பார்ப்பனக் கொழுப்பு
ஆண்கள் துணையற்ற இந்தப் பெண்களை அவரவர் கிராமங்களில் திரும்பவும் குடியேற்றுவதற்கான திட்டத்தை இலங்கை அரசு தீட்டியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு வடக்கின் வசந்தம் என்று பெயரிட்டிருக்கிறது. அதனை செயல்படுத்துவதற்காக மே 7 ஆம் தேதியன்று 19 பேர் அடங்கிய குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்திருக்கிறது. அந்தக் குழுவில் ஒருவர் கூட தமிழர் இல்லை. அனைவரும் சிங்களர்களே. இராணுவம், காவல்துறை மற்றும் நிர்வாகத்துறையை சார்ந்த சிங்களர்கள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளார்கள். இப்படிப்பட்டத் திட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதியன்று அவர் இலங்கை குடியரசு தலைவரை இதற்காக சந்தித்திருக்கிறார். ஜூலை மாதத்தில் இருந்து அவரது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய ஆராய்ச்சி நிறுவனமும், அதனுடன் தொடர்பு கொண்ட வேறு தனியார் வேளாண் நிறுவனங்களும் இந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக வவுனியாவில் இருந்து செயல்பட உள்ளன. மேலும், மன்னார் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்க உள்ளார். விதைப்புக்காலம் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதால் இந்தப் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், இந்திய அரசையும் அவர் நிர்ப்பந்தப் படுத்தியிருக்கிறார். இந்தப் பணிக்காக இலங்கை அரசுக்கு, 500 கோடி ரூபாய் உதவியை இந்திய / தமிழ்நாடு அரசுகள் அறிவித்திருக்கின்றன.
வன்னிப் பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சிங்களர்களை மட்டுமே கொண்டுள்ள காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. சிங்கள நிர்வாகிகளை மட்டுமே கொண்டுள்ள நிர்வாகத்துறையும் வன்னிப் பகுதியில் நுழைந்துள்ளது. கூடுதலாக, வன்னியை சீரமைப்பதற்காக சிறையில் உள்ள 30 ஆயிரம் சிங்களக் கைதிகளை விடுவிக்கும் திட்டமும் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்கள் துணையற்ற பெண்களை மட்டுமே கிராமங்களில் குடியேற்றினால் என்ன நடக்கும்? மாண்புள்ள வாழ்க்கையை அவர்களால் நடத்திட முடியுமா?அவர் கூறுகிறார்: - மானத்தைவிட உணவே முக்கியம் என்று! அவர் இனத்தின் கோட்பாடு அது!
யார் இந்த எம்.எஸ். சாமிநாதன்? மாங்கொம்பு கிருஷ்ண சாம்பசிவனின் மகன். சாமிநாதனின் 11 வயதில் சாம்பசிவன் திடீரென்று இறந்துபோனார். அதன் பிறகு சித்தப்பா கிருஷ்ணசாமி, மாமா கிருஷ்ண நீலகண்டன் ஆகியவர்களால் வளர்க்கப்பட்ட அவருக்கு சோழ நாட்டின் தஞ்சாவூரிலும், சேர நாட்டின் அம்பாலப்புழையிலும் அவரது மூதாதையர்களுக்கு சோழசேர மன்னர்கள் பிரம்மதேயமாக பல நூறு ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கி, அவர்களின் பிழைப்புக்கு வழி செய்து கொடுத்தனர். சேரநாட்டின் அம்பலப்புழை மன்னரால் சாமிநாதனின் மூதாதையரான எஞ்ஜி வெங்கடாச்சல ஐயருக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் ஒருபகுதியிலேயே இன்றும் கேரளத்தின் வயநாட்டில் எம்.எஸ்.சாமிநாதன் ஆய்வு மையம் அமைந்துள்ளது. சமூக அறத்திற்காக வாழ்வதைக்காட்டிலும் சுய அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ளவே நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற போக்கிரித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் கண்ணோட்டத்தையே அவரின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளையே அவர் அவரது வாழ்க்கையில் பலமுறை மேற் கொண்டுள்ளார்.
1964 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்புள்ள ஃபோர்டு/ராக்பெல்லர் பவுண்டேஷன்களின் விஞ்ஞானியான நார்மன் போர்லாக்க்குடன் அவர் கூட்டு சேர்ந்து இந்தியாவை மேலை நாடுகளின் பூச்சிக்கொல்லி மற்றும் இராசாயன உர உற்பத்தித் தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிய பசுமைப் புரட்சித் திட்டத்தை செயல்படுத்தியவர் அவரே. இந்தத் திட்டத்தின் விளைவாக 1990-களில் இருந்தே இந்தியாவின் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறிவிட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
1983_ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி மூலாதாரங்களை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபோர்டு/ராக்பெல்லர் பவுண்டேஷன்களுக்கு சொந்தமான சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்குக் கடத்திச் சென்று அதன் தலைவராக 1987 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் அவரே.
மேற்கூறிய அமெரிக்க நிறுவனங்களுக்காக அவர் செய்த முறை கேடான உதவிகளுக்குக் கைமாறாகவே 1988 ஆம் ஆண்டில் அந்த அமெரிக்க நிறுவனங்களின் செல்லப்பிள்ளையான நார்மன் போர்லாக்கால் நிறுவப்பட்ட முதல் உலக உணவுப் பரிசை அவர் பெற்றார்.
இந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டே 1988 ஆம் ஆண்டில் கலைஞர் அரசால் சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள தரமணியில் கொடுக்கப்பட்ட இலவச நிலத்தில் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இவ்வாறு தரமணியில் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே இன்று வன்னிப் பெண்மக்களின் மாண்பை சீர்குலைக்க சிங்கள அரசால் தீட்டப்பட்டிருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு உதவி செய்யத் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் விளம்பரத்திற்கு இந்து ஆங்கில நாழிதளின் ஆசிரியர் என்.ராமே பொறுப்பாளராகப் பதவி வகித்து வருகிறார். இலங்கை அதிபரின் ஜாடையை ஏற்று ஜூலை 3 ஆம் தேதியன்று அவர் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களின் முகாமைப் பார்வையிட்டிருக்கிறார்.
அகதிகள் முகாமைக் கண்ட அனுபவம் என்னை உய்விக்கும் அனுபவமாக இருந்தது. தற்காலிகக் கூடாரங்களில் இயங்கிவரும் பள்ளிகளில் படித்துவிட்டுத் திரும்பிவரும் குழந்தைகள் கல்வி அதிகாரிகளிடமிருந்து அடுத்த மாதம் நடைபெறப்போகும் பரிட்சைக்காக பெற்றுள்ள புத்தகங்களோடு திரும்பும் காட்சி இதில் விசேஷமானது-இந்த முகாம்களில் உள்ள சூழ்நிலைகளை நேரடியாகப் பார்த்தறியாமலேயே மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் அவை குறித்துத் தவறாக எழுதி வருகின்றன.ஆனால் உண்மையில், முகாம்களின் சூழ்நிலை அவை கூறுவதைவிட பன்மடங்கு நன்றாகவே உள்ளது என்று பரவசப்பட்டிருக்கிறார்..
ஆனால், இதே முகாமை மே 23 ஆம் தேதியன்று அய்.நா.சபையின் தலைவர் பார்வையிட்டபோது இதுபோன்ற ஒரு கொடூரத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை என்று வேதனைப்பட்டார்.
இந்த முகாமைப் பார்வையிட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியவர்கள், இந்த அப்பாவி மக்களுக்கு நாம் பெருந்தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவர்களுக்கு இன்று இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தீமைகளை எதிர்த்து இந்த நாட்டின் நீதிம்னறங்களில் அவர்கள் நீதியைப் பெற முடியாத சூழ்நிலையே உள்ளது என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இந்தக் கருத்தை நான் கூறியதற்காக என்ன தண்டனை எனக்குக் கொடுக்கப் பட்டாலும் அதை சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.
அய்.நா.சபையின் தலைவரையும், இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியையுமே என்.ராம் பொய்யர்கள் என்று கூறத் துணிந்தது எப்படி? வடக்கின் வசந்தம் என்ற நயவஞ்சகத் திட்டத்தின் மூலம் சாமிநாதன் நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் பல கோடி ரூபாய் பணத்துக்காகவும், இலங்கை அரசிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் கிடைத்துக் கொண்டிருக்கும் எச்சில் அதிகாரத்திற்கும் அவர் மயங்கிப் போயிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன? சிங்கள ரத்னா வாங்கிக் கொண்டதால் செஞ்சோற்றுக் கடன் கழித்திடக் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தை வெங்கண்ணா பரம்பரையைச் சேர்ந்த வழிவழி துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது இந்தச் சிரித்திடும் நரி- பேராசைப் பெருந்தகை!
இப்படிப்பட்ட ஆள்களின் உதவியோடுதான் எம்.எஸ்.சாமிநாதன் தன் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னையும், தன் மூதாதையரையும் பாதுகாத்த தமிழ்ச் சமூகத்திற்கு என்.ராம் போன்ற நேமிசந்த்களின் நட்பால் முற்றுமாக துரோகம் செய்கிறார்.
காட்டிக் கொடுக்கும் காரியத்தில் அச்சமும், வெட்கமும் கொஞ்சமும் இல்லாமல் இந்து ராம் 8.7.2009 ஏட்டில் ராஜபக்சேயின் பேட்டியைப் பிரசுரித்துள்ளார். ராஜபக்சே கூறினாராம் _ இலங்கையில் 19 வயதுப் பெண் 7 குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கிறாராம். எந்தச் சூழ்நிலையில் தெரியுமா? சூலுற்று இருந்தால் போர்ப்படைக்குப் போகும் நிலை வராது என்பதால் கருவற்றே இருந்தார் அப்பெண் என்று ராஜபக்சே கூறி ராம் வெளியிட்டுள்ளார். எவ்வளவு கொழுப்பு இவர்களுக்கு என்பது ஒருபுறம்.
இது எப்படிசாத்தியம்? 7 குழந்தைகளின் கருக்காலம் 70 மாதங்கள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது கருவுறுதல் இயலாது என்கிறது அறிவியல். அந்தக் காலத்தைத் தோராயமாக 3 மாதம் ஒரு குழந்தைக்கு என வைத்துக் கொண்டாலும் 21 மாதங்கள். மொத்தத்தில் சுமாராக 8 ஆண்டுகள் கருக்காலம் என்றால் 10 வயதிலேயே கருவைச் சுமக்கத் தொடர்ந்தாரா அப்பெண்?
சொல்பவனுக்கு அறிவில்லை என்றால் கேட்பவன் புத்தி என்ன ஆயிற்று? என்று கேட்க மாட்டோமா?
அதைவிட அயோக்கியத்தனம் இந்த 7 குழந்தைகளுக்கும் தந்தை யார் என்றே தெரியாது என்றும் ராஜபக்சே கூறியிருக்கிறார். ராம் கேட்டுக் கொண்டு வந்து அச்சில் போடுகிறார்.
இதையே, தான் பேச்சில் குறிப்பிட்டுக் கூறியதாகவும் எகத்தாளமாக ராஜபக்சே கூறியிருக்கிறார். இறுமாப்பாக ராம் அச்சிட்டிருக்கிறார். கண்ணாடி மான்யப் பரம்பரைக்கு அது வழி வழி வந்த பழக்கம் என்பது பாருக்கே தெரியுமே!
தமிழன் என்றால், தமிழச்சி என்றால் சிங்களனுக்கும் இளக்காரம் இங்குள்ள பார்ப்பனருக்கும் இளக்காரம் என்கிற நிலை உருவாகிவிட்டதே!
---------------செங்கோ அவர்கள் 11-7-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Search This Blog
12.7.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment