Search This Blog

6.3.09

பெரியார் பார்வையில் "தீண்டாமை"




தீண்டாமையை ஒழிக்க வைத்தியர்கள் டாக்டர்கள் போல் முயன்று, தீண்டப்படாதவர் என்ப வர்களுக்கு எல்லா இடங்களிலும் சமத்துவம் அளிக்க வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங் கள் செய்பவர் பலர். ஆனால், நாங்கள் தீண்டாமை ஏன்? எப்படி வந்தது? என்று பார்க்கி றோம். மதத்தால் அவர் கள் தீண்டப்படாதவர்கள் என்ற பதில் வருகிறது. மதத்தால் ஏன் தீண்டப்படாதவர்கள் என்று கேட்கிறோம்? அது சாஸ்திர சம்மதம் என்கிறார்கள். இந்த சாஸ்திரம் எப்படி வந்தது என்றால், அது ஆண்டவன் ஆணை என்கிறார்கள். அப்படியானால் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவு அளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்

--------------- தந்தைபெரியார் - "விடுதலை" 16.4.1950

2 comments:

Muruganandan M.K. said...

"தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவு அளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்"
பெரியார் கூறுவதைக் கடைப்பிடித்தால் இக்கொடுமை அழிந்துவிடுவது நிச்சயம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்