Search This Blog

12.4.09

கி.வீரமணி அவர்கள் கூட்டத்தில் கலாட்டா செய்தது சரியா?


சேது சமுத்திரத்திட்டத்தை இரு தேர்தல்களில் வரவேற்றுவிட்டு
இப்பொழுது எதிர்க்கும் ஜெயலலிதா அணியைத்தோற்கடிப்பீர்!
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை




சேது சமுத்திரத்திட்டத்தை இரு தேர்தல்களில் ஆதரித்து தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்று நீதிமன்றம் சென்று தடுக்கிறார். இது ஒன்றுக்காகவே அ.தி.மு.க வைத் தோற்கடிக்க வேண்டாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு எம். ஆர். ராதா மன்றத்தில் - நாடாளுமன்றத் தேர் தலும், ஈழத்தமிழர் பிரச் சினையும் என்ற தலைப் பில் நடைபெற்ற சிறப் புக் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு :-

சிறுபான்மையினர் நலனுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கம், 15 அம்சத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு முழு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. (இத்தகு சட்டம் ஒன் றைக் கொண்டு வர சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சி தோல்வியடைந்த நிலையில் அமைச்சர் பதவியை உதறி விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் வீட்டு வன்முறையிலிருந்து தடுக்கும் சட்டம் -2005 நிறைவேற்றப்பட்டது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள்களுக்கு வேலை வாய்ப்பு - நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம்) நடைமுறைப் படுத்தப்பட்டது.

முதல்வர்கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்கான கடன் ரூபாய் ஏழாயிரம் கோடியை இங்கே தள்ளுபடி செய் தார். இதில் இந்தியா வுக்கே வழிகாட்டிய பெருமை முதல்வர் கலை ஞருக்கு உண்டு. இதைப் பார்த்த மத்திய அரசு 72 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா முழுக்க விவசா யிகளுக்காக அவர்கள் தள்ளுபடி செய்தார்கள்.

இன்றைக்கு பாரதீய ஜனதா கட்சிக்காரர்களுக்குக் கூட கலைஞர் அவர்களின் திட்டங் களைப் பார்த்து ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடப்படும் என்று அறிவித்திருக்கின் றார்கள். தி.மு.க வினுடைய தேர்தல் அறிக்கை இந்தி யாவையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது. கட்சி களுக்கு அப்பாற்பட்டு இதைப் பின்பற்றக் கூடிய அளவுக்கு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் உதவிகள் பல வகைகளிலும் பாராட்டத்தக்க அளவில் இருந்து வந்திருக்கின் றன.

யாரோ சிலர் கலவரம் விளைவிக்க வந் திருக்கிறார்கள். நம்முடைய தோழர்கள் அவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம், கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம், கடல்சார் பல்கலைக் கழகம், மத்திய பல்கலைக் கழகம், நெடுஞ் சாலைகள் வளர்ச்சி பிருமாண்டமான மேம்பாலங்கள், மகத்தான தகவல் தொடர்பு வசதி சாதனைகள் என்று அடுக் கடுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன.

2004-இல் நடை பெற்ற மக்களவைத் தேர் தலில் தமிழ்நாட்டில் மான மிகு. கலைஞர் அவர்கள் மதி நுட்பத்தால் உரு வாக்கப்பட்ட கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளடக்கிய 40 இடங் களிலும் பெற்ற வெற்றி தான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 ஆண்டுகாலம் உறுதியாக நிலைபெற்ற தற்கு முக்கிய அடிப்படையான காரண மாகும். 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி தமிழ் நாட்டு வளத்திட்டத் திற்கு மத்திய அரசிட மிருந்து நிதியாகப் பெற்றுள்ளது.

இதுவரை தமிழ் நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழல் கிடையாது தோழர்களே! நல்ல செய்திகள் வெளியே போய் சேர்ந்து விடக் கூடாது என்பதற்கு சிலருக்கு அக்கறையிருக்கிறது.
ஆகவே இந்தப் பிரச் சாரத்தைத் தடுக்க சிலரை அனுப்பியிருப்பார்கள் அவர்களுடைய அந்த எண்ணத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. யாராக இருந்தாலும் இந்தக் கருத்திலே மாறுபட்டால் அவர்கள் நாளைக்கு இந்த கருத்துகள் தவறு என்று சொல்லி கூட்டம் போட்டு பேசலாம். நாளைய மறுநாள் நாங்கள் வந்து பேசுவதற்குத் தயாராக இருப்போம். (கைதட்டல்). எனவே எங்களிடத்திலே இந்த சலசலப்பெல்லாம் காட்டி, இந்தக் கருத்துகளை நிறுத்தி விடமுடி யாது. அவர்களுக்கு என்ன ஆத்திரம்? எடுத்த எடுப்பிலே இவர்கள் எச்ச ரிக்கை செய்து விடுகின் றார்கள். நல்ல வெளிச் சத்தைக் காட்டிவிடுகின்றார்களே என்பது இன எதிரிகளுக்கு ஆத்திரம் நம்முடைய திட்டம் நடக்காமல்போய்விடுமே என்பதற்காக சிலருக்கு ஆத்திரம் இருக்கும். ஆத்திரம் அறிவுக்குக் கேடு ஆத்திரம் தான் அறிவுக்கு எதிரி. நான் பேசுவது இந்த அரங்கத்திற்காக மட்டுமல்ல. இந்த குறுந்தகடு உலகம் முழுவதும் செல்வதற்காக இருக் கிறது. தமிழ்நாடு முழுக்க என்னுடைய உரை ஒலிக்கும். உலக நாடுகள் முழுக்கச் செல்ல இருக்கிறது. புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு நான் சொல்லிக் கொண்டு வருகின்றேன். நடந்தவைகளை வரலாற்றைச் சொல்லுகின்ற நேரத்திலே சொல்லாதே என்றால் இவ்வளவு உண்மையும் அவர் களுக்கு வெளியே போய் விடக்கூடாது என்பதில் கவலை.

வெளிச்சம் தெரியக் கூடாது என்று சொன்னால் இருட்டை விரும்பக் கூடியவர்கள் யார்? அதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


எனவே இந்திய அளவில் நடந்த காலங்களில் பெற முடியாத அளவிற்கு திட்டங்களின் மொத்த செலவுத் தொகையான மூன்ற லட்சத்து எழுப தாயிரம் கோடி ரூபாய். தமிழ்நாடு 11 விழுக்காடு பங்கினைப் பெற்று உள்ளது.

இதுவரை தமிழ்நாடு பெறாத அளவிலே அதிக நிதியினைப் பெற்றுத் தமிழ்நாட்டில் 69 மத்திய அரசு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இதை எல்லாம் எங்களை மாதிரி இருக்கிறவர்கள் தான் எடுத்துச் சொல்வார்கள். மக்களுக்கு மறதி அதிகம். இன்றைக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற பெரிய குறைபாடே என்ன வென்றால் திட்டங்களை ஏராளம் செய்கிறார்கள். ஆனால் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடிய பிரச்சார கருவிகள் அவர் களிடத்திலே இல்லை. ஏடுகள் இந்த அரசுக்கு எதிராக இருக்கின்றன.

பிரச்சார ஊடகங்கள் இந்த அரசுக்கு எதிராக இருக்கின்றன.

எங்களுக்கு இருப்பது அரசியல் கண்ணோட்டமல்ல - சமுதாயக் கண்ணோட்டம் இனக் கண் ணோட்டத்தோடு பார்க்கக் கூடியவர்கள் நாங்கள்.

பிரதமர் கனவிலே மிதந்த -இன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருக்கின்றார்களே அந்த அம்மையார் ஆட்சியில் இருந்தபொழுது என்றைக்காவது மத்திய அரசோடு அங்குள்ள அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்குத்தேவையான நிதி கேட்டிருக்கிறாரா? எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதனுடைய விளைவு என்ன? தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி பல ஆண்டுகாலம் தள்ளிப் போனது.
இன்றைக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்திற் காக முதலமைச்சர் கேட்கிறார். மத்திய அமைச் சர்கள் கேட்கிறார்கள். உடனடியாக மத்திய அரசு தாராளமாகக் கொடுக்கிறது.
அந்த நிதியை கலைஞர் அவர்கள் நன்றாகப் பயன்படுத்துகின்றார்கள். அந்த அளவுக்கு நிலைமை இருக்கின்ற காரணத்தால் தான் தமிழ்நாடு இன்றைக்கு உருமாற்றம் பெற்றிருக்கிறது.

மேலும் எங்களுடைய தீர்மானத்தில் உள்ளதைச் சொல்லுகின்றேன்.

நடக்க இருக்கும் 15 ஆம் மக்களவைத் தேர் தலில் அதே தன்மையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைப்பதன் மூலம் மேலும் பிருமாண்டமான வளர்ச்சியை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் வாய்ப்பினை தமிழ்நாடு வேண்டுமாய் திராவிடர் கழகச் செயற் குழு கேட்டுக்கொள் கிறது.
ஒரு சிறு உதாரணத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம் 150 ஆண்டுகால தமிழர்களின் கனவுத் திட்டம். டாக்டர்.சர்.ஏ.ராமசாமி முதலியார் கமிட்டி ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்குப் பின்னால் பார்த்தால் நம்முடைய தலைவர் பெரியார், பெருந்தலைவர் காமராசர் எல்லோரும் மிகப் பெரிய அளவுக்கு வலி யுறுத்திய திட்டம். என். டி. ஏ.வில் கூட இந்தத் திட்டம் உருவாக்கப்பட் டது. அந்தத் திட்டத்திற்கு உருவம் கொடுத்து அவர்கள் ஒதுக்கிய தொகை 30 கோடி கூட இல்லை.

கலைஞர் அவர்கள் கப்பல்துறை போன்ற துறையைக் கேட்டுப் பெற்றார்கள். மிகச் சிறப்பான ஒருவரான டி.ஆர். பாலு அவர்களை கப்பல்துறை அமைச்சராக உருவாக்கி வைத்ததினுடைய விளைவாக 2450 கோடி ரூபாயை இன் றைய மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத் திற்காக ஒதுக்கியது.
அந்த சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் இன்றைக்குத் தொடங் கப்பெற்று முடிவடையக் கூடிய நிலையிலே இருக்கும் பொழுது ஜெயலலிதா இதற்கு முட்டுகட்டை போட்டுள்ளார். இதற்கு முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தல் அறிக்கையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்லிருக்கின்றார். நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், சட்ட மன்றத் தேர்தல் அறிக் கையிலும் சொல்லியிருக் கின்றார்.

ஆனால் அதே அம்மை யார் இன்றைக்குத் தலை கீழாக மாறி - சேது சமுத் திரக்கால்வாய்த் திட் டத்தை நிறைவேற்ற விடாமல் உச்ச நீதி மன்றத்தின் மூலம் முட்டுக் கட்டை போட்டிருக் கின்றார்.

இன்றைக்கு சேது சமுத்திரத்திட்டம் நிறை வேற்றப்பட்டு அது முடிவடையக் கூடிய நிலையிலே இன்னும் ஒரு 25 கி.மீ. தூரப் பணிதான் பாக்கியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையிலே ராமன் பாலத்தை இடிக்காதே என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.

ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று இருந்ததை ராமன் பாலம் என்று சொல்லி - இல்லாத ஒன்றை இடிக்காதே, இடிக்காதே என்று சொல்லி, பி.ஜே.பியினு டைய இந்துத்துவ மனப்பான்மையை இந்த அம் மையார் ஜெயலலிதா அவர்கள் அண்ணா பெயரிலே கட்சி வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஒருவர் இப்படி ஓர் சூழ்நிலையை உருவாக்கிச் செய்கின்றார்கள்.

உச்சநீதிமன்றத்திற்குச் சென்று இந்த அம்மையாருக்கு சுப்பிரமணிய சாமிகள் எல்லாம் தாளம் போடக்கூடியவர்களாக ஆன நிலையிலே அதற் காக அவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு சென்று தடுத்துக்கொண்டிக் கின்றார்கள்.

தீர்ப்புகள் வராத நிலையிலே இருக்கிறது. இன்னொரு கமிட்டி போடு என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கின்றார்கள்.

அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள். தமிழகத்திலே பாரதீய ஜனதா கட்சியினர் கூட சேதுசமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.
இப்பொழுது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாங்கள் வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை நடத்து வோம் என்று சொல்லி விட்டு ஆனால் அந்த வழித்தடத்தை மாற்றுவோம் என்று சொல்லி யிருக்கின்றார்கள்.

நண்பர்களே, இந்த மோசடியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆறாவது வழித்தடத் திலே ராமர்பாலம் என்று சொல்கின்றார்களே -இந்த வழித்தடத்தை தேர்வு செய்தது யார்? என்று சொன்னால் பா.ஜ.க ஆட்சி இருந்த பொழுதுதான் - வாஜ்பேய் ஆட்சி இருந்த பொழுது தான் தேர்வு செய்தது.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து என்று அதுவரை உள்ள வழித்தடங்களை விட்டு விட்டு, ஆறாவது வழித் தடம்தான் சுலபமானது எளிமையானது குறை வான செலவு கொண்டது சுற்றுச்சூழல் பாதிக்கா தது என்றெல்லாம் சொல் லக்கூடிய அளவிற்கு தீர்வாக அமைந்தது. அவர்களாவது கொஞ்சம் விட்டு, விட்டு செய்வோம் என்று சொல் கின்றார்கள். ஆனால் அ.தி.மு.க இரண்டு முறை தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத்திட்டம் ஏன் நிறைவேற்றப்பட வில்லை என்று வலியுறுத்தி விட்டு பிறகு அந்தத் திட்டம் வரவே கூடாது என்று சொல்லி இலங்கையின் குரலை ராஜ பக்சேவின் குரலை ஜெய லலிதா அவர்கள் ஒலிக்கிறார்கள் என்று சொன்னால் அந்த ஒன்றுக்காவது அ.தி.மு.க அணி யைப்படுதோல்வி அடைச் செய்ய வேண் டாமா? தோற்கடிக்கப் பட வேண்டாமா? தமிழ் நாட்டினுடைய நலன் பாதுகாக்கப்பட வேண்டாமா? கட்சிக் கண் ணோட்டம் வேண்டாம். தமிழ்நாட்டினுடைய நலன் தமிழ்நாட்டினுடைய வளம் சிறப்பாக அமையவேண்டாமா?

அதாவது, மாற்றுவழி என்று சொல்வதற்குக் கூட அந்த அம்மையார் தயாராக இல்லை. சேது சமுத்திர திட்டமே வரவே கூடாது என்று சொல்லக்கூடிய அள விலே அவர்கள் இருக் கிறார்கள் என்று சொன்னால் தமிழர்களைப் பற்றி இவர்கள் போட்ட கணக்கு என்ன?

தமிழர்கள் மண்ணாங் கட்டிகள். நாம் நேற்று எதைச் சொன்னோம். இன்று எதைச் சொன்னோம் என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

எனவேதான் அதைத் தெளிவாக எடுத்துக் காட்டிச் சுட்டிக் காட்டு கின்றோம்.


அதேபோல நாடாளு மன்றத்தேர்தல் அறிக் கையை திராவிட முன் னேற்றக் கழகம் வெளி யிட்டிருக்கின்றது. மத்திய அரசைப் பயன்படுத்தி என்னென்ன சாதனைகளை எல்லாம் நாங்கள் செய்திருக் கிறோம். என்பதை மிகத் தெளிவாக ஒவ்வொரு இடத்திலும் அருமையாக புள்ளிவிவரத்தோடு வெளியிட்டிருக்கின்றார்கள்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். ஜெயலலிதா அம்மையார் திடீரென்று உண்ணா விரதம் நாடகம் நடத் தினார். அதன் மூலம் உலகத்தமிழர்களுடைய கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விடலாம் என்று நினைக் கிறார்கள். ஏதோ மற்றவர்கள் எல்லாம் ஏமாந்து விடுவதைப் போலவும் ஏதோ கலைஞரோ திராவிட முன்னேற்றக் கழகமோ, திராவிடர் கழகமோ அதைப்பற்றிக் கவலைப்படாத நிலை யில் இருப்பதைப்போல இன்றைக்கு ஒரு படத்தை வரையலாம் என்று நினைக்கின்றார்கள்.

தயவு செய்து அப்படி நினைக்கிறவர்களுக்குச் சொல்கின்றோம். மற்றவர்கள் ஈழப்பிரச்சினை யைப் பற்றி சிந்திக்காத முன்பே சிந்தித்த ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அதுதான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆகும். (பலத்த கைதட்டல்)

1939 லே இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் இன்னல்கள் பட்டதற்காக அவர்களு டைய துன்பம் போக்கப் படவேண்டும் என்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

இதே மேடையிலே பல கூட்டங்களிலே சொல்லியிருக்கின்றோம்.

பிறகு 1956 இலே சிதம்பரத்திலே அண்ணா அவர்களுடைய தலைமையிலே கலைஞர் அவர்களுடைய முன்னிலையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தீர்மானம் நிறைவேற்றிருக்கின்றார்கள்.
எனவே எங்களுக்கு இப்படிப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அப்பொழுதெல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இப்பொழுது திடீரென்று கவலைப் படுகிறார்கள்.

இலங்கையிலேபோர் நிறுத்தம் நடைபெற வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக முதல் முறையாக அக்கறை எடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையை மற்றவர்களிடத்திலே கொண்டு வந்த முயற்சி திராவிடர் கழகத்தையே சாரும்.

இதே பெரியார் திடலிலிருந்து தான் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி ரயில் மறியல் போராடடம் நடத்தி அதற்காக கைது செய் யப்பட்டோம்.

23.09.2008 இல் இந்த பிரச்சினைக்காக நாங்கள் கைது செய்யப்பட் டோம். அதுவரை எந்தக் கட்சியும் கவலைப்படாத ஒரு நிலை இருந்தது. ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாயிரம் பேர் நாங்கள் கைது செய்யப்பட் டோம்.

எங்களோடு விடு தலைச் சிறுத்தைகளைச் சார்ந்த சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் வட எங்களை வாழ்த்து வதற்கு வந்திருந்தவர் அவரும் எங்களோடு கைதானார்.

அதற்குப் பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி உண்ணாவிரதம் ஆரம்பித்தது.

இன்றைக்கு அ.தி.மு. கவோடு கூட்டணி சேர்ந்திருக்கின்றார்களே அந்த நண்பர்கள் கூட, அவர்கள் சார்பில் வருவார்கள்.
ஆள் அனுப்புவார் கள் (அதிமுக சார்பில்) ஆதரவு காட்டுவார்கள் என்றெல்லாம் எதிர் பார்த்து கடைசி வரையிலே காத்திருந்து, காத்திருந்து பார்த்து ஏமாந்தார்கள்.


காக்க வைப்பது அவர்களுடைய தர்மம். காத் திருப்பது இவர்களுடைய சகிப்புத்தன்மை.
அன்றைக்கும் காத் திருந்தார்கள். இன்றைக்கும் இப்பொழுதும் காத் திருக்கின்றார்கள். ஆகவே காத்திரக்கட்டும். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. அது அவர்களுடைய சிந்தனைக் அவர் களுடைய சுயமரியாதை யைப் பொறுத்தது ஆனால் நண்பர்களே அன்றைக்கு என்ன சொன்னார்கள்?

------------------தொடரும் ....."விடுதலை" 12-4-2009

0 comments: