Search This Blog

16.10.08

பெரியார் இயக்கம் ஆரம்பிக்கிறதற்கு முன் நம் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது?




இந்த இயக்கம் ஆரம்பிக்கிறதற்கு முன் நம் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது? "அடேய்" என்று அழைக்கும்படியான இழிவான வேலைகள் எல்லாம் நமக்குத்தான் இன்றைக்கும் அந்த வேலைகளை நம்மவர்கள் தான் செய்து கொண்டு வருகின்றனர். பெரும் உத்தியோகங்கள் - எஜமான் என்று அழைக்கக் கூடிய உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பான் போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றானே!

நம் இயக்கம் தோன்றியபின் இன்று நம்மவனும் உயர்ந்த உத்தியோகத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதோடு தீண்டப்படாதவன என்று ஒதுக்கித் தள்ளி வைக்கப்பட்டிருந்தவனும் உயர்ந்த உத்தியோகங்கள் பார்க்கம் படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நம் மக்கள் தங்களுக்குப் பதவி உத்தியோகம் கிடைத்தால் அதையே பெருமை என்று கருதித் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனரே தவிர நம் சமுதாயத்திலிருநகிற இழிவு ஒழிய வேண்மென்று கருதுவது கிடையாது.

இந்த நாட்டுக்கு ஒரு பகுத்தறிவாளர் ஆட்சிவர 2000 -காந்தியாலே முடியாதே! 1000 - காமராஜராலே முடியாதே! பதினாயிரக்கண்ககான கோயில்கள், குட்டிச்சுவர்கள், பல கோடிக்கணக்கான மடையர்கள் இருக்கிற நாட்டிலே பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்ததென்றால் அதற்குகக் காரணம் நம் இயக்கம். பிரச்சாரம் தானே - நம் மக்கள் இந்த அளவிற்குப் பக்குவப்பட்டிருப்பது நம் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியால் தானே!

இயற்கையிலேயே நாம் இன்று புரட்சிகரமான காலத்தில் இருக்கிறோம். புரட்சி என்றால் சாதாரண புரட்சியல்ல! கடவுள் - மதம் - சாதி ஒழிக்கப்பட வேணடும் என்கின்ற கொள்கை உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கின்றோம். நம் மக்கள் இன்னும் சரியாகப் பக்குவமடையாததால் ஆட்சியாளர்கள் காரியம் செய்வதற்குப் பயப்படுகின்றனர். நம் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தால் துணிந்து பல சீர்த்திருத்தங்களளைச் செய்வார்கள்.

1000 -கோயில்களை இடித்து 4000, 5000 குழவிக்கற்களை( சாமிகளை) உடைத்து ரோட்டுக்கு ஜல்லியாகப் போட்டால் இந்த நாட்டில் பார்ப்பான் இருப்பானா? இந்தத் தொண்டிற்கு நாங்கள் மட்டும் கத்தினால் போதாது. நீங்களும் இறங்கி வர வேண்டும். அப்போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியுமே தவிர வாயால் மட்டும் சொல்லிக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் கடைசிவரை சூத்திரனாக, இழிமகனாக இருந்து சாக வேண்டியது தான்.

இன்றைக்கு நடக்கிற போராட்டங்கள் எதுவானாலும் எந்தப் பெயரைக் கொண்டவையாக இருந்தாலும், அது பார்ப்பான் வாழ்வதா- நாம் வாழ்வதா என்கின்ற பார்ப்பான் - பார்ப்பனரல்லாதார் இனப் போராட்டமேயாகும்



----------------------- 06-14-1969 அன்று மன்னார்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 14-04-1969

2 comments:

பரணீதரன் said...

நல்ல தொகுப்பு...

தமிழ் ஓவியா said...

நன்றி தோழரே.உங்கள் வலைப்பக்கத்தையும் படித்து வருகிறேன்.