Search This Blog
24.7.09
உலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்-செயின்ட் லூசியா
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தனது கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் என்று பொய்யான புகார்களை நரசிம்மராவ் ஆட்சிக்கால காங்கிரசும் கூறியது நினைவிருக்கலாம். அவர்கள் புளுகிய வங்கி அமைந்துள்ள தீவு செயின்ட் கிட்ஸ் ஆகும். (ஆதாரமற்ற அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டது.)
கரிபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்றாக மத்திய அமெரிக்காவில உள்ள இத்தீவு முன்னர் செயின்ட் கிறிஸ்டோபர் எனக் கூறப்பட்டது. அத்தீவில் 1623ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டினர் குடியேறினர். அதையொட்டிய நெவிஸ் தீவில் அந்நாட்டினரே 1628இல் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து கிட்ஸ் தீவுக்கு பிரான்சு நாட்டினர் 1627இல் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து கிட்ஸ் தீவுக்கு பிரான்சு நாட்டினர் 1627இல் வந்தனர். உடனே அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு கிளம்பியது. போர் நடந்தது. 1782இல் தீவுகள் பிரிட்டிஷாருக்கு என்றாகி விட்டன.
1958இல் மேற்கு இந்தியக் கூட்டமைப்பு (நாடு) அமைப்பில் இவ்விரு தீவுகளும் இடம் பெற்று 1962இல் அக்கூட்டமைப்பு கலைக்கப்படும் வரை நீடித்தன. 1983இல் தீவுகள் விடுதலை பெற்றன.
வெறும் 261 சதுர கி.மீ. பரப்புள்ள தீவுகள். செயின்ட் கிட்ஸ் 168 சதுர கி.மீ. நெவில் 93 சதுர கி.மீ., இவற்றின் மக்கள் தொகை 40 ஆயிரத்திற்கும் குறைவு. மக்கள் அனைவரும் மூன்று முக்கிய கிறித்துவப் பிரிவுகளான புரொடஸ்டன்ட், ரோமன் கத்தோலிக், ஆங்கிலிகன் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இங்கிலீஷ் மொழி பேசுபவர்கள்.98 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். 19-.9.-1983இல் விடுதலை நாளைக் கொண்டாடும் தீவுகள் குடிக்கோனாட்சி முறையை ஏற்றுக் கொண்டு பிரிட்டன் அரசி, அவரின் கவர்னர் ஜெனரல், பிரதம அமைச்சர் என்று ஆட்சித் தலைமையைக் கொண்டு இயங்குகிறது. மக்களில் 4 விழுக்காட்டினர்க்கு வேலை கிட்டவில்லை. 50 கி.மீ. தூரத்திற்கு இருப்புப் பாதையும் 320 கி.மீ. தூரத்திற்குச் சாலைகளும் உண்டு.
செயின்ட் லூசியா
1871ஆம் ஆண்டில் கரிபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் லூசியாவில் பிரிட்டிஷார் குடியேறித் தம் ஆட்சியில் வைத்துக் கொண்டனர். விண்ட்வார்டு தீவுகளில் இருந்து கொண்டு இத்தீவை பிரிட்டிஷார் ஆண்டு வந்தனர்.
1979இல் செயின்ட் லூசியாவுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்காவில் கரிபியன் கடலுக்கும் வட அட்லான்டிக் பெருங்கடலுக்கும் இடையில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்கு வடக்கே அமைந்துள்ள இத்தீவின் பரப்பு 616 சதுர கி.மீ. மக்கள் தொகை ஒரு லட்சத்து 69 ஆயிரம். மக்கள் கிறித்துவ மதத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். 67 விழுக்காடு ரோமன் கத்தோலிக்கர். ஏனைய 7 பிரிவுகளில் மீதியுள்ளோரின் நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்கள் 5 விழுக்காடு உள்ளனர்.
இங்கிலீஷ் ஆட்சி மொழி. மக்கள் பிரெஞ்ச் மொழியும் பேசுகின்றனர். 90 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர். 22-.12.-1979 நாட்டின் விடுதலை நாள். குடிக்கோனாட்சி முறை. பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் ஆட்சித் தலைவர். கவர்னர் ஜெனரல் இருக்கிறார். பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவர். துணைப் பிரதமரும் உண்டு.
20 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர். வாழை, கோக்கோ, பழம், காய்கறி, தேங்காய் எண்ணெய் முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது. இருப்புப் பாதை வசதியே கிடையாது
------------------"விடுதலை" 23-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment