Search This Blog

7.3.09

சோதிடன் சொன்ன விபரீதம்

சோழ அரசன் சுபதேவர் சோழவளநாட்டை ஆட்சி செய்து வந்தார். இவருடைய மனைவி கமலவதியார். இத்தம்பதியர் திருமணமாகி நெடு நாட்களாகியும் மக்கட்பேறு இல்லாமல் மனம் வருந்தினர்.

பிறகு சுபதேவர் - கமலவதி யார் தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டிற்று. கமலவதியார் மணிவயிற்றில் கரு வளர்ந்து, குழந்தை பிறக்கும் பிரவசத் தருணம் நெருங்கியது.

அப்போது அரண்மனை சோதிடர்கள் ஓடிவந்து குழந்தை இந்த நேரத்தில் பிறப்பது நல்லதல்ல அரண்மனைக்கு ஆகாது. ஆகவே இதைத் தவிர்க்க இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமே யானால், மூவுலகையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறும் குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் கூறியதைப் பிள்ளைப் பேற்றுக்கான பிரசவ நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியாரிடம் அந்த வேதனையான நேரத்தில் நேரம் சரியில்லை என்று எடுத்துக் கூறினார்கள்.

சோதிடர் கூறியக் கருத்தை ஏற்றுக் கொண்ட அரசியார் -பத்து மாதம் சுமந்த நாம் இன்னும் ஒரு நாழிகை (சோதிட முறைப்படி ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள்) தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியார் அந்தப் பிரசவ வேதனையான நேரத்திலும் உடனடியாக என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுங்கள் என்று அரசியார் வலியால் அழுது கொண்டே ஆணையிட்டார். அவ்வண்ணமே அரசியார் தலை கீழாகக் கட்டித் தொங்கவிடப் பட்டார். (கசாப்புக் கடையில் ஆடு தொங்கவிட்டதுபோல).

சோதிடன் கூறிய அந்த நல்ல நேரமும் நெருங்கியது அந்த ஒரு நாழிகையும் கழிந்தது. தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட அரசியாரின் கட்டு அவிழ்க்கப் பட்டுப் படுக்கையில் கிடத்தப் பட்டார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. தன் குழந்தையை அரசியார் உச்சி மோந்து முத்தமிட்டார். அதுதான் அரசியாரின் கடைசி மகிழ்ச்சி! ஆம்! அரசியார் இயற்கைக்கு விரோதமாக பிரவச நேரத்தில் தலை கீழாகத் தொங்க விடப்பட்டதில் உள்ளுறுப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுப் பிரசவம் ஆன சில நிமிடங்களில் உயிரிழந்திருக்கிறார்!

அரண்மனை சோதிடப் பயல்கள் சொன்னார்கள் என்ப தற்காக ஒரு நாழிகை தள்ளிப் போட்டு முரண்பாடான பிரவசம் ஏற்படுத்தி அரசியார் கொல்லப்பட்டுவிட்டார். அவர் சாவுக்கு சோதிடப் பயல்கள் சொன்ன நல்ல நேரம் என்ற விபரீதமேக் காரணம்!


------------------------புலவர். மா. வீரஅரசின் தடயம் என்ற நூலிலிருந்து

1 comments:

Unknown said...

//அரண்மனை சோதிடப் பயல்கள் சொன்னார்கள் என்ப தற்காக ஒரு நாழிகை தள்ளிப் போட்டு முரண்பாடான பிரவசம் ஏற்படுத்தி அரசியார் கொல்லப்பட்டுவிட்டார். அவர் சாவுக்கு சோதிடப் பயல்கள் சொன்ன நல்ல நேரம் என்ற விபரீதமேக் காரணம்!//

கலைஞர் அரசு ஜோதிடத்தை தடை செய்ய வேண்டும்.