
பூணூலிலா ரயில் ஓடுகிறது?
சென்னையிலிருந்து தாம்பரம், செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக முக்கிய (மெயின் லைன்) தடத்தில் சென்று கொண்டிருந்த இரயில் ஓட்டம் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டு, இப்பொழுதுதான் ஆமை வேகத்தில் பணிகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. கடலூர் - விழுப்புரம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்படுவதையொட்டி சிறப்புப் பூஜை நடைபெற்றுள்ளது. வழக்கம்போல பார்ப்பனப் புரோகிதர்கள் அழைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டுள்ளது. இரயில் தண்டவாளத்தில் ஓடுகிறதா - பூணூலில் ஓடுகிறதா? மதச்சார்பற்ற இந்திய அரசின் ஒரு துறையில் குறிப்பிட்ட மதச்சடங்காச்சாரங்களுடன் நடைபெறுவது சரியானதுதானா? 2009 இல்தான் இந்தியா இருக்கிறதா? அஞ்ஞானத்தை விஞ்ஞானமூலம் பரப்பும் கேடு கெட்டத்தனம் தானே இது!
--------------"விடுதலை" 29-3-2009
2 comments:
மதச்சார்பற்ற அரசில் மதச்சடங்குகள் எதுவும் செய்யக் கூடாது என்ற அரசு ஆணைகல் இருக்கிறதே? அது என்ன ஆச்சு?
மதசடங்கு எதிர்ப்பு பெரியாருக்கு மட்டும் தான், அதுக்கடுத்து யாருக்கும் இல்லை.
Post a Comment