Search This Blog
11.3.09
பார்ப்பனத் துவேசம் காரணமல்ல!
பரிதாபமே!
"இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்."
-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 8.9.1940
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//தந்தைபெரியார் - "குடிஅரசு", 8.9.1940//
1940 ல அந்த கடவுள் சொல்லிட்டு போயிட்டாருன்னு இன்னும் நீங்க பக்தர்கள் கடைபிடிக்கிறிங்களோ!
பெரியார் கடவுளா?
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தனது 95 வயது வரையிலும் வாழ்ந்த பெரியாரை கடவுளாகச் சித்தரிக்கும் உங்களின் செயல் சரியல்ல.
தான் அதிசயமானவனும் அல்ல, மகானும் அல்ல என்பதை பெரியார் ஏற்கனவே விளக்கியுள்ளார். உங்களுக்கு ஏற்பட்டுள்ள அய்யப்பாடு (டவுட்) நீங்க பெரியாரின் மேற்கோளை கீழே தருகிறேன். படியுங்கள். சிந்தியுங்கள்.
"நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.
நான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்."
--------பெரியார் சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960
வால்பையன் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பது நல்லது.
பிறகு ஏன் இன்னும் 1940-ல் சொன்னதையே எழுதி கொண்டிருக்கிறார்கள்! இன்று என்ன தேவை! சமூகத்தின் இன்றைய நிலை என்ன? என்று புதிதாக எதையாவது எழுத வேண்டியது தானே!
1940- இல் இருந்த நிலையே இன்னும் சில இடங்களில் கானப்படுவதால் அதைப் போக்கும் முயற்சியாகவும், அதை உணர்த்தும் பொருட்டும் பெரியார் கருத்தை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது. அது மட்டுமல்ல 1940 இல் இந்த நிலை இருந்தது என்ற வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.
சுட்டிக்காட்டுவது கூட
வால் பையனுக்கு பொறுக்க வில்லை. கோவிலை சுத்தம் செய்ய சென்ற மாணவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் வெளியே சென்று விடவும் என்று கூறிய பார்ப்பன அர்ச்ச்கன 2009 லும் இருக்கிறானே .(இச்செய்தியை அறிந்த போது ரத்தம் கொதிக்கிறது)
இதற்கு பெரியாரின் வைத்தியம்தான் தேவைபடுகிறது. இதை விட்டால் வேறு வைத்தியம் இருந்தால் வால் பையன் பரிந்துரைக்கட்டும்.
நாங்கள் 1940 லும் தந்தையை அப்பா என்றுதான் அழைத்தோம் , அம்மாவை அம்மா என்று தான் அழைத்தோம். அந்த தமிழர்களின் பண்பாட்டை இன்றும் கடைபிடிக்கிறோம்.
அதற்காக 1940 ல் அழைத்தது பொலவே இப்போது அழைப்பது சரியா? என்று கேடமாட்டர் என்ரு நம்புவோம்.
வால்பையன் இப்போது எப்படி அழைக்கிறார் என்ரு தெரியவில்லை. விளக்கினால் விளங்கிக் கொள்கிறோம்.
யாரையும் புண்படுத்துவதற்காக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதில்லை. பண்படுத்துவதற்காகவே.
ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம்.
சமூகத்தின் இன்ரைய நிலையான பார்ப்பன அர்ச்சகனின் அயோக்கியத்தனத்தை சொல்லியுள்ளேன். அதற்கு வால்பையனின் எதிர்வினை பற்றி அறிந்து பின் தொடர்வோம்.
நன்றி.
//கோவிலை சுத்தம் செய்ய சென்ற மாணவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் வெளியே சென்று விடவும் என்று கூறிய பார்ப்பன அர்ச்ச்கன 2009 லும் இருக்கிறானே .//
எதுக்குங்க நாம கோவிலை சுத்தம் பண்ண போணும், பள்ளிகளை சுத்தம் செய்யலாம்.
//(இச்செய்தியை அறிந்த போது ரத்தம் கொதிக்கிறது)//
இதே போல் மற்ற உயர்சாதிகளும் செய்யும் போது ஏன் ரத்தம் கொதிக்கவில்லை. அது தான் என்னுடய கேள்வி!
//இதற்கு பெரியாரின் வைத்தியம்தான் தேவைபடுகிறது. இதை விட்டால் வேறு வைத்தியம் இருந்தால் வால் பையன் பரிந்துரைக்கட்டும்.//
சாதிய முறைகளை ஆதிர்ப்பதை விட்டுவிட்டு சமதர்ம சமுதாயமாக உணர்வோம், சாதியை விரும்புவனை உதாசினபடுத்துவோம்.
சடங்குகளுக்கு ஏன் பார்பனனை கூப்பிடனும், அப்புறம் குத்துதே குடையுதேன்னு சொல்லனும்.
//நாங்கள் 1940 லும் தந்தையை அப்பா என்றுதான் அழைத்தோம் , அம்மாவை அம்மா என்று தான் அழைத்தோம். அந்த தமிழர்களின் பண்பாட்டை இன்றும் கடைபிடிக்கிறோம்.
அதற்காக 1940 ல் அழைத்தது பொலவே இப்போது அழைப்பது சரியா?//
1940 -ல் நான் பிறக்கவேயில்லை, அதை விடுங்கள், பழக்க கலாச்சரச்சதை ஆதரிப்பது போல் வாதம் புரிகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆளா இல்லை படத்தில் இருப்பது போல் குழுந்தையா!
இப்படி ஒரு கேள்வி கேட்டால் பார்ப்பான் கேட்க மாட்டானா?
அதற்கு முன்னர் இருந்தே சாதிய முறைகள் இருக்குதுன்னு!
//யாரையும் புண்படுத்துவதற்காக இந்த விவாதங்கள் நடத்தப்படுவதில்லை. பண்படுத்துவதற்காகவே.//
இவீடத்தில் கூட நீங்கள் நாலும் தெரிஞ்ச நாட்டாமை மாதிரி தான் பேசுகிறீர்கள்,
நீங்கள் யாரை பண்படுத்தபோகிறீர்கள்,
வேறொருவர் சொன்ன கருத்துகளாஇ ஒப்பிக்கிறீர்கள். சொந்தமாக உங்களிடம் என்ன கருத்து இருக்கிறது.
மற்றவர்களை பண்படுத்தும் முன் நீங்கள் முதலில் பண்படுங்கள்
//சமூகத்தின் இன்ரைய நிலையான பார்ப்பன அர்ச்சகனின் அயோக்கியத்தனத்தை சொல்லியுள்ளேன். அதற்கு வால்பையனின் எதிர்வினை பற்றி அறிந்து பின் தொடர்வோம்.//
நான் சாதி, மத, கடவுள்களை எதிப்பவன்.
பார்பான் அர்ச்சனை பண்ணாலும், பீ பேண்டாலும் எனக்கு ஒன்னு தான்.
//எதுக்குங்க நாம கோவிலை சுத்தம் பண்ண போணும், பள்ளிகளை சுத்தம் செய்யலாம்.//
ஏதோ நாம விருப்பப்பட்டு போனது போல் வால்பையனை வாஇச் ச்ழட்டியுள்ளார். இது குறித்த நிகழ்வுகளின் உண்மைப் பின்னணி என்ன?
"ஒக்கநாடு மேலையூரில் நடந்தது என்ன?
உரத்தநாட்டையடுத்த ஒக்கநாடு மேலையூரில் கோயிலுக்குள் தாழ்த்தப் பட்டோர் அனுமதிக்கப் படவில்லை என்ற குற்றச்சாற்றுக் குறித்து திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் நா. இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளதாவது:
ஒக்கநாடு மேலையூரில் உரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிர் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப் பணி திட்டம் முகாம் 4.3.2009 முதல் 7.3.2009 வரை நடைபெற்றது. இம்முகாமில் 100 மாணவிகள் கலந்து கொண் டனர். இந்த முகாம் சென்ற ஆண்டும் இங்கே நடைபெற்றது. கடந்த 5.3.2009 அன்று காலை முகாமில் உள்ள மாணவிகளை குழுக்களாக பிரித்து ஒரு குழு பள்ளியையும், மற்றொரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும், மூன்றாவது குழுவில் 50 பேர் இங்கே உள்ள பிரகதீஸ்வரர் கோயில் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தவும் அனுப்பப்பட்டனர். மாணவிகள் கோயிலுக்கு சென்ற பின் திட்ட அலுவலர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மாணவி களை செல்லக் கூடாது எனக் கூறியிருக்கிறார்கள். அதனால் மாணவிகள் அனைவரும் வெளியில் நின்று கொண்டு இருப்பதாக கூறினார் கள். நான் உடனடியாக இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்றேன். அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் ம. துரைராசு அவர்கள் இருந்தார். யார் தடுத்தது என கேட்ட போது அங்கு கோயில் பணியாற்றும் மூர்த்தி எனும் பார்ப்பான் தாழ்த்தப்பட்ட மாணவிகள் உள்ளே வந்தால் அவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கூறியதாக தெரி வித்தார்கள். ஊராட்சி மன்றத் தலைவரும், நானும் பார்ப்பான் மூர்த் தியை கண்டித்து விட்டு மாணவிகளை உள்ளே சென்று சுத்தப்படுத்த சொன்னோம். மாணவி கள் மதியம் 1 மணி வரை சுத்தம் செய்தனர். பிறகு மாணவிகளை ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தோம். மறுநாளும் மாணவிகள் அங்கே சென்று கோயிலை சுத்தம் செய்துவிட்டு வந்தனர். நான்கு நாட்கள் முகாம் சிறப்பாக நடை பெற்றது.
கடந்த 8.3.2009 காலை 10 மணிக்கு காவல்துறையில் இருந்து வந்து மாணவிகளை கோயிலுக்கு செல்ல யாராவது தடுத்தார்களா? என விசாரித்தனர். மாணவிகள் அனைவரும் இங்கு ஒன்றும் பிரச் சினை இல்லை என தெரிவித்தனர். சற்று நேரத்தில் மக்கள் டி.வி., ஜெயா டி.வி., இராஜ் டி.வி., செய்தியாளர்கள் வந்தனர். அவர்கள் திட்ட அலுவலரிடம் சம்பவம் குறித்து கேட்டார்கள். அவர்கள் இங்கு பிரச் சினை இல்லை என்று கூறிவிட்டார்கள். சம்பந் தப்பட்ட மாணவிகளும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள். பிறகு ஊராட்சி மன்றத் தலைவரிடம் மறுப்பு பேட்டி எடுத்துக் கொண்டு சென்றனர். பிறகு அங்குள்ள தாழ்த் தப்பட்டவர்கள் வசிக்கும் தெருவிற்கு சென்று மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்க செயலாளர் பிச்சைக்கண்ணு என் பவரிடமும், அங்குள்ள பெண்ணிடமும் பேட்டி எடுத்துச் சென்றனர். இந்நிலையில் 9.3.2009 அன்று மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்க செயலாளர் பிச்சைக் கண்ணு பார்ப்பான் மூர்த்திமீது வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். வழக்கு காவல் துறை விசாரணையில் உள்ளது. இவ்வாறு நா. இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்."
பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிர் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப் பணியைத் த்டுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட பார்ப்பன அர்ச்சகன் பீ பேண்டாலும் அர்ச்சனை செய்தாலும் வால்பையனக்கு வேண்டுமான்ல் ஒன்றாகத் தெரியலாம். நமக்கு அப்படித்தெரியவில்லை.
இன்னும் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாமல் தடுத்துக் கொண்டிருப்பது உயர் ஜாதியினர் (பார்ப்பனரல்லாதார்) அல்ல. பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பான் எந்த இடத்தில் நின்று மணி ஆட்டுகிறானோ அந்த இடத்தில் நின்று மற்ற ஜாதியானும் மணி ஆட்ட வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். இது ஏதோ வேலைவாய்ப்பு அல்லது வேறு பிரச்சினைக்காக அல்ல. உரிமைப் பிரச்சினை. பார்ப்பானுக்கு என்னன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் மற்ற ஜாதிக்காரனுக்கும் உண்டு என்ற அடிப்படையில் கேட்கிறோம்.
//சாதிய முறைகளை ஆதிர்ப்பதை விட்டுவிட்டு சமதர்ம சமுதாயமாக உணர்வோம், சாதியை விரும்புவனை உதாசினபடுத்துவோம்.//
இதில் ஒன்றும் எனக்கு பெரிய கருத்து மாறுபாடு இல்லை. உடன் படுகிறேன்.
ஜாதி ஆதிக்கத்தை கடைபிடிப்பது யார்? பார்ப்பனர்களா? மற்றவர்களா?
"ஜாதியையை இன்றுவரை காப்பாற்றி வருவது யார்? என்பதை கீழ்கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.
அனைவரும் ஒரே ஜாதியாக இருக்கவிடாமல் இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பது எது? பார்ப்பனர்களும் அவர்கள் உண்டாக்கிய சாஸ்திரங்களும் ,சம்பிரதாயங்களும்தானே.
நான் இப்போது சுட்டிக்காட்டுவதை தாங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
தெளியுங்கள்.
"ஜாதி அடுக்குமுறை உருவாகியது என்பதைவிட்ட உருவாக்கியதின் நோக்கம் பற்றி அறிந்து கொண்டால் ஜாதிக் கலவரம் ஏற்படுவது ஏன்? அதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? என்பது புலப்படும்.
ஊண்றிப்படித்து உண்மையை அறிக.
ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன?
நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!
பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!
பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை
மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதிமுறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு நிலையாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.
இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் (Graded inequality) அடுக்குமுறை பேதமுறை - ஜாதி முறை என்றார்!
இதில் 5 ஆம் ஜாதி என்ற தாழ்த்தப்பட்ட நமது ஆதிதிராவிட சகோதரர்களைக்கூட ஒரு பிரிவாக இருக்கவிடாமல், பறையர், பள்ளர், அருந்ததியினர் (சக்கிலியர்) என்று பிரித்து அவர்களுக்குள்ளேகூட ஒருவர் இன்னொருவரோடு இணையவிடாத பிரித்தாண்ட சூழ்ச்சியை ஆரியம் செய்தது!
வர்க்கப் பிரிவில் இப்படி அடுக்குமுறை அமைப்பு கிடையாது. முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை என்ற அளவில் மட்டுமே - வருணப் பிரிவில் மட்டும் இந்தப் பெருங்கொடுமை!
இந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்கள்தான் அதிகமான உழைப்பைச் சமூகத்திற்குத் தந்துவிட்டு, தாங்கள் குந்தக் குடிசையின்றி, குடிக்கக் கூழின்றி, படுக்கப் பாயின்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களாக மண் புழுக்களைவிட கேவலமாக, பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர் நமது பாரத புண்ணிய பூமியில்
----------- தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையிலிருந்து "விடுதலை" 24-11-2008."
இப்போது புரிகிறாதா? பார்ப்பனர்களின் நயவஞ்சகமான நரித்தனம்.
----------------------
இது குறித்த பெரியாரின் கருத்தையும் உங்கள் பார்வைக்கு வைக்கிரேன்.
"நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.
இப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.
உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு. அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்: ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும். நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.
பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை. ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.
முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம். அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!
பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
(புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் ஆற்றிய சொற்பொழிவு)"
இதில் உள்ள கருத்துக்களின் உண்மையை ஆழ்ந்து சிந்தியுங்கள்.
நான் என்னுடைய புலமையைக் காட்ட இந்த வலைப்பதிவைத் தொடங்கவில்லை. அதை எனது டைரி போல் பயன் படுத்தவும் விருப்பமில்லை. மக்களுக்கு வரலாற்ரியை உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டுவருகிறேன். அவ்வளவே.
உங்களைப்போல் திறமையானவன் இல்லை என்பதற்காக இதில் சொல்லியுள்ள கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல் ஊன்றிப் படித்து சிந்திக்க வேண்டுகிறேன்.
நீங்கள் குறிப்படுவது போல் நான் நாட்டாமையும் அல்ல. உங்களைப் போன்ற திறமையானவர்களிடம் நியாயம் கேட்கிறோம் அவ்வளவே.
//உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆளா இல்லை படத்தில் இருப்பது போல் குழுந்தையா!//
நான் பெரிய ஆள் அல்ல.பரிணாம வளர்ச்சி பெற்ற சாதாரண மனிதன்.
----------தொடர்வோம்..
//இன்னும் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாமல் தடுத்துக் கொண்டிருப்பது உயர் ஜாதியினர் (பார்ப்பனரல்லாதார்) அல்ல. பார்ப்பனர்கள்தான்.//
எங்க சுத்தியும் இங்க தான் வருவிங்கன்னு நினைச்சேன்.
சரி உங்க பேச்சுக்கே வருவோம். தற்பொழுது நமது நாட்டிற்க்கு முக்கிய தேவை தனிமனித முன்னேற்றமா அல்லது தனிமனிதன் அர்ச்சகராவதா?
கடவுளே வேணாம்கிறேன். அனைத்து சாதிகள் அர்ச்சகர் ஆகலைன்னு வருத்தப்ப்பட்டுகிட்டு இருக்க்கிங்க!
மற்றொரு வேண்டுகோள்!
கருத்துகளை நறுக்கு தெரித்தாற் போல் சுருக்கமாக சொல்லுங்கள்!
கி.மு-கி.பி ஆரம்பிச்சு படிக்க தாவூ தீர்ந்தா வேற யாரும் உரையாடலுக்கு வரமாட்டாங்க!
நான் அலுவலகத்தில் வேலையும் செய்து கொண்டு உங்களுடன் உரையாட வேண்டும்.
//பார்ப்பானுக்கு என்னன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் மற்ற ஜாதிக்காரனுக்கும் உண்டு என்ற அடிப்படையில் கேட்கிறோம்.//
பார்ப்பனனை நீங்களே தூக்கி பிடிக்கிறீர்கள்.
அவன் மட்டும் மூக்கிலா சாப்பிடுகிறான்.
அவனும் மனிதன் தானே! அப்புறம் அவனுக்கென்ன தனியாக கொம்பு!
போட மசுருன்னு துக்கி போட்டு போய் கிட்டே இருக்கவேண்டியது தானே!
//இப்போது புரிகிறாதா? பார்ப்பனர்களின் நயவஞ்சகமான நரித்தனம்.//
சரி அவன் நரியாகவே இருகட்டும், நாம் என்ன மரக்கட்டைகளா?
அவன் சொன்னான் என்பதற்காக எல்லாரும் அதை கடைபிரிக்கிறார்கள் இல்லையா! இப்பொழுது விழிப்புணர்வு கடைபிடிப்பவனிடம் தானே அதிகம் செலுத்த வேண்டும்.
உத்தபுரம் மற்றும் நீங்கள் பல கிராமங்கள் தலித்துகளை உயர்சாதியினரால் அடிமைகளாக நடத்தபடிகிறது.
வெறும் பார்பன எதிர்ப்பால் இதை மாற்ற முடியாது. நேரடியான களப்பணி வேண்டும்
//இதில் உள்ள கருத்துக்களின் உண்மையை ஆழ்ந்து சிந்தியுங்கள்.//
இப்படி பக்கம் பக்கமாக காப்பி பண்ணி போடுவது எப்படி தெரியுமா இருக்கு!
இஸ்லாமிரர்களிடமும், கிருஸ்துவர்களிடமும் உரையாடும் போது,
பைபிள்ல இப்படி போட்ருக்கு, குரான்ல இப்படி போட்ருக்கு உண்மையை ஆழ்ந்து சிந்தியுங்கள் சொல்லுவாங்க அது மாதிரி இருக்கு!
அப்ப நீங்க பெரியாரின் பாலோயர் என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா!
//நீங்கள் குறிப்படுவது போல் நான் நாட்டாமையும் அல்ல. உங்களைப் போன்ற திறமையானவர்களிடம் நியாயம் கேட்கிறோம் அவ்வளவே.//
நியாயம் எங்கிட்ட கேட்டு எங்க பண்றது!
நானும் நாட்டாமை இல்லையே!
பெரிய நாட்டாமை மஞ்ச துண்ட போட்டுகிட்டு பார்பனர்களையே உதவியாளர்களாக வைத்து கொண்டு திரிகிறார்.
நீங்க என்னடானா நாட்ல இருக்கிற எவ்வளவோ பிரச்சனைகளை விட்டுட்டு பார்பான் ஒழிக ஒழிகன்னு கத்திகிடு இருக்கிங்க!
உங்க கூட சேர்ந்து தாழ்த்தபட்ட மக்களும். ஆனா பாப்பான் இதை சட்டையே செய்யாம அவன் படிச்சா வெளிநாடு போய் செட்டில் ஆகுறான்.
பார்ப்பான் ஏற்படுத்துன மூடநம்பிக்கைகளை விட இப்பொழுது இருக்கும் நம்பிக்கைகள் தாழ்த்தபட்ட மக்களுக்கு ஒரு புண்ணாக்கும் செஞ்சா மாதிரி தெரியல!
என்ன தான் உங்க முடிவு!
//தற்பொழுது நமது நாட்டிற்க்கு முக்கிய தேவை தனிமனித முன்னேற்றமா அல்லது தனிமனிதன் அர்ச்சகராவதா?//
முதலில் மனிதனுக்கு தேவை பொது உரிமை. அந்த உரிமை இந்த நாட்டில் சரி சமமாக அனைவருக்கும் உண்டா?
இது பற்றி பெரியாரின் கருத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
( சில உண்மைகளைச் சொல்லும் போது விளக்கமாகச்சொல்ல வேண்டியிருக்கிறது. நறுக்குத்தெரித்தார் போல் சொல்ல வேண்டிய விசயமல்ல இது. மூளைக்கு போட்டுள்ள விலங்கு கண்ணுக்கு தெரியாது. தெரிய வைக்க விள்க்க வேண்டும்)
"
பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டு, மற்ற மக்களுக்கு மேலானவர்களாக நடந்துகொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல் - அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், மரியாதைக் கட்சியையும் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வர்ணாசிரமக் காங்கிரசுக்கும் பர்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.
ஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ்காரர். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் லட்சாதிபதி. இருவரும் பெரும் பொதுவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்கார பார்ப்பõனுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்கார பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய, போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து – ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும், சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.
இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்நாட்டில் பொதுவுடைமை கூட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத் தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள். இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச சாட்சியாகும்.
ஆங்கிலத்தில் ‘கேஸ்ட்’, ‘கிளாஸ்’ என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது ; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்கு கிடைக்கவே கிடைக்காது. மேல்நாட்டில் ஜாதி இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்பு சண்டை தொடங்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை தொடங்க வேண்டியதாகும்... பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொது உடைமைத் தத்துவத்திற்கு பாலபாடம்.
-------- ‘குடி அரசு’ - 25.3.1944"
//கடவுளே வேணாம்கிறேன். அனைத்து சாதிகள் அர்ச்சகர் ஆகலைன்னு வருத்தப்ப்பட்டுகிட்டு இருக்க்கிங்க!//
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை . எனது சகோதரனுக்கு உண்டு. நீ பூஜை செய்ய உரிமை இல்லை எனக்கு மட்டும் தான் உண்டு பார்ப்பான் சொல்லுவ்து எந்த விதத்தில் நியாயம்?
இது கடவுள் உண்டா? இல்லையா? என்பது பிரச்சனையாக இருந்தாலும் அடிப்படையில் இது மனித உரிமைப் பிரச்சினை.
அனைவரும் சமமாக முதலில் மதிக்கப்பட வேண்டும்.
------------தொடர்வோம்
//முதலில் மனிதனுக்கு தேவை பொது உரிமை. அந்த உரிமை இந்த நாட்டில் சரி சமமாக அனைவருக்கும் உண்டா?
இது பற்றி பெரியாரின் கருத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.//
முடியில சாமி!
எனக்கு தாவூ தீருது!
சம உரிமை வேணும் ஆனா பாப்பான் கிட்ட மட்டும்!
அதுக்கு பெரியாரும் துணைக்கு வேணும்!
//மூளைக்கு போட்டுள்ள விலங்கு கண்ணுக்கு தெரியாது. தெரிய வைக்க விள்க்க வேண்டும்//
படித்ததையும், சொல்லியதையும் நம்பும் விலங்கிட்ட மூளையை உடயவன் நானல்ல! எனக்கும் சுய சிந்தனை இருக்கு!
எதெற்கெடுத்தாலும் பெரியார் அத சொன்னாரு!
இத சொன்னாருன்னு பேசாதிங்க!
சத்தியமாலுமே உங்கள பார்த்தா பாவமா இருக்கு!
//எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை . எனது சகோதரனுக்கு உண்டு. நீ பூஜை செய்ய உரிமை இல்லை எனக்கு மட்டும் தான் உண்டு பார்ப்பான் சொல்லுவ்து எந்த விதத்தில் நியாயம்?
இது கடவுள் உண்டா? இல்லையா? என்பது பிரச்சனையாக இருந்தாலும் அடிப்படையில் இது மனித உரிமைப் பிரச்சினை.
அனைவரும் சமமாக முதலில் மதிக்கப்பட வேண்டும்.//
புள்ளகுட்டிகள படிக்க வையுங்கடா சமூகம் தன்னால முன்னேறும்னு நான் சொல்றேன். திரும்பவும் கோயிலுகுள்ள போய் உட்கார்ந்துகிறிங்க!
அவன் உங்கள் சகோதரன் கடவுளை நம்புறான், அப்படியே பாப்பானையும் நம்புறான், ரெண்டு நம்பிக்கையையும் உடைக்க வேண்டியது தானே!
பாப்பான் வேணாம் அவன் கொண்டு வந்த கடவுள் மட்டும் வேணுமா?
என்ன தாங்க உங்க பிரச்சனை?
ஏற்கனவே சொல்லிட்டேன்.
நீங்க கோவிலில் சம உரிமைன்னு மக்களை திசை திருப்பி அவங்களுக்கு அடிப்படை கல்வி கூட கிடைக்காமல் செய்து விடுகிறீர்கள்.
பாப்பான் அதை எதையும் சட்டை செய்யாமல் படித்து வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிறான்!
என்னுடன் வாதம் செய்ய வேண்டுமானால் உங்கள் சொந்த கருத்துகளுடன் வாருங்கள்!
ஓரளவுக்கு தான் பழைய வரலாறை ஏற்று கொள்ளமுடியும்!
பெரியார் பக்தியில் நீங்கள் உளறுவதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை!
அவையில்லாமல் உங்களால் உரையாட முடியாதென்றால்
மன்னிக்கவும் என்னுடன் வாதம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை!
எனக்கு சுயசிந்தனையுடன்(மூளையுடன்) உள்ளவர்களிடம் வாதம் செய்ய தான் பிடிக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரே "சுய சிந்த்னையாளர்" தான் தான் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வால்பையனை நினைத்தால் பரிதாபம்தான் தோன்றுகிறது.
பார்ப்பனர்கள் செய்த அட்டூழியங்களையும் பார்ப்பனரல்லாதாருக்கு பார்ப்பனர்கள் செய்த தொல்லைகள் மற்றும் கொடுத்த கஷ்டங்களை பார்ப்பனர்களே ஒத்துக்கொள்ளும் போது (உதாரணமாக அக்னிகோத்திரம் தாத்தாச்சாரி, உடுமலை பேராசிரியர் சுப்பிரமணியம் போன்றோர்) வால்பையன் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கும் போது எங்கோ இடறுகிறது?
வால்பையனின் கேள்விகளுக்கு (பலமுறை பலராலும் கேட்கப்பட்ட அதே கேள்விதான், ஆனாலும் தன்னை சுய சிந்தனையாளராக காட்டிக் கொள்ளுவதில் வால்பையனுக்கு அலாதி பிரியம். இருக்கட்டும் அப்போது தானே சுயரூபம் வெளிப்படும்) உதாரணங்களுடனும் உண்மைகளுடனும் பெரியார் கூறியதை எடுத்துக் காட்டினால் அதைப் படிக்கஅவருக்கு தாவு தீருதாம்? என்ன செய்ய இப்படியும் "ஒரு சுய சிந்தனையாளர்"
நாம் சான்றுகளுடன் சொன்னால் நம்பமாட்டார், ஆனால் வால்பையன் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லையென்றால் உளறுவதாக அர்த்தம்.
இப்படி ஒரு " சுய சிந்தனையாளரை" உலகம் தேடினாலும் கிடைக்க மாட்டார்.
இவர் ஜொள்ளு விட்டதையெல்லாம் பதிவாகப் போட்டு அது தான் "சுய சிந்தனை" என்பார். என்ன இப்படி மொக்கை போடுகிறீர்கள் என்றால் என்னுடன் வாதம் செய்ய உங்களுக்கு தகுதி இல்லை என்பார். அப்படி ஒரு தலைக்கனம்?. மூளை அதிகமாக இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுபவர்களுக்கு தலைக்கனம் இருக்கத்தானே செய்யும்.
மானமுள்ள ஆயிரம்பேர்களுடன் போராடலாம். மானமற்ற ஒருவரிடம் போராடுவது சிரமம்தான்.
என்னமோ நாம் போய் விவாதத்திற்கு இவரை போன் போட்டு அழைத்தமாதிரி எழுதியுள்ளார். முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்ததே உலகின் மூளையுள்ள ஒரே "சுய சிந்தனையாளர்" வால்பையன் தான்.
அவர் கேட்ட (ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட) கேள்விகள் அத்தனைக்கும் சான்றுகளுடன் பதில் அளித்தோம். ஆனால் வாதம் செய்யாமல் "பிடிவாதம்" செய்யும் வால்பையனுடனான விவாதம் இத்துடன் முற்றுப் பெறுகிறது. அவரின் விருப்பபடி.
ரைட்டு ஒகே
என் ப்ளாக்குல வச்சிகிறேன்!
எதையும் எப்போதும் எங்கேயும் சந்திக்கத் தயார்.
Post a Comment