
வைகோவுக்கு வக்காலத்து வாங்குபவர் ஜெயலலிதாவா?
ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அறப்போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ அவர்கள் பேசிய உரை பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
வன்முறையைத் தூண்டக் கூடிய பேச்சு என்றும், இறையாண்மைக்கு விரோதமான உரை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படி பேசிய சிலர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமது கூட்டணியில் இருக்கக் கூடியவர் வைகோ என்கிற கரிசனத்தில் (என்ன கரிசனமோ!) சகோதரர் வைகோ இன்று நேற்றா இப்படி பேசுகின்றார்? ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பொருத்த வரை அவர் தொடர்ந்து இப்படித்தான் பேசி வருகிறார். அவர் ஒன்றும் புதிதாக இப்படிப் பேசவில்லையே! என்று கருத்துக் கூறியிருக்கிறார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவால் பேசப்பட்ட இந்த சொற்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்ததாகக் கருத முடியாது. அது உதட்டிலிருந்துதான் சிதறியிருக்கவேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து இப்படித்தான் பேசிக்கொண்டிருக் கிறார் என்பது உண்மையே! அப்படிப் பேசுவதை ஜெயலலிதா நியாயப்படுத்துவதாக இருந்தால் அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், வைகோ அவர்களின் அத்தகைய பேச்சு சட்ட விரோதம் என்று பொடாவின்கீழ் கைது செய்து ஓராண்டுக்குமேல் சிறையில் தள்ளியது ஏன்?
நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டவர் யார்? சாட்சாத் இதே ஜெயலலிதா அம்மையார்தானே. அந்த நேரத்தில் கொலைகாரி என்ற சொல்லைப் பயன்படுத் தியவர்தானே - ஒழித்துக்கட்டுவோம் என்று சூளுரைத் தவர்தானே தோழர் வைகோ?
உண்மையைச் சொல்லப்போனால் அந்த வாய்ப் பூட்டை உடைத்தெறிந்தவர் - இன்றைய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளைப்பற்றி பேசுவதே குற்றம் என்று கற்பித்தவர்தானே ஜெயலலிதா? ஆதரவு தெரிவித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம்தானே நெற்றியடி கொடுத்தது!
இந்த நிலையில் உள்ள ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு வக்காலத்து வாங்குவது எந்த அடிப்படை யில்? மனந்திருந்திய நிலையிலா? ஈழத்தமிழர்கள்மீது உண்மையான அக்கறை கொண்ட தன்மையிலா?
உண்மையைச் சொல்லப்போனால் கலைஞர் ஆட்சி இருக்கிற காரணத்தால்தான் ஈழத்தமிழர் படும் அவதிபற்றி பொதுக்கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது - போராட்டம் நடத்த முடிகிறது - பேட்டி கொடுக்க முடிகிறது. ஏடுகளிலும் வெளியிட முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புண்டா?
ஜெயலலிதா பக்கத்தில் நின்றுகொண்டு கலைஞர்மீது கல்லெடுத்து எறிபவர்கள் அந்தரங்கச் சுத்தியுடன் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டாமா?
ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்காக மனிதாபி மானத்தோடு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவி தைக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர்தானே ஜெயலலிதா!
ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.
மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதும், நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபி மானச் செயல்கள். அதைக்கூட ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காட்டத் தயாராக இல்லாத ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பேசுவதை விட ஏமாற்று வேலை, மோசடி வேலை வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?கேவலம் அரசியலுக்காக மக்களின் வாக்குகளைப் பறிப்பதற்காக மோடி மஸ்தான் வேலையில் ஈடுபடுவது பரிதாபகரமானது. அதுவும் அன்றாடம் படுகொலை செய் யப்படும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை அரசியல் குளிர் காய்வதற்குப் பயன்படுத்த எத்தனிப்பது மன்னிக்கப்பட முடியாத ஒன்றே!
----------------நன்றி;-'விடுதலை' 16-4-2009
4 comments:
சூப்பர்!
http://idlyvadai.blogspot.com/2009/04/blog-post_16.html
மறக்காமல் இதையும் படிங்க!
தங்களின் வருகைக்கு நன்றி
//தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளைப்பற்றி பேசுவதே குற்றம் என்று கற்பித்தவர்தானே ஜெயலலிதா?//
கற்றுக் கொடுத்தது ஜெயலலிதா
கற்றுக் கொண்டது கலைஞரோ?
அதனால் தான் அம்மையாரின் வழியில் இன்று வைகோ மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறாரோ?
ஈழப் பிரச்சனையில் கலைஞர் செய்தது கயமைத்தனம்
அவரது அடிவருடிகள் செய்து வருவது கள்ளத்தனம்
Blogger ஸ்ரீசரண் said.
//வைகோ மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறாரோ?//
வைகோ ராஜிவ் காந்தி படுகொலையை ஞாயப்படுத்தி பேசியிருப்பார்! காங்கிரஸ் புகார் கொடுத்திருக்கும், கைது நடந்திருக்கும். கூட்டணி காரங்க இதை கூடவா கேக்கமாட்டாங்க! இதெல்லாம் ஒரு சாதாரண மேட்டர்! அவங்களை மாதிரி தூக்கி போட்டு தொந்தரவு கொடுத்தாரா?
கலைஞர் இருக்கிறார் என்றாவே கொஞ்சம் அதிகமாவே பேசுவாங்க! காண்டுல கைது பண்றதுல்லாம் கலைஞர்கிட்டே கிடையாது.
பழசை கிண்டி கிளறிக்கொண்டிருந்தால், அனைவருக்கும் தான் கோபம் வரும்.
அவங்க கட்சித்தலைவரை இங்கு வந்து விடுதலைப்புலிகள் போட்டுத்தள்ளியதை நியாயப்படுத்தி பேசுவதை, கட்சிக்காரன் எப்படி ஏத்துப்பான்? இது நல்ல போங்கா இருக்குதே!
போட்டுத்தள்ளியதை ஞாயப்படுத்த கூட்டம் இருக்கும் போது அநியாயம், அக்கிரமம் என அவங்க கட்சித்தலைவருக்காக வாதாடுவதற்கு கூடவா கட்சிக்கரான் இருக்கமாட்டான்.
இதிலேயிருந்து... இந்த "ஈழம்" என்ற கோஷமெல்லாம் இலங்கை தமிழ் மக்கள் சார்பில அங்கேயிருக்கிற தமிழர் கட்சிகள் கிட்டேயிருந்து, மக்கள் ஆதரவுடன் இங்கே வருவதில்லை.
முற்றிலும் ஒரு இயக்கத்துக்கான, குறைந்தபட்ச ஆதரவாகத்தான் வந்து கொண்டேயிருக்கிறது. காரணம் அங்கே (இலங்கையில்....)ஒட்டுமொத்த, கட்சிகள் ரீதியாகவும் ஆதரவில்லை.
படுகொலையை நியாயப்படுத்தாம அந்த இயக்கத்தை பற்றி பேசிவிட்டுப்போயேன்!.
Blogger ஸ்ரீசரண் said.
//ஈழப் பிரச்சனையில் கலைஞர் செய்தது கயமைத்தனம்
அவரது அடிவருடிகள் செய்து வருவது கள்ளத்தனம்
April 17, 2009 12:38 AM//
என்ன பண்ணணும்? பட்டியலிடுமே பார்ப்போம்? உன்னோட மக்கள் பற்று, மனிதநேய பற்று எப்படி? இருக்கு பார்க்கலாம்...
அது தொலை நோக்கா? இல்லை தொல்லை நோக்கா? என்று தெரிஞ்சிக்கலாம்...
அப்படியே இது யாரோட? அடியை வருடறதுக்கு பம்முது என்பதையும் தெரிஞ்சுக்கலாமே!
ஈழம் பத்தி கவலைப்படறியே இங்கே 1 லட்சம் பேர் அகதிகளாக இருக்காங்களே! அவங்களை பத்தி என்னைக்காவது கவலைப்பட்டியா? அவங்க இலங்கை மக்கள் தானே...அவங்க எக்கேடு? கெட்டாலும் பரவாயில்லையா?
தமிழ் நாட்டுக்காரனாயிருந்தாலும் கவலையில்லை தமிழ் நாட்டுல வந்து தங்கினவன் எவனாயிருந்தாலும் கவலையில்லை.
இதானே! உங்க ஈழப்பற்று!
Post a Comment