Search This Blog
23.7.09
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார் நாட்டு மக்களுக்குச் செய்த தொண்டு என்ன?
காஞ்சி மடம்
சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவுவது என்று சொல்வதுண்டு. பார்ப்பனர்களும், அவர்களின் தொங்கு சதைகளும் மிகத் துல்லியமாக அதனைச் செய்வார்கள்.
இதழினை சிவப்பு விளக்காக்கிக் கொண்ட குமுதம் என்ற அரைப் பார்ப்பன ஏடு ஜாதிச் சாக்கடையில் நீச்சல் அடித்துக்கொண்டு கிடக்கிறது.
அய்யர் ஜாதியைப்பற்றி சற்சூத்திரர் ஒருவர் எழுதுகிறார்.
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சங்கர மடத்தில் 68 ஆவது பீடாதிபதியாக இருந்த காஞ்சிப் பெரியவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை இம்மண்ணிற்கு அய்யர் சமூகம் தந்தது தமிழகம் செய்த பெருந்தவமே என்று எழுதியிருக்கிறது.
ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட மடம் நான்கே நான்குதான் என்றும், ஒன்று வடக்கேயுள்ள பத்ரிநாத், இரண்டு தெற்கேயுள்ள சிருங்கேரி; மூன்று கிழக்கே பூரி ஜெகந்நாதம்; மேற்கே துவாரகை என்பது வரலாறாகும். இதுகுறித்து அவாளே எழுதிய நூல்களும் உண்டு.
1972 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது.
Sankara, who established four maths or seats of religion at four ends of India. The sringeri math on the bringers hills in the south the sharda math on the Dwarka in the west, The Badrinath, at Badrinath in the north, The Govardhan math at puri in the east -றமே தீர்ப்புக் கூறியுள்ளது.
காஞ்சி மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிறுவினார் என்று காட்டவேண்டும் என்பதற்காக, காஞ்சி மடத்தைச் சேர்ந்த குல்லூகப்பட்டர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகளையெல்லாம் தக்ஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா? என்ற நூலிலே கிழி கிழியென்று அவாளே கிழித்துத் தள்ளிவிட்டனர்.
உண்மை இவ்வாறு இருக்க குமுதத்தின் எழுத்தாளர் ஒருவர், உண்மைக்கு மாறாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடம் காஞ்சிமடம் என்று எழுதுகிறார் என்றால், இவர்களைப்பற்றி பொதுமக்கள்தான் எடை போட்டுப் பார்க்கவேண்டும்.
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைத் தமிழ் மண்ணுக்குத் தந்தது அய்யர் ஜாதி என்று பெருமை பொங்க நீட்டி எழுதுகின்றாரே அவர் எத்தகையவர் அவர் நாட்டு மக்களுக்குச் செய்த தொண்டு என்ன என்பதை விளக்குவாரா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன ஒருவர்தான் பெருமைக்குரியவரா? இவர்களைத் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் பிடித்து உள்ளே போடவேண்டாமா?
----------- மயிலாடன் அவர்கள் 23-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment