிவாயிலில் மாணவரணிப் பிரசரத்திட்டம், மகளிரணிப் பிரச்சாரத்திட்டம்,குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு இதழ் உட்பட இன்னும் இன்னும் அவரின் சிந்தையில் உதித்த திட்டங்கள்தான்.

அடுத்து மானமிகு என்று விளிப்பது அதீத தற்புகழ்சியாக இருக்குமாம் சொல்லுகிறார் டைபிஸ்டு தமிழச்சி. மானமற்றுக்கிடந்த தமிழனை தன்மானமுள்ள தமிழனாக மாற்றுவதற்கு ,சுயமரியாதைகாரன் என்றால் எப்படி சூடும் சொரணையும் வருகிறதோ, அதுபோல் மானமிகு என்றால் சூத்திரன் என்று சொல்லி கேவலப்படுத்திய சமுதாயத்தில் மானமும் அறிவும் உள்ளவனாக ஆக்க அந்தச் சொல் பெரிய அளவில் பயன் பட்டது. இப்போது “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று அழைக்கும்போது ஒரு பெருமித உணர்வு வருகிறது . தற்புகழ்சிக்காக அல்ல அப்படி அழைப்பது, பார்ப்பனர்களால் இழுவுபடுத்தப்பட்ட தமிழனை மனரீதியாகவும், அறிவுரீதியாகவும் பார்ப்பானுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற உணர்வை ஊட்டுவதற்காகவே அச் சொல் பயன்பட்டது. பயன் பட்டுக்கொண்டிருக்கிறது.

‘’ என்னை "பெரியார் டைப்பிஸ்ட்" என்றே விளித்திருக்கின்றேன். ஏனெனில் அதற்கான தகுதி எனக்குண்டு. 6000 - கட்டுரைகளும், தந்தை பெரியார் எழுதிய 8 - புத்தகங்களும், டைப் செய்த தகுதியுமே இணையத்தில் எனக்கு "பெரியார் டைப்பிஸ்ட்" என்ற பெயரை கொடுத்தது. இதைவிட சிறந்த மரியாதை எனக்கு கிடைத்துவிடாது. என்று பெருமை யுடன் குறிப்பிட்டுள்ளார் தமிழச்சி.

இதற்கே நீங்கள் இவ்வளவு பெருமை அடிக்கும் போது 10 வயது முதல் 75 வயதுவரை இன்னும் கூட பல நூறு கூட்டங்களில் பேசியும் , நூற்றுக்கணகான நூல்களை எழுதியும், பல போராட்டங்களை நடத்தியும் குறிப்பாக 43 முறை சிறையேகிய வீரமணிக்கு பெருமை என்பது அவர் தேடிப்போக வேண்டியதில்லை .பெருமைகளும் புகழ்களும் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் டைபிஸ்டுகள் உணர்ந்து கொள்ளட்டும்

இறுதியாக என்னையும் வீரமணியின் ஜால்ரா என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். உணமையை எழுதி உள்ளேன். அதற்காக ஜால்ரா அடிக்கிறேன் என்று சொன்னால் இன்னும் எத்தனை ஜால்ரா வேண்டுமானாலும் அடிக்க தயாராயிருக்கிறேன். கொளத்தூர் மணிஅண்ணன் அவர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். அனால் வீரமணி அவர்களூக்கு இன்னார் என்று என்னைச் சுட்டிக்காட்டினால்தான் தெரியும். எனவே யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை

எனது நோக்கமெல்லாம் யாரையும் மரியாதைக்குறைவாக நடத்தகூடாது .விமர்சனம் செய்யும் போது நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே.
அனத்து மக்களும் “மானமிகு சுயமரியாதைக்காரனாக” ஆகவேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். வெற்றிபெற வேண்டும்.

3.10.08

உண்மையான “திரிபுவாத திம்மன்கள் யார்?”

பார்ப்பன சனாதானிகளுக்கு சவுக்கடி கொடுத்தது: பாமரமக்களிடம் பகுத்தறிவைப் போதித்தது;அரசுகளையும் ஆட்சியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மக்கள் நலனே முக்கியமானது என்பதை வலியுறுத்தி பல சாதனைகளைச் செய்த பெரியாரின் பச்சைஅட்டை“குடிஅரசு” தற்போது 2008 –இல் கூட பெரியார் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவர்களின் பார்வையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பான பெ.தி.க. பெரியாரின் “குடிஅரசு” இதழ்களை நூலாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தது. பெரியார் நிறுவிய திராவிடர்கழகம் என்ற அமைப்பின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களோ பதிப்புரிமை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் உள்ளது. வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று அறிவிப்புச் செய்து நீதிமன்றத்தில் தடைஆணையும் வாங்கி வைத்துள்ளார். அதையொட்டி வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்ததையெல்லாம் மற்றவர்கள் போல் நானும் கூர்மையாக கவனித்து வந்தேன்.

தற்போது அதுகுறித்து விவாதிப்பது நமது நோக்கமல்ல என்றாலும் பெரியாரின் கொள்கைகளை யாரும் திரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.”குடிஅரசு” வெளியீடு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நாம் அதற்குள் செல்லாமல் பெரியார் கருத்தை யாரும் திரிக்க கூடாது என்பதை மட்டும் விவாதிக்க இருக்கிறோம். முதலில் இவ்விவாதம் “பெரியாரைத் திரிப்பது யார்? என்ற தலைப்பில் தொடங்கி தற்போது “திரிபுவாத திம்மன்கள் யார்?” என்ற தலைப்பில் நடந்து வருகிறது “புரட்சி பெரியார் முழக்கம்” இதழில்

கடைசியாக வந்த இதழில் “திரிபுவாத திம்மன்கள் யார்?” -3 இல் கீழ் கண்டவாறு எழுதியுள்ளனர்.

அது இதோ:

“ பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்."
- மீ.கி.வீரமணி, 'விடுதலை' (30.8.2008)


மேலே எடுத்துக்காட்டிய "24 காரட் பொன் மொழிகளுக்கு" முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் 'திரிபுவாத திம்மன்' ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் 'விடுதலை'யின் 'அதிர்ச்சி' எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்”

. இவ்விவாததில் கலந்து கொள்ளக் கூடாது என்று இருந்தேன். தவிர்க்க இயலாமல் கலந்து கொள்ளும் சூழலை இக்கட்டுரைத் தொடர் உருவாக்கிவிட்டது. குறிப்பாக மேற்கண்ட வரிகள் இவ்விவாதச்சூழலுக்கு தள்ளி விட்டது என்றே சொல்லலாம்.

இரண்டு அமைப்புக்களுமே பெரியாரின் கொள்கைகளை அவரவர்களின் சக்திக்கேற்ப பரப்பிவருகிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்கள் இருவரும் அவரவர் அணுகு முறையில் சகோதரயுத்ததைத் தவிர்த்து பெரியார் கொளகையைப் பரப்பவேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக திராவிடர்கழகத்தில் தொண்டாற்றாமல் பெரியார்கொள்கையை பேசுபவர்கள் மிகக் குறைவே. அப்படிப்பட்டவர்கள் நேற்றுவரை ஒன்றாக தொண்டாற்றியவர்களைப் பற்றி எழுதும் போது குறைந்த பட்சம் மரியாதைக்குறைவின்றி நாகரிகமாக, சுயமரியாதைக்கு பங்கமின்றி எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள சிற்றூரில் பிறந்த என்னைபோன்றவர்கள் பெரியார் தொண்டனாகப் பரிணமித்ததுக்கு நீங்கள் குறிப்பிடும் “விடுதலையின் அதிர்ச்சி எழுத்தாளர்கள்” தான் காரணம்.அதிர்ச்சி எழுத்தாளரின் எழுத்து தமிழ் மக்களுக்கு விடுதலையை “விடுதலை” மூலம் வாங்கித்தந்துள்ளதுக்கு சான்றுகள் ஏராளம் உண்டு. அதை அப்புறம் பார்ப்போம்.
திரிபுவாதத்தை உண்மையில் செய்வது யார்? என்பதைப் பார்ப்போம்.

. திரிபுவாதத் திம்மன்கள் –யார்? -2 இல் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் அந்த “ஆணவ எழுத்தாளர்” ( நம்மாலும் இப்படி அடைமொழியுடன் எழுத முடியும் என்பதற்காக எழுதப்பட்டதே தவிர யாரையும் நோகடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்)

“இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!


“அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்பதுதான் நூலின் தலைப்பேதவிர “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ஏன்? என்பதல்ல என்பதை இக்கட்டுரை எழுத்தாளருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நூலின் தலைப்பை சரியாகச் சொன்னவர் நாம் மேலே சுட்டிக்காட்டிய பகுதியில் தவறாக சுட்டியது தெரிந்தே செய்ததா? அல்லது தெரியாமல் செய்ததா? இக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறாரோ இல்லையோ ஏன் அப்படி எழுதினார் என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வோம்.


“தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”

இக்கட்டுரையாளர் சொல்ல வருவது “கி. வீரமணி அவர்கள் 1982 இல் சொன்ன கருத்தை ஏற்று 1979 இல் எம்.ஜி.ஆர் அரசு மகராசன் குழுவை எப்படி அமைக்க முடியும் என்பது”.சரிதானே. எப்படி அமைக்க முடியும்? இக்கட்டுரையாளர் சாதிக்க விரும்புவது வீரமணி இப்போது மட்டுமல்ல எப்போதும் திரிபுவாதி தான் என்பதைத் தவிர வேறு இல்லை.

“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் கட்டுரையாளர் குறிப்பிடும் திரிபுவாதத்திற்கான வாசகம் ஏதாவது உள்ளதா? என்று நாம் தேடிப்பார்த்ததில் கீழ்கண்ட உண்மை உறுதியானது.

அந்த உண்மை இதோ:

“ நமது அறிவுஆசான் தந்தைபெரியார் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோயில் கருவரைக்குள் (கர்ப்பகிரகம்) நுழைய சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் உரிமை என்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகாரக வாய்ப்பு அளிப்பதன் மூலமே ஏற்பட முடியுமென்று கூறித்தான். அன்று ஆட்சியிலிருந்த – மதிப்பிற்குறிய கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. அரசினை வலியுறுத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டு இத்திருத்தம் சட்டமாக தமிழக சட்டமன்றத்தில் திமு.க. ஆட்சியில் நிறைவேறியது.இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றனர்.

“அப்ரேசன் வெற்றி, ஆனால் நோயாளி செத்தார்” என்பது போல் அரசியல் சட்டத்தின் 25, 26 –வது விதிகளுக்கு முரணல்ல, சட்டம் செல்லும் என்று கூறி நடைமுறைப்படுத்துவதற்கு குறுக்குச்சால் ஓட்டினார்கள். அய்யா மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையில் கழகம் தொடர்ந்து போராடிவந்தது.

தந்தைபெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை மதிப்புக்குரிய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.இ.அ.தி.மு.க அரசு அமைத்த குழுவின் தீர்மானத்திற்கும், நமது வற்புறுத்தலுக்கும் ஏற்ப, ஜஸ்டிஸ் திரு. மகராசன் அவர்கள் தலைமையில் ,திருமுருக கிருபனந்த வாரியார், பல குருக்கள், இந்து மத அபிமானிகள்,ஆஸ்திக சிரோன்மணிகள் ஆகிய 12 பேர்களையும் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துரை கமிசனரையும் உள்ளடக்கி ஒரு வல்லுநர் குழு போடப்பட்டு, அது அதன் அறிக்கையை 1982 ஆம் ஆண்டு தந்தது.
அதன்படி அர்ச்சகர்களை சாதி வேறுபாடின்றி தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்க ஆகமக் கல்லூரி ஏற்பாடு செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது”.



------------------------------“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் பக்கம் 34 -35

1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”
என்று உண்மைக்கு மாறாக எழுதியது அதிர்ச்சி எழுத்தாளரா? ஆணவ எழுத்தாளரா? பெரியாரின் தொண்டர்களே வெறும் கண்ணில் பார்த்தாலும் சரி, ஈரோடு கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் சரி ; யார் புரட்டிப் பேசுவது, திரிபுவாததிம்மன்கள் – யார்? என்ற உண்மையை ஊருக்கு உரையுங்கள்.


“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூல் மிகச்சிறந்த வரலாற்று ஆவனம். நூலினைத் தொகுத்தவர் தி.க. பொதுச்செயலாளர் மானமிகு கலி. பூங்குன்றன் அவர்கள் ஆவார்.அந்நூலில் எனது அறிவுக்கு எட்டிய வரை எந்த திரிபும் இல்லை. இப்போதும் அந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அந்நூலை வாங்கிப் படித்து உண்மைத்தன்மையை அறியுங்கள். தெளியுங்கள். நன்றி.

6.3.08

ஜோசியம் உண்மையா? பொய்யா?

குடந்தையருகே எரவாஞ்சேரி என்ற ஊரில் ஒரு ஜோசியர் இருந்தார். அவரிடம் யார் போனாலும் முன்னதாகவே ரூபாய் 10 கொடுத்துவிட வேண்டும். அவர் 1-லிருந்து 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரையும், ஒரு மலரையும் நினைத்துக் கொள்ளச் சொல்லுவார். சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதுபோல நடித்து இரண்டு மூன்று தவணைகளில் அந்த நம்பரையும், மலரையும் சொல்லிவிடுவார்.

வந்த நபரும் வியந்து போவார். பிறகு கிளி ஜோசியர்கள் சொல்லுவதுபோல இன்னும் 17 நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும். உன் வீட்டில் ஒரு தெய்வம் வசித்து வருகிறது. அதற்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வர தனவிருத்தியாகும்... தொழில் முன்னேற்றமடையும்... கஷ்டமெல்லாம் தொலைந்துவிடும் என்று சொல்லி 10 ரூபாயைச் சுருட்டிக் கொள்வார். இது நடந்தது 1980களில்.

அந்தக் காலக்கட்டத்தில் கிளி ஜோசியம் வெறும் 10 பைசாதான். கிளி ஜோசியக்காரன் ஒரே ஒரு சிறிய புத்தகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவிலுள்ள 103 கோடி மக்களுக்கும் ஜோசியம் சொல்லிவிடுவான். அதுவும் அந்தச் சிறிய புத்தகம் 1920... 30... களில் அச்சிடப்பட்டதாக இருக்கும்.

உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கை அமைப்பு இன்னொருவருக்கு இருக்க முடியாது. 103 கோடி மக்களுக்கு 103 கோடி பக்கங்கள் உள்ள புத்தகம்தான் சரியானதாக இருக்கும்.
இது ஒரு புறம் இருக்க, நமது எரவாஞ்சேரி ஜோசியர் அக்கிர காரவாசி என்பதால் அவர் இந்தப் புத்தகமெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. அதில் சில பக்கங்களை மட்டும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டார். அதுபோதும் அவருக்குப் பிழைப்பு நடத்த. 10 பைசா கிளி ஜோசியம் இவரிடம் 10 ரூபாய்.

ஒரு நாள் அதே ஊரைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் மாஸ்டர் அரங்கராசன் என்கிற தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் அந்த ஜோசியரைக் கடவுளாக மதித்த 10 பேரை அழைத்துக் கொண்டு போய் ஜோசியரிடம் 10 ரூபாய் கொடுத்து தனக்கு ஜோசியம் பார்க்குமாறு கேட்டார். ஜோசியர் வழக்கம் போல 1-லிருந்து 9-க்குள் ஏதாவது ஒரு எண்ணையும், ஒரு மலரையும் நினைத்துக் கொள்ளச் சொன்னார்.

மாஸ்டர் அரங்கராசன் அவர்களோ ஒரு காகிதம் கொடுங்கள் அதில் நான் நினைத்த இரண்டையும் எழுதி வைத்துவிடுகிறேன். பிறகு நாம் இருவரும் பொய் சொல்ல முடியாது. காகிதத்தில் உள்ள நம்பரையும், மலரையும் நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டால் உங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசாகத் தந்து ஜோசியம் உண்மை என்பதை எல்லாரிடமும் விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார்.

ஜோசியரோ கண்ணை மூடிக் கொண்டார். வேடிக்கைப் பார்க்க வந்த 10 பேரும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜோசியர் : நீங்கள் நினைத்தது... 3 ...?

மாஸ்டர் : இல்லை...

ஜோசியர் : அப்படியானால் .... 1 ...?

மாஸ்டர் : அதுவும் இல்லை...

ஜோசியர் : ஐந்து ... தானே ...?

மாஸ்டர் : இல்லை...

ஜோசியர் : 9 ... ஆக இருக்குமோ...?

மாஸ்டர் : இல்லவேஇல்லை...

ஜோசியர் : 7.... தான் என்றார் ...

மாஸ்டர் : 7... தான் என்று உறுதியாகச் சொல்கிறீர்களா?

பாவம் அந்த ஜோசியர்... திணறிப் போய் மீதமுள்ள 2, 4, 6, 8 என்ற எல்லா எண்களையும் சொல்லிவிட்டார்.

அப்போதும் மாஸ்டர் இல்லையென்றார். உடனே அந்த ஜோசியருக்கு மிகுந்த கோபம் வந்தவிட்டது. என்னய்யா காலையில் வந்து கலாட்டா செய் கிறார்கள்? உங்களிடம் நான் 1லிருந்து 9க்குள் தானே நினைக்கச் சொன் னேன்! நான் எல்லா எண் களையும் சொல்லிவிட் டேன்! உங்களுக்கு வேறு வேலை கிடையாதா? என்று சாடிக் குதித்தார்.

நமது மாஸ்டர் அவர்களோ மிகவும் பொறுமையாக, தான் எழுதிய நம்பரை மட்டும் காண்பித்தார். அதில் ஒன்றரை என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு மாஸ்டர் அவர்கள் பூவையாவது சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். உடனே சோதிடர் சினத்துடன், “போயா உன் 10 ரூபாயும் வேண்டாம் உனக்குச் சோதிடமும் சொல்ல மாட்டேன்” என்று கூறி உள்ளே சென்று விட்டார்.
மாஸ்டர் எழுதிய பூ என்ன தெரியுமா? வாழைப்பூ... உடன் வந்திருந்த 10 பேரும் ஜோசியருடைய பித்தலாட்டத்தைப் புரிந்து கொண்டார்கள். சுயமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

------நூல்: சிற்பி சி.இராசன் எழுதிய "நாம் அறீந்தவய்தாம்;ஆனால் நாம் சிந்திக்காதவய்" பக்கம் 26-29

20.2.08

நீதி கெட்டது யாரால்? நூலை எழுதியது யார்?

1959 -நான் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். 1958-இல்தான் அய்யாமீது அய்க்கோர்ட் அவமதிப்பு வழக்கும் அவர்கள் அளித்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த அறிக்கையும், உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகளிலும் பார்ப்பன நீதிபதிகளின் மனு தர்ம மனப்பான்மையுடன் ``ஒரு குலத்துக்கொரு நீதிப் பாங்குடன் தீர்ப்புத் தந்தவைகளையெல்லாம் தொகுத்து ஓர் கட்டுரையாக - ஆதாரப்பூர்வமாக எழுதி ``நீதி கெட்டது யாரால்? என்று தலைப்பிட்டு அய்யா அவர்களிடம் காட்டினேன். அதை மிகவும் கவனத்துடன் படித்த தந்தை பெரியார் அவர்கள் அதனைப் பாராட்டிவிட்டுச் சொன்னார்கள்.

``இது கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. ஆனால், விசயங்கள் மிகவும் சிறப்பானவை. விளைவுகள் இதற்கு ஏற்படலாம். நீங்களோ மாணவர். உங்களுக்குத் தொல்லை வரக்கூடாது என்று நான் கருதுவதால் இது என் பெயரிலேயே, நான் எழுதியதாக வெளியிட-லாம். அப்போது அதற்கு வெயிட்டும் அதிகம் ஏற்படும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் - கன்டெம்ப்ட் என்று என்னைச் சாரட்டும் - என்று கூறி அதை அவர்கள் எழுதுவதாகத் திருத்தம் செய்யச் சொன்னார்கள். அப்படியே சில சொற்கள் மாற்றம் உட்பட, செய்து எழுதினேன். விடுதலையில் தலையங்க அறிக்கையாக ``நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் வெளி வந்தது. அதனை வாசகர்கள் பலரும் பாராட்டினர்.

வேலூரில் ஒரு கழகப் பிரமுகர், அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அவரது நண்பர்களும் அய்யா அவர்களிடம் சென்று இந்த அறிக்கைக்காக நேரில் பாராட்டுத் தெரிவித்தார்கள். (அவர் என்னைப்பற்றி எக்காரணத்தாலோ கொஞ்சம் வெறுப்பை வளர்த்துக் கொண்டவர் - அதுவும் அய்யா அறிந்ததே). அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, அவர்கள் புகழ்ந்து கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து-விட்டு அதுபற்றி ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கெல்லாம், அவ்வறிக்கையை நான் எழுதவில்லை. அதை எழுதியது யார் தெரியுமா? வீரமணி.

அது கடுமையாக இருப்பதால் சட்டத்தின் விளைவிலிருந்து அவரை விடுவிக்க நானே என் பெயரைப் போட்டு வெளியிட்டு விட்டேன் என்றார். எதையும் ஒழிக்காத ஒளி அல்லவா அவர்.
இந்தத் தொண்டர் நாதனை தூய தலைவனைப் போல வேறு எங்கே பார்க்க முடியும்-?

------ தி.க.தலைவர் கி. வீரமணி
(விடுதலை பொன்விழா மலர், 1984)

15.2.08

சூத்திரர் யார்?

சூத்திர‌ர்க‌ள் என்ப‌த‌ற்கு மனுத‌ர்ம‌ சாஸ்திர‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌ட்டிய‌லை த‌ருகிறது

1. போரில் புறங்காட்டி ஓடியவன்.
2. போரில் கைது செய்யப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.


--------------- மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4

இப்படி எழுதி வைத்தால் ஆத்திரங்கொண்டு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

7.2.08

தீச்சட்டி

வினா: தீச்சட்டி எடுத்தலை அறிவியல் மூலம் விளக்கமுடியுமா?

விடை:
முடியும்.சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு அதன் மேல் நெருப்பினை எரியச்செய்து சட்டியைத் தூக்கினால் சட்டி பொறுக்க முடியாத அளவுக்கு சுடாது.மேலும் தீச்சட்டி ஏந்துபவர்கள் சட்டியை அடிக்கடி அடுத்த கைக்கு மாற்றிக்கொள்வார்கள்.மண்பானைக்குள் நெருப்பைப்போட்டு தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன(செம்பு,எவர்சில்வர்)குடத்தில் நெருப்பைப் போட்டோ அல்லது சுடு தண்ணீரை ஊற்றியோ கையில் ஏந்தி வர இயலாது.

1.2.08

பெரியார் திடலில் மதக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஏன்?

பெரியார் திடலில் மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது முரண்பாடாக இருக்கிறதே?

பெரியாருக்கு கிறிஸ்தவர்கள் மெமோரியல் ஹாலில் இடம் கொடுக்க மறுத்தார்கள். அதன் பிறகுதான் அய்யா, இங்கு மன்றத்தை துவங்கினார். அப்போதிலிருந்தே இங்கு மதக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அய்யா சொன்னது என்னவென்றால், என்னை திட்டுகிறவர்கள் என்றால் கூட கருத்து மாறுபாடு பார்க்காமல் இந்த மன்றத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். கீதையின் மறுபக்கம் நூலை ஒரு அய்யர் கேட்டால் கொடுக்க மாட்டோமா? வியாபாரம் என்று வந்த பிறகு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டியதுதான். விடுதலை பேப்பரில் நாங்கள் மத பிரச்சாரம் செய்யவில்லையே? பெரியார் திடலில் இருக்கக்கூடிய ஒரு அம்சம் இந்த பொது மன்றம். மதக்கூட்டங்களுக்கு தொடர்ந்து இனிமேலும் கொடுப்போம். இதில் மனித நேயம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட பெரியாரின் ஆணை இது.
----தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் "தமிழ் சினிமா" இணைய தளத்திற்கு அளித்த நேர்காணலிலிருந்து.

31.1.08

மோடிக்கு பதிலடி

கேள்வி: `மனித மலத்தை சுமந்தால் மோட்சம் கிடைக்கும் என்று மோடி சொன்னது பற்றி?

பதில்: தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழக சட்டமன்றத்தில் அதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, `தேவதாசி முறை கலாச்சார அடையாளம், நம் பண்பாடு, அதை ஒழிக்கக் கூடாது என்றார்.

கோபமாக எழுந்த முத்துலட்சுமி ரெட்டி `இத்தனை நாள் அந்த கலாச்சாரத்தை நாங்கள் சுமந்தோம், கொஞ்ச நாட்களுக்கு உங்கள் வீட்டுப் பெண்கள் சுமக்கட்டும் என்றார். சத்தியமூர்த்தி வாயடைத்துப் போனார்.

மோடிக்கும் அதே பதில்தான். மோட்சம் கிடைப்பதற்கு நீங்களும் கொஞ்ச காலம் மலம் சுமந்து பாருங்களேன் .

-----------"குமுதம்"-30.1.2008 இதழில் அரசு பதில்கள் பகுதியிலிருந்து

29.1.08

டாக்டர் கோவூரின் சவாலை ஏற்கத்தயாரா?

கடவுள் சக்திக்கு வக்காலத்து வாங்கும் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை மதவாதிகள் எவரும் சந்திக்க முடியாத கோவூரின் சவால்கள் வருமாறு :

1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.

2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.

3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.

4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.

5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.

6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.

7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.

8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.

9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.

10. நீரில் நடந்து காட்டுக.

11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.

12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.

13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.

15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.

16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.

17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.

18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.

19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.

20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

21. ஜோதிடமும், கைரேகை சா°திரமும் விஞ்ஞான ரீதியிலானவை என்று உரிமை பாராட்டி ஏராளமான ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி வரும் ஜோதிடர்களும், கைரேகை வல்லுநர்களும் பின்வரும் சவாலை ஏற்பார்களா? மிகச் சரியாக அட்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றோடு கணிக்கப்பட்டு தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லத கைரேகை பதிவுகளிலிருந்து இவை ஆண்களுடையன, இவை பெண்களுடையன, இவை இறந்தவர்களுடையன, இவை உயிரோடு இருப்பவர்களுடையன என்று அய்ந்த விழுக்காடு பிழைக்குட்பட்டு தேர்ந்ததெடுத்துக்காட்டுக.

என் சவால்களை ஏற்க அற்புதம் செய்பவர்கள் எனப்படுவோர் எவரேனும் முன் வருக. ஏற்ற என்னை வென்று ரூ.நூறாயிரம் பரிசு பெறுக.-டாக்டர் கோவூர்.

தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்ர்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!-டாக்டர். கோவூர்.

இதுவா தமிழ்வருடப் பிறப்பு?

வருஷம் - 1. ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் ( புண‌ர்ந்தது )கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம்.
இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள், பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.
------ ஆதாரம்: "அபிதான சிந்தாமணி" பக்கம் 1392

இப்படிப்பட்ட ஆபாசத்தை இதுநாள் வரை தமிழ் புத்தாண்டு என்று கடைபிடித்தது வெட்கம், மகா மகா வெட்கம். தை முதல் நாளே தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு என்பதை தமிழக முதல்வர் சுயமரியாதைக் கலைஞர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுகிறோம்.

31.12.07

பூப்பு நீராட்டு விழா தேவையா?

பூப்பு நீராட்டு விழா என்பது சம்பந்தப்பட்ட பெண்-உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும் அதன் மூலம்-கருவுறுவதற்கும் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்தும் அறிவிப்பேயாகும்.நாகரிகம் வளர்ச்சி பெறாத நிலையில் தகவல் தொடர்பு முறை பின்தங்கி இருந்த நிலையில் பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இச்சடங்கினை இன்றும் தொடர்வது அநாகரிகமான,பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும்.இதுபோல், உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும் பெண்னைக் கருவுறச் செய்வதற்கும் தயாரான ஆணிற்கு இத்தகைய சடங்குகள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் ஆண் ஆதிக்க செயல்பாடே- இந்நிகழ்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

மாதவிலக்கு என்பது சிறுநீரைப்போல் மலத்தைப்போல் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருளேயாகும்.இத்தகைய மாதவிலக்கு காலத்தை "தீட்டு" என்று கூறுவது பெண்களை இழிவுபடுத்தும் மூடநம்பிக்கையான செயலாகும்.