Search This Blog
4.3.09
நாம் வேண்டும் பெண்ணுரிமை எப்படிப்பட்டது?
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வது - வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்த மென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதேயொழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண்ணுரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.....
....பத்துமாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட மாறுபட்டுவிட வேண்டியதில்லை.....
.......உண்மையான சமத்துவத்துக்கு மதிப்பு கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமானால், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது உறுதி.......
-------------------'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற
நூலில் பெரியார் - பக்கம்:-22(17- ஆம் பதிப்பு 1989)
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment