Search This Blog
4.4.09
நாம் நம்ப வேண்டியது அறிவியலா - சோதிடமா?
சனிக் கிரகமும், சோதிடமும்?
சனிக் கிரகம் பூமியைவிட 755 மடங்கு பெரியது! பூமியிலிருந்து 135 கோடி 49 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரியனை ஒரு முறை சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன!
சனிக்கிரகம் திரவ நிலையில் நைட்ரஜனும் வளி மண்டலத்தில் ஹைட்ர ஜனும் கீலியமும் நிரம்பிய கிரகமாகும்! வியாழன் கிரகத்தைவிட சற்று சிறியது. 17 துணைக் கிரகங்கள் உண்டு.
சனிக்கிரகத்தின் துணைக் கிரகம் டைட்டானில் காசினி என்ற விண் ஆய்வுக்கலம் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 16-இல் ஆய்வு நடத்திட அதில் இறங்கியது. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்!
சனியின் துணைக்கிரகம் டைட்டானின் மேற்குப் பகுதியில் எரிவாயு திரவ வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மீத்தேன் ஈத் தேன் உருவில் கிடைக்கின் றன. பூமியில் கிடைக்கும் எரிவாயுவைவிட 100 மடங்கு கூடுதலாக கிடைக்க வாய்ப் புள்ளது.
அமெரிக்கா அனுப்பிய காசினி விண்கலத்தின் ஆய்வின் மூலம் எரிவாயு இருப் பது தெரிய வந்துள்ளது. இது மாத்திரமல்ல - டைட்டானில் 20 சதவிகித பகுதியை காசினி விண்கலம் படம் பிடித்துள்ளது. பல நூறு ஏரிகளையும் கடல்களையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
சனிக்கிரகத்தில் 1981-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்று இன்னும் அதே தீவிரத்தோடு சுழன்று கொண்டிருக்கிறது. நூற்றாண்டுக்கு மேல் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையை காசினி படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. வாயேஜர் 2 என்ற செயற்கைக்கோளும் சனியைச் சுற்றி ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.
பூமியை நெருங்கிய சனி!
பூமியிலிருந்து 135 கோடி கி.மீ. தூரத்திலுள்ள சனிக் கிரகம் 2003-ஆம் ஆண்டு டிசம்பரில் பூமியை நெருங்கி 120 கோடி கி.மீ. தூரத்தில் வந்தது. பூமியில் உள்ளவர்களுக்கு சனி எந்தத் தொல்லையையும் தரவில்லை! கெடுதியும் ஏற்பட வில்லை.
கிழக்கு வானில் சிறு புள்ளியாகத் தெரியும் சனிக்கிரகத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம். கெடுதியில்லை!
27.06.2005-ஆம் ஆண்டு மாலையில் புதன் வெள்ளி சனி மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது. அதனால் எந்தக் கெடுதியும் ஏற்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்!
28.1.2006-ல் சூரியன் - பூமி சனி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வந்தது. இவைகள் எல்லாமே விஞ்ஞானி களால் ஆராய்ந்து உலகுக்கு அறிவித்தவை. சோதிடர்கள் இத்தகைய அறிவியலைக் கண்டுபிடித்தார்களா? மக்களுக்கு அறிவித்தார்களா?
10.2.2007-ல் பூமிக்கு மிக அருகில் வந்த சனிக் கிரகத்தை சென்னை மக்கள் கோளரங்கு மூலம் பார்த்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சோதிடத்தின்படி சனிக் கிழமை பாவம் பிடித்தது. எருமையும் காக்கையும் அதற்கு வாகனம். சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சனிக்கிரகத்திற்குப் பகை!
இவ்வாறு சோதிட ஆராய்ச்சி சொல்லிக் கொண்டிருப்பதை நாம் நம்ப வேண்டுமாம்!
நாம் நம்ப வேண்டியது அறிவியலா - சோதிடமா?
---------------நூல்:- "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்"
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஜோதிடம் என்பதே மிகப்பெரிய புரட்டு. அதை நம்பி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.
திடமான மன உறுதி உள்ளவர்களை எந்த மூடநம்பிக்கையும் எதும் செய்ய முடியாது.
அறிவியல் படி நடப்போம்.
Post a Comment