ஈழத்தில் போர் நிறுத்தம்
ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!
தமிழர் தலைவர் உணர்ச்சி முழக்கம்
ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் - இதற்கான முயற்சியில் செயல்படுவோம் அல்லது செத்து மடிவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
இலங்கையில் போரை நிறுத்து என்று அறை கூவல் விட்டு நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பேரணியின் முடிவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
எமது தமிழர்கள் 30 கல் தொலைவில் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். காக் கைக் குருவிகளைச் சுடுவதுபோல சிங்களப் படை சுட்டுத் தள்ளுகிறது. நச்சு வாயு குண்டுகளைப் போட்டுக் கொடூரமாகக் கொன்று குவிக்கின்றது.
24 மணிநேரத்தில்...
இதனைக் கண்டிக்கும் முறையில் வெறும் 24 மணிநேர இடைவெளி யில் ஒரு அறிக்கைமூலம் இலட்சக்கணக்கான மக்களை நமது முதலமைச்சர் கூட்டியுள்ளார். இன உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வெறும் தேர்தல்பிரச் சினையல்ல இது - தேர்தலைவிட அடுத்ததலை முறையைப்பற்றி கவ லைப்படுபவர்கள் நாம்.
கலைஞர்
கட்டளையிடட்டும்!
இனி இத்தகைய பேரணிகள் தேவையில்லை - என்ன செய்யவேண்டும்; எப்பொழுது செய்ய வேண்டும்; எப்படி செய்ய வேண்டும் என்று யூகம் வகுப்பதிலே நமது கலைஞர் அவர்களுக்கு நிகர் கலைஞர்தான்.
கலைஞர் அவர்கள் கட்டளையிடும் இடத்தில்தான் இருக்கிறார். அதனை ஏற்றுச் செயல் படுத்த இலட்சோப இலட்ச மக்கள் இருக்கின்றனர். உலகில் உள்ள கோடானுகோடி மக்கள் - தமிழர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் வந்தே ஆகவேண்டும். இனிமேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக அத்தனை பேரும் கல்லறைக்குப் போகத் தயங்காதவர்கள் தான் இங்கே கூடியிருக் கின்றோம். ஈழத் தமிழர் களுக்காக ஒரு நாள் நாடகம் நடத்தக்கூடியவர்கள் அல்ல நாம்.
திருமாவளவன் போன்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் - அது நடக்காது.
நமக்கு உள்ள உணர்வு இயற்கையானது, இயல்பானது! குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற ஒரு வழக்கில் குழந்தையை இரண்டாகப் பிளந்து ஆளுக்குப் பாதிப் பாதி அளித்துவிடலாம் என்று அரசன் சொன்னபோது, வேண்டாம், வேண்டாம், குழந்தையை இரண்டாக வெட்டவேண்டாம்; இந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடமே இருக்கட்டும் என்று ஒரு தாய் சொன்னபோது, உண்மையான தாய் அந்தப் பெண்தான் என்று அரசன் கண்டறிந்ததுபோல, உண்மையான தாயாக விருந்து இந்தப் பிரச்சினையிலே முதலமைச்சர் அக்கறை செலுத்தி வருகிறார்.
------------------- "விடுதலை" 10-4-2009
3 comments:
போர் நிறுத்தம் ஏற்பட்டே ஆக வேண்டும். ஈழத்தமிழர்கள் காப்பாற்ரப்பட வேண்டும்.
அதுவே உலகத்தமிழர்களின் விருப்பம்.
//திருமாவளவன் போன்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் - அது நடக்காது.
நமக்கு உள்ள உணர்வு இயற்கையானது, இயல்பானது! குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற ஒரு வழக்கில் குழந்தையை இரண்டாகப் பிளந்து ஆளுக்குப் பாதிப் பாதி அளித்துவிடலாம் என்று அரசன் சொன்னபோது, வேண்டாம், வேண்டாம், குழந்தையை இரண்டாக வெட்டவேண்டாம்; இந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடமே இருக்கட்டும் என்று ஒரு தாய் சொன்னபோது, உண்மையான தாய் அந்தப் பெண்தான் என்று அரசன் கண்டறிந்ததுபோல, உண்மையான தாயாக விருந்து இந்தப் பிரச்சினையிலே முதலமைச்சர் அக்கறை செலுத்தி வருகிறார்.//
இந்தக் கருத்தில் முழு உடன்பாடு உண்டு. ஆனாலும் திட்டமிட்டே கலைஞரைக் குறைகூறி வரும் நம்மவர்களை என்ன செய்வது?
நம்மமிடையே ஒற்ருமை இல்லாததை புரிந்து கொண்டு அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் சீக்கியர்கள் ஒற்ருமையாக இருந்து வெற்றி பெறுகிறார்கள்.
நாம் எப்போது ஒன்று படுவோம்?
//ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!-கி. வீரமணி உருக்கம் //
//24 மணிநேரத்தில்...//
//கலைஞர்
கட்டளையிடட்டும்!//
இந்த தலைப்புகள் எல்லாம் வேதனையை மட்டும் ஏற்படுத்த வில்லை, வேடிக்கையாகவும் இருக்கிறது.
Post a Comment