Search This Blog

27.3.09

இந்து அறநிலையத் துறை ஏன் தோற்றுவிக்கப் பட்டது?

சுரண்டல்!

மதச்சார்பற்ற அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை எடுத் துக்கொண்டது எந்தவிதத்தில் நியாயம் என்று வினா எழுப்பியுள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்.

இவர் கூறுகிற விவாதப் படி பார்த்தால் கோயிலில் சாமி சிலை களவு போனால் மதச் சார்பற்ற அரசின் காவல்துறை அதைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று சொல்வார்களா? 15 ஆண்டுகளாகத் தேடப்பட்ட சாமி சிலைகளை காவல் துறையினர் கண்டுபிடித்த செய்தி நேற்றுகூட படங்களுடன் வெளிவந்துள்ளதே!

இந்துக் கோயில்கள் பார்ப்பனர்களின் சுரண்டலுக்கான பேரிடமாக இருக்கின்றன; அதில் அரசு கை வைத்துவிட்டதே என்கிற ஆத்திரத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?

இந்து அறநிலையத் துறை ஏன் தோற்றுவிக்கப் பட்டது? இந்துக் கோயில்களில் பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லை என்கின்ற தன்மையில் அவர்களின் சுரண்டல் பூமியாக இருந்தது.

அம்மன் மூக்கில் மின்னும் வைர மூக்குத்தி அர்ச்சகப் பார்ப்பனரின் பாரியாள் மூக்கில் மின்னிய நிலைமைகள் எல்லாம் உண்டே!

சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட குழு கூட இது பற்றியெல்லாம் விஸ்தார மாகவே கூறியிருக்கிறதே! அறியமாட்டாரா கணேசன் வாள்?

இதே சிதம்பரம் கோயிலில் அம்மன் தாலி காணாமற் போயிற்று. தங்கத் தகடுகள் சுரண்டப்பட்டன. கோயில் கிணற்றில் பக்தர்கள் போடும் பணம் கணக்கிடப்பட்டு கோயில் கணக்கில்கொண்டு வர வேண்டும்; ஆனால், தீட்சிதப் பார்ப்பனர்கள் - ஆள் ஏற்பாடு செய்து அந்தப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்தனர்.

கோயிலுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளை எல்லாம் அமுக்கியவர்கள் இந்தத் தீட்சிதர்கள்தாம்.

பார்ப்பனர்களே இது குறித்து அரசுக்குப் புகார் அனுப்பியதுண்டு. வருடம் ஒன்றுக்கே வருமானம் ரூ.37 ஆயிரம் என்று கணக்குக் காட்டினார்கள். இந்து அற நிலையத்துறையின் வசம் கோயில் வந்த பின் 40 நாள்களிலேயே உண்டியல் மூலம் வந்த பணம் கிட்டத் தட்ட இரண்டு லட்ச ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே!

அப்படியென்றால், கோடிக் கோடியாக கோயில் பணத்தை தம் அப்பன் வீட்டுச் சொத்தாக அனு பவித்து வந்தது தீட்சிதர்க் கும்பல். இவற்றையெல்லாம் திருவாளர் இல. கணேசன் நியாயப்படுத்துகிறாரா?

இந்து அறநிலையத் துறையின்கீழ் சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்டதன் நேர்மையை இப்பொழுதாவது அவாள் ஒப்புக் கொள்வார்களா?

மதச்சார்பற்ற தன்மை என்றால் பார்ப்பனர் கொள்ளையைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கருதுகிறார்களோ!

------------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை:-"விடுதலை" 27-3-2009

2 comments:

வஜ்ரா said...

பார்ப்பானர்கள் கொள்ளை அடிப்பதைத் தடுத்து நிறுத்தியாகிவிட்டது. சிறப்பு.

மௌல்விக்களும், பாஸ்டர்களும், பாதிரிமார்களும், முறையே முஸ்லீம் மற்றும் கிருத்தவ மக்கள் பணத்தைச் சுரண்டுகிறார்களே ? அதற்காக முஸ்லீம் அறநிலைத் துறையும், கிருத்தவ அறநிலைத்துறையும் தோற்றுவிக்கப்படுமா ?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி