உலக அறிவு
ஒருவன் எவ்வளவோ படித்திருக்கலாம். பட்டம் படிப்பு எல்லாம் படித்திருக்கலாம். பலே அறிஞன், புத்திசாலி என்று பேசப்படலாம். எல்லாம் அனுபவப் படிப்பைவிட மட்ட ரகமானவைகளே. வக்கீல் படிப்புப் படித்து விட்டால் அறிவாளி என்றுகூற முடியாது. வக்கீலுக்கு எதை எதை எப்படி எப்படிப் புளுகினால் கேஸ் ஜெயிக்கும் என்பதில் மட்டும்தான் சாமர்த்தியம் இருக்கலாம். ஒரு வழக்கு பொய்யானது என்று தனக்கே தெரியும். அந்த வழக்கை மெய் என்று தீர்ப்புக் கூறும்படி என்னென்ன தில்லுமுல்லுகள் புரட்டுகள் செய்ய வேண்டுமோ அவைகளைமட்டும் கற்றிருந்தால் போதும். பொய் கூறுவதைத் துணிந்து ஓங்கி அடித்து உண்மையைப் போல் கூறுகிற வக்கீல்கள்தாம் பெரிய வழக்கறிஞர்கள் என்று போற்றப்படுகிறார்கள். ஆதலால், வக்கீல்களும் அறிவாளிகள் என்று கூறுவதற்கில்லை. அதேபோல், பள்ளிக் கூடங்களிலும், கலாசாலைகளிலும் வாத்தியர்களும் புரொபசர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அறிவும் - ஏட்டுக்குள் இருப்பதை மட்டும் தெரிந்திருப்பார்கள்; உலக விஷயம் தெரியாது! உலக அறிவே முக்கியமானது.உலகத்துடன் பழகியவர்க்குத்தான் பொது அறிவு வளர முடியும்.
-----------------------பெரியார்-சிதம்பரம் அண்ணாமலை நகரில் 19.2.1956-இல்
சொற்பொழிவு விடுதலை 10.3.1956
Search This Blog
23.3.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment