Search This Blog

13.7.09

பகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ?




நகைச்சுவை


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கவாஸ்கர் இவருக்கு அறிமுகம் தேவையில்லை வயது 60 அய் எட்டியுள்ளார்.

அதற்காக சாயிபாபாவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். எனக்கு எல்லாமே சாயிபாபாதான் அவரை நினைத்த மாத்திரத்திலேயே அணுக்கள் எல்லாம் அப்படியே சிலிர்த்து விடுமாம்! சொல்லியிருக்கிறார்.

இதுபோல பல துறைகளிலும் விளம்பரம் பெற்றவர்களைக் கொண்டு தம்மை விளம்-பரப்படுத்திக் கொள்வதில் சாயிபாபா பலே கெட்டிக்காரர்.

பிரபல டாக்டர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள் என்று இதற்கென ஒரு பட்டியலேகூட உண்டு. இந்த யுக்தி இப்பொழுதெல்லாம் சவுத்துப் போய்விட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாத நிலையில்தான் சாயிபாபா இருக்கிறார். திரைச் சீலையைத் தாங்கி இருந்த சட்டம் விழுந்து பாபாவின் கைமுறிந்து போனது. (பகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ?)

சரி, கவாஸ்கருக்கு வருவோம்.. சாயிபாபா பக்தரான இவர் பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாடச் செல்லுவதற்கு முன் சாயிபாபாவைத் தரிசித்தார். அவரும் ஒரு மோதிரத்தை கவாஸ்கருத்துக்கு கொடுத்து விளையாடும்போது இதனை அணிந்து கொண்டு ஆடினால் சாதனைகள் புரியலாம் என்று கூறி ஆசீர்வதித்துக் கொடுத்தார். அவ்வாறே அந்த மோதிரத்தை அணிவிந்து விளையாடவும் சென்றார்.

அந்த ஆட்டத்தில் அவர் எடுத்த ஓட்டம் எத்தனை தெரியுமா? பூஜ்யம்! பூஜ்யம்!!

அந்த ஆட்டத்தில் சாயிபாபாவைத் தரிசிக்க செல்லாத ஒரே ஆட்டக்காரர் கபில்தேவ்தான். அதில் வேடிக்கை என்ன தெரியுமா? அந்த ஆட்டத்தில் அதிகபட்ச ஓட்டம் எடுத்தவர் சாயிபாபாவை தரிசிக்கச் செல்லாத கபில்தேவ்தான்!

அதேபோல இலங்கை இந்திய ஆட்டத்தின்-போது (ஹைதராபாத் _ 2005 நவம்பர்) டெண்டுல்கர், விமானம் மூலம் ஆந்திரா சென்று சாயிபாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் களத்தில் குதித்தார். எடுத்த ஓட்டம் எத்தனை தெரியுமா! இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.

ஹி... ஹி.. இவ்வளவுக்குப் பிறகும் சாயிபாபா _பகவான் சாயிபாபா என்பது எத்தகை நகைச்சுவைத் துணுக்கு!

------------ மயிலாடன் அவர்கள் 12-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: