Search This Blog

7.7.09

ஈழத்தமிழர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பெரியார் திடல்


பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால்
மக்களை அழிவுப்பாதையில் அல்லவா தள்ளியிருப்பார்கள்
திருப்பூரில் தோழர்களிடம் தமிழர் தலைவர் விளக்கம்


பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால் அழிவுப்பாதைக்கல்லவா கொண்டு வந்திருப்பாகள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

முதல் குரல் விடுதலைதான் கொடுத்தது


வி.அய்.சுப்பிரமணியம் அவர்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்தான் நம்முடைய இயக்கம் தான்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய காரியத்தை விடுதலை ஏடு தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையிலே தமிழ்ப் புலவர்களுக்கு அந்த உணர்ச்சி. நமக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் அவ்வப்பொழுது தேவையானது. சமூக நீதியைப் பற்றி குமாரராஜா சொன்ன மாதிரி அல்லது மற்ற நண்பர்கள் சொன்ன மாதிரி ஆபத்து எப்பொழுது வருகிறதோ அதை தடுக்கின்ற ஆயுதம் தான் விடுதலை. நமக்கு free fighter மாதிரிதான். கபில்சிபல், எஸ்.எஸ்.-எல்.சி கூடாது உடனே எடுத்துவிட வேண்டும். அதே மாதிரி இந்தியா பூராவும் ஒரே கல்வி போர்டாக இருக்க வேண்டும் என்றால் மாநிலக் கல்வி என்னாவது என்று முதல் குரல் விடுதலையினுடைய குரலாகத்தான் இருந்தது.

இதை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியவில்லை. முக்கியமானவர்களை, பெரியவர்கள் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, நல்ல கருத்துகளை நீங்கள் தான் வெளியாக்கியிருக்கின்றீர்கள் என்று இன்றைக்கு மற்றவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆகவே, இதனுடைய அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போலத்தான் நமக்கு முக்கியமான ஒரு அடிப்படை ஈழப்பிரச்சினை.

ஈழத்தமிழர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பெரியார் திடல்

இந்த ஈழப்பிரச்சினையைத் துவக்கி, இன்னும் கேட்டால் மற்றவர்களுக்கு விடுதலைப்புலிகள், பிரபாகரன் என்றால் யார் என்று தெரியாத காலத்திலே, அவர்களுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டது எது என்றால் _ பெரியார் திடல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆக நமக்கில்லாத அக்கறை மற்றவர்களுக்கு என்ன? நமக்கு ஒன்று மட்டுமே பிரச்சினை அல்ல. மற்றவர்களைப் போல வியாபாரச் சரக்கல்ல. நமக்கு அது மட்டுமே ஒரே ஒரு தத்துவம் கிடையாது. அதைக் காட்டிக் கொண்டே சொல்லிக்கொண்டு வருவதற்கு நமக்கு பல நிலைகள் உண்டு.

மதவெறி ஆட்சி அமைந்துவிடக்கூடாது அடித்தளத்திற்கே ஆபத்து. மாநிலத்தில் ஆரியம் வெற்றி பெற்று விடக்கூடாது. நம்மால் எதுவுமே செய்ய முடியாது. இன்றைக்கு ஜெயலிதாவோ மற்றவர்களோ வந்திருந்தால் கனவு நனவாகியிருக்குமா?

தைமுதல்நாள் கலைஞர் ஆட்சியில்தான்

கலைஞர் வந்த பிற்பாடு தானே. இந்த காரியம் வந்தது. தை முதல்நாள் தான் தமிழ்த்திருநாள் தமிழர் ஆண்டு புத்தாண்டு என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு வந்தது இந்த ஆட்சியினால்தானே.

தமிழ் செம்மொழி என்று வந்தது இந்த ஆட்சியினால் தானே. ஆக கலைஞர் அவர்கள் தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை வர்ணித்துக் கொண்டவர்.
ஆக அப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கிறார். என்றால் விடுதலை ஏடு பலமான கருவி, பலமான ஒரு கேடயம். இங்கே நண்பர்கள் அழகாகச் சொன்னார்கள். அதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.

முதல் கிளர்ச்சியை நாம் செய்தோம்

முதன்முதலில் ஈழத்தமிழர்களுக்குத் தொல்லை வருகிறது, சங்கடங்கள் வருகிறது என்கிற செய்தியை தமிழ் நாட்டிலே யாருமே பேசாத பொழுது, அதற்காக முதல் கிளர்ச்சியை செப் 23 இல் தொடங்கியது நாம் தாம்.

அதற்கப்புறம் தான் கம்யூனிஸ்ட்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தார்கள். பத்திரிகைகாரர்-களுக்கு என்ன நினைப்பு? நாம் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது திராவிடர் கழகத்திற்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகைகாரர்களும் ஊடகத்துறையினரும் கருதுகின்றார்கள்.

இதையும் தாண்டித்தான் வளருகிறோம்

இதையும் தாண்டித்தான் நாம் வளர்கிறோம். நம்முடைய எதிரிகள் கொடுக்கிற விளம்பரம் அவ்வளவு தான். இப்பொழுது கூட பார்த்தீர்களேயானால் சாருவாகா என்று சொன்னால் இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகன் என்று பொருள்.

சாருவாகாவினுடைய புத்தகம் ஒன்று கூட கிடையாது. சாருவாகா தத்துவம் அவன் நாத்திகன் இப்படி ஒன்று கூட கிடையாது. இதை எப்படிக் கண்டு பிடிப்பது என்றால், இந்த சாருவாகனைப் பார்ப்பான் திட்டியிருக்கிறான் பாருங்கள். அதைப்பற்றி சாருவாகன் என்னென்ன சொன்னான் என்பது வெளியே வந்துவிட்டது. அதைவைத்துதான் கண்டுபிடிக்கின்றோம். அது மாதிரி நம்மைத் திட்டுகிறார்கள் பாருங்கள் அதன் மூலம் நமக்கு விளம்பரம் கிடைக்கிறது சில இடங்களில்

திமுக வியந்தது

ஓகோ, இப்படி எல்லாம் ஓர் ஆள் இருக்கிறார் போலிருக்கிறது. அவர்களைப் போய் நாம் சந்திருக்கிறோம் என்று வெளிநாட்டுக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறவர்கள் இருக்-கிறார்கள்.

ஆகவே அந்தக் கொள்கை அடிப்படையிலே பார்க்கும் பொழுது ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையை நாம் தாம் முதலில் எடுத்தோம். அடுத்து முதல்வர் கலைஞர் அவர்கள் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் போட்டார். ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். திராவிடர் கழகம் தான் சி.டியாகப் போட்டு எல்லா இடங்களிலும் நாம் ஒலிபரப்பினோம். திமுகவே வியந்தது. அவருக்கே வியப்பு. இவ்வளவு சிறப்பாக இந்தப் பணி இருக்கிதே என்று.

தி.க. தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

காரணம் என்னவென்றால், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று சொன்ன முறையிலே, நாம் அந்த முறையிலே தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அதே நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட வேண்டியவைகளை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும். நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதும் இல்லை.

கலைஞர் அவர்கள் நாம் எல்லோரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார்.

கலைஞர் வரவில்லையென்றால் யார் வருவார்?

சிலர் நாடாளுமன்றத் தேர்தல் வாரப்போகிறது என்று அவர்கள் எல்லாம் தேர்தல் பக்கம் திரும்பினார்கள். நாம் ஈழத்துப் பக்கம் திரும்பினோம். அவர்களுடைய கவனமெல்லாம் தேர்தல் கண்ணோட்டமாக இருந்தது.

நம்முடைய கண்ணோட்டம் எல்லாம் ஈழத்தமிழர்களுடைய கொடுமை சங்கடங்கள் என்னவோ அதைப் பார்த்தது.

மற்ற அரசியல் அணியினரைப் பொறுத்த வரையிலே எப்படியும் கலைஞரை வீழ்த்த வேண்டும்; கலைஞர் கட்சி மறுபடியும் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. அப்புறம் அவர் வரக்கூடாது என்றால் யார் வருவார்கள்?

அவியல் வருமா?

அதிலே பார்த்தீர்களேயானால் ஒரு 31 பிரதமர்கள் இருந்தார்கள். இருந்தவர்கள் எல்லாம் பிரதமர்கள் தான். ஏனென்றால் கனவு காண்பதற்கு என்ன? அப்துல்கலாம் வேறு சும்மா சொன்னாலும் சொன்னார், கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று. மாணவர்கள் கனவு காணவேண்டும் என்பதை அவர் மனதில் வைத்துக்கொண்டு சொன்னார். ஆனால் அதைப் பார்த்து அரசியல்வாதிகள் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.

31 பேர்களுக்கும் பிரதமர் கனவு தான்

அதனால் இருந்தவர்கள் பூராவும் என்ன நினைத்தார்கள் என்றால், நான் பிரதமர், நான் பிரதமர் என்று நினைத்தார்கள். மூன்றாவது அணியில் இருந்த 31 பேர்களுக்கும் பிரதமர் கனவுதான்.

நம்முடைய மருத்துவர் இருக்கிறார் பாருங்கள். எப்பொழுதுமே துல்லியமாக கவனிக்கக் கூடியவர். அவர் தமிழ்க் குடிதாங்கி. அந்தக் குடிதாங்கி தெளிவாகச் சொல்லிவிட்டார். ஜெயலலிதாவை பிரதமராக வைகோ முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு பார்த்தீர்களேயானால் அந்த அம்மையார் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தா.பாண்டியன், மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது இந்த அம்மையார் செய்தியாளர்களிடம் சொன்னார். இலங்கை அரசு தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தை ஒழிக்க சுடுவார்கள்; சுட்டால் பல அப்பாவி மக்கள் சாவார்கள்; இதெல்லாம் சாதாரணம் தானே. இது போய் என்ன பெரிய விஷயம்.
ஜெயலலிதா சொன்னாரா? இல்லையா? அதுமட்டுமல்ல; ஈழம் என்று சொல்லாதீர்கள். இலங்கை என்று சொல்லுங்கள் என்று அந்த அம்மையார் பத்திரிகைக் காரரைப் பார்த்து சொன்னார். ஆனால், அதே அம்மையார் என்ன சொன்னார்கள்? தேர்தல் நெருங்க, நெருங்க அவர்களுக்கு ஒரு நப்பாசை. நாம் நன்றாகப் போட்டு பயன்படுத்தி விளைய வைத்திருந்தோம் பாருங்கள். இந்த விளைச்சலை சில பேர் ராத்திரியோடு ராத்திரியாக அறுத்துக் கொண்டு போய்விடுவார்கள். உழவன் கஷ்டப்பட்டு செய்திருப்பான்.

நாம் கண்ணீர் விடக்கூடியவர்கள்

நாம் ஒரு கொள்கைக்காக வைத்திருக்கின்றோம். உள்ளபடியே கண்ணீர் விடக்கூடியவர்கள். கிளிசரின் கண்ணீர் விடக்கூடியவர்கள் அல்லர். அரிதாரம் பூசிக்கொண்டு ஆக்ட் பண்ணக்கூடியவர்கள் நாம் அல்லர். அதனால் நமக்குத் தெளிவான சூழல் இருந்தது. எனவே நாம் தெளிவாகச் சொன்னோம். எல்லோரும் வாருங்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டவில்லையா? அதிலே தான் துணிவாக முடிவெடுத்தார் திடீரென்று நாங்களே நினைக்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலை

பையிலே கையை விட்டு, பேனாவை எடுத்து முதலமைச்சர் எழுதினார். இந்தக் காரியத்தை செய்யவில்லையென்றால் உடனடியாகப் பதவி விலகுவது என்று சொன்னார்.
சி.பி.எம் கட்சியினர் உடனே சொல்லிவிட்டார்கள். எப்படிங்க எங்களால் உடனே சொல்ல முடியும். நாங்கள் பொலிட் பீரோ கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவு சொல்லமுடியும் என்று சொன்னார்கள். அதில் ஒன்றும் தவறில்லை.

நாங்களாக முடிவெடுக்க முடியாது. எங்களுடைய கட்சித் தலைமை டெல்லிதான் முடிவெடுக்கும். பிஜேபி மாதிரி மற்றவர்களும் வரவில்லை. இன்னும் சில பேர் பேசாமல் இருந்தார்கள். தா.பாண்டியன் மட்டும் நாங்கள் கேட்டு சொல்லுகிறோம் என்று சொன்னார். அ.தி.மு.க போன்றவர்கள் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை.

காங்கிரஸ்காரர்களும் இது எப்படிங்க எங்களால் முடியும்? என்று கேட்டார்கள். நான் தான் முதலமைச்சரிடம் தெளிவாகச் சொன்னேன். எல்லோரும் என்ன தீர்மானங்கள் என்று கேட்டார்கள். இராசா கொடுத்தார், கனிமொழி கொடுத்தார் என்றெல்லாம் பத்திரிகையில் வந்தது.

நான் முதலமைச்சரிடம் கேட்டேன்

நான் தான் முதலமைச்சரிடம் போய் கேட்டேன். இது சரியான முறை அல்ல. நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டீர்களேயானால் எங்களை மாதிரியே சாலையில் நின்று கொண்டு தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் பதவி விலகினால் இப்பொழுது நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டால் மற்றவர்கள் சுலபமாக உட்கார்ந்து கொள்ளப் போகிறார்கள். ஈழத்தில் உள்ள மக்களுக்கு உணவு போக வேண்டும் என்று சொல்லுகின்றோம், மருந்து போக வேண்டும் என்று சொல்லுகின்றோம்.
நாங்கள் வெறும் ஆளாக இருந்து சட்டம் போடுவது சரி. ஆனால் செய்வதற்கு இங்கே ஆள் வேண்டுமா? இல்லையா? நீங்கள் பதவியில் இருந்தால்தானே மத்திய அமைச்சரவையில் என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியும்; அல்லது வலியுறுத்தவாவது முடியும். ஆகவே ராஜினாமா கொடுப்பது என்பதிருக்கின்றதே. அது விளையாட்டுத்தனமில்லை.. ஆகவே நீங்கள் ராஜினாமா பண்ணக் கூடாது என்று நான் வெளிப்படையாகவே ஸ்டேட்மென்ட் கொடுக்கின்றேன் என்று சொன்னார். நீங்கள் பதவியை விட்டு வரக்கூடாது. நீங்கள் ராஜினாமா செய்யக்கூடாது. நீங்கள் பதவியில் இருந்தால் தான் ஏதாவது செய்ய முடியும் என்று நான் ஒருவன் தான் சொன்னேன்.

கலைஞர் சொன்னார் விவாதத்தில் ஆசிரியர் இப்படிச் சொல்லுகிறார் என்று சொன்னார். இதுதாங்க எதார்த்தம் என்று சொன்னவுடனே, பிறகு யோசிக்கலாம் என்று சொன்னார்.

----------------"விடுதலை" 7-7-2009

5 comments:

மணிகண்டன் said...

***
முதன்முதலில் ஈழத்தமிழர்களுக்குத் தொல்லை வருகிறது, சங்கடங்கள் வருகிறது என்கிற செய்தியை தமிழ் நாட்டிலே யாருமே பேசாத பொழுது, அதற்காக முதல் கிளர்ச்சியை செப் 23 இல் தொடங்கியது நாம் தாம்.
***

எந்த வருடம் என்றும் எழுதினால் இன்னமும் தெளிவாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

பெரியார் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு தி.க. ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. செப் 23 2008 ஆம் ஆண்டில் நடந்த ஈழப்போராட்டம் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக ரயில் மறியல் போராட்டத்தை தி.க. நடத்தியது. அப்போராட்டத்தில் திருமா, சுபவீ கலந்து கொண்டனர்.

விரிவான தகவல் இவ்வலைப்பக்கத்தில் உள்ளது. அருள்கூர்ந்து ஒருமுறை இவ்வலைப்பக்கத்தில் உள்ள செய்திகளை படிக்க வேண்டுகிறேன்.
நன்றி

தமிழ் ஓவியா said...

ஈழப்போராட்டம் 1983 ஆம் ஆண்டிலிருந்து உச்சக்கட்டத்தில் இருந்தது அது முதல் ஒரு தொகுப்பை கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா அவர்கள் தொகுத்த தகவல்களை உங்கள் பார்வைகு வைக்கிரேன். ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

இதோ அந்தச் சுட்டி

http://thamizhoviya.blogspot.com/2009_01_01_archive.html

மணிகண்டன் said...

நன்றி தமிழ் ஓவியா. நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்க்கை நிச்சயமாக படிக்கிறேன். இந்த பதிவை படித்து முடித்தவுடன் வந்த எரிச்சலில் எழுதிய கேள்வி அது. தவறாக நினைக்க வேண்டாம்.

தமிழ் ஓவியா said...

http://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_5119.html

மிகச் சரியான சுட்டி இது. சுட்டிப் படிக்கவும்.
நன்றி