Search This Blog

6.4.09

சென்னை மைலாப்பூர் ஸ்ரீகபாலீச்சுரமும் பிராமணரும்


கடிதங்கள்: சென்னை மைலாப்பூர்
ஸ்ரீகபாலீச்சுரமும் பிராமணரும்


அய்யா - ஸ்ரீகபாலீச்சுரத்தில் சில மாதங்களாக வெள்ளிக்கிழமை தோறும் திரளான பிராமணர்கள் தங்கள் பெண்கள், குழந்தைகளுடன் வந்து கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் முதலிய இடங்களிற் புகுந்து, சுவாமி அம்மன் சந்நிதானங்களை முற்றும் மறைத்துவிடுகின்றனர். இதனால் இவர்கள், தங்களைவிட ஈசுர பக்தியிலும் ஒழுக்கத்திலும், தரும சிந்தையிலும் எவ்வளவோ மேம்பட்ட தமிழ்ச் சைவர்களுக்கு பேரிடையூறு புரிகின்றார்கள்.

ஆலயத்துக்கு வரவேண்டிய கிரமப்படி வராதும், வீண் வார்த்தைகளையும், கோர்ட் விவகாரங்களையும், வீட்டு வழக்குகளையும் இடையிடையே ஆங்கில பாஷையில் பேசிக் கொண்டும் தங்கள் சுயநல ஆட்சியைத் திருக்கோயிலிலுங்கூட நிலை நாட்டுகிறார்கள்.

அதீஷிதர்களாயும் சிவாகம நிந்தகர்களாயும், சைவசமயதாபக நிந்தகர்களாயும், தமிழ்வேத நிந்தகர்களாயும், புறமதத்தர்களாயும், சிவபெருமாளைத் தொழும் முறையை அறியாதவர் களாயும், அன்னியமாதின் பின் வேதபாராயணஞ் செய்யும் துணிவுள்ளவர்களாயுமுள்ள பல பிராமணர்களின் செய்கை அந்தோ கொடிது! கொடிது! கோயிற் பூசகரும் விபூதிப் பிரசாதத்தை இவர்களுக்கே கொடுத்து மற்றையோரைக் கவனியாது விடுகின்றனர். இவ்வுண்மையை மேற்படி ஆரிய தருமகர்த்தர்கள் கவனித்துச் சகலரையும் சமமாக நடத்தும் ஈசன் சந்நிதியில் வித்தியாசமின்றி எல்லோரையும் ஒரேவிதமாக நடத்தும் வழியைத் தேடுமாறு வேண்டுகின்றோம்.

--------------------- - சைவன் -"திராவிடன்" -18.10.1917

--------------"விடுதலை"-5-4-2009

2 comments:

Unknown said...

//சிவபெருமாளைத் தொழும் முறையை அறியாதவர் களாயும், அன்னியமாதின் பின் வேதபாராயணஞ் செய்யும் துணிவுள்ளவர்களாயுமுள்ள பல பிராமணர்களின் செய்கை அந்தோ கொடிது! கொடிது! கோயிற் பூசகரும் விபூதிப் பிரசாதத்தை இவர்களுக்கே கொடுத்து மற்றையோரைக் கவனியாது விடுகின்றனர். இவ்வுண்மையை மேற்படி ஆரிய தருமகர்த்தர்கள் கவனித்துச் சகலரையும் சமமாக நடத்தும் ஈசன் சந்நிதியில் வித்தியாசமின்றி எல்லோரையும் ஒரேவிதமாக நடத்தும் வழியைத் தேடுமாறு வேண்டுகின்றோம்.//

பார்ப்பனர்கள் அபோதிருந்து இப்போது வரை ஓரவஞ்சனையாகவே நடந்து வந்திருக்கிரார்கள் என்பது இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

ஈசன் ஏன் அனைவரையும் சமமாக நடத்த மறுக்கிறான்? சமமாக நடத்தாதவன் எப்படி ஈசனாக இருக்க முடியும்.

விளக்குவார்களா?

Unknown said...

//வெள்ளிக்கிழமை தோறும் திரளான பிராமணர்கள் தங்கள் பெண்கள், குழந்தைகளுடன் வந்து கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் முதலிய இடங்களிற் புகுந்து, சுவாமி அம்மன் சந்நிதானங்களை முற்றும் மறைத்துவிடுகின்றனர்.//

எல்லாம் அவாளுக்கே முன்னுரிமை.