Search This Blog
19.7.09
உலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார்
போர்த்துகல்
ஸ்பெயின் நாட்டிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போர்த்துகல் நாடு 1143இல் சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு அந்நாடு தன் எல்லைகளைப் பெருக்குவதில் மிகுந்த ஈடுபாடு காட்டி உலகின் பல பகுதிகளிலும் தன் சாம்ராஜ்யத்தைப் பரப்பியது. 1488இல் இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்ட பத்ரலோமியு டயஸ் என்பவர் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையைக் கண்டுபிடித்தார். ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் கோடி முனைக்கு
நன்னம்பிக்கை முனை எனப் பெயர் கொடுத்தார்.
1498இல் இந்நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா இந்தியாவை வந்தடைந்தார். 16 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், பிரேசில், இந்தோ சீனா, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, மலேயா ஆகிய நாடுகள் போர்த்துகல் நாட்டின் பகுதிகளாயின.
1581இல் ஸ்பெயின் நாடு போர்த்துகல் மீது படையெடுத்து கைப்பற்றியதைத் தொடர்ந்து 60 ஆண்டுகள் தன் பிடிக்குள் வைத்திருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் போர்த்துகலின் வணிகமும் தொழிலும் முற்றிலுமாக நசித்துப்போனது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த குடியேற்ற நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாயின. அந்தக் காலனி நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக அய்ரோப்பிய நாடுகள் கைப்பற்றிக் கொண்டன. போர்த்துகலிலிருந்து ஸ்பெயின் வெளியேறும்போது, போர்த்துகல் நாட்டின் பகுதிகளாக பிரேசில், அங்கோலா, மொசாம்பிக் ஆகியவை மட்டுமே எஞ்சியிருந்தன.
1908இல் போர்த்துகல் மன்னரான கார்லோசும் அவரது வாரிசு இளவரசரும் லிஸ்பனில் கொல்லப் பட்டனர். அவருக்கு அடுத்த வாரிசான மானுவல் பட்டத்திற்கு வந்தார். அவரும் புரட்சியின் விளைவாகப் பதவி பறிக்கப்பட்டார். 1910இல் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. 1911இல் மதமும் அரசியலும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன.
1974இல் இடதுசாரிக் கொள்கை கொண்ட ராணுவப் புரட்சி வென்று, வலுவான மக்களாட்சி முறைச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மறு ஆண்டே போர்த்துகலின் குடியேற்ற நாடுகளாக இருந்த ஆப்ரிக்கக் காலனி நாடுகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்த கோவா, டையூ, டாமன் பகுதிகளும் இந்தியாவுடன் இணைந்தன.
நாட்டோ அமைப்பிலும் அய்ரோப்பிய ஒன்றியத்திலும் போர்த்துகல் உறுப்பு நாடாகும்.
ஸ்பெயினுக்கு மேற்கே வடஅட்லாண்டிக் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பு 92 ஆயிரத்து 391 சதுர கி.மீ. இதில் அசோர்ஸ் மற்றும் மதீராத் தீவுகளின் பரப்பும் அடக்கம். இந்நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடி 70 லட்சம்.
94 விழுக்காடு மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள். மீதிப்பேர் புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள். போர்த்துகீசிய மொழியும் மிராண்டீஸ் மொழியும் ஆட்சி மொழிகள். மக்களில் 93 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர்கள். நாடாளுமன்ற ஜனநாயகக் குடியரசு நாடு. குடியரசுத் தலைவரும், பிரதமரும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 7 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.
கத்தார்
1763இல் அரேபிய அல் காலிஃபா குடும்பத்தினர் குவைத்திலிருந்து சென்று பஹ்ரைனை வென்றனர். பின்னர் நாட்டின் அரசராகத் தாங்களே முடி சூடிக் கொண்டனர். 19ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. 1867இல் பஹ்ரைன் அரசர்களுக்கும் பிரிட்டனுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அஜ்சுபரா எனும் நகரத்தின் உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டு பெரும் மோதலாக உருப் பெற்றது. அந்நிலையில் பிரிட்டன் கத்தார் நாட்டுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. பஹ்ரைன் கத்தாருக்குச் சார்பு நாடு என்றே பிரிட்டன் கருதி வந்தது. 1916 முதல் 1971 முடிய கத்தார் பிரிட்டனின் பாதுகாப்புடன் விளங்கியது. பிரிட்டனின் பாதுகாப்பு வளைய நாடாக கத்தார் விளங்கியது. 1971இல் கத்தாருக்கு விடுதலை வழங்கப்பட்டது.
சவூதி அரேபியாவுக்கும் பாரசீக வளைகுடாவுக்கும் இடைப்பட்ட தீவுக்குறை நாடான கத்தாரின் பரப்பு 11 ஆயிரத்து 437 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 8 லட்சத்து 86 ஆயிரம். 95 விழுக்காட்டினர் முசுலிம்கள். அரபி மொழி ஆட்சி மொழி. இரண்டாம் மொழி எனும் அளவில் இங்கிலீஷ் பேசப்படுகிறது. மக்களில் 89 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர்கள்.
முடியாட்சி நாடான இதன் மன்னராக அமிர் ஹமத் பின் கலிஃபா அல்தானி இருந்து வருகிறார். அவரின் தம்பியான அப்தல்லா பின் கலிஃபா அல்தானி
நாட்டில் இருப்புப் பாதை கிடையாது. எண்ணெய் வளம் மிக்க நாடு. எரிவாயு கிடைக்கிறது
-------------------"விடுதலை" 18-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment