Search This Blog

8.7.09

பார்ப்பனர் தமிழரை வென்றது எப்படி? - 3



இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே


மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரி கத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ் டேவிட்ஸ் என்பவர், தமது ‘புத்த இந்தியா’ என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காணமுடியாமையைக் குறிப் பிடுகின்றார்.


இந்திய நாகரிகம், தமிழ் அல்லது திரவிட நாகரிகமேயென்று பின்னர் நூலில் விளக்கப்ப டுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன். பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக்கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு, அவர்களின் மறைநூலும் அறநூலுமே சான்றாகும். வடமொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும்

பிரிந்துவந்த இந்திய ஆரியர்,இங்கு வந்த பிறகே திரவிடரைப்பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை.

முட்டையும் மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப்
பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்ட விடத்தும்,நோயுற்றவிடத்தும் பெரும்பாலும் ஊனுண்டணும் நிலையினரே. பிரிவினையும், பார்ப்பனவுயர்வும். சைவ வேளாளரென்னுந் உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார். சைவ மதத்தில் ஊனுண்ணாமை விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயருங்கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும். சைவாள் என்றும், சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே.


பார்ப்பனர் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன்:

(1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது,வில்லவன் சமைத்தளித்த ஆட்டிறைச்சியை

உண்டார்.


(2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின்வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்:

“புலவு நாற்றத்த பைந்தடி

பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை

கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது

பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்

மெல்லிய பெரும தாமே...

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே” (புறம் 14)


இது “சேரமான்செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, ‘மெல்லியவா
மால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது”

‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி
போல’ என்னும் பழமொழியும் இங்கு நோக்கத் தக்கது.


இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும்.


ஒவ்வொரு நாட்டிலும் அது எத்துணை நாகரிகமடைந்திருப்பினும் நாகரிகம், அநாகரி-
கம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டில் அங்ஙன மிருப்பவற்றுள் ஒவ்வொரு வகையிலும் உயர்ந்ததையே தெரிந்து கொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே உயர்வாகவே காணப்படுகின்றனர்.

பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்;
தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக்
காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப் பெரும்பாலும் ஊனுண்டணும் நிலையினரே. பிரிவினையும், பார்ப்பன வுயர்வும். தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம்
பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்ந்து வரவேண்டும்?
ஆகையால், அக் கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறானதென்று விடுக்க.

பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல்


பார்ப்பனர் இதுபோது மதிநுட்பமுடையவ ரெனல் உண்மையே. ஆனால், அது எதனால்
வந்தது? அய்யாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருந்து
வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்பு வாய்ந்துள்ளது. “குலவித்தை கல்லாமற் பாகம் படும்” என்றார் முன்றுறையரையனார்.

“மகனறிவு, தந்தையறிவு” என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித் திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத் திறமை எவ்வளவு பெருகியி ருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வர்ணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள். ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண் டொரு நூற்றாண்டுகளாக உயர்தரக் கல்வி கற்று வருகின்றனர். அதற்குள் எவ்வளவோ முன்னேற்ற
மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம்
முன்னோரின் நுண்ணறிவைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக்
கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று.

--------------- தேவநேயப் பாவாணர்- “ஒப்பியன் மொழி”, நூல் பக்கம் 43-51

0 comments: