Search This Blog

9.3.09

சிதம்பரம் நடராஜர் கோவில் சட்டப்படி சரித்திரப்படி மக்களுக்குரிய சொத்து


என்னுடைய ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று
பெரியாருக்கு இராணுவ மரியாதை கொடுத்தவர் - கலைஞர்
சிதம்பரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


சிதம்பரம் நடராஜன் கோவிலை அரசு எடுத்தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.2009 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்த தில்லையிலே நடக்காது, நடக்கவிட மாட்டோம் நடக்க முடியாது என்றெல்லாம் இங்கே சொல்லிக் கொண்டு வந்த தில்லை வாழ் அந்தணர்கள். நாங்கள் மூவாயிரம் தீட்ச தர்களும், எங்களுக்கே சொந்தம் இந்தக் கோயில் என்று பல ஆண்டுகளாக 19ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த அந்த விவகாரம் இருபதாம் நூற்றாண்டைத் தாண்டி, இருபத்தி ஓராவது நூற்றாண்டிலே ஒரு நல்ல முடிவுக்கு வரக்கூடிய ஒரு பொற்கால ஆட்சியைத் தமிழன் பெற்றதன் விளைவாக இவ்வளவு பெரிய மாறுதல் இவ்வளவு பெரிய எழுச்சி நடந்தது என்று சொல் லக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய திருப்பமாக சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து அரசின் கட்டுப்பாடு கூட அல்ல. இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்ற தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர், மருத்துவ மனையைக் கூட தலைமைச் செயலகமாக மாற்றிக் கொண்டு இடையறாது செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதல்வராகத் திகழ்ந்து கொண்டிருக் கக்கூடிய மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டுகின்ற, அவருடைய அரசைப் பாராட்டுகின்ற, அதே நேரத்திலே அதற்குத் தூண்டுகோலாக இருந்து மிகப்பெரிய அளவுக்கு ஒரு தொடர் போராட்டத்தை எத்தனையோ இடுக்கண்கள் தொல்லைகள் இவை களுக்கிடையிலே நடத்தி, இங்கே இடையறாது இந்த வெற்றிக் களத்திலே முதல் கட்டத் தெளிவான ஒரு நிலையை அடைந்து, மேலும் இதிலே புதைந் திருக்கின்ற பல செய்திகள் வெளியே வர வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலே இன்னமும் மும்முரமாக இறங்கியிருக்கக்கூடிய நம்முடைய நகர்மன்றத்தினுடைய மேனாள் தலைவர் பாராட்டுதலுக்குரிய அன்பு சகோதரர், எந்த நிலையிலும் தன்னுடைய சுயமரியாதைக் கருத்தை விட்டுக் கொடுக்காத ஒரு சொக்கத்தங்கமான கொள்கை வீரர் - அன் பிற்குரிய, பாரம்பரிய மிக்க, சுயமரியாதைக் குடும்பத்திற்குரியவரான சவுந்திரபாண்டியன் அவர்களே! அதே போன்று இந்தப் பிரச்சினையை தான் அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிலையிலும், அதற்கு முன்னாலே உறுப்பினராக இருந்த நிலையிலும், அன்று முதல் இன்று வரையிலே தொடர்ந்து இந்தப் பணிக்காக நல்ல அள விற்குத் தொண்டாற்றிப் போராட்டக் களத்திலே மற்றவர்களை எல்லாம் முடுக்கிவிட்டு, எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை எல்லாம் செய்து - இன்றைக்கு இந்தக் கொள்கையிலே மிக வேகமாக இருக்கக் கூடிய, அன்பிற்குரிய மேனாள் அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சரும், இந்த நகரத்து வழக்கறிஞரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன் பிற்குரிய அருமைச் சகோதரர் மரியாதைக்குரிய வி.வி.சாமிநாதன் அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு இங்கே தலைமை ஏற்றிருக்கக் கூடிய நகர திராவிடர் கழகத்தினுடைய தலைவர் அன்பிற்குரிய அருமை செல்வரத்தினம் அவர்களே!
இந்த நிகழ்ச்சியிலே வரவேற்புரை நிகழ்த்திய கண்ணன் அவர்களே!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இங்கே சிறப்பான விளக்கவு ரையை நிகழ்த்திய கழகத் தினுடைய பொதுச் செயலாளர் மானமிகு அறிவுக் கரசு அவர்களே!

துணைப் பொதுச் செயலாளரும் இந்தப் போராட்டங்களிலெல்லாம் அவ்வப்பொழுது கழகத் தின் சார்பிலே எங்களால் அனுப்பப்பட்டு கலந்து கொண்டவருமான அன்பிற்குரிய அருமைத் தோழர் மானமிகு வழக்குரைஞர் துரை.சந்திர சேகரன் எம்.ஏ.பி.எல். அவர்களே! இந்தப் போராட்டம் இந்தியாவிற்கு வழி காட்டக்கூடிய அளவுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்ட தென்று சொன்னால் அந்தப் பெருமை மிகப் பெரிய அளவுக்கு ஒரு துறவிக்கு உண்டு.

உண்மையான தமிழ்த் துறவி சொன்னது போல என்று சொல்லி திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவர்கள் மிகப்பெரிய வாய்ப் பைப் பெற்றிருந்தாலும், எங்கே அந்தக் குரல் ஒலிக்க வேண்டுமோ அங்கு ஒலிக்க முடியாத ஒரு நிலைக்கு இருந்து விடாமல் போராடி வெற்றி கண்டு மற்ற வர்களுக்கு எடுத்துக்காட் டாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அன் பிற்குரிய சிவனடியார் என்று மற்றவர்களாலே அன்போடு அழைக்கப்படக் கூடிய பெருமைக்குரிய வீரத் துறவி அய்யா ஆறுமுகசாமி அவர் களே!

இந்த நிகழ்ச்சியிலே இப்பொழுது இல்லையென்றாலும், மிகப் பெரிய அளவிலே இந்தப் பணியை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மய்யத்தினுடைய மாநில ஒருங் கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு இங்கே முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் மானமிகு இளங்கோவன் எம்.எஸ்.சி. அவர்களே! மாவட்டச் செயலாளர் அருள்ராஜ் அவர்களே!

மற்றும் இந்த நிகழ்ச் சியிலே கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் மானமிகு பூ.சி.இளங்கோவன் அவர்களே!

பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்க பன்னீர் செல்வம், புலவர் ராஜாங்கம் அவர்களே! மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் முத்து கதிரவன் அவர்களே! மற்றும் பல்வேறு பகுதி களிலே இருந்து வந்திருக்கக்கூடிய இயக்கக் குடும்பங்களைச் சார்ந்த தாய்மார்களே! பெரி யோர்களே! சகோதரர்களே! அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே!
நன்றி உரை கூற இருக்கக் கூடிய முரளிதரன் அவர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

மிகப்பெரிய ஒரு வாய்ப்பை இன்றைக்கு நாம் பெற்றிருக்கின்றோம்.

இங்கே நம்முடைய முன்னாள் நகர்மன்றத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மாநில துணைத் தலைவர், என்றைக்கும் சுயமரியாதை வீரராக போராட்ட வீரராக இருந்து கொண்டிருக்கக் கூடிய அன்பிற்குரிய அருமைத் தோழர் சந்திரபாண்டியன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள்.

82-ஆம் ஆண்டு அண்ணாமலை நகரிலே தொடங்கி, சிதம்பரம் நகர வீதிகளில் எல்லாம் வந்து, ஒரு மனுவையும் அப்பொழுது இங்கே துணை ஆட்சியராக இருந்து, இப்பொழுது மூத்த அய்.ஏ.எஸ். அதி காரியாக இருக்கக் கூடிய திரு.மச்சேந்திரநாதன் அய்.ஏ.எஸ். அவர்களிடத்திலே கொடுத்துவிட்டு, பிறகு நம்முடைய மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந் திருக்கின்றார்களே அய்யா சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்கள் மாவட்டத் தலைவராக இயக்கத்தினுடைய ஒரு தூணாக சிதம்பரத்தில் இயக்க வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவராக என்றென்றைக்கும் நம் நெஞ்சில் நிறைந்தவராக இருக்கக்கூடிய அய்யா கிருஷ்ணசாமி போன்றவர்கள், இந்தி எதிர்ப்பிலே சர்வாதிகாரியாக இருந்த புவனகிரி அய்யா நமச்சிவாயம் அவர்கள் இன்னும் எண்ணற்ற, மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்ற சுயமரியாதைச் சுடரொ ளிகள் மாணவ நண்பர்கள் எல்லோரும் இணைந்து ஒரு பெரும் பேரணியை முடித்து அதிலே கோரிக்கை வைத்தோம்.

இந்த சிதம்பரம் நடராஜர் கோவில் சட்டப்படி சரித்திரப்படி இது மக்களுக்குரிய சொத்தே தவிர, தீட்சிதர் என்பவர்களுடைய தனிப்பட்ட உடைமை அல்ல.

மக்களாட்சியின் அரசு அதனுடைய பிரதிநிதிகள் அது அமைத் திருக்கின்ற அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அறநிலையப் பாது காப்பு என்று ஒரு துறையை நீதிக்கட்சி தான் உருவாக்கிற்று. பனகல் அரசர்தான் பலத்த எதிர்ப்புக்கிடையிலே உருவாக்கினார்கள்.

அப்படிப்பட்ட அந்தத் துறையின் கீழே இங்கே சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னார்கள் அல்லவா? திட்டங்கள் இருக்கின்றனவோ அதே போலத்தான் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒரு பெரிய வரலாற்றுப் பெருமை வாய்ந்த சுற்றுலா பயணிகள் வரக் கூடிய பக்தர்கள் நிரம்ப வரக் கூடிய ஒரு கோயிலாக இருந்து ஒரு வரலாறு இருக்கும்பொழுது இந்த நகரமே அந்த பெருமைக்குரியது என்றெல்லாம் பக்தர்களாலே சொல்லப்பட்டிருக்கின்ற இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது என்பதற் காகத்தான் அதற்குப் போராட்டத்தை மற்றவர்கள் துவக்கினார்கள்.

அந்த நேரத்திலே ஆற்றப்பட்ட உரைதான் சிதம்பர ரகசியம் என்ற தலைப்பிலே பல பதிப் புகள் நூலாக வெளிவந் திருக்கிறது.

வெளி மாநிலம் மட்டு மல்ல, வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்த சிதம்பரரகசி யத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறது.
இது நான்காவது, அய்ந்தாவது பதிப்புப் புத்தகங்கள். அந்த நேரத்திலே நாங்கள் சொன்னபொழுது இப்படிப்பட்ட சிவனடியார்கள் எங்களுக்குத் துணையாக வரவில்லை.
ஆனால் அதற்குப் பிறகு இந்த சிவனடியார்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள்.


நாங்கள் மட்டும் கொஞ்சம் பகுத்தறிவாளர்களாக இல்லாவிட்டால் உங்கள் மத்தியிலே இவ்வளவு கடினமான பிரச்சாரத்தை எதிர்த்து சந்திரபாண்டியன் அவர்களோ, நானோ வி.வி.சாமி நாதன் அவர்களோ, ராஜீ அவர்களோ மற்றவர்களோ செய்ய வேண்டிய அவசியமில்லை.

நாங்களும் கொஞ்சம் பக்தி வேசம் போட்டுக் கொண்டு இவர் யார் தெரியுமா? சிவனடியார் ஆறுமுகசாமி என்று பெயர் இருந்தாலும், சாட்சாத் நடராஜப் பெருமாள்தான் இந்த உருவிலே வந்திருக்கிறார் என்று சொன்னால் அவரைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக வருவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

இது 21ஆம் நூற் றாண்டு. இப்பொழுது வசதியாக வந்திருக்கிறார். தீட்சிதர்களாக இருந்து சிக்கிக்கொண்ட காரணத்தால் அவர்களிடமிருந்து விடுதலை அடைந்து, விடுதலைக் கூட்டத்திலே வந்திருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடிய அளவிற்குக் கூட, பலர் நம்ப முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யக் கூடியவர்கள் அல்ல.

நாங்கள் 1982லே இது பற்றி முழக்கமிட்ட நேரத்திலே முடியுமா? இல்லையா? செய்து காட்டுகிறோமா? இல்லையா பாருங்கள்.

நாங்கள் எடுத்துக் கொண்ட திட்டங்களிலே தோல்வி அடைந்ததாக வரலாறே கிடையாது (கைதட்டல்).

வேண்டுமானால் எங்களுடைய வெற்றி கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம். கொஞ்சம் காலம் தாழ்ந்து இலட்சியத்தை அடையக் கூடியவர்களாக இருக்கலாம்.


ஆனால் இது எங்கள் வெற்றி அல்ல. சிதம்பரம் மக்களுடைய வெற்றி என்பதை நான் பெருமை யோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கின்றோம். மனித உரிமை அடிப்படையிலே நியாயத் தின் அடிப்படையிலே நீதியின் அடிப்படையிலே நேர்மையின் அடிப்படை யிலே உங்களுக்கு நாங்கள் துணையாக இருக்கி றோமே தவிர, மற்றபடி எங்களுக்கு என்று இருக்கின்ற கொள்கை எங்களிடம் உறுதியாக இருக்கிறது. அதிலே எங்களுக்கு எந்தவிதமான மாற்றமோ சபலமோ கிடையாது.

ஆனால் இப்படிப் பட்ட ஒரு ஆட்சி கலைஞருடைய ஆட்சி அய்ந்தாவது முறையாக ஒரு பொற்கால ஆட்சி வந்த காரணத்தால்தான் இவ்வளவு துணிச்சலோடு செய்ய முடிந்தது.
தந்தை பெரியார் மறைகிறார். அவருடைய உடலை அடக்கம் செய்கின்ற நேரத்திலே அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் திடீரென்று அரசு தலைமைச் செயலாளரை அழைத்துச் சொல்லுகின்றார்.


-------------------------தொடரும் "விடுதலை" 8-3-2009

0 comments: