Search This Blog

29.3.09

விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும்படிக் கூறியவர் யார் தெரியுமா?


ஜெயேந்திரரின் அரசியல்

கொலை வழக்கு ஒன்றில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் (மாஜி) ஜெயேந்திர சரஸ்வதி - ஒரு அரசியல் புரோக்கர்; தேர்தல் நேரங் களில் சன்னமாகத் தன் வேலையைக் காட்டுவார்! கொடுக்கை நீட்டுவார்! எங்கே எப்படி முள்வைப்பது என்பதில் கில்லாடி.

தொடக்கத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும்படிக் கூறியவரும் இவரே!

தன் கையாளாக சோ ராமசாமியை அனுப்பி ஆங்காங்கே விஷமதானங்களைச் செய்து கொண்டிருப்பவர் இவர்.

ராஜபாளையத்தில் தொழில் அதிபர்களைச் சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டவரும் இவர்தான்.

அண்மையில் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களைச் சந்தித்து இருக்கிறார். தே.மு.தி.க. தலைவரின் துணைவியாரையும் சந் தித்து இருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சித் தலை வரையும் சந்தித்து இருக்கிறார். இவ்வளவும் எதற்காகவாம்?

நடக்கவிருக்கும் தேர்தலில் இவர்கள் எல்லாம் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என் பதற்காகத்தான் இத்தகைய முயற்சி.

பா.ஜ.க. என்றால் பாரதிய ஜனதா என்று சொல்வதைவிட பார்ப்பன ஜனதா என்று சொல்வதுதானே பொருத்தமானதும் - மிகச் சரியானதாகவும் இருக்க முடியும்.
வெளி உலகத்தில் எப் படிப்பட்ட அபிப்ராயத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்? அவாள் பெரியவாள் - இந்த அரசியல் விவகாரம் என்கிற சிற்றின்பத்தில் எல்லாம் ஈடுபடமாட்டார். சதா அவருடைய எண்ணமெல்லாம் ஈசனைப் பற்றிய பேரின்பமே! ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் பாலங்கட்டுவதுதான் அவரின் வேலை என்று சமத்தாக அவரைப்பற்றி மக்கள் மத்தியிலே பிம்பம் வரைந்து வைத்துள்ளார்கள்.

ஆனாலும் உண்மை என்னவோ வேறாகத்தானிருக் கிறது. அதுவும் அவாள் ஆத்துப் பத்திரிகையான ஜூனியர் விகடனே (22.3.2009) ஜெயேந்திரரின் அரசியல் திருவிளை யாட்டை விவரிக்கும்போது நம்பாமல்தான் இருக்க முடியுமா? காரணம், விகடனுக்கும், பெரியவாளுக்கும் அவ்வளவு அன்னியோன்னியம்!

செத்துப்போன பிறகும் சிவலோக பதவியையும், வைகுந்த பதவியையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் இந்த அரசியல் பதவி விஷ யத்திலும் மூக்கை நுழைக் கிறார்கள் என்பதுதான் தமாஷ்!

---------------- மயிலாடன் அவர்கள் 29-3-2009 "விடுதலை" யில் எழுதியது

1 comments:

கோவி.கண்ணன் said...

//ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையில் பாலங்கட்டுவதுதான் அவரின் வேலை என்று சமத்தாக அவரைப்பற்றி மக்கள் மத்தியிலே பிம்பம் வரைந்து வைத்துள்ளார்கள்.
//

:) பாலம் கட்டும் காண்ட்ரேக்டும் அவர்களே வைத்துக் கொள்வார்கள்