Search This Blog
6.3.09
செயல்படாத முதலமைச்சரா கலைஞர்?
சுப்பிரமணிய சாமி என்ற அரசியல் புரோக்கர்
நுழைந்ததால் இவ்வளவு பெரிய கலவரம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் - போலீசார் மோதல் நடைபெற்றது. தொலைக்காட்சியில் காட்டினார்கள் மருத்துவமனையில் இருந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், நீதி விசாரணைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும் சி.பி.அய். விசாரணை வைக்க வேண்டுமா? அதற்கும் தயார் என்று சொன்னவராயிற்றே.
வழக்கறிஞர்கள் என்பவர்கள் யார்? சமூக நீதியில் பூத்த மலர்கள் அல்லவா? நண்பர்கள்யார்? பகைவர்கள் யார்? என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஒரு சுப்பிரமணியசாமி வேண்டுமென்றே நீதிமன்றத்திற்குள் நுழைந்த பிற்பாடுதான் இவ்வளவு பெரிய கலவரமே நடைபெற்றது.
உயர்நீதிமன்றத்தில் சமூக விரோதிகளை நுழைய விட்டது யார்?
உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு - தீ வைத்து அது முழுவதுமாக எரிந்து போக எந்த சக்தி காரணமாக இருந்தது?
சரி காவல் நிலையம் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்தவுடன் தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தபொழுது தீயணைப்பு வண்டி தீயை அணைக்க விடாமல் தடுத்தது யார்?
சுப்பிரமணியசாமி என்ற அரசியல் புரோக்கர் திட்டமிட்டு உயர்நீதிமன்றத்திற்குள் உள்ளே வந்த பிறகுதானே இவ்வளவும் நடந்திருக்கின்றன?
மூலகாரணம் யார்? எங்கிருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா?
நாங்கள் யாரையும் தரக்குறைவாக மரியாதை குறைவாக நடத்துவதை வரவேற்காதவர்கள் விரும்பாதவர்கள்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொண்டால் போலீசார் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதா? என்று கேட்டார்கள்.
உயர்நீதிமன்றத்திற்குள் காவல் துறையினர் நுழைந்தால் யாரைக் கேட்டுக் கொண்டு நுழைந்தார்கள் என்று கேட்கிறார்கள்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பிலேயே நீதிபதி ஏற்கெனவே தீர்ப்பு கொடுத்திருக்கிறாரே நீதிமன்றத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் ஒருகாவல் நிலையம் அமைக்க வேண்டும்; குறைந்தபட்சம் 252 காவலர்களுக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று நீதிபதியே சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கின்றாரே.
சரி - நீதிபதி முன்பு நடைபெற்ற சம்பவம் என்றால் குற்றவாளியைப் பிடித்து ஏன் இதுவரை நீதிபதிகள் தண்டனை தரவில்லை?
(3.3.2009 சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து)
செயல்படாத முதலமைச்சரா?
கலைஞரால் செயல்பட முடிய வில்லையாம்! அ.தி.மு.க. சார்பில் வழக்கு போடப் பட்டது - கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அதற்குப் பதிலடி கொடுத்து சென்னை (3.3.09) பொதுக்கூட்டத்தில் விளக்கமளித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
என்னுடைய கையிலே இருப்பது மதுரை உயர்நீதி மன்றத்தினுடைய 20 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு.
தி.மு.க. அரசை எப்படியாவது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இது.
அ.தி.மு.க. சார்பில் மீன்வளத் துறை செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு இது.
தென்மண்டல காவல்துறை அரசு செயல்பட வில்லை என்று வழக்கு.
இதில் இந்த அ.தி.மு.க. கட்சி எவ்வளவு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லி, அரசியல் சட்டத்தில் பிரிவுகள் 12 முதல் 35 வரை உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லி, யார் யார் மீது எதிர் மனுதாரராக வழக்கு போட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் - இந்திய அரசு, தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழக காவல் துறை அதிகாரி, திருநெல்வேலி டி.அய்.ஜி., மதுரை டி.அய்.ஜி., மதுரை எஸ்.பி. என்று போட்டு விட்டு, கடைசியாக மு.க.அழகிரி மீதும் வழக்கு என்று போட்டார்கள்.
அன்றாடப் பணிகளை ஆற்ற முடியவில்லையாம்!
எதை எதை எல்லாம் மக்கள் மறந்து போகிறார்களோ - அதை எல்லாம் நினைவூட்டுவதுதானே எங்களுடைய வேலை.
ஏன் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்? அ.தி.மு.க. சார்பில் மனுதாரர் டி.ஜெயக்குமார் சார்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு வயது முதிர்வு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு குடும்பச் சூழ்நிலை வேறு.
ஆகவே அவரால் அரசின் அன்றாடப் பணிகளை ஆற்ற முடியவில்லை என்று கூறியிருக்கின்றார் அந்த மனுவில்.
முதலமைச்சருக்கா வயது முதிர்வு? அவர் முதிர்ச்சியுடன், 28 வயது இளைஞரைப் போல எப் பொழுதும் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றார்.
ஜெயலலிதா என்ன கேட்டார்?
ஜெயலலிதாவே அறிக்கையில் கலைஞரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டார்.
இவருக்கு எப்பொழுது பார்த்தாலும் கலை விழாவுக்கும், திரைப்படங்களை பார்வையிடு வதற்குச் செல்வதே வேலையாகப் போய்விட்டது என்று சொன்னவர்தானே?
கலைஞர் மருத்துவமனையில் இருந்து கொண்டே...
கலைஞர் அவர்கள் முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு - அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு கொடுத்ததால் மயக்கமுற்ற நேரத்தைத் தவிர, மீதி நேரம் முழுவதும் படுக்கையில் இருந்தவாறே சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார் என்பதை எல்லோரும் அறிவார்களே.
அரசு அலுவல் பணிகள் - கோப்புகள் பார்ப்பது, அறிக்கைகள் எழுதுவது - அதை படுக்கையில் இருந்தவாறே படிப்பது.
எதிர்கட்சியினர் கேட்ட கேள்விக்கு பதில் தருவது. அவர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பு எதிர் கட்சியினரின் கேள்விக்கே இடமில்லாமல் செய்வது.
அது மட்டுமல்ல - மருத்துவமனையிலிருந்த வாறே பட்ஜெட்டைப் படித்துத் தயாரித்தது - பல அரசு நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி நடத்தி வைத்து பேசுவது என்று இப்படி எத்தனையோ பணிகளை தனது உடல் நலிவுற்ற நிலையிலும் தவறாமல் எல்லோரும் வியந்து பாராட்டக் கூடிய அளவுக்குப் பணியாற்றி வந்திருக் கிறாரே.
மருத்துவமனையையே ஒரு நடமாடும் தலை மைச் செயலகமாகவே மாற்றிச் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கின்றவர்.
முதல்வர் அவர்கள் கோட்டையிலிருக்கும் பொழுது காலையில் வெளிநாட்டாருடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் போடுகிறார். மாலையில் அடிக்கல் நாட்டு விழா.
காலையில் ஒரு நிகழ்ச்சி என்றால், மாலையில் ஒரு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவார். இப்படி எத்தனையோ தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம், வேலை வாய்ப்புகள் என்று கடந்த மூன்று ஆண்டு களாக இடைவிடாமல் பணியாற்றி வருகின்றார். அவரா செயல்படாத முதலமைச்சர்? முதலில் அம்மையார் எதிர்க்கட்சித் தலைவராக செயல் படட்டும்!
(3.3.09 அன்று சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து)
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முதலமைச்சருக்கா வயது முதிர்வு? அவர் முதிர்ச்சியுடன், 28 வயது இளைஞரைப் போல எப் பொழுதும் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றார்.
அப்படியாயின் அவருடன்
ஓடிப் பிடிச்சு விளையாடலாமா?
கேணையள் மாதிரியே யோசிக்கவும், எழுதவும் உங்கள மாதிரி ஆட்கள் இருந்தாலே போதும். நீங்கள் முற்போக்குவாதிகளோ,பிற்போக்குவாதிகளோ இல்லை. புறம்போக்கு வாதிகள்.
புகழினி என்று பெயர் வைத்துக் கொண்டு புளுகுவது போல் சிந்திப்பது சரியல்ல.
86 வயதில் கடுமையாகப் பனி செய்கிரார் என்பது உண்மை.
அப்படியிருக்க அவருடன் ஓடிப்பிடிச்சு விளையாடலாமா?
என்று கேட்பதுதான் கேணைத்தனம்.
நாகரிகமாக எழுதுவது நல்லது.
இந்த வயதிலும் டில்லி வரை சென்று கோரிக்கைகளை வலியுருத்துகிறார்.
கூடங்களில் கலந்து கொள்கிறார். சட்ட்டமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு விருகிறார்.
செயல்பாடுகளில் விமர்சனம் உண்டே தவிர செயல்படாதவர் என்று சொல்லு முடியாது
Post a Comment