Search This Blog

24.4.09

உலகப் புத்தக நாளும் - நமது சிந்தனையும், செயலும்!






அய்.நா., மன்றத்தில் யுனெஸ்கோ என்ற பிரிவு இருக்கிறது. இது 1946-இல் உருவாக்கப்பட்டது. அதன் முடிவுதான் அனைத்துலக நூல் ஆண்டு கொண்டாடு வது (International Book Year) என்பதாகும்.

1971 அக்டோபர் 22இல் பிரசெல்சில் எழுத்தாளர்கள், நூலகர்கள், பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் ஒன்றுகூடி ஒரு திட்டத்தை வகுத்தனர்.

1. ஒவ்வொருவருக்கும் படிக்க உரிமை உண்டு.
2. கல்விக்கு நூல்கள் கட்டாயம் தேவை.
3. நல்ல எழுத்தாளன் உரு வாகும் நிலையைச் சமூகம் உருவாக்க வேண்டும்.
4. தேசிய வளர்ச்சிக்கு நல்ல பதிப்புத் தொழில் தேவை.
5. பதிப்பு வளர்ச்சிக்கு நூலாக்க வசதிகள் வேண்டும்.
6. படிப்பாரையும், பதிப்பா ளரையும் இணைக்க வேண்டும்.
7. அழகை ரசிக்க, கூர் அறிவை அனுபவிக்க, தகவ லையும், அறிவையும் தரும் நூலகங்கள் நாட்டின் கருவூலங் களாகும்.
8. நூல்களைக் காக்கவும், கருத்துகளை வளர்க்கவும் ஆவணத் தொகுப்பு (னுடிஉர அநவேயவடி) உதவவேண்டும்.
9. உலக ஒருமைப்பாட்டை வளர்க்க நாடுகள் இடையே நூல்கள் சரளமாகப் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.
10. உலக மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள - உறவுகொள்ள - வளர - சிறக்க - நூல்கள் பெரும் பணியாற்றி வருகின்றன.

ஏப்ரல் 23-ஆம் நாளை ஏன் தேர்வு செய்தார்கள் என் பதற்கும் காரணம் உண்டு.

உலகின் சிறந்த எழுத் தாளர்களான ஷேக்ஸ்பியர், வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், ரூபர்ட் புரூக் போன்ற எழுத் தாளர்கள் ஏப்ரல் 23-ஆம் நாளில்தான் பிறந்தார்களாம். இந்த வரலாற்றுச் சிறப்போடு, வரலாற்றுக் குறிப்பு நாளை ஏப்ரல் 23-ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த நாளில் தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு அமைப்புகளும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துகின்றன.
நான் ஏற்கனவே சேலம் இளைஞரணி கலந்துரையா டல் கூட்டத்தில் அறிவித்தபடி ஏப்ரல் 23-ஆம் நாள் துவங்கி அடுத்த மே 23ந்தேதி வரை (31 நாள்களுக்கு) தமிழகத் தின் அனைத்துக் மாவட்டத் தலைநகரங்களில் புத்தக விற்பனையை இயக்கமாக நடத்திட உள்ளோம்.

தமிழ்நாட்டு மண்ணுக் கேற்ற சித்தாந்தத்தைக் கொடுத் தவர் தந்தை பெரியார். அதன் பரிணாம வளர்ச்சியாக உல கெங்கும் பெரியாரியல் இன்று பேசப்படுகிறது. ஏன் வாழ்வியல் கோட்பாடாகவே வாழ்க்கை நெறியாகவே மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர் களின் கருத்துகளை ஒரு காலகட்டத்தில் ஏற்காதவர்கள், எதிர்த்தவர்கள், வெறுத்த வர்கள் இப்பொழுதெல்லாம் நெருங்கி வந்துவிட்ட கால கட்டம் இது.

தந்தை பெரியாரின் தத்து வங்களை பொதுக்கூட்டங் கள் வாயிலாகப் பரப்புவது என்பது ஒரு வகை. அதை விடக் கூடுதலாகப் பதிவு செய்வது நூல்கள்தான். நினைத்த நேரத்தில் எடுத்து மீண்டும், மீண்டும் படித்து அய்ய இருளைப் போக்கிக் கொள்ளலாமே! இதற்கு நூல் தானே சிறந்த ஆசானாக இருக்க முடியும்!
பெரியார் புத்தக விற்பனைப் பேரியியக்க குழு

1. தோழர் ஒரத்தநாடு குணசேகரன், அமைப்பாளர், துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
2. தோழர் துரை சந்திர சேகரன் துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், உள்ளிட்ட மாணவர் அணி, இளைஞர் அணி, தோழர் களைக் கொண்ட இந்த பேரியியக்க குழு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நடத்திட முடிவு செய்துள்ளது.

28 புத்தகங்கள் அடங் கிய நூல்களின் விலை ரூபாய் 1005/- ஸ உலகப் புத்தகக நாள் சலுகை விலையில் ரூபாய் 650/-

இந்தச் சலுகை விலை 23.4.2009 முதல் 23.5.2009 வரை மட்டுமே!

அதாவது 30 நாட் களுக்கு மட்டுமே கிடைக்கும்!

வாங்கிப் பயன் பெறுவீர்!

------------ கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம "விடுதலை"23-4-2009

2 comments:

Unknown said...

உலகப் புத்த்க நாளின் காரணத்தை அறிந்து கொள்ள உதவியது இந்த கட்டுரை. நல்ல தகவல்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா