Search This Blog

6.10.08

தோழர் தமிழச்சி அவர்களுக்கும் ,அதிஅசுரன் அவர்களுக்கும் ஒரு திறந்த மடல்

http://thozharperiyar.blogspot.com/ வலைப்பதிவில் தோழர் அதி அசுரன் அவர்கள் பெரியார் 1962 இல் விடுதலை ஆண்டு மலருக்காக “எல்லாப் பொதுத்தொண்டனும் கன்னக்கோல், கத்தரிக்கோல் பொதுத்தொண்டர்களை விடக் கீழ்ப்பட்ட தொண்டர்களேயாவார்கள்!” என்றற தலைப்பில் எழுதிய கட்டுரையை பதிவு செய்திருந்தார். அதில் முன் குறிப்பு என்ற பெயரில் கீழ்வருமாறு எழுதியிருந்தார்.

அது இதோ;

முன் குறிப்பு : -

இக் கருத்துக்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளபெரியார் தொண்டர்களும், பொதுத் தொண்டர்களும் அவரவர்கள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தத்தம் பொதுவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் வெளியிடப்படுகிறது. எந்தத் தனிநபரைப் பற்றியும் குறிப்பிடுவதற்காக அல்ல. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பெரியார் அவர்கள் எழுதியதாகும். இதைப் படித்து முடித்தபின் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், டாக்டர், வேந்தர், மானமிகு மீ.கி.வீரமணி அய்யா அவர்கள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழர் தலைவர் அய்யா அவர்களும் தன்னைத்தான் விமர்சிக்கிறான் எனக் கோபப்பட்டு எந்த இளவரசனையாவது அழைத்து மொட்டைப்பதிவு போட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். )

அதோடு இடையிடையே கி.வீரமணி அவர்களையும், கலி.பூங்குன்றன் அவர்களையும் நையாண்டி செய்து எழுதியிருந்தார்.

அதற்கு நான் கீழ் கண்டவாறு பின்னூட்டம் அளித்திருந்தேன். அது வருமாறு:

தமிழ் ஓவியா said...

//இக் கருத்துக்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளபெரியார் தொண்டர்களும், பொதுத் தொண்டர்களும் அவரவர்கள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் தத்தம் பொதுவாழ்வு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் வெளியிடப்படுகிறது. எந்தத் தனிநபரைப் பற்றியும் குறிப்பிடுவதற்காக அல்ல. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பெரியார் அவர்கள் எழுதியதாகும்.//

இதுதான் சரியானது, இனிவரும் பெரியாரிய தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும்.

// இதைப் படித்து முடித்தபின் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், டாக்டர், வேந்தர், மானமிகு மீ.கி.வீரமணி அய்யா அவர்கள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.//

மேற்கண்ட கட்டுரை குத்தூசி குருசாமிக்காவே பெரியாரால் எழுதப்பட்டதாகும். கண்டிப்பாக வரலாறு தெரிந்தவர்களுக்கு, உண்மை புரிந்தவர்களுக்கு குத்தூசி குருசாமிதான் ஞாபகத்துக்கு வருவார்.

ஆமாம் வீரமணி அவர்கள் மீது ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு.

அவர் அவருக்கு தோன்றிய அணுகு முறையில் இயக்கத்தை நடத்திவருகிறார்.
வெற்றியும் பெற்று வருகிறார். தேவையில்லாமல் அவரை வம்புக்கிழுப்பதை விட்டு விட்டு உங்கள் அணுகு முறையில் உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
சகோதர யுத்தத்தை தவிருங்கள்.

குத்தூசி குருசாமிக்காக எழுதப்பட்ட கட்டுரையை வேறு யாருடனும் சம்பந்தப்படுத்துவதை தவிர்க்கவும். வரலாற்றை திரிக்காதீர்கள்.
வேதனையாக இருக்கிறது.

இதற்கு எதிர்வினையாக தோழர் அதிஅசுரன் கீழ்கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
“அதி அசுரன் said...


//மேற்கண்ட கட்டுரை குத்தூசி குருசாமிக்காவே பெரியாரால் எழுதப்பட்டதாகும். கண்டிப்பாக வரலாறு தெரிந்தவர்களுக்கு, உண்மை புரிந்தவர்களுக்கு குத்தூசி குருசாமிதான் ஞாபகத்துக்கு வருவார்.//

கண்டிப்பாக எனக்கு வரலாறும் தெரியாது. உண்மையும் புரியாது. அதனால்தான் குடி அரசு இதழ்களை காலவரிசைப்படி தொகுத்து வெளியிட பெரியார் தி.க முயற்சி செய்கிறது. அறிஞர் அண்ணா, பொன்னம்பலனார் போன்ற பலரது பெயர்களையும் பெரியார் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். உண்மையில்இக்கட்டுரையை மட்டும் தனியாகப் படிப்பவர்களுக்கு இது குருசாமி அவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் நிச்சயம் புரிந்து கொள்ள இயலாது.காலவரிசைப்படி பெரியாரின் கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தால் அதை நாங்கள் படித்திருப்போம். இக்கட்டுரைக்கு முன் குருசாமி அவர்களைப் பற்றி பெரியாரின் கருத்து என்ன என்பவைகளையும் புரிந்திருப்போம். அவ்வாறு காலவரிசைப்படி வெளியிடுவதைத் தடுத்தது யார்? திராவிடர் கழகம் தானே? எனவே இதற்காக நீங்கள் வேதனைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் தலைவருக்கு உரிய அறிவுரையைச் சொல்லுங்கள். அது தான் உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டிய பணி.

//ஆமாம் வீரமணி அவர்கள் மீது ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு//

அவரைப் பற்றி நாங்கள் எங்கேயும் எப்போதும் இதுவரை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. எமது கலந்துரையாடல் கூட்டங்களில்கூட தி.க. தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி எந்த விமர்சனத்தையும் பேசக்கூடாது. நமது செயல்பாடுகளைப் பற்றித்தான் பேச வேண்டும் என்று எமது தலைவர் கொளத்துார் மணி கண்டிப்பாகக் கூறியுள்ளார். ஆனால் தோழர் வீரமணி அவர்கள் தான் நாடுகளைக் கடந்து தொலைபேசியில் பலரிடம் கொளத்துார் மணி அவர்களைப் பற்றியும் பெ.தி.கவைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். பெ.தி.க வோடு தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார். இதுபற்றி தோழர் தமிழச்சி அவர்கள் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார். நாங்கள் அவரை விமர்சிக்க வேண்டிய நிலைக்கு அவரே எங்களைத் தள்ளிவிட்டுள்ளார். அதற்காக நிச்சயம் வருத்தப்படுகிறோம். இந்த அறிவுரைகளை உங்கள் தலைவருக்குச் சொல்லுஙகள். அது தன் சிக்கலைத் தீர்க்கும்.


//உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
சகோதர யுத்தத்தை தவிருங்கள்//

எங்கள் அமைப்பு ரீதியாக கொள்கை பரப்பும் பணியில் தான் குடி அரசு தொகுப்பை வெளியிட முயற்சித்தோம். அதற்கு தொல்லை கொடுப்பதால்தானே நாங்கள் பதில் பேசுகிறோம். அடிப்பவரை விட்டுவிட்டு அடி வாங்குபவனிடம் கத்தாதே, அமைதியாக அடிவாங்கு எனச் சொல்கிறீர்களே? என்ன நியாயம்?


திண்டுக்கல்லில் தி.க நகரச் செயலாளர் இராசேந்திரன் வெட்டப்பட்டபோது முதலில் களமிறங்கியது பெ.தி.க தோழர்கள் தான். அதற்காக பெ.தி.க சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கண்டனக் கூட்டத்தைக் கூட யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்து பார்த்தவர்கள் அல்ல.


சகோதர யுத்தத்தை நாங்கள் என்றும் விரும்பியது இல்லை. தி.க தோழர்கள் அனைவரிடமும் குடும்பரீதியான உறவில்தான் இன்னும் உள்ளோம். பழனி மாரிமுத்து குடும்பம் உட்பட.

அதற்காக தி.க தலைவரின் இனத் துரோகத்தை வேடிக்கை பார்க்க வேண்டுமா? குறிப்பிட்ட ஒரு தலைவருக்காக தோழர்களை எதிரியாகப் பார்க்கும் முட்டாள்கள் அல்ல நாங்கள்.

நன்றி தோழர்.

என்று முடித்திருந்தார்.


குடிஅரசு வெளியீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான விவாதத்தைத் தவிர்த்து மற்றவைகளில் ஏதும் உண்மை உண்டா என்பது பற்றி ஆராய்வோம்.

தோழர் அதிஅசுரன் அவர்கள் எதிர்வினையில் சொன்னது போல் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவிலிருந்து பார்ப்போம்.


/வீரமணி அவர்கள் தான் நாடுகளைக் கடந்து தொலைபேசியில் பலரிடம் கொளத்துார் மணி அவர்களைப் பற்றியும் பெ.தி.கவைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். பெ.தி.க வோடு தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார். இதுபற்றி தோழர் தமிழச்சி அவர்கள் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.//

அதன்படி தமிழச்சி அவர்களின் பதிவை மீண்டும் படித்தேன்.

அதில் தமிழச்சி அவர்கள் சொன்னது:


"தந்தை பெரியாரின் எழுத்துக்களை நான் இணையத்தில் பதிவு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்த்துக்களுடன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்திருந்தீர்கள். அதன் பின் இணையத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் உரிமையையும் எனக்கு தந்தீர்கள். "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா" என்ற அமைப்பை பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஏற்படுத்திய போது உலக மயமாகும் பெரியார் என்று பூரித்து போய் விடுதலையில் செய்தி போட்டீர்கள்".

வீரமணி அவர்கள் சரியாகத்தான் செய்துள்ளார்.பெரியார் கொள்கையை பரப்புவர்களை பாராட்டி விடுதலையில் முதல் பக்கம் செய்தியும் போட்டுள்ளார் என்றால் மிக மிக வரவேற்கபட வேண்டிய செய்திதான்.

அடுத்து நீங்கள் சொன்ன கடல்கடந்து
குறைசொன்னதாக சொன்ன பகுதி என்பது திட்டமிட்டு செய்ததாகத் தெரியவில்லை இதோ தமிழச்சி பதிவு செய்தது வருமாறு:


“மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்த போது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்று தான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர்களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றீர்கள்.”
தமிழச்சி அவர்களுக்கு வேண்டுமானால் இருவரும் ஒன்று போல் தெரியலாம்.
ஒரு அமைப்பின் தலைவர் இதுவும் இயக்கத்தை வழிநடத்துபவர் அப்படிக் கூறிக்கொள்ள முடியுமா?

இது குறித்து பெரியாரின் கருத்து வழிகாட்டும்

இதோ பெரியார் பேசுகிறார்:


“என் தகுதிக்கு இதுகளை எல்லாம் பற்றிக்கூறக்கூடாது என்று கருதினேன்.கழக சம்பந்தமாகத்தான் நமக்கு ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே ஒழிய வேறு என்ன உறவு உள்ளது?....

கழகத்தவர்கள் என்பவர்கள் கழக சம்பந்தமாக பற்று வைத்துக் கொண்டு கழகத்துக்கு கேடு செய்பவர்களுடன் உறவு கொண்டு இருந்தால் அவர்கள் எப்படி கழகத்தவர்கள் ஆவார்கள்? நீங்கள்சிந்திக்க வேண்டும்.நாம் பதவிக்கோ வாழ்க்கையைப் பெருக்கிக் கொள்ளவோ கழகத்தில் இல்லை.அவரவர் வீட்டூச் சோற்றைத் தின்றுகொண்டு உழைப்பவர்கள்தான்.
எதிரிகளுக்கு உங்களிடம் பற்று என்றால் எதற்கு? உங்களைக் கொண்டு ஏதாவது முன்னேறத்தானே?
நீங்கள் அவர்களிடம் பற்று வைக்கின்றீர்கள் என்றால் நீங்களும் அவர்களிடம் ஏதோ எதிர்பார்க்கின்றீர்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரியம் இருக்குக முடியும்? எதிரிகளிடம் இருந்து கழகத்தில் இல்லாத என்ன அதிசியமான கொள்கையினைக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?

என் பொது வாழ்க்கை காலத்தில் துரோகிகள் முளைப்பது என்பது புதிதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை , 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை முளைத்துக் கொண்டேதான் வருகின்றார்கள். நானும் வெட்டிக் கொண்டேதான் வருகின்றேன்.
என்ன கேடுவந்து விலகுகின்றார்கள்? நான் சம்பாதிக்க விடமாட்டேன் என்கின்றேன். தங்கள் எண்ணப்படி நடக்க விடமாட்டேன் என்கிறேன் என்பதுதானே? .”

----- தந்தைபெரியார் - நூல் : “கழகமும் துரோகமும் “

இயக்கத்தைவிட்டு வெளியேறியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியார் வழிகாட்டும் கருத்துப்படி வீரமணி ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் சரியாகவே நடந்து வருகிறார் என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.

இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்டவேண்டும். குத்தூசி நூற்றாண்டு விழாவை வீரமணி நடத்தவில்லை என்று அனைவரும் கூப்பாடு போட்டனர். ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் பெரியார் கொள்கை வழி நடந்து கொண்டார். காரணம் பெரியாரின் வழிகாட்டும் தத்துவத்தை சரியாக கடைபிடித்ததனால்தான். பெரியாரைப் பற்றி இப்போது நீங்கள் வீரமணி அவர்கள் மீது வைக்கும் விமர்சனத்தில் பலமடங்கு அதிகமாகவே குத்தூசி குருசாமி வைத்துள்ளார்.
இயக்கத்தைவிட்டு வெளியேறி கடைசி வரை தனி அமைப்பாக செயல்பட்டு பெரியாரை கண்டபடி விமர்சித்த குத்தூசி குருசாமிக்கு இயக்கத்தலைவர் என்ற முறையில் வீரமணி அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினால் அது பெரியாருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

தனிப்பட்ட முறையில் குருசாமி மீது மரியாதை காட்டுவது என்பது வேறு; இயக்கத்தின் மரியாதை என்பது வேறு. கடைசி வரை பெரியாரை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தமுடியுமோ அப்படி கொச்சைப்படுத்தியவர் குத்தூசி குருசாமி.
ஒரு கட்டத்தில் குத்தூசி குருசாமியைக் காண்டால் காரித்துப்புங்கள் என்று கூடச் சொன்னார் பெரியார். அப்படிப்பட்டவருக்கு தி. க. எப்படி நூற்றாண்டு விழா கொண்டாடும்.
இப்பிரச்சினையில் வீரமணி அவர்கள் மிகச் சரியாக நடந்து கொண்டார் என்பதுதான் எனது கருத்து.
நியாயமானவர்களின் கருத்தும் இதுதான்.


தேவையில்லாமல் உங்களைப் பற்றி வீரமணி எதற்காக குறை கூற வேண்டும், தமிழச்சி அவர்களுடன் சில பேச்சுக்கள் வந்த போது உங்களை பற்றி தெரிவித்த கருத்துக்களை
அவருடைய பதிவில் பதிந்திருக்கிறார்.

இப்போது என்னுடைய நினைவு பெரியார் –மணியம்மையார் திருமணத்திற்கு செல்கிறது.
திருமணத்தைக் காரணம் காட்டி அண்ணா அவர்களும் அவருடைய பரிவாரங்களும் பெரியாரையும், மணியம்மையாரையும் எப்படிக் கொச்சைப் படுத்தினார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்ல. ராஜாஜியின் பேச்சைக் கொண்டுதான் பெரியார் மணியம்மையாரைத் திருமனம் செய்கிறார் என்று அடிப்படையான குற்றச்சாட்டை சுமத்தியபோது பெரியார் நினைத்திருந்தால் அடுத்த நிமிடமே அந்தக்குற்றச்சாட்டை தவிடு பொடியாக்கும் ஆதாரம் அவரிடமிருந்தும் அதைச் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தினார். காரணம் “அந்தரங்கம்” என்ற ஒரு சொல்லுக்காக
மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்ய வேண்டாம் என்று தான் ராஜாஜி மடல் எழுதியிருந்தார் அந்த மடலின் மீது “அந்தரங்கம்” என்று போட்டு எழுதியிருந்ததால் தன் உயிர் போகும்வரை மட்டுமல்ல மணியம்மையார் உயிர் போனபின்னும் கூட அந்த மடலை வெளியிடவில்லை. உண்மை வரலாறு உலகுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் வீரமணி அவர்கள்தன் அந்த மடலை வெளியிட்டு உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.
பெரியாரின் பெருந்தன்மையும் நட்பை மதிக்கும் பாங்கும் எங்கே? தொலைபேசியில் இருவருக்கும் நடந்த உரையாடலை இன்னொருவரின் அனுமதியின்றி ஒரு பதிவில் வெளியிடும் தமிழச்சியின் செயல் எப்படிப்பட்டது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்
.

அடுத்து தமிழச்சி அவர்கள் எழுதியிருக்கும் பகுதியைப் பார்ப்போம்”

“வீரமணியார் புகழ் பாட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கலாம். நம்ப குறிக்கோள் தந்தை பெரியாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்பது தான். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒலி நாடாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்றேன்.

எங்கே, எப்போது சந்தடி சாக்கில் உங்கள் புகழை பரப்ப முடியுமோ அங்கேயெல்லாம் புகுந்து வீரமணி புகழ் பாட வைத்து விடுகிறீர்களே! அப்போதே உங்களை பற்றிய மதிப்பு குறைந்து போய்விட்டது. (அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை) என் அனுபவத்தில் உங்களுடன் பேசியதில் உங்களிடம் செயல் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்.” என்கிறார் தமிழச்சி

புதிதாக வீரமணி அவர்களுக்கு இனி எந்த புகழும் வந்து பெருமை சேர்த்துவிடப்போவதில்லை. 10 வயது முதல் 75 வயது வரை அவருக்கு கிடைக்காத புகழா? அப்படி இனிமேல் கிடைத்தாலும் அண்ணாவால், பெரியாரால் கிடைக்கப் பெற்ற பாராட்டுகளை விடவா இனிமேல் வேறு ஒருவர் பாராட்டினால் புகழ் கிடைத்து விடப் போகிறது?.
இன்னும் கேட்டால் உங்களைப் (தமிழச்சி) பற்றிய செய்தியை “விடுதலை” வெளியிடாமல் இருந்திருந்தால் பெரும்பாலான பெரியார் தொண்டர்களுக்கு தெரியாமலே போயிருந்திருக்கும். உங்களுக்கு வேண்டுமானல் வீரமணி புகழ் சேர்த்திருக்கலாம். உங்களால் வீரமணிக்கு எந்த புகழும் சேரவேண்டாம் என்பதுதான் எங்களைப் ஓன்ற பெரியார் தொண்டர்களின் கவலையாகும்.
எப்போதும் நீங்கள் பெரியார் டைபிஸ்ட்தான்; எனக்கும் பெருமைதான். இணையவழியாக பெரியாரின் கருத்துக்களை பரப்பிவரும் உங்கள் செயலுக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். அதற்காக மற்றவர்கள் எதுவுமே செய்ய வில்லை என்ற உங்களின் குற்றச் சாட்டை மறுக்கிறேன்.

பெரியார் “விடுதலை” இதழை நிறுத்திவிடலாமா என்று இருந்த நேரத்தில் விடுதலையைப் பார்த்துக் கொள்ள நான் வருகிறேன் என்று விடுதலை பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று கூறி 1962 முதல் இன்று வரை விடுதலையை உலகமெல்லாம் கொண்டு செல்வதற்கு காரண கர்த்தா வீரமணிதான் என்பது பெரியார் டைபிஸ்ட்டுக்கு தெரியாமல் இருந்திருக்கும். அருமைத் தோழர் அதி அசுரனாவது சொல்லியிருக்கலாமே. விடுதலை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட ,பிறபடுத்தப்பட்ட வர்களின் நிலை எண்ன ஆகியிருக்கும் என்று நினைத்தால் போதுமே வீரமணி மீது மரியாதை தானாக வந்திருக்கும். உங்களின் மரியாதையை யார் எதிர்பார்த்தது? எண்ணற்ற குடும்பங்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி தங்களின் குடும்பத்தலைவராக ஏற்றிருப்பது வீரமணி யைத்தான். அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து செயல் திட்டம் இல்லாதவர் வீரமணி என்று வசை பாடியிருக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கும் பிரச்சினையில் இருந்து மண்டல் கமிசன் அமுல்படுத்தியதில் தொடர்ந்து, இன்று அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகப்போவது வரை வீரமணியின் உழைப்பு எல்லாமே செயல்மலர்கள் வெற்றியாக அவரின் தோளைத் தழுவிக்கிடக்கிறது.

இன்றும் மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பெரியார் கொள்கைபரப்பும் ஒரே தலைவர் வீரமணிதான் என்பதை பெரியார் டைபிஸ்டுகள் உணர்ந்து கொள்ளட்டும். அவரின் செயல்திட்டங்கள் எல்லாமே கருத்துப்பரப்பல் பணி மட்டுமல்லாமல் களப்பணியையும் சேர்த்துத்தான். ,குறிப்பாக தொண்டர்களுக்குமுன்னால் சிறைக்குச் செல்வதும், கழுத்தில் தண்டோராவைப் போட்டுக்கொண்டு அண்னா சாலையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்வதிலும் அவர்தாம் முன்னோடி. நகரும் புத்தகச்சந்தை, கிராமப்புறப்பிரச்சாரத்திட்டம், கல்லூரிவாயிலில் மாணவரணிப் பிரசரத்திட்டம், மகளிரணிப் பிரச்சாரத்திட்டம்,குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு இதழ் உட்பட இன்னும் இன்னும் அவரின் சிந்தையில் உதித்த திட்டங்கள்தான்.

அடுத்து மானமிகு என்று விளிப்பது அதீத தற்புகழ்சியாக இருக்குமாம் சொல்லுகிறார் டைபிஸ்டு தமிழச்சி. மானமற்றுக்கிடந்த தமிழனை தன்மானமுள்ள தமிழனாக மாற்றுவதற்கு ,சுயமரியாதைகாரன் என்றால் எப்படி சூடும் சொரணையும் வருகிறதோ, அதுபோல் மானமிகு என்றால் சூத்திரன் என்று சொல்லி கேவலப்படுத்திய சமுதாயத்தில் மானமும் அறிவும் உள்ளவனாக ஆக்க அந்தச் சொல் பெரிய அளவில் பயன் பட்டது. இப்போது “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று அழைக்கும்போது ஒரு பெருமித உணர்வு வருகிறது . தற்புகழ்சிக்காக அல்ல அப்படி அழைப்பது, பார்ப்பனர்களால் இழுவுபடுத்தப்பட்ட தமிழனை மனரீதியாகவும், அறிவுரீதியாகவும் பார்ப்பானுக்கு நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற உணர்வை ஊட்டுவதற்காகவே அச் சொல் பயன்பட்டது. பயன் பட்டுக்கொண்டிருக்கிறது.

‘’ என்னை "பெரியார் டைப்பிஸ்ட்" என்றே விளித்திருக்கின்றேன். ஏனெனில் அதற்கான தகுதி எனக்குண்டு. 6000 - கட்டுரைகளும், தந்தை பெரியார் எழுதிய 8 - புத்தகங்களும், டைப் செய்த தகுதியுமே இணையத்தில் எனக்கு "பெரியார் டைப்பிஸ்ட்" என்ற பெயரை கொடுத்தது. இதைவிட சிறந்த மரியாதை எனக்கு கிடைத்துவிடாது. என்று பெருமை யுடன் குறிப்பிட்டுள்ளார் தமிழச்சி.

இதற்கே நீங்கள் இவ்வளவு பெருமை அடிக்கும் போது 10 வயது முதல் 75 வயதுவரை இன்னும் கூட பல நூறு கூட்டங்களில் பேசியும் , நூற்றுக்கணகான நூல்களை எழுதியும், பல போராட்டங்களை நடத்தியும் குறிப்பாக 43 முறை சிறையேகிய வீரமணிக்கு பெருமை என்பது அவர் தேடிப்போக வேண்டியதில்லை .பெருமைகளும் புகழ்களும் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் டைபிஸ்டுகள் உணர்ந்து கொள்ளட்டும்

இறுதியாக என்னையும் வீரமணியின் ஜால்ரா என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். உணமையை எழுதி உள்ளேன். அதற்காக ஜால்ரா அடிக்கிறேன் என்று சொன்னால் இன்னும் எத்தனை ஜால்ரா வேண்டுமானாலும் அடிக்க தயாராயிருக்கிறேன். கொளத்தூர் மணிஅண்ணன் அவர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். அனால் வீரமணி அவர்களூக்கு இன்னார் என்று என்னைச் சுட்டிக்காட்டினால்தான் தெரியும். எனவே யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை

எனது நோக்கமெல்லாம் யாரையும் மரியாதைக்குறைவாக நடத்தகூடாது .விமர்சனம் செய்யும் போது நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே.
அனத்து மக்களும் “மானமிகு சுயமரியாதைக்காரனாக” ஆகவேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். வெற்றிபெற வேண்டும்.

31 comments:

அதி அசுரன் said...

//இதோ பெரியார் பேசுகிறார்:

“என் தகுதிக்கு இதுகளை எல்லாம் பற்றிக்கூறக்கூடாது என்று கருதினேன்.கழக சம்பந்தமாகத்தான் நமக்கு ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே ஒழிய வேறு என்ன உறவு உள்ளது?....

கழகத்தவர்கள் என்பவர்கள் கழக சம்பந்தமாக பற்று வைத்துக் கொண்டு கழகத்துக்கு கேடு செய்பவர்களுடன் உறவு கொண்டு இருந்தால் அவர்கள் எப்படி கழகத்தவர்கள் ஆவார்கள்? நீங்கள்சிந்திக்க வேண்டும்.நாம் பதவிக்கோ வாழ்க்கையைப் பெருக்கிக் கொள்ளவோ கழகத்தில் இல்லை.அவரவர் வீட்டூச் சோற்றைத் தின்றுகொண்டு உழைப்பவர்கள்தான்.
எதிரிகளுக்கு உங்களிடம் பற்று என்றால் எதற்கு? உங்களைக் கொண்டு ஏதாவது முன்னேறத்தானே?
நீங்கள் அவர்களிடம் பற்று வைக்கின்றீர்கள் என்றால் நீங்களும் அவர்களிடம் ஏதோ எதிர்பார்க்கின்றீர்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரியம் இருக்குக முடியும்? எதிரிகளிடம் இருந்து கழகத்தில் இல்லாத என்ன அதிசியமான கொள்கையினைக் கற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?

என் பொது வாழ்க்கை காலத்தில் துரோகிகள் முளைப்பது என்பது புதிதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை , 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை முளைத்துக் கொண்டேதான் வருகின்றார்கள். நானும் வெட்டிக் கொண்டேதான் வருகின்றேன்.
என்ன கேடுவந்து விலகுகின்றார்கள்? நான் சம்பாதிக்க விடமாட்டேன் என்கின்றேன். தங்கள் எண்ணப்படி நடக்க விடமாட்டேன் என்கிறேன் என்பதுதானே? .”

----- தந்தைபெரியார் - நூல் : “கழகமும் துரோகமும் “

இயக்கத்தைவிட்டு வெளியேறியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியார் வழிகாட்டும் கருத்துப்படி வீரமணி ஒரு அமைப்பின் தலைவர் என்ற முறையில் சரியாகவே நடந்து வருகிறார் என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.//

இவ்வளவு தெளிவாக பெரியார் கூறியிருந்தும் எங்களைப்போன்ற பெரியார் தி.க தோழர்களுடன் உங்களுக்கு ஏன் உறவு? எதற்காக? உங்கள் கருத்துப்படியே நீங்கள் பெரியார் பேச்சையும் கேட்கவில்லை, ஆசிரியர் அவர்களின் அணுகுமுறையையும் நம்பவில்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

//கொள்கைரீதியாக சரியாக இருப்பவர்கள் தான் என் சொந்தக்காரர்கள். அது அதி அசுரனாக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி.//

என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பதில் போட்டீர்களே. அதற்குள் என்ன ஆனது? உங்களைப்போலத் தானே தமிழச்சியும் பேசியுள்ளார். அதில் என்ன தவறு? கழகமும் துரோகமும் புத்தகத்தை இன்றுதான் படித்தீர்களா?

எமது பெ.தி.க மேல் அவருக்கு எந்த அளவு கோபம், காழ்ப்புணர்வு என்பது தமிழ்நாட்டில் இப்போதும் உயிருடன் இருக்கும் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆதாரமாகத் தெரியும். இனநலன் கருதி அந்த அரசியல் தலைவர்களும், நாங்களும் வெளியே பேசுவதில்லை.

பெரியார் காலத்துக்குப் பின் இராஜாஜியின் கடிதத்தை ஆசிரியர் வெளியிட்டது போல பல செய்திகளை பார்ப்பன வாய்களுக்கு அவல் கிடைக்கக் கூடாது என்பதற்காகவும், நட்பிற்காகவும் வெளியே பேசாமல் இருக்கிறோம். ஆசிரியரைப் பற்றி மட்டுமல்ல. பழனி மாரிமுத்து அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவில் உள்ளவைகளைக்கூட இன நலன் கருதி வெளியே பேசு வதில்லை. இப்போது வரை.

ஆனால் பெரியார் இறந்த பின்னும் அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டிய நிலை ஆசிரியருக்கு வந்துவிட்டதல்லவா. அதுபோன்ற நிலை எங்களுக்கு வராமல் ஆசிரியர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவசியம் சொல்ல வேண்டுமென்றால் அடுத்தமுறை உங்கள் வீட்டுக்கு வரும்போது உங்களிடம் மட்டும் நேரில் சொல்கிறேன். அல்லது உங்கள் கூட்டணி நிலை மாறும் போது எல்லாமே தானாகவே வெளிவரலாம். அப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் தமிழச்சி அவர்களின் பதிவில் நீங்கள் படிக்காமல் விட்ட சில வரிகளை இப்போது படிக்கவும்.

//சகதோழர்களுக்கு உங்களிடம் இருக்கும் "வயிற்றெரிச்சல்" கொஞ்சம் நாகரிகமாக சொல்லப்போனால் "காழ்ப்புணர்வு"க்கு ஒரு அளவில்லையா?//

இந்த வரிகள் எப்படி உங்கள் கண்களுக்கு கிடைக்கவில்லை? தமிழச்சியும் மிக நாகரீகமாகத் தான் மேற்கண்ட வரிகளைக் கூறியுள்ளார். வெளிப்படையாக எந்த சம்பவத்தையும் குறிப்பிடவில்லை.

மாரிமுத்து அவர்களே தேவையில்லாமல் ஆசிரியருக்கு எதிராக எங்களைத் துாண்டிவிட வேண்டாம். இரு இயக்கங்களுக்குள் மோதலை உருவாக்க நினைக்கா தீர்கள்.

//கடைசி வரை பெரியாரை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்த முடியுமோ அப்படி கொச்சைப்படுத்திய வர் குத்தூசி குருசாமி. ஒரு கட்டத்தில் குத்தூசி குருசாமியைக் காண்டால் காரித்துப்புங்கள் என்று கூடச் சொன்னார் பெரியார். அப்படிப்பட்டவருக்கு தி. க. எப்படி நூற்றாண்டு விழா கொண்டாடும்.
இப்பிரச்சினையில் வீரமணி அவர்கள் மிகச் சரியாக நடந்து கொண்டார் என்பதுதான் எனது கருத்து.
நியாயமானவர்களின் கருத்தும் இதுதான்.//

இப்படி ஒரு விமர்சனத்தை தி.கவின் மேல் யார் வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் அப்படி ஒரு கோணத்தை யோசித்ததில்லை. எதற்காக இதை எழுதியிருக்கிறீர்கள் என்றும் புரியவில்லை.இருந்தாலும் பதில் தருகிறேன்.

பெரியாரைக் கொச்சைப்படுத்திய வர்கள் - பெரியாரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் என்ற இருபட்டியலிலும் இடம் பெற்றவர்கள் ஏராளம். குருசாமி அவர்களும் இருபட்டியல் காரர்தான். இப்போதய முதல்வர். கலைஞர், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களும் இருபட்டியல் காரர்கள் தான் மறுக்க முடியுமா?

அனைவரும் கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் பெரியார். அச்சமயத்தில் கத்தியைத் தீட்டாதே, தம்பி புத்தியைத் தீட்டு என்று மறுப்பாக பெரியாரைக் கிண்டலடித்தார் அண்ணா. பெரியாரிடம் இது பற்றிக் கேட்ட போது எவனுக்கு எது மழுங்கியிருக்கோ அதை அவனவன் தீட்டிக்கொள்ளட்டும் என்றார். அடங்கினார் அண்ணா.

அச்சமயத்தில் ஆத்துாரில் கலைஞர் பேசும்போது, தி.க காரர்களே கத்தியை மட்டும் வைத்துக்கொ ண்டு இருக்காதீர்கள், கையில் கிண்ணத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் ( மழிக்க ) என்றார். உடனே அதே ஆத்துாரில் தி.கவின் பதிலடிக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பதிலை நாகரீகங்கருதி இங்கு கூற விரும்பவில்லை. ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கலைஞரையும், அண்ணாவையும் பற்றி பெரியார் பேசிய கடுமையான சொற்களைப் போல யாரும் யாரையும் விமர்சித்திருக்க முடியாது.

முன்னேற்றக் கழகத்துக்காரன் ஓட்டுக்காகப் பொண்டாட்டியைக் கூட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டான் என பெரியார் பேசவில்லையா? விடுதலையிலேயே மின்சாரம் கட்டுரைகளில் அவை வரவில்லையா? தி.க வெளியிட்ட பழைய புத்தகங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான ஆதாரங்களை நீங்களே படித்திருப்பீர்கள்.

இந்த வரலாறெல்லாம் நன்கு தெரிந்த ஆசிரியர் அவர்கள், வாழும் பெரியாராக எங்கள் வீற்றிருக்கும் கலைஞர் அவர்களே என திருச்சியில் அண்ணாவைப் பற்றி எதுவுமே பேசப்படாத அண்ணா நுாற்றாண்டு விழாவில் பேசவில்லையா?

பெரியாருக்கு இணை இங்கு எவனுமில்லை. அவருக்கு இணையாக வாழும் பெரியார் என ஆசிரியர் அவர்களால் பேசமுடிகிறதே எப்படி?

குத்துாசி குருசாமி அவர்கள் இப்போது ஒரு வேளை முதலமைச்சராகவோ குறைந்தபட்சம் ஒரு வார்டு மெம்பராகவோ இருந்தால் ஆசிரியர் என்ன, நீங்களே இந்தக் கதையை எல்லாம் சொல்லியிருக்க மாட்டீர்கள். அவரது ஆட்சியைக் காப்பாற்றப் போயிருப்பீர்கள். அதற்குக் கொள்கைச் சாயமும் பூசியிருப்பீர்கள். அதை எவனாவது கேள்வி கேட்டால் துரோகி என முத்திரை குத்துவீர்கள். நாகரீகமில்லாமல் பேசுகிறான் - தீவிரவாதிகள் - அவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என தொலைபேசியில் தெரிந்தவர்களிடம் பேசுவீர்கள்.

இதற்கு என்ன பதில் சொல்வீர்கள் என்பது நன்றாகத் தெரியும். அந்தப் பதிலை அப்படியே குத்துாசி அவர்களுக்கும் பொருத்திப்பார்க்கவும்.

//விடுதலை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட ,பிறபடுத்தப்பட்ட வர்களின் நிலை எண்ன ஆகியிருக்கும் என்று நினைத்தால் போதுமே வீரமணி மீது மரியாதை தானாக வந்திருக்கும்//

உண்மைதான். விடுதலையின் பணியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடியல் கிடைத்தது. ஆனால் அதற்கு காரணம் பெரியார். வீரமணி அல்ல. பெரியாரின் கருத்துக்கள், பேச்சுக்கள், போராட்டங்கள் விடுதலையில் அச்சிடப்பட்டு வந்தன. ஆசிரியர் வீரமணி அவர்கள் அதில் ஒரு நிர்வாகி. நல்லபடியாக நிர்வாகம் செய்ததை பெரியாரே பாராட்டியிருக்கிறார். ஒருவேளை தவறு செய்திருந்தால் வீரமணி அவர்களைத் துாக்கிவிட்டு வேறு யாரோ ஒருவரை ஆசிரியராக்கி இருப்பார் பெரியர். அதுதான் பெரியாரின் நிர்வாகத் திறன்.

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் தான் அப்போது அ.தி.மு.க ஆட்சியும், இப்போது தி.மு.க ஆட்சியும் காப்பாற்றப் படுகிறது என வருங்காலத்தில் யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

அவ்வளவு ஏன் 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் திராவிடர் மாணவர் கழக பிரச்சாரப் பயணங்களில் மாநிலம் முழுதும் பலமுறை தலைமைப் பொறுப்பேற்று சுற்றுப்பயணங்களை முறைப்படுத்தியிருக்கிறேன். கிராமப் பிரச்சாரப்பயணங்களையும் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறேன். முதன் முதலாக நடத்தப்பட்ட புத்தகச் சந்தையிலும் பணியாற்றியிருக்கி றேன். அதற்காக அதி அசுரன் இல்லாவிட்டால் இவை எதுவுமே நடந்திருக்காது என எங்காவது, யாரிடமாவது நான் சொன்னால் அது திமிர்தானே? ஆணவம்தானே? மனதில் அப்படி நினைத்துக் கொள்வதுகூட தவறு என நினைப்பவன் நான். ஆனால் இப்பண்பை உங்கள் தலைமையிடம் எதிர்பார்ப்பது துரோகமாகப் படுகிறது.

ஆசிரியர் வீரமணி இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் 1962 க்குப்பின்னால் உயர்ந்திருக்கவே முடியாது எனச் சொன்னால் பெரியாரை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது.

//என்னையும் வீரமணியின் ஜால்ரா என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். உணமையை எழுதி உள்ளேன். அதற்காக ஜால்ரா அடிக்கிறேன் என்று சொன்னால் இன்னும் எத்தனை ஜால்ரா வேண்டுமானாலும் அடிக்க தயாராயிருக்கிறேன். //

நீங்கள் வீரமணி அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது இயக்கத்தில் குடும்பத்தோடு பொறுப்பிலும் இருக்கிறீர்கள். எனவே எந்த வகையிலும் நீங்கள் ஜால்ரா ஆக முடியாது. அப்படி நினைக்க மாட்டோம்.

பதவியில் இருக்கும் வேறு கட்சிக்காரனைப் புகழ்வதைத்தான் அதுவும் வாழும் பெரியார் ரோஞ்சக்குப் புகழ்வதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

//குடிஅரசு வெளியீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான விவாதத்தைத் தவிர்த்து மற்றவைகளில் ஏதும் உண்மை உண்டா என்பது பற்றி ஆராய்வோம். //

குடி அரசு வெளியீடு தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும் , பார்ப்பன ஏடுகளும், தொலைக்காட்சிகளும், இந்த வார எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியும் கூட செய்திகளை வெளியிடுகின்றன. வாதங்களை வைக்கின்றன. விடுதலையில் அவற்றிக்கு பதிலும் வருகின்றது. நீங்கள் மட்டும் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என ஒதுங்குகிறீர்கள். நீதி மன்றத்தைக் காட்டி ஒளியவேண்டாம். வெளிப்படையாகக் கருத்துக்களை வையுங்கள். கடந்த காலங்களில் குடி அரசு தொடர்பாக நீங்கள் எங்களிடம் பேசியவை பசுமரத்தாணிபோல நினைவில் இருக்கின்றன. 1989 இலிருந்து உங்களைப் பற்றித் தெரிந்தவன். எந்த நீதிமன்ற அவமதிப்புக்கும், சிறைக்கும் பயந்தவரல்ல மாரிமுத்து. பிறகு வேறென்ன தடுக்கிறது? கட்சி அரசியலா? குடி அரசு வெளியீடு தொடர்பாக வெளிப்படையாகக் கருத்துக் கூறுங்கள். எதுவாக இருந்தாலும்...உங்களை நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி - அதி அசுரன்

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

இந்த கேடுகெட்ட பாரிஸ் யோனியம்மாவையெல்லாம் ஒரு மனுஷியாக மதித்து பதிவு போடுவது பகுத்தறிவுக்கு ஏற்ற செயலன்று என்று முண்டம் ஓவியா அய்யாவுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
அந்த அம்மா கிட்ட ஒரே ஒரு சமாசாரம் சொல்லுங்க.அப்படியே கப்சிப்னு மெளனமாயிடுவாங்க."யோனியில் துருத்தியது என்ன என்பது எனக்கு தெரியும்" என்று பயமுறுத்துங்க.பேச்சு மூச்சில்லாம ஓடிவிடுவாங்க.நீங்க என் நண்பன் என்பதால் இந்த யோசனை உங்களுக்கு சொல்லப்படுகிறது.ட்ரை பண்ணுங்க.

பாலா

தமிழச்சி said...
This comment has been removed by the author.
தமிழச்சி said...

தோழருக்கு வணக்கம்

"என்னுடைய கருத்துக்களை சொல்ல எனக்கு எவ்வளவு உரிமையுண்டோ அதேப் போல் உங்களுடைய கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு"

-------- ஆனால் என்னைப்பற்றி அவதூறாக வரும் பின்னூட்ட கருத்துக்களையும் அவ்வாறே
எண்ண இயலாது. பார்த்துக் கொண்டு எம்மால் சும்மாவும்
இருக்க முடியாது.

என்னைப்பற்றி அவதூறான
பாலாவின் பின்னூட்டத்தை ஏற்கனவே உங்களுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்றீர்கள்.

வேறு தோழர்கள் என்னைப் பற்றி ஆபாசமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை.

உங்களின் நோக்கம் என்ன? ஏதாவது இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இனி என்னைப் பற்றி அவதூறாக எழுதும் பாலாவின் பின்னூட்டத்தை வெளியிடுவதை நிறுத்துங்கள்.

இன்னொன்று "டைப்பிஸ்ட்" என்ற பட்டம் நானே எனக்கு சூட்டிக் கொண்டதல்ல. பதிவு எழுதிய காலங்கட்டத்தில் பெரியாருடைய எழுத்துக்களை மட்டுமே டைப் செய்யும் சுயசிந்தனையற்ற பெரியார் டைப்பிஸ்ட் என்று மாற்றுக் கருத்தாளர்களால் சொல்லப்பட்டது.

சமீப காலமாகவே இணையத்தில் இருக்கும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காக சொல்லிக் கொள்கின்றேன்.

அறிந்ததையும்,
அறியப் போவதையும்
பகுத்தறிவோம்.


தோழமையுடன்
தமிழச்சி

(பின்குறிப்பு : தவறான வாக்கியத்தை மறு திருத்தம் செய்வதற்காக என்னுடைய முதல் பின்னூட்டம் எடுக்கப்பட்டது. வேறு எந்த காரணமும் இல்லை)

தமிழச்சி said...

// பெ.தி.கவைப் பற்றியும் தவறாக பேசியுள்ளார். பெ.தி.க வோடு தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் பேசியுள்ளார். இதுபற்றி தோழர் தமிழச்சி அவர்கள் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.//

ஏதேது இது புது கதையாக இருக்கின்றது? முதலில் தோழர்
அதி அசுரனுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வார்த்தைகளை மாற்றிப் போட்டு நாகரீகமாக உம்முடைய முன்னாள் தலைவரின் விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறீரா?

தொலைப்பேசியில் கி.வீரமணியுடன் பேசியது நான். கி.வீரமணி எந்த தோணியில் எப்படி பேசினார் என்பது எமக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கும் போது கி.வீரமணி
அவர்கள் இப்படித்தான் பேசினார் என்று வாக்கியத்தை மாற்றி எப்படி சொல்லலாம்?

"கழகத்தை விட்டு தொரத்திவிட்டவனையெல்லாம் என்னுடன் இணைச்சு வச்சி பேசாதீங்க" -
இப்படித்தான் சொன்னார்.

தமிழச்சி said...

//அவரை வம்புக்கிழுப்பதை விட்டு விட்டு உங்கள் அணுகு முறையில் உங்கள் அமைப்பு ரீதியாக கொள்கைபரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.//

தோழர் ஓவியா

"அதானே இப்போது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது" :-((

இதில் ஏதும் 'உள்குத்து' இல்லை என்றாலும் நீங்கள் நம்பிவிடப் போவதுமில்லை. அதனால் உங்கள் சிந்தனைப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் பெரியாரிஸ் ஒருவர் கூட என்னிடம் தி.க வை பாருங்க எவ்வளவு அமைதியா இருக்காங்க.

பெரியார் தி.க. தோழர்களால் சும்மா இருக்க முடிகிறதா? மூடப்பழக்க வழக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றோம் என்று அலகுக் குத்திக் கொள்வதும், அந்தரத்தில் முதுகில் ஊசிக் குத்திக் கொண்டு தொங்கிக் காட்டுவதும், தீண்டாமை ஒழிக்கின்றோம் என்று கிராமம் கிராமமாகச் சென்று டம்ளர்களை உடைப்பதும் பெரியார் எழுத்துக்களை புத்தகமாக அச்சிடப்போகின்றோம் என்றால் 'சும்மா'இருப்பவர்களால்
'சும்மா' இருக்க முடியாது தானே?

தமிழச்சி said...

//அவர் அவருக்கு தோன்றிய அணுகு முறையில் இயக்கத்தை நடத்திவருகிறார்.
வெற்றியும் பெற்று வருகிறார்.//

இதை நீங்கள் மட்டும் சொல்லக் கூடாது.இதர தோழர்களும் சொல்ல வேண்டும்.

இருப்பினும் இவை உங்களுடைய கருத்து என்பதை மட்டும் நினைவில் வையுங்கள் தோழர்.

தமிழச்சி said...

//குடிஅரசு வெளியீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான விவாதத்தைத் தவிர்த்து மற்றவைகளில் ஏதும் உண்மை உண்டா என்பது பற்றி ஆராய்வோம்.//

வழக்கு -
நிலுவையில் தானே
இருக்கின்றது.
சிலுவையில் -
அறைப்பட்டு புனிதமாக்கப்படவில்லையே!

நடந்த சம்பவங்களை சமீபத்திய நிகழ்வுகளை ஏன் விவாதிக்க கூடாது.

தமிழச்சி said...

//“மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்த போது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்று தான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர்களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றீர்கள்.”//

ஆமாம்! இது என்னுடைய அறிக்கையின் வாக்கியம் தான்.
அவர் சொன்னவிதத்தை அப்படியே அறிக்கையில் போட்டிருந்தால் இந்த பெ.தி.க. தோழர்கள் கூட பத்திரிக்கையில் வெளியிட மாட்டார்கள்.

நம்ப எழுத்து நடை அப்படி. பழகிப் போயிடுச்சி! அதனால் சபை மானம், பத்திரிக்கை தர்மம், இதர வகையறாக்கள் எல்லாவற்றையும் மனதிற்கொண்டு முதல் முதலாக ரொம்ப ரொம்ப நாகரீகமா எழுத எப்படியெல்லாம் யோசித்து யோசித்து எழுதினேன் தெரியுமா தோழர்?

அந்த அறிக்கையைப் போய் குறையாய் பேசுகிறீர்களே!

தமிழச்சி said...

//தமிழச்சி அவர்களுக்கு வேண்டுமானால் இருவரும் ஒன்று போல் தெரியலாம்.
ஒரு அமைப்பின் தலைவர் இதுவும் இயக்கத்தை வழிநடத்துபவர் அப்படிக் கூறிக்கொள்ள முடியுமா?//

தோழர் உங்களுக்கு வயசு கொஞ்சம் கூடவோ?

எழுத்துக்கள் நாடக பாணியில்
தெரிகின்றது. அதானால் கேட்கத் தோன்றியது.

"வெள்ளைக்காரங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க! 10 முட்டாள்கள் இருந்தால் தான் ஒரு தலைவன் இருக்க முடியும்" -

பகுத்தறிவு கருத்துக்களை சமூகத்திடம் கொண்டு செல்பவன் தன்னை தலைவனாக எண்ணக்கூடாது என்று அரிஸ்டாட்டில் சொல்வாரு!

*****

The owl whose night- bound eyes are blind unto the day cannot unveil the mystery of Light.

------ Kahlil Gibran

இதுவும் ஒரு தலைவன் மமதைக் கொள்வது குறித்து கலீல் கூறியது தான்.

*****

இவ்வளவு ஏன்?
நம்ப வள்ளுவரு "இளைதாக முள் மரம் கொல்க" என்பார்.

தலைவனின் மனதில் தான் என்ற ஆங்காரம் ஆணவம் ஏற்படுமாயின் எப்படி நாசாமாப் போய்விடும் என்பதற்கு உதாரணமான இந்த குறளை எடுத்துக் கொள்ளலாம்.

தலைவன் என்ற எண்ணத்தில் செருக்கு ஏற்படுமாயின் முள்மரம் போன்ற அந்த எண்ணங்கள் நமக்கு கேடு விளைவித்துவிடக் கூடும். எனவே அந்த எண்ணம் தோன்றும் போதே சின்னதான முள் மரம் வளரும் போதே புடிங்கி போடுவது போல் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி விடுமாறு வள்ளுவரு சொல்வாரு

தமிழச்சி said...

// குத்தூசி குருசாமிக்கு இயக்கத்தலைவர் என்ற முறையில் வீரமணி அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினால் அது பெரியாருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?//

பாப்பாத்தியுடன் கூட்டு சேர்ந்தது பெரியாருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

bala said...

//வேறு தோழர்கள் என்னைப் பற்றி ஆபாசமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை//

கருப்பு சட்டை கழிசடையான தமிழச்சி முண்டம்,

"யோனியில் துருத்தியது என்ன" என்ற பதிவை போட்டது நீதானே?இதையும் மற்ர யோனி பதிவுகளும் போட்டாதால் தானே தங்களுக்கு "பாரிஸ் யோனியம்மா" என்ற தூய திராவிட பட்டம் தரப்பட்டது.அப்போது மன மகிழ்ந்த தாங்கள் இப்போது இதை ஆபாசம் என்று வர்ணிப்பது கேவலமாக இல்லையா?நீங்க தாடிக்காரனின் சிஷ்யையாக இருக்க அருகதை அற்றவர்.வேற தொழில் செய்யுங்கள்.

பாலா

தமிழச்சி said...

//தொலைபேசியில் இருவருக்கும் நடந்த உரையாடலை இன்னொருவரின் அனுமதியின்றி ஒரு பதிவில் வெளியிடும் தமிழச்சியின் செயல் எப்படிப்பட்டது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.//

சில காலங்கள் முன்பு வரை என்னுடைய வலைபக்க இணைப்பை உங்கள் வலைப்பக்கத்தில் இணைத்து வைத்திருந்தீர்கள். சில மாதங்களுக்கு முன்பு அதை நீக்கிவிட்டீர்கள். என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

"உள் ஒன்று வைத்து வெளியொன்று பேசுவது நல்லதல்ல!"

தோழர் என்ற பதத்தை நீங்கள் எதற்காக உபயோகிக்கிறீர்கள்? முதலில் அதற்கு விளக்கம் சொல்லுங்கள்.

மற்றபடி இக்கட்டான நேரம்
வரும் போது உண்மையை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

'வாய்மையே வெல்லும்' - என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டுக் கொண்டிருக்க முடியாது.

அந்த வாய்மைக்காக வாயாடிக் கொண்டு மாரடிக்க வேண்டியதாக இருக்கிறது.

தவறுகளை திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இருப்பது தான் பகுத்தறிவின் ஆய்வுச் சிந்தனைக்கு உரியது.

தமிழச்சி said...

// புதிதாக வீரமணி அவர்களுக்கு இனி எந்த புகழும் வந்து பெருமை சேர்த்துவிடப்போவதில்லை.//

இவை உங்களின் கண்மூடித்தனமான புகழ் வார்த்தைகள்!

புகழை விரும்பாதவன் தலைவனாக தன்னை எண்ணுவதில்லை. ஒரு சமூகத் தொண்டனாக தன்னுடைய செயல்பாடுகளை வைத்திருப்பார்கள்.
பெரியார் ஆடம்பரமாக விழாக்கள் செய்து பார்த்திருக்கிறீர்களா தோழர்?

----- மிக முக்கியமாக நீங்கள் கவனிக்கப்பட வேண்டியது --

இதுவரை நான் உங்களுக்கு அளித்த பதில்கள் உங்களுடைய சிந்தனைக்கு என்னுடைய எதிர் மறைச்சிந்தனை வாதங்கள் மட்டுமே என்பதை முதலில் கவனத்தில் நிறுத்துங்கள்.

பெ. தி.க வுக்கு ஆதரவாளராக என்னுடைய கருத்துக்களை பதிவு செய்யவில்லை. நேர்மையான கருஞ்சட்டை தோழர்களின் உரிமைக்காக மெளனக்கெட்டு பின்னூட்டம் செய்கின்றேன்.

உண்மையான பகுத்தறிவு இருந்தால் அவன் பெரியாரையும்
விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். பெரியார் சிந்தனை
பெரியாருடையது. நம் சிந்தனை நம்முடையது.

நம்முடைய எண்ணங்கள் செய்படுகின்றனவா? சிந்திக்கின்றனவா?
என்பதற்கு நிகழ்வுகளை ஆராயும் போது தான் இயல்பான பக்கசார்பற்ற சிந்தனைகள் உருவாகும். ஒருநிலை சார்ந்து சிந்திப்பவன் தன்னை பகுத்தறிவு உள்ள மனிதன் என்றால் அது அவனுடைய கருத்து என்பதையும் அதை மெல்லிய சிரிப்புடன் அலட்சியப்படுத்தி செல்லும் பக்குவம் உண்மையான பகுத்தறிவுவாதிக்கு இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.
மிக நிச்சயமாக இருக்கும்.


நான் பெரியாரிஸ்ட் என்று சொல்லிவிடுவதால் அவன்
பகுத்தறிவு உள்ளவனாக இருப்பதில்லை. உங்களுடைய எழுத்துக்களை பார்க்கும் போது ஒருதலைப்பட்டமாகவே கி.வீரமணி அவர்களின் இடத்தில் இருந்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

மிக வேடிக்கையாக இருக்கின்றது. மனத்தத்துவம் தெரியுமா உங்களுக்கு?

மனிதனின் ஆழ்மனத்தில் அவனுக்கே விளங்காத தெரியாத உணர்வுகள் உண்டு. சந்தர்ப்பம் வரும் போது வேகமாக விஸ்வருபமெடுக்கும்.

தோழர் தயவு செய்து யாருக்காகவும் அவர்கள் இடத்தில் இருந்து நீங்கள் சிந்திக்காதீர்கள்.

தமிழ் ஓவியா said...

மதிப்புகுரிய தோழர் தமிழச்சி அவர்களுக்கு ,
வணக்கம் .உங்கள் பின்னூட்டன் அனைத்தையும் படித்தேன்.
1.//--- ஆனால் என்னைப்பற்றி அவதூறாக வரும் பின்னூட்ட கருத்துக்களையும் அவ்வாறே
எண்ண இயலாது. பார்த்துக் கொண்டு எம்மால் சும்மாவும்
இருக்க முடியாது.

என்னைப்பற்றி அவதூறான
பாலாவின் பின்னூட்டத்தை ஏற்கனவே உங்களுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்றீர்கள்.

வேறு தோழர்கள் என்னைப் பற்றி ஆபாசமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை.

உங்களின் நோக்கம் என்ன? ஏதாவது இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இனி என்னைப் பற்றி அவதூறாக எழுதும் பாலாவின் பின்னூட்டத்தை வெளியிடுவதை நிறுத்துங்கள்.//

நான் ஒன்றும் கனணி வல்லுநர் அல்ல . பின்னூட்டத்தை அழிப்பது எப்படி என்பதை நண்பரிடம் கேட்டு அழித்துவிடுகிறேன்.

யாரையும் அசிங்கப்படுத்தக்கூடாது, விமர்சனம் கூட மிக நாகரிகமாக நடக்க வேண்டும் என்று விரும்புவன் நான். உங்களைப்பற்றிய பாலாவின் விமர்சனத்தை வேண்டுமெண்று அழிக்காமல் இல்லை .எனக்கு பின்னூட்டத்தை அழிப்பது எப்படி என்பது தெரியவில்லை.

இதே பாலா என்னைப்பற்றி மட்டுமல்லாது அனைத்து பெரியார் தொண்டர்களையும் இப்படிதான் எழுதிவருகிறார்.

நம்மிடையே சண்டையிடுவதை நிறுத்திவிட்டு பொது எதிரியிடம் நம்முடைய செயல்பாட்டைக் காண்பிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இன்னும் கேட்டால் தப்பிதவறி இப்போதுதான் நம்மாட்கள் இணையத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள், நாம் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது.

தமிழ் ஓவியா said...

2.சில காலங்கள் முன்பு வரை என்னுடைய வலைபக்க இணைப்பை உங்கள் வலைப்பக்கத்தில் இணைத்து வைத்திருந்தீர்கள். சில மாதங்களுக்கு முன்பு அதை நீக்கிவிட்டீர்கள். என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

"உள் ஒன்று வைத்து வெளியொன்று பேசுவது நல்லதல்ல!"

உங்களுடைய வலைப்பக்க இணைப்பை "தமிழ் ஓவியா" வலைப்பக்கத்தில் இணைக்க வில்லை.
இன்னொரு வலைப்பக்கமான புரட்சியாளர் பெரியார் {jaathiolippu.blogspot.com) வலைப்பக்கத்தில் இன்னும் உங்களின் வலைப்பக்க இணைப்பு உள்ளது.
பல்வேறு பணிச்சுமை காரணமாக இரண்டு வலைப்பகத்திற்கும் செய்தி அளிக்க முடியவில்லை.

இணைய வானொலியான பெரியார்குரல் இணைப்பு தமிழ் ஓவியா வலைப்பக்கத்தில் உள்ளது.

உள் ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசுவது எக்காலத்திலும் என்னிடம் இல்லை.
யாருக்காகவும் எதற்காவும் பயந்தவனில்லை.
எத்தனையோ கஸ்டங்களைத்தாண்டிதான் இந்நிலைக்கு வந்துள்ளேன்.
யாரிடமும் எதையும் எதிர்பார்க்கும் குணமும் இல்லை. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தோல்விவரும், கோபம் வரும் அத்ன் மூலம் பல் இன்னல்கள் வரும்.
அதற்காக உண்மையை பேசாமல் இருக்க முடியாது.
அப்படி உண்மையைப் பேசும் போது வரும் இன்னல்கள் நமது லட்சியங்களுக்கு கொடுக்கும் விலையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் எனது நிலை.

அதற்காக இருவரிடையே நடந்த உரையாடலை மற்றவரின் அனுமதியின்றி வெளியிடுவது சரியல்ல என்ற எனது நிலையில் மாற்றமில்லை.

தமிழ் ஓவியா said...

3.//பாப்பாத்தியுடன் கூட்டு சேர்ந்தது பெரியாருக்கு செய்யும் துரோகம் ஆகாதா?//
தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பெரியார் காலத்தில் இருந்து வரும் நடைமுறை.
அப்படிவரும் போது தி.மு.க. பி.ஜே.பி.யுடன் கூட்டுச்சேர்ந்த போது பாப்பாத்திக்கு அதாவது அ.திமு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டுச் சேர்ந்தார் என்பது சரியல்ல.

தமிழ் ஓவியா said...

//நம்ப எழுத்து நடை அப்படி. பழகிப் போயிடுச்சி! அதனால் சபை மானம், பத்திரிக்கை தர்மம், இதர வகையறாக்கள் எல்லாவற்றையும் மனதிற்கொண்டு முதல் முதலாக ரொம்ப ரொம்ப நாகரீகமா எழுத எப்படியெல்லாம் யோசித்து யோசித்து எழுதினேன் தெரியுமா தோழர்?//

நாகரிகமாக எழுதியதற்கு மிக்க நன்றி தோழர்.

இன்னொருகேள்வி என்ன்மோகேட்டீங்களே

//தோழர் என்ற பதத்தை நீங்கள் எதற்காக உபயோகிக்கிறீர்கள்? முதலில் அதற்கு விளக்கம் சொல்லுங்கள்.//

"இயக்கத்தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் ,இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக தோழர் என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும்" என்று குடிஅரசு 13-11-1931 - இதழில் பெரியார் கூறியுள்ளர். அதன் படி அழைத்தே பழக்கமாகிவிட்டது தோழர். கண்டிப்பாக இதில் எந்த உள்குத்தும் இல்லை தோழர்.

தமிழ் ஓவியா said...

குடிஅரசு 13-11-1932 என்று திருத்தி வாசிக்கவும். நன்றி தோழரே.எழுத்துப் பிழைதானே தவிர கருத்துப்பிழை எதுவும் இல்லை தோழர்.
கண்டிப்பாக உள்குத்து எதுவும் இல்லை.

தமிழ் ஓவியா said...

//இதில் ஏதும் 'உள்குத்து' இல்லை என்றாலும் நீங்கள் நம்பிவிடப் போவதுமில்லை. அதனால் உங்கள் சிந்தனைப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் பெரியாரிஸ் ஒருவர் கூட என்னிடம் தி.க வை பாருங்க எவ்வளவு அமைதியா இருக்காங்க.

பெரியார் தி.க. தோழர்களால் சும்மா இருக்க முடிகிறதா? மூடப்பழக்க வழக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றோம் என்று அலகுக் குத்திக் கொள்வதும், அந்தரத்தில் முதுகில் ஊசிக் குத்திக் கொண்டு தொங்கிக் காட்டுவதும், தீண்டாமை ஒழிக்கின்றோம் என்று கிராமம் கிராமமாகச் சென்று டம்ளர்களை உடைப்பதும் பெரியார் எழுத்துக்களை புத்தகமாக அச்சிடப்போகின்றோம் என்றால் 'சும்மா'இருப்பவர்களால்
'சும்மா' இருக்க முடியாது தானே?//

இரண்டு அமைப்புக்களின் செயல் பாடுகளையும் பார்த்தும் கேட்டும் அறிந்து வருகிறேன். அவரவர்களுக்கு ஒரு வேலைத் திட்டத்தை வைத்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்காக தி.க.வின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது எந்தவிதத்திலும் சரியில்லை.
மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் புத்தகச் சந்தைகள் என்று பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
பெ.தி.க.வினரும் அது போல் அவர்களால் முடிந்த அளவு செய்து வருகிறார்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் பெரியாரிஸ்ட்டுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் தினந்தோறும் இணையத்தில் உலவும் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
பாராட்டுவதற்கு ரிஸர்வேசன் வேண்டாம் தோழர்.

தமிழச்சி said...

// இன்னும் கேட்டால் உங்களைப் (தமிழச்சி) பற்றிய செய்தியை “விடுதலை” வெளியிடாமல் இருந்திருந்தால் பெரும்பாலான பெரியார் தொண்டர்களுக்கு தெரியாமலே போயிருந்திருக்கும்.//



இப்படியொரு சிந்தனை உங்களிடமோ அல்லது தி.க தோழர்களிடமோ அல்லது விடுதலை நிர்வாகத்தினருக்கோ இருந்தால் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

விடுதலையில் முதல் பக்கத்தில் வந்தேன். விளம்பரமானேன் என்று மொட்டையாக பேசுகிறீர்களே எதற்காக போட்டார்கள்?

பாரீசில் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் ஏற்படுத்தி பெரியாரின் சொற்பொழிவுகளை இணையத்தில் பதிப்பதில் இருந்து செயல்பாட்டை நோக்கி பாரீசில் நடைப்பெற்ற தேர் திருவிழாவுக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தேன் என்பதைத் தான்
அவர்கள் போட்டார்கள்.

இவர்கள் விடுதலையில் என் புகைப்படத்தை போட்டு விளம்பரப்படுத்துவார்கள் என்றா உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நோட்டீஸ் கொடுத்தோம். முகத்தில் வீசியெறிந்த பகுத்தறிவு பிரச்சார நோட்டீஸ்களை வீசியெறிந்தபோதும், விழ இருந்த உதைகளை உங்கள் தலைவர் குறுக்கே புகுந்து தடுத்து அந்த செய்தியை பேப்பரில் போடுவாரென்றா நோட்டீஸ் கொடுத்தோம்?

இணையத்தில் என்னுடைய படங்களை நிர்வாணமாக போட்டார்களே! அதைப்பற்றி
விமர்சித்து போட்டார்களா?

பாரீசில் ஜோதிடர்கள் தமிழ்நாட்டில் இருந்து வருவது குறித்தும்,
பாரீசில் இருக்கும் 12 - இந்து கோயில்களையும் தாக்கி பதிவு போட்டதால் கொலை மிரட்டல் விடுத்து என்னுடைய காரை உடைத்து நாசம் செய்தார்களே அதைப் போட்டார்களா?

தந்தை பெரியார் இணையத்தளம் அழிக்கப்பட்டதே அதை போட்டார்களா?

பெண்ணீயம் பற்றி ஒருமுறை விவாதம் நடந்ததே! யோனியை வெட்டியெடுக்கும் காட்சி என்று புகைப்படத்துடன் "யோனி" பற்றி எழுத ஆபாசமாக எழுதுவதாக ஒரு திரட்டி நீக்கியதே அதை பற்றி எழுதினார்களா?

என் எழுத்துக்களையும், என்னையும் வைத்து தான் இன்று வாசகர்களை சம்பாதித்து இருக்கின்றேனே ஒழிய விடுதலையில் போட்டார்கள் அதனால் தான் இந்தளவு பிரபலம் என்றால் மானவாரியாக கேட்க ஆரம்பித்து விடுவேன்.

விவாதம் திசைமாறும் என்பதால் மீண்டும் கட்டுரை குறித்த
விமர்சனத்திற்கு வருகின்றேன்.

அதற்கு முன் இதில் இருக்கும் இணைப்புகளையும் நீங்களும், பின்னூட்டம் படிக்கும் வாசகர்களும் இதையும் படிப்பது நல்லது.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_3568.html


http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_8617.html


http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/02-2007_09.html


http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/02-2007.html

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_1051.html

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/03/blog-post_9308.html

தமிழ் ஓவியா said...

//பெரியார் தி.க. தோழர்களால் சும்மா இருக்க முடிகிறதா? மூடப்பழக்க வழக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றோம் என்று அலகுக் குத்திக் கொள்வதும், அந்தரத்தில் முதுகில் ஊசிக் குத்திக் கொண்டு தொங்கிக் காட்டுவதும், தீண்டாமை ஒழிக்கின்றோம் என்று கிராமம் கிராமமாகச் சென்று டம்ளர்களை உடைப்பதும் பெரியார் எழுத்துக்களை புத்தகமாக அச்சிடப்போகின்றோம் என்றால் 'சும்மா'இருப்பவர்களால்
'சும்மா' இருக்க முடியாது தானே?//
என்று தமிழச்சி வினா எழுப்பியுள்ளார்.

இதற்கு ஏற்கனவே விடை அளித்திருந்தாலும்,

தி.க. நூல் வெளியிடுவது பற்றி தோழர் தமிழச்சி அவர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.இது குறித்து கலைஞர் தரும் தகவல் இதோ:

"கருத்துக்கருவூலம் வீரமணி
நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப்பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள - அண்ணாவைப்பற்றி தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னால் இருந்தது, பின்னால் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.
இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு, 1929 - ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன். அவர் மாத் திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாரு டைய வழித்தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).

இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்துகொண்டவர்கள், அவர்களைப்பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி. ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன், அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசலமுதலியார் உங்களுக்குத் தெரியும். வேலைக்காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதசால முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

விஷயங்களை சேமித்து வைப்பதிலே வீரமணியிடத்திலே பாடம் படிக்கவேண்டும்

இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தக தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்லவேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரை பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணி யாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.

அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும் என்று எங்களுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக் கிறார்கள், மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்றுமுதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

-------------------- (செங்கற்பட்டு விழாவில் முதலமைச்சர் கலைஞர், 18.2.2008)

சும்மா இருப்பதாக சும்மா சொல்லவேண்டாம் தோழர்.

தமிழச்சி said...

//கலைஞர் தரும் தகவல் இதோ://


நக்கலா?

கலைஞர் வார்த்தைகளையெல்லாம் பொறுக்கி போட்டு பேசுவதற்கு
நாம் என்ன அரசியலா பேசிக் கொண்டிருக்கின்றோம்?


இதே கலைஞர் கி.வீரமணி ஜெ-வுக்கு ஆதரவு கொடுத்த போது என்ன சொன்னாரென்று தெரியுமா?

கலைஞர் வார்த்தைகளையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை!

என்னைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகளைப்பற்றி
பெரியார் என்ன கருத்துக்களைக் கொண்டிருந்தாரோ அதே கருத்து தான் எனக்கும்?

இரண்டாவது பதிவு வேறு போட்டிருக்கிறீர்கள்.

எல்லாவற்றிற்கும் பதில் அளிக்க விரும்பினாலும் நேரமின்மையால் போகிறேன் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.

உங்கள் புகழை நீங்கள் பாடிக் கொண்டிருங்கள். எங்கள் செயல்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இதற்கு மேல் உங்களுடன் உரையாடுவது எனக்கு வேஸ்ட் குட் பை.

bala said...

//எங்கள் செயல்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்//

கருப்பு சட்டை கழிசடை,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழச்சி அம்மா,


"எங்கள் செயல்களை" என்று பன்மையில் யாரை கூட்டு சேர்த்துக்கொண்டு சொல்கிறீர்கள்?சோளக்கொல்லை பொம்மைக்கு சூட் போட்டுவிட்டால் போல் சூட் மாட்டிக்கொண்டு,கஞ்சா அடித்தால் போல், திருட்டு முழி முழித்துக் கொண்டு வரும் பாரிஸ் பிச்சைக்காரன்,மாசில்லா அசிங்கத்தை தானே சொல்கிறீர்கள்?

பாலா

bala said...

//தோழர் என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும்//

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

தாடிக்காரன் இப்படி சொன்னது கேவலமான மூட நம்பிக்கையால் எழுந்த,பகுத்தறிவுக்கு ஒவ்வாத சொல்லாகும்."முண்டம்" என்ற சொல்லையே இந்த வெறிநாய்களுக்கு ஏற்ற சொல்லாக மரியாதையோடு பயன்படுத்தலாமே.

பாலா

தமிழ் ஓவியா said...

தி.க.வினர் பிரச்சாரப்பணியின் ஒருபகுதியை அறிந்து கொள்ள இத்தகவல் உதவும் என்பதற்காக உங்கள் பார்வைக்கு.

இதில் நக்கல் எதுவும் இல்லை

"பெரியார் களம்

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி பெரியார் களம் என்ற அமைப்பினை திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி தோழர்கள் உருவாக்கியுள்ளனர்.

அதற்கான தொடக்க விழா சென்னை - பெரியார் திடலில் 27.9.2008 அன்று மாலை எழுச்சியுடன் நடத்தப்பட்டது.

இயக்கத்துக்குச் சொற்பொழிவாளர்களை உருவாக்குதல், எழுத்தாளர்களை உருவாக்குதல், களப் பணியாளர்களை உருவாக்குதல் இதன் விழுமிய நோக்கமாகும். தொடக்கமே எழுச்சியோடு நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்திருந்தது பாராட்டுக்குரியதாகும்.

சென்னை பெரியார் திடலைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாலையிலும் இயக்கத் தொடர்பான ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பது கழகத் தலைவரின் வேட்கையாகும். அந்த வகையில் ஒவ்வொரு வியாழக்கிழமை யன்று மாலையில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அடாது மழை பெய்தாலும், புயல் வீசினாலும் வியாழன் மாலை என்றால் பெரியார் திடலில் வாசகர் வட்டம் நடந்தே தீரும் என்ற ஒரு நிலை நிலைநாட்டப்பட்டது. இதுவரை 1675 நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லவேண்டும்.

தமிழ்நாடறிந்த சான்றோர்கள், பெருமக்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், பல் துறைகளிலும் அனுபவ வைரம் பாய்ந்த அறிஞர் பெருமக்கள், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் என்று சொல்லத்தக்க கற்றுத் துறைபோன மேன்மையாளர்கள் எல்லாம் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தும் பேறு பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாதம் முதல் சனிக்கிழமையன்று தமிழக மூதறிஞர் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. நிருவாகத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெருமக்கள் மற்றும் பல துறைகளிலும் உயர் நிலையில் உள்ளவர்கள் எல்லாம் கருத்தை வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாலையில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநில அமைப்பின்கீழ் - புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ், பண்பாடு, இலக்கியம், திறனாய்வுகள் மற்றும் மக்கள் வாழ்வில் நெருக்கமாக இருக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் சொற்பொழி வாற்றுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கே.என். அறிவியல் மய்யத்தின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மூன்றாவது ஞாயிறு அன்று திராவிடர் கழக மகளிரணியினரின் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

மாதத்தின் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமை மாலை நேரங்களில் பெரியார் களம் நடக்க உள்ளது.

சதா இயங்கிக்கொண்டு இருப்பதுதானே இயக்கம். அந்த நிலை தொய்வில்லாமல் சென்னை பெரியார் திடலில் இயக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பெரியார் திடலில் இயங்கும் பெரியார் நூலகம் - ஆய்வகம் நவீனப்படுத்தப்பட்டு ஆய்வாளர்களுக்கும், நேயர்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது.

தொலைக்காட்சி, திரைப்படம், நுகர்வுக் கலாச்சாரம் என்ற போதைகளில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மூழ்கி தத்தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவர்கள் சரியான திசையின் பக்கம் பார்வையைச் செலுத்துவதற்கான சில திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்பாளர்களின் முக்கியக் கடமையாகும். அந்தப் பொறுப்புணர்ச்சியுடன்தான் இத்தகு திட்டங்கள் வகுக்கப்பட்டு, திராவிடர் கழகத் தலைமை நிலையமும், ஏடும் இயங்கும் பெரியார் திடலில் செயல்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று யாரும் கருதவேண்டிய தேவையில்லை. தமிழர்கள் யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே திராவிடர் கழகத் தலைமையின் எதிர்ப்பார்ப்பாகும்.

மேலே கூறப்பட்டுள்ள அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தங்கள் செயல்பாடுகளை விளம்பரப்படுத்தி, அந்தத் திட்டங்களின் பலன்கள் விரிவடைய ஆவன செய்யவேண்டுமாய் வலியுறுத்து கிறோம்.

உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மாணவர் விடுதிகளுக்குச் சென்று இந்தத் திட்டங்களைப்பற்றி எல்லாம் துண்டு அறிக்கைகள்மூலம் வெளிப்படுத்தி மாணவச் செல்வங்களின் சிந்தனைகளைப் பயனுறு முறையில் ஆற்றுப்படுத்தவேண்டியது இந்தப் பொறுப்பாளர்களின் முக்கியப் பொறுப்பாக இருக்கவேண்டும்.

இதற்கு இந்தப் பொறுப்பாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு அதன்மூலம் செயலூக்கம் மிக்கவர்களாகச் செப்பனிடப்பட உள்ளார்கள்.

மதப் பிற்போக்குவாதிகள் நவீன யுக்திகளைக் கையாளும் ஒரு காலகட்டத்தில், பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மை கொண்ட நாமும் அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இன்னும் சொல்லப் போனால் அதற்கு மேலும் தாண்டி நுணுக்கமாகச் செயல்பட வேண்டுமே - அதற்குத்தான் இத்தகு ஏற்பாடுகள்! பயன்படுத்திக் கொள்வார்களாக!

-----"விடுதலை" 3-10-2008

மேலும் ஒரு தகவல் உங்கள் பர்வைக்கு:

"தொலைக்காட்சியில்
"பெரியார் சிந்தனைகள்" தமிழர் தலைவர் உரை

வெள்ளிக்கிழமைதோறும் இரவு 10.10 மணிக்கு பொதிகை மற்றும் டி.டி.1 தொலைக்காட்சியில் பெரியார் சிந்தனைகள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை ஒளிபரப்பாகிறது. முதல் உரையை வரும் 10-10-2008 வெள்ளி இரவு 10.10 மணிக்கு கேட்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி இரவும் இதே நேரத்தில் உரை ஒளி பரப்பாகும்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்"

--------"விடுதலை" 7-10-2008

தமிழ் ஓவியா said...

//"வெள்ளைக்காரங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க! 10 முட்டாள்கள் இருந்தால் தான் ஒரு தலைவன் இருக்க முடியும்" -

பகுத்தறிவு கருத்துக்களை சமூகத்திடம் கொண்டு செல்பவன் தன்னை தலைவனாக எண்ணக்கூடாது என்று அரிஸ்டாட்டில் சொல்வாரு!

*****

The owl whose night- bound eyes are blind unto the day cannot unveil the mystery of Light.

------ Kahlil Gibran

இதுவும் ஒரு தலைவன் மமதைக் கொள்வது குறித்து கலீல் கூறியது தான்.

*****

இவ்வளவு ஏன்?
நம்ப வள்ளுவரு "இளைதாக முள் மரம் கொல்க" என்பார்.

தலைவனின் மனதில் தான் என்ற ஆங்காரம் ஆணவம் ஏற்படுமாயின் எப்படி நாசாமாப் போய்விடும் என்பதற்கு உதாரணமான இந்த குறளை எடுத்துக் கொள்ளலாம்.

தலைவன் என்ற எண்ணத்தில் செருக்கு ஏற்படுமாயின் முள்மரம் போன்ற அந்த எண்ணங்கள் நமக்கு கேடு விளைவித்துவிடக் கூடும். எனவே அந்த எண்ணம் தோன்றும் போதே சின்னதான முள் மரம் வளரும் போதே புடிங்கி போடுவது போல் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி விடுமாறு வள்ளுவரு சொல்வாரு//

எல்லாம் சரி பெரியார் என்ன சொல்லுறாரு இதிலே.திருக்குறளை பெரியார் அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்றவர்கள் இல்லை என்றுகூட கூறலாம். அதேவேளை வள்ளுவரை பெரியார் விமர்சித்த அளவுக்கு வேறு யாரும் விமர்சித்திருக்கமாட்டார்கள்.
அரிஸ்டாட்டில் ,கலில்கிப்ரான் போறவர்களையெல்லாம் நான் அதிகம் அறிந்திருக்கவில்லை அது எனக்கு தேவையுமில்லை.

தலைவன் பற்றி பெரியார் என்ன சொல்லுகிறார் என்பது பற்றி அறிந்து வைத்திருந்தால் போதும் என்ற அடிப்படையில் நான் அறிந்த தகவலை உங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

"பொதுவாழ்வில் நான் தலைவனாகத் தான் இருந்திருக்கின்றேனே தவிர தொண்டனாக இருந்தது கிடையாது. காங்கிரசில் ஒரு ஆறுமாதம் உறுப்பினராக இருந்து உடன் செகரட்டரியானேன். பிறகு தலைவனாக ஆனேன். சிறு வயது முதலே நான் தலைவனாகவே இருக்கப் பிரியப்படுவேனே ஒழிய தொண்டனாக இருக்க எனக்குப் பிரியம் கிடையாது"

----------"விடுதலை" 12-12-1968

யதார்தத்தை உணர வேண்டுகிறேன்.
நன்றி.

Unknown said...

எதேச்சையாகத்தான் இந்த பக்கத்திற்கு வந்தேன். முற்போகாளர்களுக்கு இடையே இவ்வளவு அருவருப்பாக ஆபாசமாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும், அப்படிப்பட்ட விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டிருப்பதும், படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாமெல்லாம் முற்போக்காளர்கள் என்று சொல்லவே வெட்கப்படவேண்டும்.

Unknown said...

எதேச்சையாகத்தான் இந்த பக்கத்திற்கு வந்தேன். முற்போகாளர்களுக்கு இடையே இவ்வளவு அருவருப்பாக ஆபாசமாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும், அப்படிப்பட்ட விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டிருப்பதும், படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாமெல்லாம் முற்போக்காளர்கள் என்று சொல்லவே வெட்கப்படவேண்டும்.

Unknown said...

எதேச்சையாகத்தான் இந்த பக்கத்திற்கு வந்தேன். முற்போகாளர்களுக்கு இடையே இவ்வளவு அருவருப்பாக ஆபாசமாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும், அப்படிப்பட்ட விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டிருப்பதும், படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாமெல்லாம் முற்போக்காளர்கள் என்று சொல்லவே வெட்கப்படவேண்டும்.

Unknown said...

எதேச்சையாகத்தான் இந்த பக்கத்திற்கு வந்தேன். முற்போகாளர்களுக்கு இடையே இவ்வளவு அருவருப்பாக ஆபாசமாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும், அப்படிப்பட்ட விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டிருப்பதும், படிப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாமெல்லாம் முற்போக்காளர்கள் என்று சொல்லவே வெட்கப்படவேண்டும்.