Search This Blog
14.7.09
ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவேகானந்தர்
விவேகானந்தர் விஜயம் சர்மா எழுதுகிறார்
பார்ப்பானுக்கு பரம்பரைத் தகுதியா?
கல்வியறிவு பரம்பரையாய் வரவேண்டும் என்றும் திடீரென்று ஒருவனுக்கு அதைப் புகட்டினால் அவன் விர்த்தியடையான் என்றும் அவர்கள் (பார்ப்பனர்கள்)வாதம் செய்கிறார்கள். இஃது உண்மையல்ல என்பதற்கு என் கண்ணில் கண்ட நிதர்சனம் கூறுகிறேன். கேளுங்கள்! அமெரிக்காவில் நடந்த சர்வ மத சபைக்கு வந்திருந்த பலருள் ஒரு நீக்ரோ ஜாதி இளைஞனும் வந்திருந்தான்.அவன் நாகரிகமற்ற ஆப்ரிக்கா கண்டத்திற் பிறந்த நீக்ரோவன்.அவன் அந்தச் சபையில் அழகிய பிரசங்கமொன்று செய்தான். அது முதல் அவனிடத்தில் நான் குதூகலம் கொண்டு அடிக்கடி அவனிடம் பேசினேன். நீங்கள் சொல்லும் பரம்பரை வாசனை வாதத்தைப் பற்றி நான் என்ன நினைப்பது? ஓ பிராமணர்களே! பிராமணர்களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் பறையனுக்கிருப்பதைவிட அதிக ஊற்றம் இருக்குமாயின், பிராமணன் படிப்புக்காக கொஞ்சகூடப் பணம் செலவிட வேண்டாம். அதையெல்லாம் பறையனுக்கே செலவிடுங்கள்! -- பக்கம் 292_294
நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வெறிபிடித்த
நான் மலையாளச் சீமையிற் பார்த்ததைவிட அற்ப காரிய மிருக்குமோ? உயர்ந்த ஜாதியான் செல்லும் தெருவிற் பறையன் போதல் கூடாதாம். ஆனால் அப்பறையன் தன் பெயரை மாற்றி ஆங்கிலேய அல்லது துருக்கப் பெயர் பூண்டு கொள்வானாகில், அவ்வீதியிற் பேகலாமாம். இதனால் மலையாளத்தாரை வெறி-பிடித்தவர்களென்று கொள்ளாமல் வேறெவ்வாறு அவர்களை மதிக்கக் கூடும்? இப்படிப் பட்ட துராசாரங்களை அநுசரிக்கும் அவர்களை மற்றைய இந்து தேசத்தில் ஞானமுள்ள வகுப்பினரெல்லாரும் இகழக்கடவர். தனக்கு உரிமையான குழந்தை-யாய் இருக்கும்போது அதைப் பட்டினி போடுவதும். அதுவே வேறொருவனுக்குச் சொந்தமானால் அதற்கு வெண்ணெயூட்டி வளர்ப்பதும் போலிருக்கிறது -
பக்கம் 432
ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்
சங்கராச்சாரியார் முதலிய பெரியோர்கள் ஜாதிகளை யேற்படுத்தினவர்கள் அவர்கள் செய்தனவெல்லாம் சொல்வேனாகில் நீங்கள் சிலர் என்மீது கோபம் கொள்வீர்கள். ஆனாலும், என்னுடைய யாத்திரைகளிலும், என் அனுபவத்திலும் ஏற்பட்டவரையில் அவர்கள் செய்த காரியங்களின் முடிவு வெகு விரோதமாகவே தோற்றுகின்றது. அவர்கள் கும்பல் கும்பலாய்ப் பெலுச்சிஸ்தானம் தேசத்தாரைப் பிடித்து ஒரே நிமிஷத்தில் ஷத்திரியராக்கிவிடுவதும், வலையர் கூட்டத்தை ஒரே ஷணத்திற் பிராமணராக்கிவிடுவதுமாகிய இவையெல்லாம் செய்தார்கள் - பக்கம் 434
உலகம் ஒப்பும் ஒரு தத்துவ சாத்திரமுண்டா?
உலக முழுமைக்கும் ஸமரஸமாயுள்ள ஒரே தத்துவ சாத்திரம் ஏதேனுமிருக்கின்றதா? இது காறும் இல்லை. ஒவ்வொரு மதமும் தன்கொள்கைகளையே எடுத்துக் காட்டி அவற்றையே உண்மையென வற்புறுத்துகின்றது. அஃது இவ்வளவு வற்புறுத்துவதுடன் மாத்திரம் நில்லாது, அஃது உண்மையெனக்கூறும் உண்மைகளை நம்பாதவர்கள் பயங்கரமான ஓரிடத்திற்குப் போகவேண்டுமென்றும் பயமுறுத்துகின்றது. இஃது அவர்களது இயற்கையான துஷ்டத் தன்மையால் உண்டாவது என்று நினைக்கக்கூடாது. மற்றென்னையெனின், அது மனிதர்களது மூளையைச் சம்பந்தித்த மதாவேசம் என்னும் ஒரு வித வியாதி விசேஷமாம்.
---------- ஸ்ரீ விவேகாநந்த விஜயம் எனும் நூல் மஹேச குமார சர்மா எழுதியது. 1922 ஆம் ஆண்டில் 4 ஆவது பதிப்பாக மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை அச்சிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment