Search This Blog
4.3.09
கலைஞர் ஆட்சியைக் கவிழ்க்க பார்ப்பனர்கள் துடிப்பது ஏன்?
ஆட்சியைக் கலைக்கக் கூறுவதில் அர்த்தமுண்டா?
திமுக ஆட்சியைக் கவிழ்க்க சதியா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று (3.3.2009) சென்னை பெரியார் திடலில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.
பல்துறையைச் சார்ந்த பெருமக்கள் - பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து அந்தவுரையை ஆர்வமுடன் கேட்டனர். அக்கூட்டத்தில் அவர் எடுத்து வைத்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.
1) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசினை, இடையில் கவிழ்க்க வேண்டும்; நீக்க வேண்டும் என்று கூறுவது தவறு - மக்கள் நாயகத்துக்கு இது விரோதமானதாகும். ஆனால் அஇஅதிமுக இந்தத் தவறைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்தினார்.
இது ஒரு உண்மையான நிலையாகும். தேர்தலில் மக்களால் ஒரு கட்சி தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு கட்சி நிராகரிக்கப்படுவதும் இயல்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கட்சியினை அய்ந்து வருடம் ஆள விடுவதுதானே சரியானது, மாறாக நிராகரிக்கப்பட்ட கட்சி - வெற்றி பெற்ற கட்சியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? விளையாட்டுப் போட்டியில் தோற்றவனுக்குத்தான் முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்களா?
இன்னொன்று இப்பொழுது இருக்கிற நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்பு -இவற்றின்படி நினைத்த நேரத்தில் எந்த ஒரு மாநில அரசையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. ஆளுநர் ஒப்புதலன்றி டீச டீவாநசறளைந என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி 1991-இல் திமுக ஆட்சியைக் கலைத்தது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது நிலைமைகள் மாறிவிட்டன பல்வேறு நிபந்தனைகள் இதில் நுழைக்கப்பட்டுள்ளன.
இந்த நுணுக்கங்களை எல்லாம்கூடப் புரிந்து கொள்ளாமல் ஆட்சியைக் கலைக்க வேண்டும். சட்டப் பேரவை கலைக்கப்பட வேண்டும் என்று கூறுவது, கூறுபவர்களின் அறியாமையைத் தான் வெளிப்படுத்தும் என்பதைச் சட்ட ரீதியாக வெளிப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர்.
2) மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் - செல்வி ஜெயலலிதா உட்பட - ஏன் விரும்புகின்றனர் என்பதற்கான காரணங்களையும் தமிழர் தலைவர் எடுத்துக் கூறினார்.
(அ) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை.
(ஆ) தமிழ் செம்மொழி அங்கீகாரம்,
(இ) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்,
(ஈ) சிதம்பரம் நடராசன் கோயில் திட்சிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டு இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது.
(உ) வடலூர் இராமலிங்க அடிகளார் அவர்களால் வடலூரில் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து அவரின் கோட்பாடுகளுக்கு விரோதமாக மேற்கொண்டிருந்த போக்கினை தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு அர்ச்சகராகயிருந்த பார்ப்பனரை வெளியேற்றி, தமிழரை அமர்த்தியது
- இவையெல்லாம் சாதாரணமான முறையில் அரசியல் நடத்துபவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதவையாகும். ஆண்டாண்டு காலமாக ஆக்கிரமித்திருந்த அயல் பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்து தமிழையும், தமிழரையும் மீட்டெடுத்த வரலாற்றுத் திருப்பம் வாய்ந்த பொற்கால ஆட்சியின் சாதனைகளாகும் - ஒரு தன்மான இயக்கத்திலிருந்து கிளைத்த ஒரு கழகம் ஆட்சிக்கு வந்ததன் அர்த்தத்தைப் புலப்படுத்துவதாகும்.
தமிழின வெறுப்பையே தம் மூச்சுக் காற்றாகக் கொண்ட சக்திகள் இத்தகு ஆட்சியை எப்படி சீரணித்துக் கொள்ளும்? காலம் காலமாக மன்னர்களைக் கையில் போட்டுக் கொண்டு, மனுதர்மக் கோட்பாடுகளை ஆட்சி யின் நோக்காகவும், போக்காகவும் கொண்டு செலுத்திய வர்களின் ஆதிக்கக் புரிமீது விழுந்த அணுகுண்டாக இவற்றைக் கருதுகிறார்கள். அதனுடைய வெளிப்பாடே திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் கலைக்க வேண்டும் என்று போடப்படுகிற கூப்பாடாகும்.
3) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்லுகிறவர் யார்? அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியின் தலைவர்; ஒரு அமைச்சருக்குரிய தகுதியும், சலுகைகளும் அவர்க்குள்ளது அவற்றை இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடியவர் ஆளும் கட்சிமீது குறை கூறி அறிக்கையினை நாளும் விடுத்துக் கொண்டிருப்பவர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய கடமையினை செய்து வருகிறாரா? வெளியில் விடும் அறிக்கையின் கருத்துகளை சட்டமன்றத்திற்குள் வந்து சொல்லும் கடமையினை ஏன் தவிர்க்கிறார்?
எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கடமையினை செய்யத் தவறுபவர்கள் எல்லாம் ஆளும் கட்சிமீது குறை கூறுவதும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்புவதும் எந்த வகையில் தகுதியுள்ளவை ஆகும்? மருத்துவரே - முதலில் உங்கள் நோயைக் குணப்படுத் துங்கள் என்பதுதான் நினைவிற்கு வருகிறது. தமிழர் தலைவர் இந்த உரை ஒலிப் பதிவு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருப்பது பயனுள்ள தாகும் - மக்களிடத்தில் தெளிவையும் ஏற்படுத்துவதாகும்.
----------------நன்றி:- "விடுதலை"தலையங்கம் -4-3-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அ) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை.
(ஆ) தமிழ் செம்மொழி அங்கீகாரம்,
(இ) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்,
(ஈ) சிதம்பரம் நடராசன் கோயில் திட்சிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டு இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது.
(உ) வடலூர் இராமலிங்க அடிகளார் அவர்களால் வடலூரில் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து அவரின் கோட்பாடுகளுக்கு விரோதமாக மேற்கொண்டிருந்த போக்கினை தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு அர்ச்சகராகயிருந்த பார்ப்பனரை வெளியேற்றி, தமிழரை அமர்த்தியது//
மேற்கண்டவைகள் சமுதாயத்தையே மாற்றி அமைக்கக் கூடிய செயல்கள். அதிலும் பார்ப்பனர்களின் பிறவி ஆதிக்கத்தை தகற்க்கும் செயல்கள்.
செத்து மடியுது அங்கு தமிழினம் செய்வறியாது இங்கு நம்மினம்
பார்ப்பனர்களுக்கு எப்போதும் கவிழ்க்கத்தான் தெரியும்?
தமிழனை கவிழ்த்த வரலாறு தான் சிரிப்பாய் சிரிச்சிக் கிடக்குதே.
பார்ப்பனர்களின் உளவியலே அதுதானே.
ayndhu murai CM aha irukkum podhu JAN14 thai nalai yen Tamil putthandaha arivikkavill ippa putthanda matthunadunal enna pirayojanam endha josiyar avarukku indha yosanaiya solii irupparo pahuttharivu pesubavar yen manjal thondai pottirukka vendum
தமிழில் கருத்துத் தெரிவியுங்கள் shabi
Post a Comment