Search This Blog
13.3.09
சர்வ சக்தி உள்ள கடவுளின் பித்தலாட்டம்
சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.
ராமன்: அதுமாத்திரம் அதிசயமல்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன்கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.
சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?
ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?
சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?
ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?
அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பது மாகும்.
--------------- "சித்திரபுத்திரன்" என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது "விடுதலை", 21,22.2.1972
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கடவுளே பித்தலாட்டம் தான்.
இதில் சர்வசக்தி உள்ள கடவுள் என்பது அயோக்கியமானது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு
Post a Comment