Search This Blog
3.4.09
கருத்துகளை கருத்தாலே மோதவிட்டால்...
1945 ஆம் ஆண்டு திருவாரூர் மாநாட்டில் நானும்,
கலைஞரும் ஒன்றாகக் கலந்து கொண்டவர்கள்
'முரசொலி' விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் உரை
திருவாரூரில் அந்தக்காலத்தில் 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நானும் கலைஞர் அவர்களும், இளைஞர்களாக இருந்து அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு ரையாற்றினார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி 31.03.09 சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய நன்றியுரை வருமாறு:-
உலகத் தமிழர்களுடைய ஒப்பற்ற காவலராக அன்றும், இன்றும், என்றும் (கைத்தட்டல்) இருந்து வரக்கூடிய எங்கள் இதயமாம், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதல்வராக தமிழகத் திலே திகழ்ந்து அடுத்து மத்தியிலே அமையப் போகும் ஆட்சியும் உங்களால் தான் அமையப் போகிறது என்ற வியூகத்திற்குகாரண கர்த்தாவாக (பலத்தகைதட்டல்) என்றைக்கும் திகழக் கூடிய எங்கள் குலத் தலைவர் இனமானத் தலைவர் எங்கள் முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே!
எங்கள் இனமானப் பேராசிரியர் - என்றைக்கும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பேராசிரியர் அவர்களே!
இந்த சிறப்பு மிகுந்த முரசொலி அறக்கட்டளையினுடைய சார்பிலே எங்களுக்கெல்லாம் விருது வழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எங்கள் நம்பிக்கை நாயகன், நாளைய எதிர்காலத் தலைமுறையை (பலத்த கைதட்டல்) பொறுப்போடு ஏற்க வேண்டும் என்கின்ற இன்றைய பொருளாளர் பொருள் பொதிந்த அமைச்சர் உள்ளாட்சித்துறையின் சார்பில் பல சாதனைகளை எல்லோருடைய உள்ளத்தின் சாதனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற, அன்பிற்கும் பாராட்டுதலுக்குமுரிய அருமைத் தோழர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! (கைதட்டல்)
இங்கு குழுமியிருக்கின்ற தாய்மார்களே, பெரியோர்களே, இங்கே விருது பெற்றிருக்கின்ற அருமை புரட்சி எழுத்தாளர் சோலை, அதே போல ஒப்பு உயர்வற்ற சிறப்பான ஒப்புவமை யற்ற ஒளிப்பட நிபுணர் யோகா, அதேபோல சிறந்த கலைச்செல்வமாக இருக்கக்கூடிய நடிகர் தியாகு ஆகிய பெருமக்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
இந்நாள் எங்களுடைய வாழ்நாளிலே மறக்க முடியாத நாள். நான் இங்கு விருது பெற்ற எல்லோர் சார்பாகவும் சேர்த்து பேசுகிறேன்.
என்றாலும், என்னைப் பொறுத்த வரையிலே நம்முடைய தளபதி அவர்கள் என்னைப்பற்றி ஒரு நீண்ட வாழ்க்கைக் குறிப்பை படித்த நேரத்திலே நான் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு தலைகுனிந்து இருந்தேன்.
திருமண நேரத்திலே கூட நான் அப்படித் தலைகுனிந்திருக்கவில்லை. அந்த அளவிற்கு அவர் களுடைய அந்தப் புகழ் என்னுடைய தலையை அழுத்தியது. எனக்குப் பாடம் கற்பித்தது. என் னுடைய சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மேடையிலே படித்துக் கொண்டிருந்த பொழுது நினைத்துப் பார்த்தேன்.
மிசாவிலே சிறையிலே நாங்கள் உள்ளேயிருந்த பொழுது, எங்கள் வாழ்நாளிலே மறக்க முடியாத ஒன்பதாம் நெம்பர் பிளாக் இருக்கிறதே - அந்த இடத்திலே இரவு 9 மணிக்கு மேலே - அடித்து நொறுக்கப் பட்டு இரத்தம், சிந்தச் சிந்த கொண்டு வந்து உள்ளே தள்ளப்பட்ட ஓர் உருவம் என்மீது விழுந்தது. அந்தஉருவம் தான் என்னைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை படிக்கிறது என்று நினைக்கின்ற நேரத்திலே - அந்த உருவம்தான் அருமைச் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடைய உருவம் என்று நினைக்கின்ற பொழுது எங்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட ஒரு நிலை அன்றைக்கு இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. (பலத்தகைதட்டல்)
இந்த இயக்கத்தை நோக்கி வந்தவர்கள் - தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை நம்முடைய முதல்வர் கலைஞரைப் பின்பற்றி வந்திருக்கின்ற இன்னமும் பின்பற்றிக் கொண்டி ருக்கக்கூடிய இலட்சோப லட்சம் தொண் டர்கள், தோழர்கள், பதவிக்காக வந்தவர்கள் அல்லர். கூட்டணியிலே இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து இடம் கிடைப்பதற்காக வந்த வர்கள் அல்ல. (கைதட் டல்). அவர்கள் காலையிலே ஓரிடத்தில் இருப்பார்கள். மாலையிலே வேறு ஒரு இடத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவதைப் போல வந்தவர்கள் அல்ல. இங்கே இப்பொழுது இருப்பவர்கள் எப்பொழுதும் இருப்பவர்கள். இதயத்திலே இருக்கக் கூடியவர்கள். இங்கே - இல்லாதவர்களும் அதில் அடக்கம். வெளியிலே - வராதவர்கள் இன்னும் ஏராளம் இருக்கிறார்கள் என்ற அளவிற்கு மகிழ்ச்சி கொண்டிருக்கக்கூடியவர்கள் நாம். தலை வணங்கி எல்லோர் சார்பிலும் முரசொலிக்கு நன்றி செலுத்துகின்றோம்.
ஏனென்றால் முரசொலி கலைஞருடைய மூத்தபிள்ளை (பலத்த கைதட்டல்). அவருடைய முதல் பிள்ளை முரசொலிதான். கலைஞருக்கு அப்போது 18 வயது இன்றைக்கு முர சொலிக்கு 67 வயது. 67 வயதிலே 75 வயதைத் தாண்டக்கூடிய விடுதலை ஆசிரியருக்கு ஒரு அங்கீகாரம்.
இது தனிப்பட்ட எனக்கல்ல, தந்தை பெரியாருக்கு நீங்கள் வழங்கியிருக்கின்ற மரியாதை என்று நான் நினைக்கின்றேன். (கைதட்டல்)
அய்யா அவர்களுடைய தொண்டுக்கு குருகுலத்திற்கு நாங்கள் எப்பொழுதுமே கட்டுப் பட்டவர்கள். நாங்கள் நன்றி உணர்ச்சி காட்டக்கூடியவர்கள். குரு குல மாணவர்கள் நாங்கள். நாங்கள் ஒன்றாகப் பழகியவர்கள் என்பதற்கு ஆதாரம் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் ஒரு சில செய்திகள் இந்த நேரத்திலே பதிவாக்கப் பட வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கின்றோம்.
எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே - 1942 ஆம் ஆண்டில் துண்டறிக்கை போல முரசொ லியை கலைஞர் அவர்கள் தொடங்கினார்.
இன்றைக்குப் பக்கம் பக்கமாக வண்ணப் படங்கள் வருகின்றன. ஒளிப்படங்கள் வருகின்றன. ஒரு புது அச்சு எந்திரத்தை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திலே அமைத்து - அதை வந்து பார்க்கச் சொல்லி அழைத்தார்கள்.
அந்த எந்திரத்தை இயக்குகின்ற நேரத்திலே நின்று பார்த்த பொழுது, எங்களுக்கு பிரமாண்ட மாகத் தெரிந்தது இந்த சாதனை.
அநேகமாக சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன். ஆனால் அதே நேரத்திலே கலைஞர் அவர்களுடைய உழைப்பு கடும் உழைப்பு. கலைஞர் அவர்களுடைய 18ஆம் வயதிலே அவர்கள் படிப்பை விட அதிகமாக அவர்கள் அக்கறை செலுத்தியது அவர்களுடைய கொள்கைக்காக.
அந்தக் கொள்கைக்கு முரசொலிக்க வேண்டும் என்று சொல்லித்தான் முரசொலியைத் தொடங் கினார்கள். முரசொலியைத் தொடங்கியது மட்டுமல்ல. எங்களுடைய அந்த ஈர்ப்பு என் பது எப்படிப்பட்டது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு என்று சொன்னாலும் ஒன்றே ஒன்றை இந்த நேரத்திலே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
இது அண்மையிலே வெளிவந்த அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூல். இதிலே ஒரு வர லாறு எழுதப்பட்டிருக்கிறது. இது நீண்ட தொடர் கட்டுரையாக வந்தது. அதிலே ஒரு பகுதி -அதை மட்டும் இந்த நேரத்திலே உங்கள் அனுமதியோடு படிக்கின்றேன்.
திருவாரூரில் மாணவப் பிரச்சாரம் என்று 11-ஆவது பகுதியிலே இருக்கின்ற ஓர் பகுதி. திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி அவர் களும், சகோதரர் அரங் கண்ணல் அவர்களும் மற்றும் கழக நண்பர் களும் முயற்சி எடுத்து தென்மண்டலத்து திரா விடர் மாணவர் மாநாட் டினை 1.5.1945ல் நடத்தி னர். 1942 இல் முரசொலி கையேட்டைத் துவக்கினார் கலைஞர். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடிய அந்தக் கால கட்டத்திலே அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
மாநாட்டிற்கு அழைக் கப்பட்டு தலைப்பு கொடுத்து பேசப்பட்ட முக்கிய பேச்சாளர்களில் நானும் ஒருவன். அது பற்றி 12.5.1945 குடிஅரசு வார ஏட்டில் 4 ஆம் பக் கத்தில் உள்ள செய்தியை சுருக்கமாக அப்படியே தருகிறேன்.
அதில் என்ன தனிச் சிறப்பு என்பது உங்களுக்கே புரியும். 1.5.1945 காலை 9 மணிக்கு திரு வாரூரில் புகை வண்டி நிலையத்தில் தலைவர்களை வரவேற்று மேள தாளத்துடன் வாழ்த் தொலி முழங்க ஊர் வலம் சிறப்பாக நடை பெற்றது.
ஒன்பதை மணிக்கு தோழர்கள் இராமநாதன், வீரமணி, அனிஃபா ஆகியோர் இன்னிசையு டன் மாநாடு தொடங்கியது. நான் கூட பாடியிருக்கின்றேன். குடி அரசிலே அந்தக் காலத்தில் பதிவாகியிருக்கிறது.
அது இன்னிசையா என்பது தெரியாது. ஆனால் இதிலே எழுதப்பட்டிருக்கின்றது.
வரவேற்புக்குழுத் தலைவர் யார்? தோழர் மு.கருணாநிதி அவர்கள். இவை அத்தனையும் குடி அரசிலே இருக்கின்ற செய்தி. திராவிட உரிமைப் போருக்கு வரவேற்பு கூறி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சி.வி.இந்திராணி முதலியோர் ஆமோதித்துப் பேசினர். தோழர் ஈ.வெ.கி சம்பத் ஆணித் தரமாக அறிவுரை நிகழ்த்தி திராவிட நாட்டு பெரும் போரிலே மாணவர் ஈடுபட வேண்டிய அவசியத்தை விளக்கினார். திராவிட நாட்டுப்படத்தை தோழர் திராவிடமணி பி.ஏ அவர்கள் திறந்து வைத்தார். (என்னுடைய ஆசிரியர்). மாநாடு பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாயிற்று. தீர்மானங்கள் நிறை வேறிய பின் இளமையின் எழுச்சி பற்றி தோழர் தவமணிராசன் அவர்களும், போர்க்களம் நோக்கி என்பது பற்றி தோழர் வீரமணி அவர்களும், வாள் முனையில் என்ற தலைப்பில் தோழர் இளம்வழுதி அவர்களும், முரசொலி கேட்டு என்று ஒரு தலைப்பு - இவ்வளவு தலைப்புகளும் கலைஞர் அவர்கள் கொடுத்த தலைப்பு-
முரசொலி கேட்டு என்ற தலைப்பில் தோழர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களும் கருத்து முழங்க வீரம் கொப்பளிக்க வீர உரையாற்றினார்கள் என்று குடிஅர சில் வந்திருக்கின்ற செய்தி இது.
எதற்காக இதைச் சுட்டிக்காட்டுகிறோம் என்று சொன்னால் - குடிஅரசு ஏடு ஒரு கொள்கை ஏடு. தந்தை பெரியார் அவர்களாலே துவக்கப் பட்டு நடந்த ஒரு ஏடு. அதே போலத்தான் முர சொலி ஒரு ஏடு நடத்து வது என்பது ஆயிரம் கஷ்டங்கள் ஆயிரம் தொல்லைகள். இவை களை எல்லாம் தாண்டித் தாண்டி முரசொலி ஏட்டை கலைஞர் அவர்கள் வளர்த்தார்கள். இன்றைக்கு அது ஒரு பெரிய ஆலர மாக வளர்ந்திருக்கிறது.
வளர்ந்ததோடு மட்டுமல்ல, இவ்வளவு பேரையும் அறிமுகப் படுத்தி, விருதுகளைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் சாதாரணப் பெருமை பெற்றதல்ல. எங்களோடு சிறை யிலே இருந்த மரியாதைக்குரிய, நம்முடைய வீர வணக்கதிற்குரிய முரசொலி மாறன் என்று முத்திரையே பெற்றவர்.
எப்படி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைச் சார்ந்தவர்களை பாரதிதாசன் பரம்பரை யினர் என்று உருவாக்கினார்களோ, அது போல முரசொலி ஒரு பரம்பரையையே உரு வாக்கியது.
முரசொலி மாறன், முரசொலிசெல்வம், முரசொலி சொர்ணம், முரசொலி அடியார் என்று முரசொலி, முரசொலி என்று இப்படி எத்தனையோ பேர் முரசொலியை முன்னாலே நிறுத்தி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்களை முரசொலி உருவாக்கியிருக்கிறது.
முரசொலி என்ற ஆலமரத்திற்கு ஏராளமான விழுதுகள் வந்திருக்கின்றன என்று காட்டியிருக் கின்றார்கள். எனவே, அப்படிப் பட்ட ஓர் அருமையான ஏட்டின் சார்பாக இப்படிதொடர்ந்து 1996லேயி லிருந்து நீங்கள் விருதுகளை வழங்கி எங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக நன்றி.
இந்த நேரத்திலே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். எங்களுக்கெல்லாம் மன வேதனை யான ஒரு செய்தி உண்டு.
கலைஞர் அவர்களுடைய பொது வாழ்க்கை என்பது எத்தனை ஆண்டுகளைக் கொண்டது? அந்தப் பொதுவாழ்க்கையின் வயதைக் கூட பெறாதவர்கள் எல்லாம் கலைஞர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி விவரம் தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள். கருத்துகளை கருத்தாலே மோதவிட்டால் நாங்கள் ஒரு கை பார்த்துக்கொள்வோம். ஆனால் தரக்குறைவாக நீங்கள் பேசினால் திரும்பத் தரக்குறைவாகக் கூட பேசக்கூடாதென்று நேற்று கூட தி.மு.க சொற்பொழிவாளர்களுக்கு கலைஞர் அவர்கள் அறிவுரை கூறியிருக்கின்றார் கள். எப்படி எல்லாம் பேசக் கூடாது என்பதை கலைஞர் அவர்கள் சொல்லி யிருக்கின்றார்கள். இது எத்தகைய பண்பாடு?
அண்ணா அவர்களு டைய உள்ளத்தைக் கலைஞர் அவர்கள் பெற்றிருக்கின்ற காரணத்தாலே - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருக்கின்ற காரணத்தாலே அவர்கள் நாகரிகத்தோடு பேசுகிறார் - எழுதுகிறார் - நடக்கிறார். அதற்காக அவர்களுக்கு மீண்டும், மீண்டும் நன்றி செலுத்துகின்றேன்.
-------------------தொடரும்.."விடுதலை" 3-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சொந்தமாய் யோசிக்காதவரை, 21 சீட்டு என்ன? 40 சீட்டும் கிடைக்கும்.....
எப்போது தமிழனுக்கு டெல்லி மதிப்பு கொடுக்கவில்லையோ...இந்த நாடு இருந்தால் என்னா?நாசமாய் போனால் என்ன?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
1985 ம் ஆண்டு அக்டோபர் 3,4,5,6,7 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து அதே ஆண்டில் தமிழனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு எனும் தலைப்பில் திமுக வெளியிட்ட நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.....
இந்த பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் அங்கேதான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற தானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால் நாங்கள் அந்த குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் மாத்திரம் அல்ல தமிழ்ச்சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கதான் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆக 1985 ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை 24 ஆண்டுகள் கழித்து எடுத்துக்கொண்டால் அது குற்றமாகுமா ? தோழர் கருணாநிதி அவர்களே!!!
உங்களைப் போலவே நாங்களும் உறுதிமொழி எடுத்தோம் அதற்கு பலனாய் எங்கள் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி இப்போது சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உங்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் உங்கள் கூட்டணி தர்மத்துக்கு பங்கம் விளைத்தால் அது தேசியத்திற்கு எதிராணதா? தோழர் கருணாநிதி அவர்களே !!!!!
உங்கள் தேசத்தின் பாதுகாப்பு என்பது காங்கிரசின் பாதுகாப்பா? உங்கள் தேச மக்கள் என்பவர்கள் காங்கிரசு தலைவர்கள் மட்டுமா ?சொல்லுங்கள் தோழர் கருணாநிதி!!!
அவர்களே ஆயிரம் குறைகள் இருந்தாலும் எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் நாங்கள் உங்களைத்தான் நம்பினோம் ஏனெனில் நாம் மனுதர்மத்திற்கு எதிரானவர்கள் என்பதால், ஆனால் மறுவடிவம் கூட்டணி தர்மமாய் இல்லையா? தோழர் கருணாநித !!!! அவர்களே
மீண்டும் மீண்டும் சொல்கிறேம் நாங்கள் சட்டவிரோதமாக கூட நடப்போம் நியாய விரோதமாக அல்ல. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் ஆக உள்ளீர்கள் ஆக உங்களுக்கு வேறு வழியில்லை என்பதை நாங்களும் உணர்கிறோம். உங்களிடம் எங்கள் வேண்டுகோள் இரயில் தண்டவாளத்தில் தன் தலைவைத்து படுத்த என் இனத்தை கொன்றுவிட்டு வரும் அமைதிப்படையை வரவேற்க மறுத்த எங்கள் தோழர் கருணாநிதியை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள் என்பதே எங்கள் சந்தேகம் இதுவே முத்தமிழ் அறிஞர், தமிழினத்தலைவர், கலைஞர் இப்படி எல்லாம் தங்களை அழைத்ததில் நாங்கள் எங்கள் தோழர் கருணாநிதியை தொலைத்துவிட்டோம் என நினைக்கிறோம். ஆக இனி உங்களை இப்படி அழைக்கலாம் என முடிவு செய்துள்ளோம் .
இதன்மூலம் உங்களுக்கு பழைய நினைவு திரும்கினால் எங்களுக்கு மகிழ்ச்சியே அனேகமாக தமிழகத்திலேயே உங்களை உரிமையுடன் பெயர் சொல்லி கூப்பிடுவது செயலலிதாதான் அப்புறம் உங்கள்மேல் விமர்சனம் உண்டு நீங்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது மட்டுமே தமிழினப்பிரச்சனை பற்றி பேசுவீர்கள் எனச்சொல்லுகிறார்கள் ..
எங்களுக்கு அதில நம்பிக்கையில்லை ஆனால் வெகு மக்கள் எண்ணம் அதுவெனில் எங்களுக்கு நீங்கள் தான்முக்கியம் எங்கள் அய்யாவின் பாசறையில் பயின்ற நீங்கள் அவர் வழியில் உழைப்பதுதான் எங்களுக்கு பெருமை ஆக என்ன செய்யலாம் ...
உங்களை எதிர்கட்சி தலைவராக்க நாங்கள் தயார் எதிர்கட்சி தலைவராக நீங்கள் தயாரா தோழர் ....
தயவு செய்து கைக்கு கை கொடுக்காதீர் ....
தோழர் சிவா அவர்களே !!! தோழர் கருணாநிதி மாறனோடு மறைந்துவிட்டார். தற்போது இருப்பது ஈழ தமிழனை அழிக்கும் கொடிய காங்கிரசின் அகில இந்திய ஆலோசகர் . வேறு என்ன சொல்லி அழுவது.
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அ.ப. சிவா.
ஒரு சில கருத்துக்களைத் தவிர மற்ற கருத்துக்களில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.
தாங்கள் சுட்டிக் காட்டிய ஒன்றை மட்டும் நானும் சுட்டிக் காட்டுகிறேன்.
//நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் ஆக உள்ளீர்கள் ஆக உங்களுக்கு வேறு வழியில்லை என்பதை நாங்களும் உணர்கிறோம்.//
நன்றி.
காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றுக் கட்சியை குறிப்பாக ஜெயலலிதா அங்கம் வகிக்கும் கட்சிகளை ஆதரிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.
சு.ப. தமிழ்செல்வனுக்காக கலைஞர் இரங்கல் கவிதை எழுதியபோது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு கணம் சிந்தியுங்கள் சிவா.
சு.ப. தமிழ்செல்வனுக்காக கலைஞர் இரங்கல் கவிதை எழுதியபோது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு கணம் சிந்தியுங்கள்....
இரங்கல் கவிதைக்கு வந்த எதிர்ப்பின் போது காங்கிரசு எங்கே போனது
//இரங்கல் கவிதைக்கு வந்த எதிர்ப்பின் போது காங்கிரசு எங்கே போனது//
அந்தச் சூழ்லை நினைத்துப் பாருங்கள்.
Post a Comment