
போரை கட்டாயம் நிறுத்துங்கள்
இலங்கைக்கு இந்தியா கூறியது!
- ப.சிதம்பரம் பேட்டி
காரைக்குடியில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், போரை நிறுத்துமாறு சிறீலங்கா அரசையும் விடுதலைப்புலிகளையும் இந்திய அரசு வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சருடனும் தேசியப் பாது காப்பு ஆலோசகருடனும் தாம் பேச்சு வார்த்தை நடத்தி இலங்கை அரசு போரை முடித்துக்கொள்ளுமாறு கூறுவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர் எனும் தகவலையும் தெரிவித் துள்ளார்.
இதுபற்றிய தகவல் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற வகையில் இல்லாமல் கட்டாயமாகச் செய்யப் படவேண்டும் என்ற உறுதியான முறையில் தெரிவிக்கப்பட்டது எனவும் கூறினார்.

இதே கருத்து விடுதலைப்புலிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது என் றும் அவர்கள் அதனை ஏற்று நடப்பார்கள் என் றும் நம்பிக்கை தெரிவித்தார்
இணக்கமான நடவ டிக்கை இரு தரப்புக்கும் நன்மை தரக்கூடியதாக அமையும் என்றார். அத்துடன் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கும் நல்லது என்றார்.
இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் நம்பிக்கை கொள்ளுமாறு தமிழக மக்களை ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். 1983 ஆம் ஆண்டில் இருந்தே, தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே வற்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.மக. கூறியது பற்றிக் கேட்டபோது, நான்கரை ஆண்டுக் காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரு கட்சிக்கு அப்படிப் பேசுவதற்கு தகுதி கிடையாது என்றும் மய்ய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
--------------நன்றி:-"விடுதலை" 13-4-2009
1 comments:
புலிகள் போர் நிறுத்தத்திற்கு உடன் படுவதாகப் பலமுறை கூறி விட்டார்கள்.
போரை நிறுத்த சிங்கள அரசை வலியுறுத்த வேண்டும்.
அறிவிப்பு என்று கூறுவது ஏமாற்றே!
அறிவிப்புச் செய்த்தாகக் கூட, மன்மோகனோ பிரணாப்போ கூறவே இல்லை!
சிதம்பரம் தமிழர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறார்!
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...!
Post a Comment