
கேள்வி: ஈழப்பிரச்சினையை தமிழக அரசியலோடு இணைத்துப்பேசுவது சரியான அணுகுமுறைதானா?
------- சுந்தர் கண்ணன், கபிஸ்தலம்
பதில்: தவறு, தவறு! பொதுத்தேர்தல் நம்முடைய நாட்டில் எப்படிப்பட்ட அரசு - மதவாதம் அல்லாத முற்போக்கு அரசு அமையவேண்டும் என்பதையும், சமூக நீதியைக் காப்பாற்றவும், பொடா போன்ற கொடுமையான மனித உரிமைப் பறிப்பினையும் கொணராத அரசு அமைவதற்கான தேர்தல்.
முன்னுரிமை இவைகளுக்கே தரவேண்டும். ஈழப்பிரச்சினையை அரசியலாக்கினால் அது ஈழத்தமிழர்களுக்கேகூட கேடு செய்வதாகிவிடக் கூடும் என்பது தொலைநோக்குடன் சிந்திப் பவர்களுக்குப் புரியும்!
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரே களத்தில் நின்று அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய பொதுப் பிரச்சினை இது!
---------------"உண்மை" ஏப்ரல் 16-30_2009 இதழில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில்
3 comments:
ஈழ தமிழர்களை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை போன திமுகவிற்கும் மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர் . இனி என்ன சொல்லியும் பயன் இல்லை முற்போக்கு ஆட்சி ஆன காரணத்தால் தான் தமிழர்களை கொலை செய்கிறார்களோ .
பெரியார் வலி வந்த அய்யா வீரமணி சுயமரியாதையின்றி நிற்கிறாரே அவரால் எப்படி முடிகிறதோ . இது பெரியாரின் பெயருக்கு இழுக்கு
இதற்கு கொளத்தூர் மணீ அண்ணன் மிக அழகாக சொன்னார்.
இந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எப்பொதும் பிரச்சாரம் செய்ய மாட்டோம். எது வர கூடாது என்று தான் பிரச்சாரம் செய்வோம்.
“ஆகையால் காங்கிரஸ் வர கூடாது”.
ஒட்டு கிடைக்கும் என்று இருந்தால் இணைப்பது சரி, அதுவே இந்த முறை தி.மு.க. கூட்டணிக்கு ( அது சரி, யார் இருக்காங்க கூட்டணில? :-))) பெரிய இழப்பை ஏற்படித்துக் கொடுக்கும் என்றால் தவறு. அது சேரி, தேர்தலுக்கு தேர்தல் வீரமணிக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டால் அவர் என்ன வேணும்னாலும் பேசுவார். இனிமேல் அப்படியே "தமிழ் இனத்தின் ஒரே தலைவன்" என்று கருணாநிதிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு காலத்தை ஒட்டிவிட வேண்டியது தான். பாவம் பெரியார் பக்தர்கள்- இன்னும் தி.க வில் இருக்க வேண்டுமா என்ற நிலைமை.
Post a Comment