Search This Blog

21.7.09

பெரியார்-அண்ணா-கலைஞர்-வீரமணி -4


கலைஞர் ஆட்சியின் சாதனைகளை மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்
இனி இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது


நாளும் கலைஞர் அவர்கள் மக்களுக்காகத் தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார். கலைஞர் அவர்களது ஆட்சியை இனி யாராலும் அசைக்க முடியாது என்று கூறி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி பாராட்டினார்.

குற்றாலத்திற்கு அருகி-லுள்ள செங்கோட்டை-யில் 19-6-2009 அன்று கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

படிக்கட்டு ஜாதி முறை

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலேயே இன்னும் அதைவிட தாழ்ந்தவர் அருந்ததியர் என்று ஒரு பிரிவை வைத்துக் கொண்டு, சொந்த சகோதரர்கள் மத்தியிலேயே படிக்கட்டு ஜாதி முறையை உண்டாக்கினார்கள்.

அவர்களுக்கு உள்ஒதுக்கீடு இருந்தால் ஒழிய அவர்கள் முன்னேற முடியாது என்று கருதியவுடனே துணிச்சலாக டெல்லிக்கு எழுதி, அவர்களுடைய அனுமதியைப் பெறாமல் கூட நான் செய்யப்போகிறேன் என்று சொல்ல அனுமதி வாங்கி இப்பொழுது அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று வைத்திருக்கின்றார்கள்.

எனவே, இன்றைக்கு காத்தான் மகன், முத்தன் முனியனெல்லாம் உரிமை பெற்றிருக்கின்றான். கலைஞர் அவர்கள் செய்திருக்கின்ற சாதனை சாதாரணமான தல்ல. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்பட்டு இப்பொழுது 150 வருடங்களுக்கு வந்தாகிவிட்டது. நான் சொல்லுவது 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம். கலைஞர் முதலமைச்சராக இருக்கின்றார். தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.ஏ.எஸ் அதிகாரிகள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அந்த வரவேற்பை பெற்றுக்கொண்டவர்கள், அய்யா உங்களால் தான் நாங்கள் பதவிக்கு வந்தோம். நாங்கள் எல்லாம் நன்றி சொல்லுவதற்காக வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே தந்தை பெரியார் கேட்டார், நீங்கள் எனக்கு நன்றி சொல்லுவது இருக்கட்டும்.

கலைஞர் ஆட்சி சரியான தருணம்

நீங்கள் நன்றி சொல்லும்பொழுது என்னுடைய சிந்தனை எங்கே போனது என்றால் சென்னை உயர் நீதிமன்றம் இருக்கிறதே, 110 வருடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவில்லையே ஏன்?

இதைவிட சமூக அநீதி வேறு உண்டா என்று நான் நினைத்தேன். அதற்கு உடனடியாக ஏற்பாடு பண்ண வேண்டும்.

இப்பொழுது தான் சரியான தருணம். கலைஞர் ஆட்சியில் இருக்கின்றார். கலைஞர் சமூக நீதியில் நம்பிக்கையுள்ளவர். எனவே விடுதலையிலே இதைப்பற்றி எழுதுங்கள். கலைஞர் உடனடியாக அதை செய்வார் என்று அய்யா அவர்கள் சொன்னவுடனே விடுதலையில் தலையங்கம் எழுதினோம். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் சட்ட அமைச்சர் மாதவனை அழைத்தார். உள்துறை அமைச்சரிடம் பேசச் சொன்னார். அப்பொழுது சவான் உள்துறை அமைச்சராக இருந்தார். தலைமை நீதிபதியாக வீராசாமி இருந்தார். தேடிப் பார்க்கிறார்கள். யாராவது தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதி ஜில்லா ஜட்ஜாக இருக்கிறாரா? அவர்களை அதிலிருந்து உயர்த்துவதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்தார்கள். அதிலே வரிசைப்படி பார்த்தீர்களேயானால் 12ஆவது இடத்திலே ஒருவர் இருந்தார். அவருக்குப் பெயர் வரதராஜன். தென்னார்க்காடு மாவட்டம் கடலூரிலே இருந்தார். தகுதி இருக்கிறதல்லவா? காலம் காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டதினாலே அவரை நீங்கள் முன்னால் கொண்டு வந்து இடம் கொடுங்கள் என்று சொல்லி முதல் முறையாக சென்னை உயர்நீதி மன்றத்திலே அவரை நீதிபதியாக உட்கார வைத்த பெருமை கலைஞர் ஆட்சியை சாரும்.

வரதராஜன் அவர்கள்தான் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதி.

ஓ மைலார்டு

இதைக் கேட்கும் பொழுது, இது என்ன சாதாரணம் தானே என்று நினைப்பீர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது தெரியாது. இந்தத் தொழிலில்தான் ரிடையர்மென்ட்டே கிடையாது. ஆனால் வயதான பார்ப்பனர்கள் முதற்கொண்டு நிறைய பேர் வழக்கறிஞர்களாக இருப்பார்கள். இவர்கள் என்ன சொல்லி வாதாடுவார்கள்?

ஓ மை லார்டு என்று சொல்லித்தான் வாதாடுவார்கள். கடவுளுக்கு சமமான நீதிபதியே என்று சொல்லித் தான் வாதாடுவார்கள். கடவுளுக்குச் சமமாக நினைப்பார்கள்.

உச்சந் தலையிலிருந்து பிறந்திருக்கின்ற சாஸ்திரியும் சர்மாவும், உயர் ஜாதிக்கார வழக்கறிஞர்கள் நீதிபதி வரதராஜன் முன்பு வாதாட வருகையில் ஓ என் பறையனே என்று யாராவது சொல்லுவாரா? மனதிற்குள் இவரைப் பார்த்தவுடன் அவருக்கு ஆயிரம் வேதனை வரும். ஆயிரம் எரிச்சல் வரும். ஆனால் அதே நேரத்திலே ஓ மை லார்டு என்று சொல்லித்தான் ஒரு ஒத்திகையை வாங்க முடியும். நீதிபதி கிரான்டட் என்று சொன்னால்தான் அவர் வெளியே போவார். ஓ மை லார்டு என்று இந்தப் பார்ப்பன வழக்கறிஞர் அழைக்கும் பொழுது யார் ஞாபத்திற்கு வருவார் கலைஞர் தான் ஞாபகத்திற்கு வருவார்.

இந்தப் பாவி கருணாநிதி அல்லவா? நம்மை இப்படி சொல்ல வைத்துவிட்டார். நாம் எப்படியிருந்தோம் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு சமுதாய மாற்றம் இருக்கிறதே அந்தச் சமுதாய மாற்றம் சாதாரண மாற்றமல்ல.

அடையாளம் கண்டு

காலம் காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அடிமைத் தளையை மாற்றி மிகப்பெரிய ஒரு சமுதாய மாற்றத்தை கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே அடையாளம் கண்டு, ஒவ்வொருவரையும் வைத்ததனுடைய விளைவாகத் தான் இன்றைக்கு அனைவர்க்கும், அனைத்தும் கிடைக்கக் கூடிய அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

அவர்கள் பெண்களாக இருந்தாலும், சமுதாயத்திலே அடித்தளத்திலே இருந்தவர்களானாலும் எல்லோரும் வந்திருக்கிறார்கள்.

கலைஞர் அவர்களாலே 2450 கோடி ரூபாய் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். இப்பொழுது நிறைவேறக் கூடிய சூழ்நிலையிலே இருக்கிறது. சேதுசமுத்திர திட்டம் என்பது நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கண்ட கனவு. நம்முடைய தலைவர்கள் எல்லாம் கண்ட கனவு. அந்தத் திட்டத்தை ராமனைக் காட்டிக் கெடுக்கப் பார்த்தார்கள். உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கப் பார்த்தார்கள்.

அதற்குப் பதில் சொல்லிக்கொண்டு பார்த்துக் கொண்டு வருகின்றார். சேது சமுத்திர திட்டம் இன்னும் 25 விழுக்காடு தான் முடிக்க வேண்டியிருக்கிறது.

சேது சமுத்தித்திட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும்

ஆகவே, எந்தக் கோணத்திலே பார்த்தாலும் கலைஞர் ஆட்சி சரித்திர சாதனையை உருவாக்கிய ஆட்சி. அவருக்கு 86 வயது. மறுபிறவியிலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த 86 வயதிலே அவருக்கு இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து இவ்வளவும் வந்த பிற்பாடு இதையும் தாங்கிக்கொண்டு அந்த வலி, வேதனை இவைகளைத் தாங்கிக் கொண்டு, தினமும் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார் என்று சொன்னால் தினமும் மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், இப்படிப் பட்ட ஓர் அரிய தலைவர் கிடைப்பாரா? என்பதை கட்சிகளை மறந்துவிட்டு, ஜாதிகளை மறந்துவிட்டு, மதங்களைத் துறந்துவிட்டு, மனித நேயத்தோடு, எண்ணிப் பாருங்கள். அப்புறம் அவருடைய பெருமைகள் என்பது என்ன என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.

சமுதாயப் புரட்சித் தலைவர்

ஆகவே, ஒரு சமுதாயப் புரட்சித் தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி வீரராக எதிர்நீச்சல் அடித்து சமுதாயத்திற்காக சமுதாய மேம்பாட்டிற்காக வாழ்ந்து கொண்டு வருகின்றார். ஒரு பக்கத்திலே இலக்கிய ஆராய்ச்சி, மற்றொரு பக்கத்திலே நிருவாகம் இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செயல்படுகிறார் என்று சொன்னால், அந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியது தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல நம் அனைவருடைய கடமையாகும்.

எனவே, அவர்களுக்கு விழா எடுக்கிறோம் என்று சொன்னால் வெறும் பெருமைகளைச் சொல்லிவிட்டுப் போவதற்காக மட்டுமல்ல. அந்த ஆட்சி நீடிக்க வேண்டும். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும். இது அவருக்காக அல்ல. நமக்காக, நம்முடைய சந்ததியினருக்காக, நம்முடைய வருங்கால நல்வாழ்விற்காக என்பதை ஒவ்வொருவரும் நினைத்து அதற்குரிய முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள். ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் வந்தால் கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது. அதை மக்கள் மிக ஆழமாக உணர்ந்திருக்கின்றார்கள்.

காரணம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அவருடைய பலம் என்பது சாதனைகளின் மூலமாகவும், சிறப்புகள் மூலமாகவும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இவ்வளவு அருமையான வாய்ப்பை எங்களுக்குத் தந்த உங்களுக்கு நன்றி கூறி, கலைஞர் தமிழ்ச் சங்கம் நல்ல பணிகளை இன்றைக்கு செய்திருப்பதைப் போவே பொதுப் பணிகளை செய்து இந்த இயக்கக் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியிலே விதைத்து தலைமுறை இடைவெளியில்லாமல் இருப்பது பாராட்டுகள் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

----------------" விடுதலை" 21-7-2009

4 comments:

கருத்து: said...

innumae tholar ivargalai nambugireergal?iyyo!iyyo!

கருத்து: said...

naan solvathu (karuna)nithi,veera?mani.

தமிழ் ஓவியா said...

"உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” வால்டயர்.

நன்றி நெருப்பு

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
கீழ்த்தரமான அர்சியல்வாதி மஞ்ச துண்டுக்கு விளக்கு பிடிக்கும் மாமா வேலை செய்து பிழைக்கும் கேவலமானவன் சூரமணி.அந்த முண்ட்ம் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து குரைத்துவரும் தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்கள் எவ்வளவு கேவல்மான இழிபிறவிகள் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.க்ருப்பு சட்டை நாய்களின் ஜாதி புத்தி போகுமா என்ன்?

பாலா

அது சரி.உங்களோட சூரமணி பாசறையில் பிரியாணிக்காக குரைத்து வரும் சக நாய் தமிழனை எங்கே கொஞ்ச நாளா காணோம்.அந்த கொளத்தூர் பாசறை பெட்டை நாய் பாரிஸ் யோனியம்மாவின் பின்புறத்தை மோப்பம் பிடித்துக் கொண்டே எதிரி கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஒடிப் போய் விட்டதா என்ன?இருக்கும் இருக்கும், தமிழன் நாய் தானே.எட்டப்பன் புத்தி இருக்கத்தானே செய்யும்.