Search This Blog
11.3.09
பெரியாருக்கு அரசு மரியாதை - கலைஞரின் துணிச்சல்
ஒரு காலத்திலே கலைஞருக்கு சிதம்பரத்தில் எதிர்ப்பு!
இன்றோ சிதம்பரம் நடராஜர் கோவில் கலைஞர் அரசின் கீழ்!
சிதம்பரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு
சிதம்பரம், மார்ச் 9- 1890ஆம் ஆண்டு ஆரம் பித்த பிரச்சினை. ஏறத்தாழ நூறு ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் இன்றைக்கு அரசின் கீழ் வந்தது என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிதம்பரம் நடராஜன் கோவிலை அரசு எடுத் தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.2009 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பெரியார் திரைப்படத்திலே அந்தக் காட்சியை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அரசு அதிகாரி தயங்கினார். என்ன தயக்கம் என்று தலைமைச் செயலாளரைப் பார்த்துக் கேட்டார் முதலமைச்சர் கலைஞர்.
உடனே அவர் சொன்னார். பெரியார் அரசியல் கட்சியில் இருந்து எந்தப் பதவியும் வகிக்காததால் அவருக்கு அரசு மரியாதை கொடுக்க முன் மாதிரி இல்லை என்று சொன்னார்.
அதிகாரிகள் எப்பொழு துமே கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொல்வார்கள். 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று இதைச் சொல்கின்றார். டிசம்பர் 25 அய்யா அவர்களுடைய கடைசி இறுதி ஊர்வலம்.
அப்பொழுது முதலமைச்சர் கலைஞர் அரசு தலைமைச் செயலாளரைப் பார்த்து என்ன முன் மாதிரி தேவை? என்று கேட்கிறார்.
இல்லை - அவர் எந்த அரசியல் பதவியிலும் இல்லை. ஆகவே அப்படிப்பட்டவருக்கு அரசு மரியாதை கொடுக்க எந்த முன்மாதிரியும் இல் லையே என்று கேட்டவுடனே கலைஞர் பளீர் என்று பதில் சொன்னார்.
மகாத்மா காந்தி அவர் எந்தப் பதவியில் இருந்தார்? அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட தல்லவா?
அது முன்மாதிரி இல்லையா? என்று கேட்டார். அதற்கு அரசின் தலைமைச் செயலாளர் அவர் தேசப்பிதா என்று சொன்னார்.
உடனே முதலமைச்சர் கலைஞர் - இவர் எங்கள் பிதா என்று சொன்னார் (கைதட்டல்).
ஆகவே தந்தை பெரியார் அவர்களுக்கு இராணுவ மரியாதையை துணிச்சலாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
உடனே அதிகாரிகள் இன்னொரு அஸ்திரத்தை எடுத்து வைத்தார்கள். இதனால் உங்களு டைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னவுடனே பளிச் சென்று உடனே தயங் காமல் சொன்னார் கலைஞர் -
இதனால் என்னுடைய ஆட்சியை நான் இழக்க வேண்டி வருமேயானால் அதை விடப் பெருமை எனக்கு வேறு ஒன்றும் இல்லை (கை தட்டல்).
பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்து பெரியாருடைய உடலுக்கு அரசு மரியாதை காட்டி அதன் காரணமாக என்னுடைய ஆட்சி பறிபோகும் என்று சொன்னால் இதைவிடப் பெருமை எனக்கு என்ன வேண்டும்.
என்ன வந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துணிந்து செய்யுங்கள். அரசு மரியாதையோடு தந்தை பெரியாருடைய உடல் புதைக்கப்பட வேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்.
பெரியாருடைய உடலைப் புதைத்த பிற்பாடு அதே முதல்வர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னார். அரசு மரியாதையோடுதான் நான் அவருடைய உடலைப் புதைத்தேன். ஆனால் அவருடைய நெஞ்சில் ஒரு முள் இரு்ந்தது. அந்த முள்ளை அகற்ற என்னால் முடியவில்லை. அவர்களும் அந்த வேதனையோடுதான் மறைந்தார்.
எப்படி மற்றவர்களாலே சிவனடியார் சொல்லப்படுகின்ற என்று ஒரு தமிழ் அறிஞர். ஆறுமுக சாமி அவர்கள் எப்படி இங்கே போராட்டக் களத்திலே நிற்கிறார்களோ அதே போலத் தான் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும். ஆதி திராவிடர் உட்பட என்பதற்காக போராட்டக் களத்திலே நின்றார்.
ஆனால் சட்டம் வந்தாலும், அது செயல்பட முடியாத ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு முடக்கம் இருந்தது. ஒரு தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை எல்லாம் மாற்றிவிட்டுத் தான் உடனே தந்தை பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பேன் என்று கலைஞர் அவர்கள்அப்பொழுது சொன்னார்கள்.
கலைஞர் அவர்கள் அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். தமிழகத்திலே பல்வேறு வரலாறுகளை உருவக்கினார்.
காலம், காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அடிமைத்தனங்களை எல்லாம் அடிமைத் தளை களை எல்லாம் அறுத்து புரட்டிப் போட்டு மிகப் பெரிய புதிய சரித்தி ரத்தை உருவாக்கக் கூடிய அளவிற்கு கலைஞர் அவர்களுடைய சாதனை இருந்ததென்றால் அவர் முதல் முறையாக அமைச் சரவையிலே உட்கார்ந்து, அமைச்சரவைக் கூட்டத்திலே முதல் தீர்மானமாக அவர் எழுதிய தீர்மானம் கையெழுத்துப் போட்ட தீர்மானம் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றக்கூடிய வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடிய சட்டத்தை முதல் சட்டமாகக் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள்.
அந்த சட்டத்தை சட்டமன்றத்திலே நிறை வேற்றினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக்குவதற்கு ஆறு இடங் களிலே மாண வர்களுக் குப் பயிற்சி மய்யங்களை ஏற்படுத்தி 207 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி கலைஞர் அரசாலே கொடுக்கப்பட்டது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக - வெகு விரைவில் அரசால் நியமிக்கப்பட இருக்கிறார் கள்.
இதே தில்லையிலே வரும் கால கட்டத்திலே அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி யிலே பயின்றவரைப் பார்க்கக் கூடிய கால கட்டம் வெகு தூரத்தில் இல்லை.
அப்பொழுது தேவா ரத்தைப் பாடுவதற்கு இவரை விரும்பி அழைப்பார்கள். அந்த அளவிற்கு நிலைமை இருக்கும்.
எனவேதான் இந்த சாதனை - இந்த ஆட்சி ஏற்பட்டதால் வந்த சாதனை.
இதற்கு முன்னாலே நமக்கு ஏற்பட்ட வேதனை காலம் காலமாக தமிழர் கள் சரியான தலைமைப் பெறாத காரணத்தினாலே ஏற்பட்ட ஒரு சூழல்.
அந்த வகையிலே இது தொடர்ந்து ஒரு போராட்டமாக வந்தது. அதற்கு முன்னாலே எம்.ஜி. ஆர். அவர்கள் முதல்வ ராக இருந்த நேரத்திலே அவர்களும் இந்த உணர் வுகளைப் புரிந்து கொண்டு இப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்று அவர் துவக்கினார்.
ஆனால் அதற்கு அவர் கள் முட்டுக் கட்டை போட்டார்கள்.
அப்பொழுது ஏற்பட்ட சூழல் சரியாக இல்லை. அந்த சூழலை மக்கள் மத்தியிலே விளக்க வேண்டும்.
இது மக்கள் இயக்க மாக மாறினால் ஒழிய வெறும் ஒரு அரசாலே செய்துவிட முடியாது என்று அவர்கள் கருதிய காரணத்தால்தான் அன்றைக்கு சிதம்பர ரகசியம் என்றால் என்ன வென்று இதே கீழவீதி யிலே நாங்கள் கூட்டம் போட்டு, என்னென்ன நிலைமைகள், எப்படித் தீர்ப்புகள் என்பதை எல்லாம் விளக்கிச் சொல் லக்கூடிய ஒரு அற்புத மான, அமைதியான சூழல் ஏற்பட்டது.
எனவேதான் இன்றைக்கு அதைச் செய்து முடிக்கக் கூடிய ஒரு ஆற்றல் வந்த காரணத் தால் வரலாற்றுக் கல் வெட்டு இங்கே பொறிக் கப்பட வேண்டும் என் பதற்காகத் தெளிவாக இந்த நிகழ்ச்சியிலே அதற்குப் பாடுபட்டவர் களுக்கு நன்றி என்று சொல்லக்கூடியதும், இன்றைக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரு சரித்திரக் குறிப்பு என் பதற்காக இங்கே அந்தக் கல்வெட்டு திறக்கப் படுகிறது.
இந்தக் கல்வெட்டு இந்த நகரத்திலே மிக முக்கியமான ஒரு பகுதியிலே திறக்கப்படும். அது இந்தப் பகுதியாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்தப் பகுதியாகவும் இருக்கலாம். முறைப்படி இது பதிவு செய்யப்படும் என்பதைச் சொல்லி, அவர்களுடைய விருப்பத்திற் கேற்ப, முதலாவதாக இந்தக் கல்வெட்டினை முதலில் நான் திறந்து வைத்து என்னுடைய உரையை நான் தொடர இருக்கிறேன் (பலத்த கைதட்டல்).
அதோடு ஒரு சிறப்பான செய்தி என்ன வென்று சொன்னால் நம்முடைய ஆறுமுக சாமி அவர்களைப் பற்றி ஒரு குறிப்பு.
சட்டமன்றத்திலே இவரைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டமன்றத்திலே எழுப்பப்பட்டு, பிறகு இவர்களே இவர்களு டைய முயற்சியினாலே இந்த மனுவிலே கூடுதல் மனுதாரராக தன்னை இணைத்துக் கெள்ள வேண்டும். ஐஅயீடநயனபே ஞநவவைடி என்று சொல்லி இவர்கள் தன்னை இணைத்துக் கொண்ட நிலையிலே தெளிவாக இதற்கான தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதியரசர் அம்மையார் அவர்கள் தெளிவாக எழுதியிருக் கின்றார்கள்.
இது மிகப்பெரியதொரு வாய்ப்பு. ஏனென்றால் கோவிலுக்குள்ளே தமிழ் உள்ளே நுழையக் கூடாது. திருவாசகம் கேட்கப்படக் கூடது.
சிற்றம்பல மேடையிலே பாடப்படுவதற்கு உரிமை இல்லை என் றெல்லாம் சொல்லித் தடுத்தார்கள்.
நண்பர்களே, இது இப்பொழுது முதல் தடவையாக நடக்கிறது என்று நீங்கள் நினைக் காதீர்கள். இது பல ஆண்டுகளுக்கு முன்னாலே 1944, 1945, 1946 கால கட்டங்களிலே திருமுருக கிருபானந்த வாரியாருக்கு என்ன நடந்தது?
இவர் ஆறுமுகசாமி யார். அவர் திருமுருககிருபானந்தவாரியார். முத்தமிழால் வைதாரை யும் வாழவைக்கும் முருகப் பெருமானை நித்தம், நித்தம் வணங்கக் கூடியவர்.
பாராட்டக்கூடிய திருமுருக கிருபானந்தவாரி யார் உள்ளே சென்று அவர் தமிழிலே தன்னு டைய உரையைத் தொடங்க வேண்டும் என்று நடத் திய நேரத்திலே திரு முருக கிருபானந்தவாரி யாரை அடித்து விரட்டினார்கள். இதே தீட்சிதர்கள். இது பழைய வரலாறு. முரசொலி கையலகத் துண்டறிக்கை அளவில் வார ஏட்டை நடத்திக் கொண்டிருந்த கலைஞர் அவர்களே, வர்ணாசிரம தர்மக் கோட்டையாக சிதம்பரம் இருப்பதா? ஜாதி ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்ட விடு வோமா? பெரியார் தொண்டர்கள் சும்மா இருப்போமா? என்பன போன்று எழுதி, கலை ஞர் அவர்கள் ஒரு நீண்ட கவிதையையே எழுதி, அதையே அச்சடித்து இங்கே கொண்டு வந்து பேசுவதற்காக வந்து இறங்கியவுடன் கலைஞர் அவர்களுக்கு எதிர்ப்பு.
தீட்சிதர்கள் எதிர்ப்பு. இந்த நகரத்திற்குள்ளேயே வரக் கூடாது என்று கலைஞர் அவர்களுக்கு எதிர்ப்பு.
பழைய டவுன்ஹால் மைதானம் என்பது இப்பொழுது இருக்கின்ற முதியவர்களுக்குத் தெரியும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அந்த இடம் மாறிப் போயிருக்கிறது.
எனவே, அங்கே அந்தக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று மறுத்த நேரத்திலே 144 தடை உத்தரவு போட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்னாலே மலரும் நினைவுகளைப் போல நாங்கள் பேசிக் கொண்டிருக் கின்ற பொழுது, அந்த கவிதை வரிகளோடு அப்பொழுது நடைபெற்ற சம்பவத்தை நினைவு மாறாமல் சொன்னார் மருத்துவமனையில் இருந்த பொழுதுகூட.
அதைவிட இன்னொன்றைச் சொன் னார். அது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
என்னைத் திரும்பப் போ என்று சொன்னார்கள் இனி நகரத்திற்குள்ளே இருக்கக் கூடாது என்று காவல்துறை என்னை அனுப்பியது. அன்றுதான் தனக்கு முதல் இரவு அதைக் கூட நடத்த விடாத அளவுக்கு அவர்கள் திரும்ப அனுப்பினார்கள். அன்றைக்கு நான் திரும்பிப் போனேன் என்று சொன்னார்கள்.
ஆனால் இன்றைக்கு அவர்தான் மீண்டும் முதல்வராக வந்து இதே தில்லை அம்பலம் என்று சொல்லக்கூடிய ஆறுமுக சாமிகளைப் பாட வைத்தது மட்டுமல்ல - அவரை முத்தமிழ் அறிஞ ராக ஆக்கியது மட்டு மல்ல, நீதிமன்றம் அவருடைய காலத்திலே எப்படிப்பட்ட அளவிற்கு வந்தது.
இதற்கெல்லாம் அடித்தளம் வகுத்தவர் யார்? அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய, அயராத உழைப்பு (கை தட்டல்). பெரியார் பாடு பட்டார். பெரியாருடைய குரு குலத்திலே முளைத்த தொண்டர்கள், தோழர்களுடைய வாய்ப்பு. நான் தீர்ப்பிலிருந்து சொல்லு கின்றேன். இது தீர்ப்பின் - ஆங்கிலப் பகுதியின் ஓர் பகுதி இது.
யாராக இருந்தாலும் சரி, பக்தர்கள் - அவர்கள் தங்களுடைய நிறம் ஜாதியைப் பற்றிக் கவலைப் படாமல் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு தெளிவான உத்தரவு வந்திருக்கிறது.
ஆறுமுகசாமி சிதம் பரம் நடராஜர் கோவிலுக்குள் சென்று தேவாரம், திருவாசகம் பாடினார். இந்த மாதிரி பிரச்சினைகள் வழக்குகள், தகராறுகள் நடந்தன என்று இவருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்கள் தெரிவித்தார் என்று அதிலே எழுதி விட்டு அடுத்துத் தெளி வாகவே எடுத்துச் சொல்லு கிறார்கள்.
அரசாங்கம் 53 என்ற எண் கொண்ட அரசு உத்தரவைப் போட்டிருக்கிறது. தமிழக அரசின் தமிழ் அறநிலைய செய்தித் துறை 29.2.2008 அன்று இந்த அரசு உத்தரவைப் பிறப்பித்திருக் கிறது.
அந்த உத்தரவில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. பக்தர்களாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பல பொது தீட்சிதர்களுக்கு எந்த விதக் கட்டணமும் கொடுக் காமல் மேடையில் பாடலாம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
மேடையில் தமிழ் பாட்டுக்களைப் பாடலாம் என்று இப்படி உத்தரவு வந்தவுடனே எந்தக் காவல்துறை தடுத்ததோ அதே காவல் துறை மரியாதையோடு தேவாரத்தைப் பாட அழைத்துப் போனார்கள்.
திருவாசகத்தை அழைத்துப் பேனார்கள். தமிழை அழைத்துப் போனார்கள். தீட்சிதர்கள் திகைத்துப் போனார்கள். இதுதானே தவிர வேறொன்றுமில்லை.
நாம் வெளிநாட்டிலே இல்லை. தமிழ்நாட்டிலே இருக்கின்றோம். தமிழ் நாட்டினுடைய முக்கிய மான நகரங்களிலே இந்த சிதம்பரம் கோவில் மிக முக்கியமானது.
தமிழ்நாட்டிலே தமிழ் அரசர்கள் கட்டிய கோவில்களிலே தமிழன் செதுக்கிய சிலை சிற்பம் ஒரு பார்ப்பானுக்குக் கூட இந்த உழைப்பிலே சம்பந்தம் கிடையாது, அவர்கள் சொன்னதைப் போல.
ஆனால் மானியம் கொடுத்தவர்கள் பூராவும் நம்முடைய மன்னர்கள். நம்முடைய ஈழத்தமிழர் கள். பாவம் அவர்கள் பார்ப்பனர்களுக்கு மானியம் கொடுத்து விட்டு அவர்கள் தங்களுக்கு இடம் இல்லாமல், மண் இல்லாமல் வாழ வழியில்லாமல் தினம், தினம் செத்துக் கொண்டிருக் கின்றார்கள்.
அதற்கும் நாம்தான் இன்னொரு போராட்டக் களத்தை அமைத்து போராட்டத்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கண்டி கதிர்காமத் திலே இருக்கின்ற சுப்பிர மணியர் வேலோடு அன்றைக்கு நின்றவர் அப் படியே நின்று கொண்டிருக் கின்றார்.
அவரே சிங்கள ராஜ பக்சேவைப் பார்த்து மிகவும் பயந்து போயிருக்கிறார். ஆகவே அவர் களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
ஒன்றைச் சொன்னார். நம்முடைய மேனாள் நகர சபைத் தலைவர் அவர்கள். சந்திர பாண்டியன் அவர்கள் சென்னார்கள். எல்லாம் அவன் செயல் என்று தானே பக்தர்கள் நம்பு கின்றீர்கள். அப்படியிருக்கும்பொழுது இந்தத் தீர்ப்பு எவன் செயல்? அவன் செயல்தானே. முடிவு எவன் செயல்? நடராஜனுக்கே ஆசை வராதா?
-------------தொடரும் .."விடுதலை" 9-3-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment