Search This Blog

13.4.09

நரம்பு மண்டலம் சீராக இயங்க காது குத்துதல் அவசியமா?

கர்ணபூஷணம் (காதுகுத்தல்)
காதுமடல்களில் ஓட்டை போட்டு அதில் நகைகளை மாட்டித் தொங்கவிடும் பழக்கம் இந்துமத ஆண், பெண்களிடம் இருக்கிறது. குழந்தைகளாக இருக்கும் போதே இதைச் செய்துவிடுகிறார்கள். காது குத்தல் என்று கூறுகிறார்கள். காது குத்தல் எனும் கெடல் குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. பொய் பேசுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல், போன்றவற்றைக் குறிப்பிட இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்றவற்றைக் குறிக்க நாமம் போடுவது எனக் கூறுகிறார்களே? அதைப் போல சாராயம் குடிப்பதை பட்டை அடிப்பது எனக் கூறுகிறார்களே, அதைப்போல இந்துமதச் சடங்குப் பெயர்கள் கிரிமினல் குற்றங்களுக்கும் குறிப்பிடப்படுகின்றன. அதைப் பற்றி யெல்லாம் இந்து மதக் காரர்களுக்குக் கவலை இல்லை.

அப்படிப்பட்ட ஒன்றான காது குத்துதல் பற்றிய விளம்பர அழைப்பிதழை அச்சிடும் நபர்கள் முன்பெல்லாம் கர்ணபூசண முகூர்த்தப் பத்திரிகை என்று அச்சிட்டார்கள் இப்போது பலரும் காதணி விழா அழைப்பு என்று தமிழில் போடுகிறார்களே தவிர இது தமிழர்க்கானதா என் ஆராய்வதே இல்லை.

இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்கு அடையாளமாகக் காதில் ஒட்டை கணக்கில் கொள்ளப்படுகிறது. மெடிகல் ஜுரிஸ்பு ருடன்ஸ் இதே மாதிரி சொல்கிறது. எனவே இந்து மத அடையாளம் இது.

இதை ஒத்துக் கொள்வதற்கான நேர்மை அற்றவர்கள் புதிய விளக்கம் தர முயல்கிறார்கள் உடம்பின் எல்லா நரம்புகளும் காது மடலில் இணைகின்றன; எனவே அங்கே ஓட்டைபோட்டு கடுக்கண் அணிந்தால், தொங்கட்டானைத் தொங்க விட்டால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்; ஆகவே காது குத்த வேண்டும். என்கிறார்கள். இது உண்மையா? மருத்துவர்கள் - உடற்கூறு படித்த மருத்துவர்கள் - இதனை ஒத்துக் கொள்கிறார்களா?

நம் பிரச்சாரத்தின் பலன் என்னவென்றால், மூடப்பழக்கவழங்களுக்கான காரணங்களை அறிவியலோடு இணைப்பது மாதிரியான சப்பைக்கட்டு கட்டுவதற்கு அவர்கள் முனைகிறார்கள் என்பதுதானே தவிர உண்மைகிஞ்சித்தும் கிடையாது. இம்மாதிரிச் சொன்போது பெரியார் கேட்டார் - காதில் ஓட்டை போட்டால் நரம்பு மண்டலம் சரியாக இயங்கும் என்பது உன்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் ஓட்டை போட்டே உன்னை உருவாக்கியிருப்பானே அப்படிச் செய்யாததிலிருந்தே அது தேவையற்றது, மடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ளலாமே! என்று கேட்டார் அறிவுஆசான் தந்தை பெரியார்.

ஒன்பது துளைகள் என்று பாட்டே எழுதினார் கண்ணதாசன் காதில்ஓட்டை அவசியம் என்றால் ஒன்பதோடு ஒன்று சேர்த்துப் பத்தாகப் படைத்திருப்பானே, பகவான்! காது குத்தல் பிறருக்குச் செய்தாலும் சரி,தம் குழந்தைகளுக்குச் செய்தாலும் சரி - குற்றம்தான்,தேவை அற்றதுதான், தவிர்க்கப்படவேண்டியது தான். தவிர்ப்பார்களா?

இப்பேர்ப்பட்ட இந்து மதச் சடங்கை இப்போதெல்லாம், மருத்துவர்களிடம் சென்று கத்தியின்றி,இரத்தமின்றி, துப்பாக்கியால் சுட்டு, ஓட்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். எப்படிச் செய்தாலும் தேவைற்ற சடங்குதான்.

-------------------செங்கோ அவர்கள் 11-4-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

அ செந்தில் குமார் said...

அப்படியே சுன்னத் செய்வது பற்றியும் எழுதுங்கள் ஐயா!

அ செந்தில் குமார் said...

அப்படியே சுன்னத் செய்வது பற்றியும் எழுதுங்கள் ஐயா!