Search This Blog

18.3.09

வானவெளியில் மூன்று நுண்கிருமிகள் கண்டுபிடிப்பு!


இந்திய வானியல் அறிஞர்களின் அரிய கண்டுபிடிப்பு!
வானவெளியில் மூன்று நுண்கிருமிகள்


பூமியில் இல்லாது, வான வெளியில் காணப்படும் மூன்று நுண்கிருமிகளை (பாக்டீரியா) கண்டு பிடித்துள்ளனர். நிலத்திற்கு உயரே 15 கி.மீ. தூரத்தில் இவை கண்டறியப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அறிவிய லாளர்கள் இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி ஆய்வறிஞர் ஃபிரெட் வேராய்ல் என்பவரின் நினைவாக ஒரு நுண்கிருமிக்கு ஜனி பாக்டர் ஹொய்லீ எனப் பெயர் வைக்கப்பட்டது. பலூனைப் பறக்கவிட்டு ஆய்வு செய்ததன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப் புக்குக் காரணமாக இருந்த ISRO இந்திய விண்வெளி ஆய்வு நிலையப் பெயரைக் கொண்டு பாசிலஸ் இஸ்ரோனென் சிஸ் என்று ஒரு நுண்கிரு மிக்குப் பெயர் சூட்டி யுள்ளனர். இந்திய வானி யலாளர் ஆரியபட்டா என்று ஒருவர் இருந்தார் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நுண் கிருமிக்கு பாசிலஸ் ஆர்யபட்டா என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

உயிர்கள்
தோற்றத்தின் மூலம்


விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுண் கிருமிகளின் மூலம் கண்டுபிடிக்கப் படும்போது, உயிர்களின் தோற்றம் பற்றிய மூலமும் கண்டறியப்படும் என்று இஸ்ரோ ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

267 லட்சம் கனஅடி உள்ள பலூனில் 459 கிலோ எடையுள்ள அறி வியல் கருவிகளும் 38 கிலோ திரவ நியான் ஆகியவை அனுப்பப் பட்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த பலூன் அய்தராபாத்திலிருந்து பறக்கவிடப்பட்டது. துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்ட 16 சோதனை உருளைகள் காற்றின் மாதிரிகளைச் சேகரித்துத் தந்தன. 20 முதல் 41 கி.மீ. உயரத்தில் மாதிரிகளைச் சேகரித்தன.

மாதிரிகள் அய்தராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டன. புனேயில் உள்ள ஆய்வு மய்யத்திலும் சோதனை செய்யப்பட்டன.

புதிதாக இருந்தன


மொத்தத்தில் 12 நுண் கிருமிகளும் 6 பூஞ்சைகளும் கண்டறியப்பட்டன. இவற்றில் மூன்று புதிதாக இருந்தன. இவை புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாத தன்மையைப் பெற்றிருக்கின்றன.

அறிவியலின் ஆற்றலும் கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின் றன. மனித மூளையின் ஆற்றலும் பெருகிக் கொண்டே வருகிறது. இயற்கையின் பல முடிச் சுகளுக்கு விடைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.


------------------- "விடுதலை" 18-3-2009

3 comments:

கிறுக்குப்பையன் said...

உங்கள் பதிவை நான் பார்ப்பது இது தான் முதல் தடவை,,,,ம்ம் உங்கள் பதிவையும் படிக்கலாம் போலத்தான் இருக்கிறது ,,,,அன்புடன் ,,கிருக்குபையன்

Unknown said...

அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ அறியாமை அகலும்.வானியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி