Search This Blog

2.4.09

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தி.க. வின் வேண்டுகோள்!


நாடாளுமன்றத் தேர்தலும் ஈழத் தமிழரும்!

15 ஆம் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்ப் பிரச்சினையை அரசியலாக்கப் பலரும் திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றனர்.

நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை நிலவி வருகிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் இது அணுகப் படவேண்டும் என்பதுதான் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களின் நியாயமான கருத்தாக இருக்க முடியும்.

இந்தப் பிரச்சினையில் அணுகும் முறைகளில் வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

இந்தப் பிரச்சினை என்று மட்டுமல்ல; எந்தப் பிரச்சினையிலும் அணுகுமுறைகளில் வேறுபாடு ஏற்படுவது என்பது எதிர்ப்பார்க்கப்பட வேண்டியதே!

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமா? வேண்டாமா? என்பது கூட அந்நாட்டில் வாழும் பாதிப்புக்கு ஆளான மக்கள் முடிவு செய்ய வேண்டியதாகும். எடுத்த எடுப்பிலேயே தனி நாடு கோரி அம்மக்கள் போராட முன்வரவில்லை; ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு களத்தில் குதிக்கவில்லை.

இலங்கை என்பது சிங்கள நாடு தான்; சிங்கள மொழிதான் ஆட்சி மொழி; பவுத்தம்தான் அதிகாரப்பூர்வ மான மதம்; அதிபராக வருபவர் பவுத்தராகத்தான் - சிங்களராகத்தான் இருக்கவேண்டும் என்று சட்ட ரீதியாக அறுதியிட்ட பிறகு அந்நாட்டில் இரண்டாவது பெரிய இனமாக வாழக்கூடிய தமிழர்கள் எந்த முடிவுக்கு வருவார்கள் என்பதை நேர்மையும், நியாயமும், மனித உரிமையும், மனிதநேயமும் உடையவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


அந்நாட்டில் தனி நாடு கோருவதற்கும், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து ஆட்சி முறை அமைந்ததற்கும் முடிச்சுப் போடுவது - ஈழத்தில் கேட்கப்படும் தனி நாடு கோரிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்று கற்பித்து - ஈழத் தமிழர்கள் பிரச்சினையை வேறு தளத்திற்குக் கொண்டு செல்லும் பார்ப்பனர்களை ஒதுக்கிவிட்டு, ஈழத் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து காப்பாற்றி வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அணுகுமுறை இருக்கவேண்டும்.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்குச் சில இடர்ப்பாடுகள் இருக்கக்கூடும். இந்த நிலையில் மற்ற அமைப்புகள், அமைப்புகளைச் சாராதவர்கள் உண்மையான அக்கறையோடு ஒன்றுபட்டு நின்றால் ஆட்சியில் உள்ளவர்கள் மேலும் செயல்படுவதற்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.

அரசியலுக்காக ஆட்சியைக் குறைகூறி கடும் விமர்சனங்களில் ஈடுபடும்போது நமக்குள் பிளவுகளும், சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படுகிறது. இது இலங்கை ஆளவந்தார்களுக்கு சிங்கள இனவெறி மக்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் மத்தியில் உள்ள ஆட்சியும் இப்பிரச்சினையில் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்குக்கூட தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது.


அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைச் செயல்படுத்துவதில்கூட வடக்கு, கிழக்கு பார்க்க ஆரம்பித்தால், அதன் விளைவு என்னாகும்?

இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி, மாநில முதலமைச்சரின் தலைமையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றால், அந்தக் குழுவில் இடம்பெற மாட்டோம் என்று முறுக்கிக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை, பொறுப்புள்ள தலைவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ஆளும் கட்சி - எதிர்க்கட்சி இணைந்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டது என்ற நிலை வரும்போது, அதனுடைய பலம் எத்தகையதாக இருக்கும்!

இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் தமிழகத்தின் முதலமைச்சரை விமர்சிப்பதும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுவதும் எந்த அடிப்படையில்?

நிலைமை இப்படி இருக்கும்போது, அந்த எதிர்க்கட்சித் தலைவருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சிங்களர்களால் கண்டிக்கப்படும் முதலமைச்சர்மீது தங்கள் பங்குக்குத் தாங்களும் கல் எறிவதில் உள்ள நியாயம் என்ன?

தேர்தல் நெருங்கிவரும் ஒரு காலகட்டத்தில் திடீர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈழத் தமிழர்கள்மீது அக்கறை காட்டுவதுபோல பாசாங்கு செய்வதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களா அரசியல் தலைவர்களும், தமிழர்களும்?

அருள்கூர்ந்து ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அரசியலாக்கிக் கொச்சைப்படுத்தவேண்டாம் என்பதுதான் அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோளாகும்.


----------------"விடுதலை" தலையங்கம் 2-4-2009

13 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோளாகும்//

இதைப்பார்க்கும்போது நிஜமாகவே சிரிப்பு வந்துச்சு.

உண்மையிலேயே தலைவர் வீரமணி அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் மற்றும் உண்மையாகவே ஈழத்தமிழரின் மேல் கரிசனை கொண்டிருந்தால் ஈழத்தமிழர் விடயத்தை திமுக கையாண்ட விதம் தவறு என்று சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். (கலைஞர் செய்தது சரியென்று இனியும் வாதாடாதீர்கள் தோழர்களே).

ஆனால் தமிழர் தலைவர் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்போல் செயற்படுவது வருத்தமளிக்கிறது

Anonymous said...

//தேர்தல் நெருங்கிவரும் ஒரு காலகட்டத்தில் திடீர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈழத் தமிழர்கள்மீது அக்கறை காட்டுவதுபோல பாசாங்கு செய்வதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களா அரசியல் தலைவர்களும், தமிழர்களும்?//

எங்களால் அவரின் நடிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தமிழினத் தலைவரால் முக பாசாங்கு செய்வதை புரிந்து கொள்ள முடியவில்லையே......................

கந்தப்பு said...

மதிமுக, இந்தியக் கம்னியூஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி என்ற வரிசையில் வாக்களிக்க வேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசை விட பாஜக பரவாயில்லை.

பாம்பையும் பாப்பனரையும் கண்டால் பாப்பனரை அடி என்று பெரியார் சொன்னார். ஆனால் பாப்பனரையும் காங்கிரசையும் கண்டால் காங்கிரசை அடி என்று இப்பொழுது பெரியார் உயிருடன் இருந்தால் சொல்லுவார்

ttpian said...

தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!

தமிழ் ஓவியா said...

//காங்கிரசை விட பாஜக பரவாயில்லை.//

எந்த விதத்தில் என்று கூறினால் விவாதிக்க வசதியாயிருக்கும் கந்தப்பு.

ராஜ நடராஜன் said...

//இந்தப் பிரச்சினை என்று மட்டுமல்ல; எந்தப் பிரச்சினையிலும் அணுகுமுறைகளில் வேறுபாடு ஏற்படுவது என்பது எதிர்ப்பார்க்கப்பட வேண்டியதே!//

ஈழம் குறித்த குழப்பங்கள் அதிகரித்ததற்கு வேறுபடும் அணுகுமுறைகளே காரணம்.இந்தி எதிர்ப்புக்கு இரண்டே நிலை.பெரும்பான்மை எதிர்ப்பு சிலரது அணைப்பு.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

unearth.com said...

Sri Lanka's constitution allows all citizens of that country to contest in Presidential Election and become the President of that country. Tamil language is also one of the two official language of the country. Constitution is also allows, freedom of speech, write, and freedom to follow any religion.

Out of 20% of the entire Tamils, 08% are Muslims, 4% are Indian Tamils living out side of North and East. The rest of the 8% Tamils living all over Sri Lanka and those who are living out side of North are not willing to accept separate Tamil state.They have voted against the separation in the 1977 General Election. In Eastern Province TULF miserably failed and was able to win only two seats out ten seats. This is the actual situation of the country.

Less than 4% of Tamils are living in the North and there a considerable number of Tamils living in Mannar, Vauuniya, Kilinchchi, Mullaitivu are against the separation.

நம்பி said...

Blogger கந்தப்பு sai

//காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசை விட பாஜக பரவாயில்லை.//

காங்கிரசை வளர்த்து விட்டதே இந்த ஒற்றுமையற்ற ஈழப்புரட்சி செயல்பாடுகளால் தான்...

இந்த போராட்டத்தால் அதிகம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டது தமிழக மக்கள்.

அதனால் ஏற்பட்ட கலவரங்களால் பலருடைய வீடுகள், வணிக வளாகங்கள், சொத்துக்கள் நாசமடைந்தன.

பலர் உயிர் பிழைக்க பல இடங்களுக்கு தப்பி ஒடவேண்டியாதாயிற்று. முன்னால் அமைச்சர்கள், திராவிடக் கட்சித்தலைவர்கள் உட்பட...

இந்த அத்தனை நாசங்களும் இந்த பாழாய்ப்போன ஒற்றுமையற்ற ஈழக்குரலினால் தான்.

அங்குள்ளவர்களின் குறைந்த சதவீதத்தினரின் ஒற்றுமையற்ற போராட்டத்திற்காக, இதை சாக்காக வைத்து பொரும்பான்மை தமிழர்கள் வாழும் தமிழகத்தில் நடத்தப்பட்ட மனிதநேயமற்ற உயிர்ப் பலிகளினால் தான்.

ஆறரை கோடி தமிழக மக்களை கிஞ்சித்தும் மதியாமைதான்...அவர்களின் வாழ்வாதாரத்தை காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு, ஆக்கிய நயவஞ்சகத்தினால் தான்.

காங்கிரஸ் செல்வாக்கு அற்றதாக தமிழகத்தில் இருந்ததை மாற்றி வாக்கு வங்கியை சற்று கூடுதலாக்கிவிட்டு சென்றது இந்த செயல்களினால் பெற்ற அனுதாப அலைகள் தான் காரணம்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த செயல் தான், அவர்களை (காங்கிரசை) மேலேற்றி விட்டது.

திருப்பியும் அதே உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலைதான் மதவாதத்தை தமிழகத்தில் கொண்டவர நினைத்து அங்கிருந்து இங்குள்ளவர் அரசியலை தீர்வுகளை நிர்ணயிப்பது, முடிவெடுப்பது.

இதற்கு முன் கூட்டணி வைத்தது மக்கள் ஸ்திரத்தன்மையற்ற வாக்களிப்பை வழங்கியமைக்காக...

எந்த தேசியக் கட்சிக்கும், மக்கள் மத்தியில் அரிதி பெரும்பான்மை செல்வாக்கு இல்லை.

அப்படி பாஜக வந்தும் 11 நாளில் அதிமுக வால் திமுக வை கலைக்கவேண்டும் என்ற மினதாபிமனமற்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் ஆட்சிகவிழ்க்கப்பட்டு மீண்டும் தேர்தலை சந்தித்தது.

அதன் பிறகும் அதே இழுபறியில் வாக்களிப்பு இருந்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பை குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. இதை தவிர்த்தால் மீண்டும் மீண்டும் மக்கள் தேர்தலை சந்தித்து தான் ஆகவேண்டும்.

அதனால் ஏற்படும் தேர்தல் செலவுகள் மக்களின் தலைமேல் தான் ஏறும். மீண்டும் மீண்டும் தேர்தலை சந்திப்பதால் மக்கள் வெறுப்படையத்தான் செய்வார்கள்.

இதனால் மீண்டும் பாதிக்கப்படப்போவது ஏழை பாட்டாளி மக்கள் தான் என்பதால் வேறுவழியில்லாமல் ஆட்சியில் பங்கேற்றது. மக்கள் விருப்ப படி....

இரண்டு முறை ஒரே குறைந்த கால அளவில் தேர்தல் வந்ததினால் காங்கிரசை ஒதுக்கி பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனர். முன்பிருந்த காங்கிரஸ் அரசியலுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

அதில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வரையறுத்து தான் திமுக ஆட்சியில் பங்கேற்றது.

அந்த கால இடைவெளியிலேயே பல நேரங்களில் பாஜக பல மக்கள் விரோத சட்டங்களை இயற்றியது..மதத்தை கையில் தூக்கி பிடிக்க முயற்சி மேற்கொண்டது.

அதில் உள்ள திராவிட கட்சிகளான திமுக, மதிமுக மற்றும் ஆந்திர தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளால் தான் அப்படி மதவாதம் வராமல் பாதுகாக்கப்பட்டது. அப்போதைய தலைவர் வாஜ்பாய், கூட்டணி வைக்க அதுவும் ஒரு காரணம். இப்போது அந்த நிலை இல்லை.

ஈழம் என்ற இலங்கையிலே ஒற்றுமையற்ற நிலையில், மக்கள் ஆதரவற்ற நிலையில் விடுதலைப்புலிகளுக்காகவெல்லாம் இங்கு கூட்டணி வைக்க முடியாது.

தமிழக அரசியல் இலங்கை மக்களை திருப்பதி படுத்துவது அல்ல. இலங்கை அரசியலும் தமிழக மக்களை திருப்தி படுத்துவது அல்ல.

இங்குள்ள மக்களின் வாழ்வதாரத்தை நிச்சயிப்பது. அவர்கள் வாக்களிப்பதும் அதற்குத்தான்.

ஒடுக்கப்பட்ட, ஆதிதிராவிட,சிறுபான்மை சமூகத்தை உயர்த்துவது தான் இங்குள்ள அரசியலின் நோக்கம்.

அதற்கு எந்த அணி வலு சேர்க்கிறதோ அதை நோக்கிய கூட்டணிதான் இங்கு அமையும்.

**********************************

ஈழப்போராட்டம் எனபதற்கு முன் இந்த போராட்டக்குழுக்கள் அனைத்திற்கும் பயிற்சி அளித்தது இதே காங்கிரஸ் தான்....

போராட்டக்குழுக்கள் அனைத்திற்கும் ஆயுதங்கள் வழங்கியதும் இதே காங்கிரஸ் தான். அப்பொழுது ஒற்றுமையுடன் இருந்தார்கள். பிரிவுகள் பல இருந்தாலும் நோக்கம் ஒன்றாயிருந்தது....

தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஆதரவும் இருந்தது...என்று ஒன்றையொன்று அடித்துக்கொண்டதோ?, இன்படுகொலையை தானே செய்து கொண்டதோ? அன்றே எல்லாம் இந்த மக்களிடம் இருந்து விலகி விட்டது.


தொடர்கிறது.....

நம்பி said...

தொடர்ச்சி....

அதுமட்டுமில்லாமல் இங்கேயே பலர் நிதியும் கொடுத்தனர்...அதில் அதிகமாக கொடுத்தவர் எம்.ஜி.ஆர் அவர் கொடுத்த்து 3 கோடி...கலைஞர் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்து இந்த நிதியை வாங்கிய எல்.டி.டி.ஈ பின்பு அவருக்கே எதிரி...காரணம் அவர்காலத்தில் அமைதிப்படை அனுப்பப்பட்டது.

இதை எதிர்க்காத போராளிக்குழுக்கள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி போட்டுத்தள்ளப்பட்டது.

மீண்டும் அந்த அமைதிப்படை 1987 இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சமூக நீதிக்காவலர் விபி சிங் பிரதமராக இருந்ததால் அவரிடம் ஒரேயொரு தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டு வாபஸ் வாங்கப்பட்டது.

மறுபடியும் இங்கு பலரையும் இந்த இயக்கம் தமிழகத்தில் போட்டுத்தள்ளிக்கொண்டேயிருந்தது. விரட்டி விரட்டி...இது என்னமோ பொறம்போக்கு இடம் மாதிரி...இது ஒரு நாட்டில் உள்ள மாநிலம் என்பதே இதுங்களுக்கு தெரியவில்லை!...தேவையில்லாமல் இங்கு ஒரு தமிழக ஏழைகுடும்பத்து அப்பாவி பலியானார்...பல குடிசை பகுதிகளிலேயே ஏகே 47 துப்பாக்கிகள் வெடித்தது..இதெல்லாம் இந்த மக்கள் பார்த்திராதது..இவன் பாட்டுக்கு பலி வாங்கிவிட்டு அங்கே போய் அமைச்சர் பதவி வாங்கி கொண்டது...இதற்கு பரிகாரமாக பார்ப்பன வெங்கட்ராமனால், ஜெயலலிதா வலியுறுத்தி, ராஜீவ் காந்தி வலியுறுத்தி, சந்திரசேகரிடம் கையெழுத்து வாங்கி கவர்னர் பர்னாலா கையெழுத்து போடவில்லை என்ற காரணத்தினால் Otherwise என்ற காரணத்தை வைத்து அநியாமாக பெரும்பான்மை பெற்ற அரசு அதுவும் 13 வருடங்காலம் எதிர்க்கட்சியாக போராட்டம் நடத்தி ஆட்சி அமைக்கப்பட்ட திமுக கலைக்கப்பட்டது. இங்கு வாக்களித்தவர்களின் சோற்றிலே மண்ணைப் போட்டார்கள்...வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள் குடும்பங்களிலும் மண்ணை போட்டார்கள். 100 கோடி ரூபா திருமணத்திற்கு வழிவகுத்தார்கள்.

திருப்பி இரண்டாம் கட்ட தேர்தல் வருவதற்குள் இங்குள்ள காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தியையும் கூட இருந்த தமிழக மற்றும் காவல் துறையினரையும் சேர்த்து பதினைந்து பேர்களை குண்டு வைத்து எல்.டி.டி.ஈ இயக்கம் உயிர்ப்பலி வாங்கியது. அவர்கள் குடும்ப பெண்களின் தாலிகளை சம்பந்தமே இல்லாமல் கீழே இறக்கியது.

இங்கிருந்து எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஆறரை கோடி தமிழ் மக்களில் பாட்டாளிகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் தவிக்கவிட்டு விட்டு பார்ப்பனர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு ஒடிவிட்டது இந்தக் குரல்கள்.

அன்று சட்டசபைக்குள் சென்ற பார்ப்பனர் இன்று வரை அந்த கட்சியை நம்பிக்கொண்டிருப்பதற்கு இது தான் காரணம். (அன்று கோயிலில் "தமிழில் அர்ச்சனை செய்யப்படும்" என்ற போர்டை கழட்டினார்கள் திருப்பி எப்ப கழட்டலாம் என்று இப்போதும் காத்துகொண்டிருக்கிறது அதே பார்ப்பன கூட்டம்.) காங்கிரசையும் இழுபறியில் ஆட்சி அமைக்கவிட்டு சென்றது.

முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் பெற்றதோ மிக மிக குறைவு...இரண்டாம் கட்டம் அதாவது இந்த படுகொலை சம்பவம் நடைபெற்ற பிறகு நடைபெற்ற தேர்ததலில் பெற்ற வாக்குகளே நரசிம்மராவை அரியணை ஏற வைத்தது. அதுவும் முதல் முதலாக அரிதி பெரும்பான்மையின்றி காங்கிரஸ் பதவிக்கு வந்தது...


காரணம் யார்? சாட்சாத் இந்த ஒற்றுமையற்ற ஈழக்குரல்களினால் தான்.

இவர்கள் பண்ண அட்டகாசத்தினால் தான். தமிழக ஆட்சியில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பின்ர் கூட இல்லாத நிலைமையை உருவாக்கியதும் இந்த ஒற்றுமையற்ற ஈழக்குரல்கள் செய்த அட்டூழிங்களினால் தான்.

உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகத்தினால் தான்.


காஈங்கிரஸ் வந்தது எப்படி என்று தெரிந்து விட்டதா...? போய் வேற வேலை உருப்படியா இருந்தா பார்க்கலாம்.

பெரும்பாலும் இந்த கூக்குரல்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் வாழ்பவர்கள் வைப்பது. இங்குள்ளவர்களின் நிலையை பற்றி கவலைப்படாதவர்கள் வைப்பது. இலங்கையில் உள்ளவர்கள் வைப்பது கூட அந்தளவுக்கு கிடையாது.

அவர்கள் தான் ஆட்சியிலேயே பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவுடன் இருக்கிறார்களே! இலங்கை அரசில் பங்கு பெற்று இருக்கிறார்கள்! அரசில், ராணுவத்தில் வேலை பார்க்கறார்கள்! அப்புறம் எப்படி குரல் கொடுப்பார்கள்?

தன் தொந்தி நிறைந்தவுடன் அடுத்தவனை பற்றி கவலைப்படாமல், அவன் பசியைப் பற்றி கவலைப்படாமல் இருப்பவர்கள் ஷாம்பெய்ன் குடித்துவிட்டு, பப்பே மீல்ஸ் சாப்பிட்டு விட்டு, பட்ட சாரயத்தை பற்றியும், 1 ரூபா அரிசியை பற்றி, இலவசங்களை பற்றி குறைசொல்லுபவர்கள் வைப்பது.

இவங்க என்ன? அங்கேயிருந்து நலிந்த பிரிவினர்களுக்கு, இலங்கை மக்கள் மறுவாழ்விற்கும், ஒவ்வொருவருக்கும் தேடிவந்து நிதி அளிக்கப்போகிறார்களா? ஒன்றும் இல்லை.

இங்குள்ள 1 லடசத்திற்கும் மேற்பட்ட அகதிகள் என்ன கதிக்கு ஆளானார்கள் அவர்கள் இருக்கிறார்களா? செத்தார்களா? என்பதை பற்றிக்கூட கவலைப்படாதவர்கள்..மேம்போக்காக வைப்பது.

இதையெல்லாம் இங்கிருக்கும் மக்கள் சட்டை செய்வதில்லை.


தொடருகிறது...2

நம்பி said...

தொடர்ச்சி....2

அவர்களும் (இலங்கை அகதிகளும்) 1 ரூபாய் அரிசி சாப்பிடுகிறார்கள்...வறுமைக்கோட்டு கீழ் என்ற காரணமாக இருந்தால் அவர்களுக்கு 50 பைசா விலையில் 35 கிலோ மாதந்தோறும் இன்று வரை வழங்கப்பட்டு சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். டி.வி பெட்டி என்று இங்குள்ள பாட்டாளி என்ன உண்கிறானோ, வசதி, அரசு சலுகை பெறுகிறோனோ அத்தனையும் விதிகளுக்குட்பட்டு கிடைக்கிறது.

அகதிகள் உதவித்தொகை ரூ400 உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு, கல்வி மேம்பாடு, தலித் மக்கள்...பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்யின மக்கள் இவர்களை மேம்படுத்திட எந்த கூட்டணி தேவையோ அதை குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்கின்றனர். அது காங்கிரஸ் என்றால் இப்போதைக்கு தேவைதான்.

இது தான் இங்கு பெரும்பான்மை இந்தக் குரல்கள் அல்ல...இந்த குரல்களுக்காக இங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பலி கொடுக்க முடியாது.


**********************************