Search This Blog

28.3.09

பார்ப்பனர்களுக்கு ( பிரேமானந்தா =ஜெயேந்திரர்) வக்காலத்து வாங்குபவர்களின் சிந்தனைக்கு........



குருவருளும்-திருவருளும்?



இந்தச் செய்தியைப் படிக்கின்ற நாணயமான மனிதனின் எண்ணத்தில் எது சுரக்கவேண்டும்? எது நினைவிற்கு வரவேண்டும்? எத்தகைய அலைகள் நெஞ்சில் புரளவேண்டும்?

அடடே, இந்த மனிதர்... அவர் தானே? ஒரு அய்ந்தாண்டுகளுக்கு முன் - ஒரு தீபாவளி நாளன்று (11.11.2004) ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப் பட்டாரே - ஓ, அந்த மனுசர்தானே இவர்?

காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான ஆசாமி இவர்தானே... ஆம், ஆமாம் - சாட்சாத் அவரேதான் இவர்!

எத்தனைப் பிரிவுகளில் இவர்மீது குற்றப் பத்திரிகை? குற்றப் பிரிவு 302, 120-பி, 34, 200 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றப் பிரிவுகளில் வழக்கு.

இவையெல்லாம் இவர் படித்த பட்டங்களா? விருதுகளா?

மிகவும் மோசமான குற்றச்சாற்றுகள்! - இவற்றின் காரணமாக வேலூர் - மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆம், அவர்கள் போற்றித் துதிபாடும் ஜெகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி 61 நாள்கள் கம்பி எண்ணினார் (11.11.2004 முதல் 11.1.2005).

அதன்பின், உச்சநீதிமன்றத்தால் பிணை (ஜாமீன்)யில் வெளிவந்தார்.

சங்கராச்சாரியாரைப் பொறுத்த வரை அவருக்கென்று தனியே கடவுள் கிடையாது - இன்னும் சொல்லப் போனால், நானேதான் கடவுள்! என்று சொல்லக்கூடிய அகந்தை உடையவர்!

நியூயார்க்கில் இருக்கக் கூடிய ஒரு பார்ப்பன வீட்டில், கல்யாணம் நடந்தாலும், காஞ்சி ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் திருவருளை முன்னிட்டு என்று எடுத்த எடுப்பிலேயே புகழாரம் சூட்டிதான் அச்சிடுவார்கள்.

அவர்மீது அப்படி ஒரு மரியாதை - பக்தி! அவர்மீது ஒரு தூசு விழுந்தாலும் பார்ப்பனர்கள் பதறிப் போய்விடு வார்கள்.

தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த திரு. டி.என். சேஷன் என்ற பார்ப்பனர் - அவர் வகிக்கும் பதவியின் தகுதியையும் ஒருபுறத்தில் இறக்கி வைத்துவிட்டு, மேலாடையின்றி, அரை நிர்வாணத்துடன் காஞ்சி மடம்முன் கையில் ஒரு கைத்தடியோடு நின்று சேவகம் புரிந்தார் என்றால், அந்த மடத்தின்மீது, அந்த மடத்துத் தம்பி ரானாகிய சங்கராச்சாரிமீது அக்கிரகாரத்தார் வைத்திருக்கும் அளவு கடந்த பக்தியைப் புரிந்துகொள்ளலாமே!

காஞ்சி சங்கராச்சாரியார் எந்த இடத்திலும் உயரமான பீடத்திலே - ஆசனத்திலே தான் அமர்ந்திருப்பார். ஜனாதிபதியானாலும், அந்தச் சந்நிதானத்தின் முன் கூனிக் குறுகித்தான் தரையில் அமரவேண்டும்.

பெரியவாள் என்று சொன்னால் உலகத்திலேயே அவரை மட்டும்தான் குறிக்குமாம்.

அத்தகைய பெரிய மனுசரான ஜெயேந்திரர்மீதுதான் கொலைக் குற்றச்சாற்று - 61 நாள்கள் சிறைவாசம்.

பெண்கள் விஷயத்திலும் படு மோசம்! காமகோடி என்று எந்த அடிப்படையில் அழைக்கிறார்களோ - அந்த விஷயத்தில் காமம் தலைக்கேறி புரையோடிப் போனவர்.

அவரோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்ட பெண்கள் அனேகம். மணிக்கணக்கில் ஸ்ரீரங்கத்து மாமி யிடம் ஜொள்ளு வழியப் பேசிக் கொண்டே இருப்பாராம்.

அனுராதா ரமணன் என்ற அக்கிரகாரத்து அம்மையார். தமிழகம் அறிந்த எழுத்தாளர். இவரது கைப்பிடியில் சிக்கிக்கொள்ளாமல் அறுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்த அவலத்தை அந்த அம்மையாரே தொலைக் காட்சி ஒன்றில் கூறிக் கண்ணீர் விட்டுக் கதறியழுததை நாட்டு மக்கள் பார்த்தவர்கள்தான்.

இவ்வளவுக் கேடு கெட்ட பிறகும், கதை நாறிய பிறகும், அவர் காஞ்சி காமகோடி பீடாதிபதியாம்! மஹா சுவாமிகளாம். அவர் கோடி அர்ச்சனை செய்கிறாராம். யாருக்கு? தீண் டாமை க்ஷேமகரமானது என்று கூறிய அவரின் குருநாதரான சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு - ஒரு குற்றவாளிக்கு இன்னொரு குற்றவாளி துணை! சாங்கோ பாங்கமாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் அந்தக் கட்டுப்பாடான சாமர்த்தியத்தைப் பார்ப்பனர் அல்லாதார் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை எழுத்துகளும் - வரிகளும்.


இந்தப் பீடாதிபதியின் கோடி அர்ச்சனை யில் பங்குகொண்டு குருவருளும், திருவருளும் அடையும்படி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறார்களாம்.

சூத்திரப் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - (அதற்குத் தகுதி உடை யவர்தான்) அவரைப்பற்றி பேசும்போது முகத்தைச் சுழித்துக்கொள்கிறார்கள். அதில் எந்தவிதத்திலும் தரக்குறைவில் குறைந்து விடாத ஜெயேந்திரர் சரஸ்வதி மட்டும், இவ்வளவுக் கழிசடைத்தனத்துக்குப் பிறகும் ஜெகத்குருவாம், பீடாதிபதியாம்! திருவரு ளுக்குச் சொந்தக்காரராம்!

மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கரைத்துப் பஞ்ச கவ்யம் என்று தட்சணை வாங்கிக்கொண்டு குடிக்கச் சொல்லும் பரம்பரையல்லவா!

மாட்டுமூத்திரத்தைக் குடிப்பதற்குப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுக்கும் தரம்தானே நம் மக்களுடையது!

தமிழனின் முட்டாள்தனம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்று அளந்து பார்க்கும் தர்மா மீட்டர்தான் இந்தப் பஞ்சகவ்யத்தைக் குடிக்கச் செய்வது என்பார் தந்தை பெரியார்.

இந்த ஆபாசமான பக்தி வட்டத்திலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெற்று சிந்திக்கும்பொழுதுதான். பார்ப்பனர்களின் படுமோசமான வஞ்சகத்தின் முழுப் பரிமாணமும் புரியும்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு கடவுள் மோட்சம் கொடுத் தான் என்று கூச்சநாச்சமில்லாமல் எழுதி வைத்துள்ள கூட்டம் - எதையும் செய்யும் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டத்தின் கொடியை ஏற்றும்.

ஜெயேந்திரர் என்ற பெயரை கேட்ட மாத்திரத்திலேயே ஒரு அருவருப்பு- பண்பாடு உள்ளவர்களின் மனதில் ஏற்படும் - ஏற்படவும் வேண்டும்.

ஒழுக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் அப்படித்தான் கணிப்பார்கள்.

பக்தியிலே புரண்டால் பத்தியைப் பறி கொடுக்க நேரிடும்; புத்தியைப் பறிகொடுத்தால் மலம் கூட மலர் வாடையாகத்தானிருக்கும்.


கொலைவழக்கில் முதல் குற்றவாளி, காமக்குரூரர் எப்படி குருவருள் - திருவருள் பெற்றவராக பார்ப்பனர்களால் போற்றப்படுகிறார்?

இன்றைக்கு தம் குருநாதருக்குக் கோடி அபிஷேகம் செய்கிறாரே - அந்தக் குருநாதருக்கும், இந்தச் சீடருக்கும் இடையில் நடந்த தெருச்சண்டை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதா, என்ன? குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமய்யரே தலையிட வேண்டிய அளவுக்குச் சந்தி சிரித்ததே!

இதற்குள் அடங்கியிருப்பது நேர்மையோ - அறிவு நாணயமோ அல்ல! கண் மண் தெரியாத பார்ப்பன இன உணர்வு - புரிந்து கொள்வீர்!

------------ மின்சாரம் அவர்கள் 28-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

தமிழ் நாட்டையே சுரண்டி தன் குடும்பத்திற்கு வாரி இறைக்கும் கலைஞர் முன் ஏழை திராவிட தொண்டன் கை கட்டி நிற்பது இது போல் தானே