Search This Blog

24.4.09

இந்திய அரசே ஒரு அமைதிப்படையை அனுப்பி போர் நிறுத்தம் செய்யக் கூடாது?


இலங்கைக்கு இந்திய அரசு அமைதிப்படையை அனுப்பக்கூடாதா?
குமுதம் வார இதழுக்கு முதல்வர் கலைஞர் பேட்டி


குமுதம்: அன்றாட உணவு என்ன?

கலைஞர்: ஒரு நடுத் தரக் குடும்பத்தில் சராசரி மனிதன் அருந்தும் உணவு தான் என்னுடைய உணவு. எதிலும் அளவு மீறுவதில்லை; உணவும் அப்படித்தான்.

குமுதம்: எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறீர்கள்? எத்தனை மணிக்கு காலையில் எழுந்திருப் பீர்கள்? அன்றாடப் பணி என்ன?

கலைஞர்: இரவு பத்து மணிக்குப்பிறகு உறங்கச் செல்கிறேன். காலையில் நாலரை மணிக்கெல்லாம் விழித்துக் கொள்கிறேன். எழுந்தவுடன் காலை பத்திரிகைகளைப் படிப்பது, பத்திரிகைகளில் வரும் செய் திகளைப்பற்றி சம்பந்தப் பட்ட அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் விசாரித்தறிவது, அன்றாட அரசியல் பிரச்சினைகள் பற்றி எழுதுவது. வீட்டில் காண வருவோரைச் சந்திப்பது, தலை மைச் செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளு டன் விவாதிப்பது, கோப்புகளைப் பார்ப்பது, அறிவாலயத்திற்குச் செல்வது, கட்சிக்காரர்களைச் சந்திப்பது, முரசொலி அலுவலகத்திற்குச் செல்வது என்று தினமும் தொடர்ந்து பணி செய்து வருகிறேன்.

குமுதம்: கட்சி மாறும் போதோ, அணி மாறும் போதோ தங்கள் பதவியை ராஜினாமா செய்து விடுகிறார்கள். (உதாரணம்) ராஜகண்ணப்பன், கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன். உங்களால் ராஜ்ய சபா உறுப்பினர் ஆன அன்புமணி ஏன் அந்த எம்.பி. பதவியை ராஜினாமா பண்ண வில்லை? ராஜினாமா பண்ண நீங்கள் வலியுறுத்துவீர்களா?

கலைஞர்: அது அவரவர்களும், அவரவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது.

குமுதம்: எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால் அவரிடம் என்ன கேட் பீர்கள்?

கலைஞர்: நாற்பதாண்டு கால நண்பரே, நலம்தானே? என்று கேட்பேன்.

குமுதம்: அய்ந்து வருடம் மத்திய சுகாதாரத்துறை கேபினட் அமைச்சராக இருந்த தன் மகனை பொதுத் தேர்தலில் நிறுத்த ராமதாஸ் ஏன் பயப்படுகிறார்?

கலைஞர்: தவறான முகவரிக்கு உங்கள் தபாலை அனுப்பி இருக்கிறீர்கள்!

குமுதம்: எம்.கே. நாரா யணனும் சிவசங்கரமேனனும் தமிழர்களுக்கு எதிரானவர்கள். இவர்களால் தான் இந்திய அரசு இலங்கை மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்களே?

கலைஞர் : பொத்தாம் பொதுவில் அப்படிச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைப் பிரச்சினை குறித்து கொள்கை முடிவுகள் மேற்கொள்வது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. குறிப்பாக பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடமும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் வழிகாட்டும் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களிடமும் தான் உள்ளது. மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை ஒட்டித் தான் திரு.எம்.கே. நாராயணனும், திரு.சிவசங்கர மேனனும் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள முடியும்.


குமுதம்: பாதுகாப்புப் பகுதியில் இலங்கை ராணுவம் அப்பிராணித் தமிழர்களை இப்படிக் கொன்று குவிக்கிறது. ஏன் மத்திய அரசே ஒரு அமைதிப்படையை அனுப்பி போர் நிறுத்தம் செய்யக் கூடாது?

கலைஞர்: செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் நடமாட்டத்தையும், நட வடிக்கைகளையும்கூட ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் அடக்கி வைத்திருப்பவர் இலங்கை அதிபர் ராஜபக்சே. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் குரலுக்கே மதிப்பளித்திட அறியாதவர் அதிபர் ராஜபக்சே. அமைதிப்படை போன்றவற்றையெல்லாம் அவரது அனுமதியின்றி அங்கே அனுப்பி வைக்க முடியுமா? அதை அவர் எப்படி எதிர்கொள்வார், ஏற்றுக்கொள்வார் என் பதைப் பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல், அமைதிப் படையை அனுப்பி போர் நிறுத்தம் செய்வது குறித்து என்ன முடி வெடுக்க முடியும்? இதையெல்லாம்விட அமைதிப் படை சில நேரங்களில் அமளிப்படையாக ஆகி விடும் நிகழ்வும் உண்டல்லவா?


குமுதம்: சிறுபான்மையினருக்கு நீங்கள் இட ஒதுக்கீடு செய்ம், தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி நிற்கிறதே?

கலைஞர்: சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசின் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து சட்டம் நிறைவேற்றியிருப்பது இஸ்லாமிய சமுதாயத் தினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவு செய்து அவர்கள் சமூக நிலையிலும் கல்வி ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்பதற்காகத்தானே தவிர; மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமா, போட்டியிடாதா என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து அல்ல!

குமுதம்: இந்தத் தேர்தலில் விஜயகாந்த் கட்சி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஓட்டு வாங்கும் என்பதுபோல் தெரிகிறது. அது உங்களுக்கு சாதகமா?

கலைஞர்: அது பெரியவர் ஒருவரால் நடத்தப்படுகிற பெரியகட்சி; அதற்கு இந்தச் சிறியவன் பதில் சொல்ல விரும்ப வில்லை.

குமுதம்: பத்திரிகையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஏன் சீட் வழங்க வில்லை?

கலைஞர்: திருமதி. தமிழச்சி தங்க பாண்டியன் சாலை விபத்து ஒன்றில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கழகம் நடத்திய நேர்காணலுக்கும் அவரால் வர இயலவில்லை. அவரும் வாய்ப் புக் கேட்டு வலியுறுத்தவில்லை. இன்னும் மூன்று மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும்.

குமுதம்: நாடாளுமன்றத்தில் உங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும்?

கலைஞர்: தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றும்.

குமுதம்: ம.தி.மு.க. கட்சியிலுள்ள முக்கிய பிரமுகரை உங்கள் பக்கம் இழுத்து அந்தக் கட்சியை காலி பண்ணப் பார்ப்பதாக வைகோ உங்கள்மீது குற்றம் சாட்டியிருக்கிறாரே?

கலைஞர்: பொய் நெல்லைக் குத்தியே; பொங்க நினைத்தவன், கை நெல்லை விட்டானம்மா! என்ற கவிஞர் மாயவநாதனின் பாடலை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.


குமுதம்: தி.மு.க. அரசின் மிகப் பெரிய சாதனை எது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

கலைஞர்: எத்தனையோ சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியும். எனினும், கார்டுதாரர்கள் அனைவருக்கும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருவதை கழக அரசின் மிகப்பெரிய சாதனையாக குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் பசிப்பிணி போக்கிய மிகப் பெரிய மருந்தாகும் இது!

குமுதம்: ஸ்டாலின் - அழகிரி இருவரிடமும் பிடிக்காத விஷயம் எது என்றால் என்ன சொல்வீர்கள்?

கலைஞர்: அழகிரி - எல்லாவற்றையுமே வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்; ஸ்டாலின் - எதையும் இதயத்துக்குள் பூட்டி வைப்பார்!


குமுதம்: வாலி- வைரமுத்து ஒப்பிடுக?

கலைஞர்: வாலியின் சொற்களில் கற்கண்டின் சுவை இருக்கும்; வைரமுத்துவின் சொற்களில் மகிழம்பூவின் மணம் இருக்கும்.

குமுதம்: இவ்வளவு எழுத உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?

கலைஞர்: எழுதி எழுதி இமயம் போல் குவித்திட வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள்ளே மேலோங்கி இருப்பதால்தான்!

குமுதம்: நீங்கள் வசனம் எழுத விரும்பும் படைப்பு எது?

கலைஞர்: நான் எழுதி வெளிவந்த உரைநடை ஓவியங்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியுமே!


குமுதம்: தமிழக மக்களுக்கு இன்னமும் நம்மால் செய்ய முடியவில்லையே என்று நீங்கள் ஏங்கும் விஷயம் எது?

கலைஞர்: நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளையும், அனைத்து ஏழைகளும் துய்த்திட வேண்டும்; கிராமங்களில் உள்ள அனைவருக்கும் நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் கிடைத்திட வேண்டும் என்பதுதான்!

----------நன்றி: குமுதம், 29.4.2009

3 comments:

SIDDHAR SIVA said...

தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்

தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல

தந்தைபெரியார் அவர்களை 64 வது சொல்லடிநாயனார் என்று சொல்வது மிகையாகாது

தமிழர்களின் இந்து மதத்தை மீட்டெடுத்த பெருமை ஐயா தந்தைபெரியாரையே சாரும்

மதப்பற்று இழந்து மண்ணாகக்கிடந்த தமிழனுக்கு கடவுள்மறுப்பு என்ற நீர் தெளித்து தன்மதநம்பிக்கையில் வேரூன்ற செய்தவர் தந்தை பெரியார்

தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி

அவரை வைத்தும் தி,மு,க மற்றும் தி,க போன்ற இயக்கங்கள் பணம் சம்பாரித்துக்கொண்டிருக்கிறது,

தி,க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,

தி,க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,

SIDDHAR SIVA said...

தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்

தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல

தந்தைபெரியார் அவர்களை 64 வது சொல்லடிநாயனார் என்று சொல்வது மிகையாகாது

தமிழர்களின் இந்து மதத்தை மீட்டெடுத்த பெருமை ஐயா தந்தைபெரியாரையே சாரும்

மதப்பற்று இழந்து மண்ணாகக்கிடந்த தமிழனுக்கு கடவுள்மறுப்பு என்ற நீர் தெளித்து தன்மதநம்பிக்கையில் வேரூன்ற செய்தவர் தந்தை பெரியார்

தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி

அவரை வைத்தும் தி,மு,க மற்றும் தி,க போன்ற இயக்கங்கள் பணம் சம்பாரித்துக்கொண்டிருக்கிறது,

தி.க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,

தி.க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,

நம்பி said...

//siva said...

தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்//

தமிழை வளர்க்கமாட்டோம்...பார்ப்பன சமஸ்கிருதத்தை மட்டும் தான் வளர்ப்போம் என்று சொல்லிக்கொண்டால் சொத்து சேர்த்துக்கொள்ளலாமா...?

அப்படித்தான் ஊத்தை காஞ்சிமடம் சொத்து சேர்த்துக் கொண்டுள்ளன!...சரி தானே!

தமிழ் படிக்கிறவன் எல்லாம் பரதேசியாத்தான் இருக்கணும் போலிருக்கிறது. தமிழ் ஏழைகள் மொழி சரியா!

(அதனால தான் பார்ப்பன ஊத்தைகள் நீச்ச மொழி என்று கூறியது. மத்தவங்க அதை ஏழைகள் மொழியாக்கிட்டாங்க)

தமிழ்ல அர்ச்சனை பண்ணா தட்டில காசு விழாதே!...

தமிழ்ல திருமணம் பண்ணா விளங்காதே!...சீக்கிரமா விவாகரத்து ஆயிடும்!....சரியா!...

ஊத்தை ஜம்ஜ்கிருதத்தில மணமக்களை கேவலப்படுத்தி பண்ணா எல்லா நல்லா விளங்கும்.

அதனால் தான் வெளிநாட்டிலே போய் உக்கார்ந்து கொண்டு இங்கிருக்கிறவங்களுக்கு தமிழ் கத்து கொடுக்குதுங்க சில மேதாவிங்க....அதுங்க தமிழ் பெயரை வெச்சுக்காதுங்க ஊர்ல கிறவன் பெயரையெல்லாம் மாத்துங்க...இது தானே இப்ப பேஷன்.



Blogger siva said.

//தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி//

தந்தை பெரியார் மட்டுமில்லை அனைவருமே ஆன்மீக வாதிகள் தான்...

இதன்படி பார்த்ததினால் கூறியிருக்கலாம்...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தானே!

தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை...

மனிதனை இழிவு படுத்தாமல், சகோதரத்துடன் இருப்பவர்கள் அனைவரும், சாதி, மதம் பார்க்காதவர்கள் அனைவரும் ஆன்மீக வாதிகள் தான்.

இப்படியில்லாதவர்கள் அனைவரும் நாத்திக வாதிகள் என்று எடுத்துக்கொண்டாலும் சரிதான்.

நாங்கள் சொல்லிக்கொள்வது பகுத்தறிவுவாதிகள்.


Blogger siva said.
//தி,க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,//

சாதியை ஒழிக்க இதுவரை நாம் என்ன? செய்திருக்கிறோம் என்று எண்ணினால், இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும்.

நாம் சாதியில் தான் இருக்கிறோமா? இல்லை இதிலிருந்து வெளியே வந்து விட்டோமா? என்று கேட்டால் கூட போதும்.

ஏன் சாதியில் இருந்து வெளியே வரமுடியவில்லை? எது தடுக்கிறது? என்பதை உணர்ந்தால் போதும். இந்த கட்சிகளைப் பத்தி தெரிந்து விடும்.

பெரியார் வேறு திக வேறு அல்ல இரண்டுமே ஒன்று தான். அவர் உருவாக்கியது தான் திக.


Blogger siva said.
//தி,க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,

February 4, 2011 9:51 PM//

திராவிடர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் திராவிடர்களுக்கான சொத்தை பாதுகாக்கத்தான் வேண்டும். இன்னும் அதற்கான நிதியை திரட்டித்தான் ஆகவேண்டும்.


பார்ப்பனர்களுக்கான சொத்தை திராவிடர்களிடமிருந்து பெற்று காஞ்சி மடம் காப்பாற்றவில்லை..அதைவிடவா? இது தவறான செயல்.