Search This Blog

5.3.09

கொலை வழக்கில் சாட்சிகளை மிரட்டுகிறார் ஜெயேந்திர சரஸ்வதி






காஞ்சிபுரம் சங்கரராமன் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. புதுவை கோர்ட்டில் விசாரணை துவங்கிவிட்டது. அத்தோடு, சாட்சிகளை மிரட்டுகிறார்கள் எனும் குற்றச்சாட்டும் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அலுவலகத்தில் நடந்த படுகொலையை அவருடன் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர் என்.எஸ். கணேஷ், கணக்காளராக இருந்த குப்புசாமி ஆகியோர் நேரடியாகக் கண்ணால் பார்த்த சாட்சிகள். கஜபதி, அச்சுதன் ஆகியோர், கொலையாளிகள் கொலை செய்துவிட்டு ஓடும்போது எதிர்ப்புறம் நின்று கொலையாளிகளைப் பார்த்த சாட்சிகள். செங்குட்டுவனும் சுந்தரும். சங்கரராமனுக்கும் சங்கர மடத்திற்கும் இடையே விரோதம் இருந்தது. அந்தப் பகைதான் சங்கரராமன் படுகொலைக்குக் காரணம் என சொல்லும் சாட்சிகள்.

இந்த சாட்சிகள் சார்பாக பேசவேண்டுமென்று நம்மை அழைத்தார் சுந்தர்.

நான் போலீசாரிடமும் உத்திரமேரூர் நீதிமன்றத்திலும் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தவன். சங்கரராமன் கொலைக்கு வரதராஜப்பெருமாள் கோயில் நிலத்தில் குத்தகைதாரர்களாக இருந்தவர்கள் காரணமா? அல்லது வரதராஜப்பெருமாள் கோயில் பெண் தெய்வத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடியவர்கள் காரணமா? என போலீசார் கேட்டனர்.

அவையெல்லாம் காரணமில்லை. சங்கர மடத்திற்கு எதிராகவும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு எதிராகவும் அங்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் சங்கரராமன். ஜெயேந்திரர்தான் சங்கரராமனை கொலை செய்திருக்க வேண்டும் என தைரியமாக சாட்சி சொன்னவன் நான்.

என்னை கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி எங்கள் கோயிலில் நடந்த சமபந்தி போஜனத்தின்போது சங்கராச்சாரியாருக்கு மிக நெருக்கமான காமாட்சியம்மன் கோயிலில் சங்கரமட பிரதிநிதியாக செயல் பட்டு வரும் சுவாமிநாதன் சந்தித்தார்.

இந்த சுவாமிநாதன், மறைந்த சங்கரராமன், ஜெயேந்திரர் மூவரும் சைவ வழிபாடு செய்யும் ஸ்மார்த்தர் என்கிற பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள். மறைந்த மகாபெரியவர் இந்த சுவாமிநாதனை வைணவ கோயிலான வரத ராஜபெருமாள் கோயில் மணியக்காரராக நியமித்தார்.

அவர் என்னிடம் நீங்கள் சங்கரராமன் வழக்கில் சாட்சியம் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? சங்கர மடத்திற்கு வாருங்கள். அந்த சாட்சியத்தை எப்படி சொல்லவேண்டுமென நான் சொல்கிறேன் என்றார்.

சுவாமிநாதன் வந்ததன் நோக்கம் எனக்குப் புரிந்து விட்டது. என்னிடம் அணுகியது போலவே மற்ற சாட்சிகளையும் மடத்துக்கு வாருங்கள் பேசி முடிப்போம் என கூப்பிட்டிருக்கிறார். அவர்களில் மிக முக்கியமான சாட்சிகளான கஜபதியும் அச்சுதனும் என்னைஅழைத்தார்கள். அவர்களிடம் நான் பேசிய போது சுவாமிநாதனின் அழைப்பை உறுதி செய்தார்கள். அதில் அச்சுதன் பயந்து போய், நாமெல்லாம் திருக்கோயில் ஊழியர்கள். சுவாமிநாதன் சொல் வதைப் போல் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட நமது சாட்சியத்தை மாற்றிச் சொன்னால் என்னாவது? நாளைக்கு சங்கராச்சாரியரைக் கைதுசெய்த ஆட்சியாளர்கள் மறுபடியும் பதவிக்கு வந்தால் நம்மை உண்டு இல்லை என பண்ணிவிடமாட்டார்களா? என்றார் என்னிடம். தினம் தினம் பலதடவை மற்றவர்களிடம் பேசி சாட்சியங்களை சுவாமிநாதன் மூலம் ஜெயேந்திரர் கலைக்கிறார் என்கிறார் சுந்தர்.


நாம் அவர் சொன்ன நபர்களைப் பார்த்தோம். தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் ஒருவித பயம் கலந்த உணர்வுடன் சுந்தரைப் போல வெளிப்படையாகப் பேசத் தயங்கினார்கள்.

நேரடியாக, காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீசுக்கு எதிரில் உள்ள எல்லப்ப நகரில் காஞ்சி காமகோடி சுவாமிகள் பெயரில் அமைந்திருக்கும் சுவாமிநாதன் வீட்டிற்குப் போனோம். வீட்டில் அவர் இல்லை. அவரது மகளிடம் அவரது செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டோம்.

நீங்கள் சங்கராச்சாரியாரை தப்புவிக்கும் நோக்கத்துடன் சாட்சிகளிடம் பேசி வருகிறீர்களாமே எனக் கேட்டோம். அப்படியெல்லாம் இல்லை. நான் சங்கரராமனின் நண்பன். இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

இதுபற்றி சங்கரராமன் வழக்கை நடத்தி வரும் அதிகாரிகளைக் கேட்டோம்.

சங்கரராமன் வழக்கு டிரையலுக்கு வந்துவிட்டது. இப்பொழுது நடை பெறும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் இல்லையென்றால் சுவாமிநாதன் பார்த்துப் பேசியதாகச் சொல்லப்படும் சாட்சிகள் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்து முடித்து இருப்பார்கள். கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான இவர்களின் சாட்சியத்தைக் கலைக்க ஜெயேந்திரர் முயற்சி செய்கிறார் என்கிற தகவல் எங்களுக்கும் வந்துவிட்டது. ஜெயேந்திரரின் குற்ற முயற்சிகளை முறியடிக்க நாங்களும் சரியான வியூகம் வைத்திருக்கிறோம். அதில் எக்கு தப்பாக மாட்டினால் அவரது ஜாமீன் ரத்தாகி மீண்டும் சிறைக்கம்பிகளை எண்ணவேண்டி வரும் என்கிறார்கள் உறுதியாக.

-----------------------------நன்றி: "நக்கீரன்", 7.3.2009

4 comments:

Unknown said...

சங்கராச்சாரிகளின் அயோக்கியத்தனத்திற்கு அளவில்லாமல் போச்சு.

உலகில் உள்ள கெட்டபழக்கங்கள் எல்லாம் இவாளுக்கு இருக்கும் போல.

Thamizhan said...

இந்தியாவின் சுவிஸ் வங்கியாக
பணம் புழங்கிய சுப்புணிக்குள்ள
ஜாமினை உடனே ரத்து செய்யச் சொல்லி வழக்குப் போட வேண்டும்.

ஒரு சுப்பிரமணிசாமி என்ற உதவாக்கரை எத்தனை வழக்குகள் போட்டு வம்பு செய்கிறான்.
இத்தனைத் தமிழ் வழக்கறிஞர்களே நீங்கள் கொஞ்சம் விழித் தெழுங்கள்.

முன் கூட்டியே உதைக்க ஆரம்பியுங்கள்.நடப்பதற்குப் பதில் என்ற சிந்தனையை விட்டு,
நடக்குமுன் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்துச் செயல் படுவோம்.இந்திய அளவிலே உங்கள் பணி நிறைய இருக்கின்றது.

Unknown said...

சாட்சிகளை மிரட்டினால் பிணை ரத்தாகும் என்று ஜெயந்திர சரஸ்வதிக்கும் தெரியும்.அரசு தனக்கு
எதிராக எதையாவது சொல்லி பிணையை ரத்து செய்ய முயலும்
என்பதும் அவருக்குத் தெரியும்.
பரபரப்பு பத்திரிகைக்கு வேறு வேலை
கிடையாது.
‘இந்தியாவின் சுவிஸ் வங்கியாக
பணம் புழங்கிய சுப்புணிக்குள்ள
ஜாமினை உடனே ரத்து செய்யச் சொல்லி வழக்குப் போட வேண்டும்'

போடுங்களேன்.
‘முன் கூட்டியே உதைக்க ஆரம்பியுங்கள்.'
ஒகோ இதுதான் பகுத்தறிவு சிந்தனையோ.

தமிழ் ஓவியா said...

‘முன் கூட்டியே உதைக்க ஆரம்பியுங்கள்.' என்று தமிழன் அய்யா கருத்துத் தெரிவித்ததுமே பகுத்தறிவு சிந்தனை பற்றியெல்லாம் பேசுது பெரியார் விமர்சகன் என்ற பெயரில் ஒழிந்துள்ள பார்ப்பனியம்.