Search This Blog
7.4.09
நீ ஏண்டா உயர் சாதி ?
"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
-----------------------------------------------------------------------------------------
15. சாதி ஒழியவேண்டும்
உலகிலேயே சகிக்க முடியாத இழிவு நமது தலையில் தான் இருக்கின்றது; நாம் எல்லாம் நான்காம் சாதி, அய்ந்தாம் சாதி மக்கள்; மேல் சாதிக்காரனுடைய வைப்பாட்டி மக்கள் என்று எழுதி நம்பும்படிச் செய்து நமது தலையில் சுமத்திவிட்டார்கள்.
நீ ஏண்டா உயர் சாதி என்று மேல் சாதிக்காரனைக் கேட்டால், நான் முன் ஜென்மத்தில் செய்த பலன், பகவான் இப்படிப் படைத்தான் என்கின்றான்; நான் ஏன் இழிசாதி என்று கேட்டால், நீ செய்த பாவம் - கடவுள் உன் தலையில் இப்படி எழுதிவிட்டான் என்று கூறுகின்றான். எனவே, இழி சாதித் தன்மையினை, மடமையை ஒழிக்க வேண்டுமானால், கடவும், மதம், சாஸ்திரம் இவைகளையெல்லாம் மனிதன் விட்டொழித்தாக வேண்டும்.
------------------------------------------ தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-38
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment