Search This Blog

20.3.09

ஜாதி இயற்கையான தல்ல. அது ஒரு செயற்கையான கற்பனை.

செல்வங்களே! தாய்
தந்தையர் மீது பாசம் - நன்றி காட்டுங்கள்!


சென்னை மணவிழாவில் தமிழர் தலைவர் பேச்சு!
பெற்றோர்கள் மீது பாசம் - பிள்ளைகளுக்குக் குறைந்து வருகிறது. பிள்ளைகளே வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை மறவாதீர்! நன்றி காட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

கஸ்தூரி ரத்னாகரன் - ரத்னாகரன் ஆகியோரது செல்வன் கோமான் சத்தி யேந்திரன் ஏழுமலை-ஜோதிலட்சுமி ஆகி யோரது செல்வி சித்ரா ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா சென்னையில் 15.3.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மணவிழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:-


நம்முடைய பெருமைக்கும், பாரம்பரியத்திற்கும் உரிய கொள்கைக் குடும்பங்களிலே ஒன்றாக இருக்கக்கூடிய குடும்பம் இந்தக் குடும்பமாகும். தந்தை பெரியார் வழியிலே ஒரு அரை நூற் றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து இந்தக் கொள்கையைப் பின் பற்றி நடைபோட்டு, ஒரு தலைமுறை, இரண்டாவது தலைமுறை என்பதைத் தாண்டி மூன்றாவது தலைமுறை என்று சொல்லக்கூடிய அளவிலே இந்தக் கொள்கை பரவியிருக்கிறது.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடியிருக்கிறது என்பதற்கு அடையாளமாக நடை பெறக்கூடிய இந்த மண விழாவை நடத்திவைப் பதிலே நாங்கள் எல்லாருமே மிகுந்த மகிழ்ச்சி யும், பெருமையும் அடைகின்றோம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இது எங்களுடைய குடும்பம். நம்முடைய குடும்பம். தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பத்தில் இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலே நம்மை இங்கே வரவேற்று - வரவேற்புரை வழங்கிய அருமை அய்யா அவர்கள் கூறியதைப் போல, அண்ணன் ராஜசேகரன் என்று அழைக்கப்படக் கூடியவர்; அதேபோல சத்தியேந்திரன். இவர்கள் இருவரும் மிகப்பெரிய அளவிலே தொண்டு செய்தவர்கள்.

இயக்கத்திலே, திராவிடர் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும், பிறகு அவர்கள் பெரும் பொறுப் புகளுக்கு வந்த பிற்பாடு தந்தை பெரியார் அவர் களுடைய தொடர்பை என்றைக்குமே அவர்கள் மறந்ததில்லை. அதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அதற்கடுத்த தலை முறை என்று இப்பொழுது தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை வழியிலே இந்த மணவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்களுடைய வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைப்பதிலே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற மணவிழாக் களை நடத்தி வைப் பதிலே முதலிலே நினைவு கூர வேண்டியவர்கள் நமது வீரவணக்கத்திற்குரியவர்கள். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த மணமுறையைப் புகுத்தினார்கள். அதன் பிறகு நாடு முழுக்க இந்த சுயமரியாதைத் திரும ணங்கள் ஏராளம் நடை பெற்றன.

திடீரென்று சென்னை உயர்நீதி மன்றத்திலே இந்த மணமுறை செல்லாது என்று தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிற் பாடுகூட, தொடர்ந்து சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன.

தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்கள் சுயமரியாதைத் திரும ணங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னாலே நடத்தி வைத்தபொழுது அது செல்லாத திருமண மாகத்தான் இருந்தது.

எங்களுடைய குழந்தைகள்கூட, சட்டபூர்வமான தகுதியைப் பெற்றார்களா என்றால், கிடையாது என்ற ஒரு வேதனையான சட்ட நிலை இருந்தது. அதைப் போக்கிய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்து, தந்தை பெரியார் அவர்களுக்கே அமைச்சரவையை காணிக்கை யாக்குகிறேன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட பூர்வமாகச் செல்லும் என்ற நிலையை உருவாக் கினார்கள்.

எனவே, இப்பொழுது இந்த மணவிழா சமுதாயத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட மணவிழா. சட் டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருமணம். இதுவே 1967க்கு முன்னாலே அய்யா நீதியரசர் போன்றவர்கள் தலைமை ஏற்று நடத்தினாலும் அப்பொழுதும் சட்டப்படி செல்லாது என்ற நிலை. நீதியரசர்கள் கண் முன்னாலேயே இருந்தது.

இப்பொழுது அந்த நிலைமைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. எனவே, அந்த வகையிலே இந்த மணமுறை பாராட்டத்தக்கஒன்று. எனவே அய்யா, அண்ணா அவர் களை நினைவுகூர்ந்து மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை நடத்திக் கொள்கின் றார்கள்.

(தமிழர் தலைவர் மணவிழாவினை நடத்தி வைத்தார்.)

இங்கே மிகவும் எளிதாக வாழ்க்கை இணை நல ஏற்பு விழா நம் அனைவருடைய முன்னி லையில் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதைப் போல இந்தத் குடும்பம் இந்தக் கொள்கையைப் பல தலை முறைகளாக ஏற்றி ருக்கக்கூடிய குடும்பம். அதிலே எனக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி என்னவென்றால் சத்தியேந்திரன், அண்ணன் ராஜசேகரன் குடும்பத்தை இங்கே இருக்கின்றவர் கள் அதிகமாக அறிந்த வர்கள்.

அதே நேரத்திலே நம் முடைய கஸ்தூரி ரத்னாகரன் அவர்களுடைய தந்தையார் முருகேசன் - தாயார் சரசுவதி அம்மையார் இங்கே வந்திருக்கின்றார்கள்.

முருகேசன் அவர்கள் நான் மாணவப் பருவத் திலே இருந்தபொழுது அறிந்தவன்.

ஈரோட்டிலே கோடைக்காலத்திலே பயிற்சி முகாம் முடித்த மாணவர்களை ஒவ்வொரு ஊருக்கும் பேச, தந்தை பெரியார் அவர்கள் அனுப்பிவைப்பார்கள். தருமபுரி, சேலம் மாவட்டத்துடன் இணைந் திருந்தது; பிறகுதான் பிரிந்தது; பிறகுதான் கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிந்தது.

அந்தக் காலகட்டத் திலே அவர்களோடு அங்கே இருந்த இயக்க முக்கியஸ்தர்களிலே தருமபுரியைச் சேர்ந்த திரு.நஞ்சையா அவர்கள் மிக முக்கியமானவர்கள். அதுபோலவே பொன்னு சாமி அவர்கள் முக்கியமானவர்கள். இன்னும் பல்வேறு இயக்கப் பெரியோர்கள் எல்லாம் அன் றைக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்களாக இருந்தவர்கள்.

அந்த வகையிலே முருகேசன் அவர்களை மிக நன்றாக நான் 1946லேயே அறிவேன். அந்தவகையிலே மிக பெருமைக்குரியவர் நமது ரத்னாகரன் அவர்களுடைய மாமனார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களிடத்திலே மிகவும் நகைச்சுவையோடு பேசிக்கொண்டிருப்பார். ஆகவே அவர்களை நாங்கள் நன்றாக அறிவோம்.

அதுபோல அம்மையார் அவர்கள் திட்டக் குடிக்குப் பக்கத்திலே ஆற்றலூர் என்று ஒரு கிராமம். அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றவர் ஆற்றலூர் இராமசாமியார். தென்னாற்காடு மாவட்டத்திலே அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. நான் கடலூரைச் சார்ந்தவன். அந்தவகையிலே இந்த இயக்கத்திலே தொடர்பு வைத்துக்கொண்டிருக்கக் கூடியவர்கள்.

அவருடைய மகளார் தான் சரசுவதி அவர்கள். இங்கேகூட நம்முடைய ரத்னாகரன் அவர்களு டைய மைத்துனர் சற்று நேரத்திற்கு முன்னாலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடி தத்தைப் போட்டு நகல் எடுத்து இங்கே காட்டினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் ஒரு பரிந் துரைக் கடிதம் எழுதியிருக்கின்றார்கள். பரிந்துரை என்று சொல்லும் பொழுது, உத்தியோகம் மாறுதல் என்று நீங்கள் நினைக்கலாம்.

அந்தப் பரிந்துரையை சற்று நேரத்திற்கு முன் பார்த்தேன். இது ஒரு கருவூலமான கடிதம் என்று அவர்களிடத்திலே சொன்னேன். நம்முடைய கஸ்தூரி அவர்கள்கூட என்னிடத்திலே அழைப்புக் கொடுத்த நேரத்தில் இந்தச் செய்தியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர் ஆற்றலூர் ராமசாமி அவர்களுடைய மகள் சரசுவதி அவர்கள், குடும்பத் தலைவராகக் கருதி பல இடங்களிலே பெண்ணையோ, மண மகனையோ வேண்டி நல்ல பெண்ணாக இருந் தால் சொல்லுங்கள் அல்லது நல்ல பையனாக இருந்தால் சொல்லுங் கள் என்று சொல்வார் கள்.

இன்றைக்கும் இந்தக் குடும்பங்களிலே அப் படிப்பட்ட உறவும், உரிமையும் உண்டு. என்னு டைய துணைவியார் அவர்களிடம்கூட நல்ல பெண் இருந்தால் சொல் லுங்கள் அல்லது நல்ல பையன் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்வார்கள். எங்களிடத்திலே இப்படி வருவது வாடிக்கை.

ஒரு குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்து கேட்டி ருக்கின்றார். ஆனால், அவர்கள் இப்பொழுது திருமணம் செய்துகொள்ளக் கூடிய வாய்ப்பு இல்லை என்று அய்யா அவர்கள் சொல்லிவிட்டு, அய்யா அவர்கள் சொன்னார்.

நான் சிறப்பான ஒருவரைப் பரிந்துரை செய்கிறேன். நீங்கள் உங்களுடைய பெண்ணை அவருக்குக் கொடுக்க லாம் என்று சொன்னார். நல்ல அழகானவர். நல்ல குடும்பம். அதைவிட நாணயமானவர் என்று அய்யா அவர்கள் அவரு டைய கையெழுத்தி லேயே எழுதியிருக்கின் றார்கள்.

இப்படி எழுதி அய்யா அவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றார். இவர்கள் தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்த வர்கள். அவர்கள் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந் தாலும் மணவிழாக்கள் அன்றைக்கு நடைபெற் றன. ஒரு தலைமுறை, இரண்டாவது தமுறை, மூன்றாவது தலைமுறை என்று தொடர்ந்து மணவிழாக்கள் நடை பெற்றிருக்கின்றன. எனவே இவ்வளவு சிறப் பான குடும்பம். வழக்க மாக நானும், நீதியரசர் அவர்களும் தொடர்ந்து தந்தை பெரியா அவர் களுடைய காலத்தில் இருந்து அன்னை மணி யம்மையார் காலத்திலி ருந்து இந்தக் குடும்பங் களினுடைய மணவிழா வில் நாங்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின் றோம்.

அதேபோல நம் முடைய ராஜசேகரன் அவர்களுடைய மண விழாதான் நாங்கள் கலந்துகொள்ள வாய்ப் பில்லாத மணவிழாவாக இருந்தது. காரணம் நான் மிசா கைதியாக சிறைச் சாலையிலே இருந்தேன். நான் சிறை அதிகாரி களிடம் ஒரு தாள் வாங்கி - ஏனென்றால் கடிதம் எழுத வேண்டுமானால் கூட அவர்களுடைய அனுமதி கிடைத்தால் தான் கடிதம் எழுத முடியும். நெருக்கடி காலத்தில் என்ன எழுது கின்றோம் என்பதை அவர் கள் தணிக்கை செய்து தான் அனுப்புவார்கள்.

நான் வாழ்த்து எழுதியதை சிறை அதிகாரி தணிக்கை செய்து அனுப்பினார்கள். நமது நீதியரசர் சத்தியேந்திரன் அவர்கள் எந்த உணர் வோடு இருந்தார்கள் என்பதற்கு அடையாளம் அதை அவர்கள் கண் ணாடிக்குள் வைத்திருந்தார்கள். நான் சிறை யைவிட்டு வெளியே வந்தபொழுது பார்த் தேன். எவ்வளவு நெருக் கமுள்ள குடும்பம். எங்களைப் பொறுத்தவரை யிலே இரத்தப்பாசம் என்பதைவிட, கொள் கைப்பாசம் மிகவும் நெருக்கமானது.

எனவே, அப்படிப் பட்ட இந்த அரிய குடும்பத்திலே, இந்தத் தலைமுறைகள் நன்றாக உணர்ந்திருக்கின்றன. தம்மின், தம்மக்கள் அறிவுடைமை என்று வள்ளுவர் அவர்கள் சொல்வார்கள்.

ஆனால், பிள்ளைகள் தம்மின், தம்மக்கள் கொள்கை உடைமை என்று ஆக்கியிருக்கின் றார்கள். இந்த முறை யிலே திருமணம் செய்து கொள்ளுவார்கள்.

வழக்கமாக இந்தக் குடும்பத்திற்குத் தந்தை பெரியார் அவர்களு டைய காலத்திலே இருந்து தொடர்புடைய குடும்பம் ஒரு குறுகிய ஜாதி வட்டத்திற்குள் ளேயே திருமணங்களை முடித்துக் கொள்கின் றார்களே என்று சில விமர்சனங்கள் இந்தக் குடும்பத்தைப் பற்றி வைக்கப்பட்டது ஒரு காலகட்டத்திலே. அது வும் எங்கள் காதுகளுக்கு வந்ததுண்டு. ஆனால், அதையும் நீக்கிய பெருமை யாருடைய தென்றால் இளைய தலைமுறையினருக்கு. எனவே இவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. (கைத் தட்டல்)

எனவே, உங்களு டைய தந்தையர்களுக்கு நீங்கள் வழிகாட்டக் கூடியவர்களாக மாறி யிருக்கின்றீர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செய்திருக்கின்றார்கள்.

ஜாதி இயற்கையான தல்ல. அது ஒரு செயற்கையான கற்பனை. நீண்ட காலமாக நம் மூளையிலே பூட்டப் பட்ட விலங்கு. ஆனால், இன்றைக்கு அறிவியல் பூர்வமாகவே அது உடைக் கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் உடல் உறுப்புகளைத் தானம் செய்யக்கூடிய ஒரு நல்ல மனித நேயம் வந்திருக் கக்கூடிய காலகட்டத் திலே அந்த உறுப்புகள் பொருத்தப்படுவதில் ஜாதி பார்ப்பதில்லை. எந்த இரத்தப் பிரிவு என்று இரத்தப்பிரிவை பார்க்கிறார்களே தவிர, உடல் ஏற்றுக்கொள் கிறதா என்று பார்க் கிறார்களே தவிர செட்டியார் இரத்தம் செட்டியாருக்கே, நாடார் இரத்தம் நாடாருக்கே, அய்யங்கார் இரத்தம் அய்யங்காருக்கே என்று பார்ப்பதில்லை.

எனவே, ஜாதி இல்லை. மதம் இல்லை. மனித நேயம்தான் இருக் கிறது. எனவே, அப்படிப் பட்ட அரிய குடும்பம் இந்தக் குடும்பம். இந்த மணவிழாவை நடத்தி வைப்பதிலே பெருமைப் படுகின்றோம். அதைவிட ரொம்பப் பூரிப்பானது இன்னொரு பெரிய வெற்றி, கொள்கை ரீதி யாக ஜாதி வீழ்ந்திருக் கிறது என்பதற்கு அடை யாளம் இந்த அரங் கத்தைப் பாருங்கள். இந்தப் பக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நிதியரசர். அந்தப் பக்கம் இன்னொரு நீதி யரசர்.

அவர்கள் தீர்ப்புகள் எழுதினால் ஒருபோதும் திசை திரும்பாத தீர்ப்புகள். ஆற்றல் மிகுந்த தகுதியும், திறமையும் இவர்களிடத்திலே பஞ்ச மில்லை என்கிற அள வுக்கு இருக்கக்கூடிய வர்கள்.

ஒரு காலத்திலே நமக்குத் தகுதியில்லை. திறமையில்லை என்று சொன்ன காலத்திலே எங்களுக்குத் தகுதி உண்டு, திறமை உண்டு என்று காட்டிய நேர்மை யான நீதியரசர்கள் - சிறந்த வழக்கறிஞர்கள் - சிறந்த நிர்வாகிகளைப் பெற்றிருக்கின்ற தென் றால் பெரியாரின் தொண்டு பூத்தது - காய்த்தது - கனிந்தது. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தலைமுறையிலே என்ற பெருமை இருக் கிறதே அது எங்களைப் போன்றவர்களை நீண்ட காலம் வாழவைக்கக் கூடிய மாமருந்தாக அமை யும் என்று சொல்லி இந்த மணமக்கள் வாழ்க!

மணவிழாவிற்கு வந்திருக்கின்றவர்கள் சிறப்பாக வாழ்க! இந்தக் குடும்பம், இந்தக் கொள் கையைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

ஒரு வேண்டுகோள். நிறையபேர் படிக்கின்றார்கள். நல்ல அளவுக்கு உயருகின்றார்கள். பெரும் பதவியிலே இருக்கின் றார்கள். அதுவும் கணி னித் துறை கொஞ்சம் பின்வாங்கி இருக்கலாம். அது தற்காலிகப் பின் னடைவே தவிர நிரந் தரமல்ல. நிறைய, கை நிறைய சம்பாதிக்கின் றார்கள்; பட்டங்களைப் பெறுகின்றார்கள்; பெருமைதான்.

ஆனால், அதே நேரத்திலே உங்களுடைய பெற்றோர்களை, உங் களை ஆளாக்கியவர் களை, உங்களை வளர்த் தவர்களை. உங்களுக் காக உழைத்தவர்களை, உங்களுக்காகத் தியாகம் செய்தவர்களை குடும்பத் தவர்களை அருள்கூர்ந்து நன்றி உணர்வோடு என் றைக்கும் நினையுங்கள்.

பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் எதிர் பார்ப்பது பாசஉணர்வு. அது அதிகமாகக் குறைந்து வரக்கூடிய ஒரு போக்கு. பல குடும்பங் களிலே இருந்து கொண்டிருக்கிறது.

அதற்கும் நீங்கள் விதிவிலக்காக இருந்து இந்த கொள்கையை ஏற்றவர்கள். சிறப்பாக இருப்பார்கள் என்பதைச் சொல்லி நன்றி உணர்வு, பாச உணர்வு, மனித நேயம், சமுதாயத்திற்காக நீங்கள் உழைக்க வேண் டிய தொண்டறம் ஆகிய வற்றை உங்கள் இல்ல றத்தோடு சேர்த்து நடத் துங்கள் என்று சொல்லி நல்ல பகுத் தறிவாளர் களாக, நல்ல தன்னம்பிக் கையாளர்களாக வாழுங் கள் என்று சொல்லி மணமக்கள் வாழ்க! பெரியார் வாழ்க! பகுத்தறிவு வளர்க! என்று கூறி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

0 comments: