Search This Blog

17.3.09

1938 இல் பெரியார் உடல்நிலையின் தன்மை

அந்த நாளில்

ஈ.வெ.ரா. அதிக காயலா


தோழர் ஈ.வெ.ரா. சுமார் ஒருமாத காலமாய் மார்பு வலியாக இருந்ததையும், லட்சியம் செய்யாமல் பல ஊர்களுக்குக் காரில் பிரயாணம் செய்து வந்ததில் கை கால்கள் நரம்பு இசிவு ஏற்பட்டு 15.3.1938 இல் ஈரோடு கவர்ன்மெண்டு டாக்டர் K.V. நாணுக்குட்டி நாயர் M.R.C.S. (Eng) L.R.C.P. (Lond) அவர்கள் பரிசோதித்ததில் பிளட் பிரஷர் என்னும் ரத்தவோட்ட அழுத்தம் இருக்கவேண்டிய அளவுக்குமேல் 40 எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும், மூத்திரத்தில் சிறிது கோளாறு இருக்கிறதென்றும் சொல்லி, குறைந்தது ஒரு மாத காலத்துக்காவது குளிர்ச்சியுள்ள பிரதேசத்தில் ஓய்விலிருக்கவேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தி மருந்து கொடுத்து வருகிறார். அந்த மருந்து சாப்பிட்டதன் காரணமாய் தலைவலி, கண்சூட்டு வீக்கம் வலி, சளி உபத்திரவம் ஆகியவைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். தபால்கூட பார்க்கக் கூடாது என்று திட்டப்படுத்தப்பட்டிருக்கிறார்.

----------------"விடுதலை", 17.3.1938

2 comments:

Unknown said...

1938 இலே உடல்நிலை மிக மோசமாக இருந்த பெரியார் 1973 வரை வாழ்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்க்காக பாடுபட்டதை நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு